AruNagirinAthar - திரு அருணகிரிநாதர் |
அருணகிரிநாதர் 15ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த தமிழ்ப்புலவர். முருகப்பெருமான் மீது பற்றுக் கொண்டவர். இவர் தமிழ் மொழி, வடமொழி ஆகிய இரு மொழிகளிலும் புலமை பெற்றவர். இவரது பாடல்கள் சிக்கலான சந்த நயத்திற்கும், தாள அமைப்பிற்கும் பெயர் பெற்றவை. இவர் எழுதிய திருப்புகழில், இலக்கியமும் பக்தியும் இணக்கமாகக் கலக்கப்பட்டுள்ளதைக் காணலாம். இவரால் எழுதப்பட்ட நூல்கள்: திருப்புகழ் கந்தர் அந்தாதி; கந்தர் அலங்காரம்; கந்தரனுபூதி; திருவகுப்பு; வேல் விருத்தம்; மயில் விருத்தம்; சேவல் விருத்தம்.
அருணகிரி நாதருக்கு! போற்றி போற்றி
அருவமும் உருவும் ஆகி அநாதியாய்ப் பலவாய் ஒன்றாய்ப்
பிரமமாய் நின்ற சோதிப் பிழம்பதோர் மேனியாகக்
கருணைகூர் முகங்கள் ஆறும் கரங்கள் பன்னிரெண்டும் கொண்டே
ஒருதிரு முருகன் வந்தாங்கு உதித்தனன் உலகம் உய்ய.
பாடல் 1 - விநாயகர் துதி
ராகம் - நாட்டை; தாளம் - ஆதி
தந்தன தனதன தந்தன தனதன
தந்தன தனதன ...... தனதான
கைத்தல நிறைகனி யப்பமொ டவல்பொரி
கப்பிய கரிமுகன் அடிபேணிக்
கற்றிடு மடியவர் புத்தியி லுறைபவ
கற்பக மெனவினை கடிதேகும்
மத்தமும் மதியமும் வைத்திடு மரன்மகன்
மற்பொரு திரள்புய மதயானை
மத்தள வயிறனை உத்தமி புதல்வனை
மட்டவிழ் மலர்கொடு பணிவேனே
முத்தமி ழடைவினை முற்படு கிரிதனில்
முற்பட எழுதிய முதல்வோனே
முப்புர மெரிசெய்த அச்சிவ னுறைரதம்
அச்சது பொடிசெய்த அதிதீரா
அத்துய ரதுகொடு சுப்பிர மணிபடும்
அப்புன மதனிடை யிபமாகி
அக்குற மகளுட னச்சிறு முருகனை
அக்கண மணமருள் பெருமாளே.
கரதலத்தில் நிறைந்துள்ள பழம், அப்பம், அவல், பொரி (இவைகளை) வாரி உண்ணும் யானை முகக் கடவுளின் திருவடிகளை விரும்பி, அறிவு நூல்களைக் கற்கும் அடியவர்களுடைய மனதில் நீங்காது வாழ்பவனே, நினைத்தவற்றை அளிக்கும் கற்பக விருட்சமே, என்று உன்னைத் துதி செய்தால் வினைகள் யாவும் விரைவில் ஓடிப் போய்விடும். ஊமத்த மலரும், (பிறைச்) சந்திரனும் சடையில் தரித்த சிவபெருமானுடைய மகனும், மற்போருக்குத் தக்க திரண்ட தோள்களையுடையவனும், மத யானையை ஒத்தவனும், மத்தளம் போன்ற பெருவயிறு உடையவனும், உத்தமியாகிய பார்வதியின் மகனும் ஆகிய கணபதியைத் தேன் துளிர்க்கும் புது மலர்களைக் கொண்டு நான் வணங்குவேன். இயல், இசை, நாடகம் என்னும் முத்தமிழ் நூல் முறைமையை, மலைகளுள் முற்பட்டதான மேரு மலையில் முதல் முதலில் எழுதிய முதன்மையானவனே, (அசுரர்களின்) திரி புரங்களையும் எரித்த அந்தச் சிவ பெருமான் எழுந்தருளிய ரதத்தின் சக்கர அச்சை ஒடித்துத் தூளாக்கிய மிகுந்த தீரனே*, (வள்ளி மீது கொண்ட காதலாகிய) அந்தத் துயரத்தோடு (உன் தம்பியாகிய) சுப்பிரமணியன் நடந்த அந்தத் தினைப் புனத்திடையில் யானையாகத் தோன்றி, அந்தக் குற மகளாகிய வள்ளியுடன் அந்தச் சிறிய முருக வேளை அத்தருணத்திலேயே மணம் புரியுமாறு திருவருள் பாலித்த பெருமாளே.
* திரிபுரத்தின்மேல் படையெடுக்கத் தொடங்குகையில் சிவபெருமான் விநாயகரைப் பூஜிக்க மறந்தார். ஆதலால் சிவபெருமான் ஏறி வந்த தேரின் அச்சு முறியும்படி விநாயகர் செய்தார் என்பது சிவபுராணம்.
பாடல் 2 - விநாயகர் துதி
ராகம் - நாட்டை / மோகனம்; தாளம் - ஆதி
தத்ததன தத்ததன தத்ததன தத்ததன
தத்ததன தத்ததன ...... தனதான
பக்கரைவி சித்ரமணி பொற்கலணை யிட்டநடை
பட்சியெனு முக்ரதுர ...... கமுநீபப்
பக்குவம லர்த்தொடையும் அக்குவடு பட்டொழிய
பட்டுருவ விட்டருள்கை ...... வடிவேலும்
திக்கதும திக்கவரு குக்குடமும் ரட்சைதரு
சிற்றடியு முற்றியப ...... னிருதோளும்
செய்ப்பதியும் வைத்துயர்தி ருப்புகழ்வி ருப்பமொடு
செப்பெனஎ னக்கருள்கை ...... மறவேனே
இக்கவரை நற்கனிகள் சர்க்கரைப ருப்புடனெய்
எட்பொரிய வற்றுவரை ...... இளநீர்வண்
டெச்சில்பய றப்பவகை பச்சரிசி பிட்டுவெள
ரிப்பழமி டிப்பல்வகை ...... தனிமூலம்
மிக்கஅடி சிற்கடலை பட்சணமெ னக்கொளொரு
விக்கிநச மர்த்தனெனும் ...... அருளாழி
வெற்பகுடி லச்சடில விற்பரம ரப்பரருள்
வித்தகம ருப்புடைய ...... பெருமாளே.
அங்கவடி, பேரழகான மணி, பொன் நிறமான சேணம் இவைகளைப் பூண்டு கம்பீரமாக நடக்கும் பறவையாகிய, மிடுக்குள்ள (மயிலாகிய) குதிரையையும், கடம்ப மரத்தின் நன்கு பூத்த மலர்களால் தொடுக்கப்பட்ட மலர் மாலையையும், அந்தக் கிரெளஞ்ச மலை அழிந்து ஒழியும்படி அதன் மேல் பட்டு ஊடுருவிச் செல்லுமாறு விட்டருளிய திருக்கையில் உள்ள கூர்மையான வேலையும், திக்குகள் எட்டும் மதிக்கும்படி எழுந்துள்ள கொடியிலுள்ள சேவலையும், காத்தளிக்கும் சிறிய திருவடிகளையும், திரண்ட பன்னிரண்டு தோள்களையும், வயலூரையும் பாட்டிலே வைத்து உயர்ந்த திருப்புகழை விருப்பமோடு சொல்லுக* என்று எனக்கு அருள் செய்ததை மறக்க மாட்டேன். கரும்பு, அவரை, நல்ல பழங்கள், சர்க்கரை, பருப்பு, நெய், எள், பொரி, அவல், துவரை, இள நீர், தேன், பயறு, அப்ப வகைகள், பச்சரிசி, பிட்டு, வெள்ளரிப்பழம், பல வகையான மாவு வகைகள், ஒப்பற்ற கிழங்குகள், சிறந்த உணவு (வகைகள்), கடலை (இவைகளை) பட்சணமாகக் கொள்ளும் ஒப்பற்ற, வினைகளை நீக்க வல்லவர் என்று சொல்லப்படும் அருட் கடலே, கருணை மலையே, வளைந்த சடையையும், பினாகம் என்னும் வில்லையும் கொண்ட மேலான அப்பர் சிவபிரான் பெற்றருளிய திறலோனே, ஒற்றைக் கொம்பு** உடைய பெருமாளே.
* திருவண்ணாமலையில் 'முத்தைத்தரு' என்ற முதல் பாட்டைப் பாடிய பின்னர் அருணகிரிநாதரை வயலூர் என்ற 'செய்ப்பதி'க்கு முருகன் வரப்பணித்தார். அங்கு தமது மயிலையும், கடப்ப மாலையையும், வேலையும், சேவலையும், பன்னிரு தோள்களையும், திருவடிகளையும், வயலூரையும் வைத்துப்
பாடல் பாடக் கூறினார். அந்த அபூர்வமான
பாடல்தான் இது.
** மேருமலையில் முன்னர் 'வியாசர்' விநாயகரிடம் தாம் பாரதத்தைச் சொல்லச் சொல்ல வேகமாக ஏட்டில் எழுதப் பணித்தார். எழுதுகோலாக தனது கொம்புகளின் ஒன்றை ஒடித்து விநாயகர் எழுதத் தொடங்கினார். எனவே அவருக்கு 'ஏகதந்தன்' (ஒற்றைக் கொம்பர்) என்ற பெயர் வந்தது.
பாடல் 3 - விநாயகர்
ராகம் - ஹம்ஸத்வனி / ஆனந்தபைரவி; தாளம் - அங்கதாளம் - 8
தகதகிட-2 1/2, தகதகிட-2 1/2, தகதிமிதக-3
தந்ததனத் தானதனத் ...... தனதான
தந்ததனத் தானதனத் ...... தனதான
உம்பர்தருத் தேநுமணிக் ...... கசிவாகி
ஒண்கடலிற் றேனமுதத் ...... துணர்வூறி
இன்பரசத் தேபருகிப் ...... பலகாலும்
என்றனுயிர்க் காதரவுற் ...... றருள்வாயே
தம்பிதனக் காகவனத் ...... தணைவோனே
தந்தைவலத் தாலருள்கைக் ...... கனியோனே
அன்பர்தமக் கானநிலைப் ...... பொருளோனே
ஐந்துகரத் தானைமுகப் ...... பெருமாளே.
விண்ணவர் உலகிலுள்ள கற்பக மரம் காமதேனு, சிந்தாமணி (இவைகளைப் போல் ஈதற்கு) என் உள்ளம் நெகிழ்ந்து ஒளிவீசும் பாற்கடலில் தோன்றிய இனிய அமுதம்போன்ற உணர்ச்சி என் உள்ளத்தில் ஊறி இன்பச் சாற்றினை நான் உண்ணும்படி பலமுறை என்னுயிரின் மீது ஆதரவு வைத்து அருள்வாயாக தம்பியின் (முருகனின்) பொருட்டாக தினைப்புனத்திற்கு வந்தடைவோனே தந்தை சிவனை வலம் செய்ததால் கையிலே அருளப்பெற்ற பழத்தை உடையவனே அன்பர்களுக்கு வேண்டிய நிலைத்து நிற்கும் பொருளாக விளங்குபவனே ஐந்து கரங்களையும் யானைமுகத்தையும் உடைய பெருமானே.
பாடல் 4 - விநாயகர்
ராகம் - ஹம்ஸத்வனி; தாளம் - அங்கதாளம் - 7 1/2
தகிட-1 1/2, தகதிமி-2, தகதிமி-2, தகஜனு-2
தனன தனதன தத்தன தத்தன
தனன தனதன தத்தன தத்தன
தனன தனதன தத்தன தத்தன ...... தனதான
நினது திருவடி சத்திம யிற்கொடி
நினைவு கருதிடு புத்திகொ டுத்திட
நிறைய அமுதுசெய் முப்பழ மப்பமு ...... நிகழ்பால்தேன்
நெடிய வளைமுறி இக்கொடு லட்டுகம்
நிறவில் அரிசிப ருப்பவல் எட்பொரி
நிகரில் இனிகத லிக்கனி வர்க்கமும் ...... இளநீரும்
மனது மகிழ்வொடு தொட்டக ரத்தொரு
மகர சலநிதி வைத்தது திக்கர
வளரு கரிமுக ஒற்றைம ருப்பனை ...... வலமாக
மருவு மலர்புனை தொத்திர சொற்கொடு
வளர்கை குழைபிடி தொப்பண குட்டொடு
வனச பரிபுர பொற்பத அர்ச்சனை ...... மறவேனே
தெனன தெனதென தெத்தென னப்பல
சிறிய அறுபத மொய்த்துதி ரப்புனல்
திரளும் உறுசதை பித்தநி ணக்குடல் ...... செறிமூளை
செரும உதரநி ரப்புசெ ருக்குடல்
நிரைய அரவநி றைத்தக ளத்திடை
திமித திமிதிமி மத்தளி டக்கைகள் ...... செகசேசே
எனவெ துகுதுகு துத்தென ஒத்துகள்
துடிகள் இடிமிக ஒத்துமு ழக்கிட
டிமுட டிமுடிமு டிட்டிமெ னத்தவில் ...... எழுமோசை
இகலி அலகைகள் கைப்பறை கொட்டிட
இரண பயிரவி சுற்றுந டித்திட
எதிரு நிசிசர ரைப்பெலி யிட்டருள் ...... பெருமாளே.
(முருகா) உன்னுடைய திருவடி, வேல், மயில், சேவல் (இவைகளை) நினைவில் கருதும் அறிவை நான் பெறுவதற்கு, நிரம்பச் செய்யப்பட்ட அமுது, மூன்று வகையான பழங்கள், அப்பமும், புதிய பால், தேன், நீண்டு வளைந்த முறுக்கு, கரும்புடன், லட்டு, நிறமும் ஒளியும் உள்ள அரிசி, பருப்பு, எள், பொரி, ஒப்பில்லாத இனிய வாழைப்பழ வகைகளும், இள நீரும் (ஆகிய நிவேதனப் பொருட்களை), மன மகிழ்ச்சியுடன் தொடும் கைகளையும், ஒப்பற்ற மகர மீன்கள் உள்ள கடலில் வைத்த துதிக்கையையும்* உடைய வளரும் யானை முகத்து ஒற்றைக் கொம்பனாகிய கணபதியை வலம் வந்து, அவருக்கென்றே பொருந்திய மலர் கொண்டு (வழிபட்டும்), துதிப்பதற்கு உரிய சொற்களைக் கொண்டு (துதித்தும்), தூக்கிய கைகளால் காதைப் பிடித்தும், தோப்புக்கரணம் போட்டும், சிரசில் குட்டியும் **, (அந்த விநாயகருடைய) தாமரை போன்ற, சிலம்பு அணிந்த அழகிய பாதங்களில் அர்ச்சனை செய்வதை நான் ஒருபோதும் மறவேன். தெனன தெனதென தெத்தென இவ்வாறான ஒலி செய்யும் பல சிறிய ஈக்கள் மொய்க்கும் ரத்த நீர், திரண்டுள்ள சதைகள், பித்தம் நிறைந்த மாமிசக் குடல்கள், சிதறிய மூளைத் திசுக்கள், பிளந்த வயிற்றில் நிறைந்துள்ள ஈரல்கள், பெருங்குடல்கள், இவைகளோடு வரிசைகளாக ஒலிக்கும் ஒலிகள் நிறைந்த போர்க் களத்தில் திமித திமிதிமி என்று ஒலிக்கும் மத்தளம், இடக்கை என்னும் வாத்தியம் செகசே சே என ஒலிக்கவும், துகு துகு துத்தென்ற ஓசையுடன் ஊது குழலும் உடுக்கைப் பறைகளும் இடி என மிக ஒத்து முழங்க, டிமுட டிமு டிமு டிட்டிம் என மேள வகைகள் ஓசைகள் எழுப்ப, ஒன்றோடொன்று பகைத்த பேய்கள் கைப்பறைகளைக் கொட்ட, ரண பைரவி என்னும் தேவதைகள் சுற்றிக் கூத்தாட, எதிர்த்து வந்து அசுரர்களைப் பலி இட்டு அழித்த பெருமாளே.
* திருப்பாற் கடலைக் கடைந்த பொழுது மத்தாகிய மந்தர மலை அழுந்த, திருமால் அதை ஆமை உருவெடுத்து முதுகில் தாங்கினார். அதனால் இறுமாப்பு உற்று அவர் கடலைக் கலக்க, சிவபெருமான் ஏவலால் விநாயகர் அந்த ஆமையை அடக்கி, தமது துதிக்கையால் பொங்கிய கடல் நீர் முழுவதையும் குடித்தார்.
** ஒருமுறை அகத்திய முநிவர் தவம் செய்த போது, விநாயகர் காக்கை உருவில் வந்து அவரது கமண்டலத்தை விளையாட்டாக கவிழ்த்துவிட, காவிரி நதி பிறந்தது. தவம் கலைந்த அகத்தியர் பார்க்க, விநாயகர் அந்தணச் சிறுவனாய் ஓடினார். கோபத்தில் அகத்தியர் விநாயகரின் காதைத் திருகி, தலையில் குட்ட முயன்றபோது, ஐங்கரனாய் உருமாறியதும், முநிவர் குட்ட ஓங்கிய கரங்களால் தம்மையே குட்டிக் கொள்ள, விநாயகர் தடுத்தார். தம் சன்னிதியில் தோப்புக்கரணம் செய்து சிரத்தில் குட்டிக் கொள்பவர்களின் அறிவு நலம் பெருக வரம் அளித்தார்.
பாடல் 5 - விநாயகர்
ராகம் - கெளளை; தாளம் - திஸ்ரத்ருபுடை - 7 / மிஸ்ரசாபு - 3 1/2
தனதனன தான தனதனன தான
தனதனன தான ...... தனதான
விடமடைசு வேலை அமரர்படை சூலம்
விசையன்விடு பாண ...... மெனவேதான்
விழியுமதி பார விதமுமுடை மாதர்
வினையின்விளை வேதும் ...... அறியாதே
கடியுலவு பாயல் பகலிரவெ னாது
கலவிதனில் மூழ்கி ...... வறிதாய
கயவனறி வீனன் இவனுமுயர் நீடு
கழலிணைகள் சேர ...... அருள்வாயே
இடையர்சிறு பாலை திருடிகொடு போக
இறைவன்மகள் வாய்மை ...... அறியாதே
இதயமிக வாடி யுடையபிளை நாத
கணபதியெ னாம ...... முறைகூற
அடையலவர் ஆவி வெருவஅடி கூர
அசலுமறி யாமல் ...... அவரோட
அகல்வதென டாசொல் எனவுமுடி சாட
அறிவருளும் ஆனை ...... முகவோனே.
நஞ்சு பொருந்திய கடலும், தேவர் படையும், சூலாயுதமும், அருச்சுனன் விடுகின்ற அம்பும் சமானம் என்று கூறும்படியான கண்களும், அதிபாரமான மார்பகங்களும் கொண்ட விலைமாதர்களின் சாகசத் தொழில்களினால் விளையும் துன்பங்கள் ஒன்றையும் அறிந்து கொள்ளாது, வாசனை மிக்க படுக்கையில், பகல் இரவு என்ற வேறுபாடு இல்லாமல் சுகபோகத்தில் மூழ்கி ஏழ்மை அடைந்த கீழ்மகனும், அறிவு குறைந்தவனும் ஆகிய அடியேனும் உனது உயர்ச்சி மிக்க திருவடி இணைகளைச் சேர அருள் புரிவாயாக. அரசன் உக்ரசேனனுடைய மகள் தேவகி நிகழ இருக்கும் உண்மையை அறிய மாட்டாதவளாக (அதாவது கண்ணனால் கம்சன் ஏவிவிட்ட அசுரர்கள் கொல்லப் படுவார்கள் என்ற உண்மை தெரியாது) மனம் வாட்டம் உற்று, என் மகனை ஆண்டருளும் பிள்ளைப் பெருமாளே, கணபதியே என்னும் நாமங்களை வரிசைப்படக் கூற (அவள் முறையீட்டுக்கு இரங்கி), (அன்வயப்படுத்தப்பட்ட வரி) இடையர்களுடைய கொஞ்சம் பாலைத் திருடிக் கொண்டு போக (அதாவது யாதவர்களின் தூய மனத்தைக் கண்ணன் தன்வசமாக்க), பகைவர்கள் உயிருக்கு அஞ்சும்படி நீ அடி எடுத்து வர, (நீ வரும் ஒலியைக் கேட்டு) அயலார் அறியாமல் அவர்கள் ஓட, போவது ஏனடா சொல் எனக் கூறி அவர்கள் தம் முடிகளைத் தாக்கும் அறிவை (கண்ணபிரானுக்கு) அருளிய யானைமுகத்துக் கணபதியே.
பாடல் 6 - நூல்
ராகம் - கெளளை; தாளம் - திஸ்ரத்ருபுடை - 7 / மிஸ்ரசாபு - 3 1/2
தத்தத்தன தத்தத் தனதன
தத்தத்தன தத்தத் தனதன
தத்தத்தன தத்தத் தனதன ...... தனதான
முத்தைத்தரு பத்தித் திருநகை
அத்திக்கிறை சத்திச் சரவண
முத்திக்கொரு வித்துக் குருபர ...... எனவோதும்
முக்கட்பர மற்குச் சுருதியின்
முற்பட்டது கற்பித் திருவரும்
முப்பத்துமு வர்க்கத் தமரரும் ...... அடிபேணப்
பத்துத்தலை தத்தக் கணைதொடு
ஒற்றைக்கிரி மத்தைப் பொருதொரு
பட்டப்பகல் வட்டத் திகிரியில் ...... இரவாகப்
பத்தற்கிர தத்தைக் கடவிய
பச்சைப்புயல் மெச்சத் தகுபொருள்
பட்சத்தொடு ரட்சித் தருள்வதும் ...... ஒருநாளே
தித்தித்தெய ஒத்தப் பரிபுர
நிர்த்தப்பதம் வைத்துப் பயிரவி
திக்கொட்கந டிக்கக் கழுகொடு ...... கழுதாடத்
திக்குப்பரி அட்டப் பயிரவர்
தொக்குத்தொகு தொக்குத் தொகுதொகு
சித்ரப்பவு ரிக்குத் த்ரிகடக ...... எனவோதக்
கொத்துப்பறை கொட்டக் களமிசை
குக்குக்குகு குக்குக் குகுகுகு
குத்திப்புதை புக்குப் பிடியென ...... முதுகூகை
கொட்புற்றெழ நட்பற் றவுணரை
வெட்டிப்பலி யிட்டுக் குலகிரி
குத்துப்பட ஒத்துப் பொரவல ...... பெருமாளே.
வெண்முத்தை நிகர்த்த, அழகான பல்வரிசையும் இளநகையும் அமைந்த தேவயானை* தேவியின் தலைவனே, சக்திவேல் ஆயுதத்தை ஏந்தும் சரவணபவக் கடவுளே, மோக்ஷ வீட்டுக்கு ஒப்பற்ற ஒரு விதையாக விளங்கும் ஞான குருவே, என்று துதிக்கும் முக்கண்ணர் பரமசிவனார்க்கு வேதங்களுக்கு முதன்மையான ஓம் என்னும் மந்திரத்தை உபதேசித்து, (மும்மூர்த்திகளில் எஞ்சியுள்ள) பிரம்மா, திருமால் ஆகிய இருவரும், முப்பத்து முக்கோடி தேவர்களும் அடி பணிய நின்றவனே, ராவணனுடைய பத்துத் தலைகளும் சிதறி விழுமாறு அம்பை விட்டு, ஒப்பற்ற மந்தர மலையான மத்தைக் கொண்டு பாற்கடலைக் கடைந்து, ஒரு பகற் பொழுதை வட்டமான சக்ராயுதத்தால் இரவு ஆக்கி, நண்பனாகிய அர்ச்சுனனுக்கு, தேர்ப்பாகனாக வந்து தேரினைச் செலுத்திய பசுமையான நீலமேகவண்ணன் திருமால் பாராட்டும் பரம்பொருளே, பரிவோடு என்னைக் காத்தருளும் நாள் ஒன்றும் உண்டோ? (இப்பாடலின் பிற்பகுதி முருகன் அசுரர்களுடன் செய்த போரினை விரிவாக வருணிக்கிறது). தித்தித்தெய என்ற தாளத்துக்கு ஒத்து, சிலம்புகள் அணிந்த நாட்டியப் பாதங்களை வைத்து காளிதேவி திசைகளில் எல்லாம் சுழன்று தாண்டவம் செய்யவும், கழுகுகளோடு பேய்கள் சேர்ந்து ஆடவும், எட்டுத் திக்குகளிலும் உலகங்களைத் தாங்குகின்ற அஷ்ட பைரவர்கள் ** இந்த அழகிய கூத்துக்கு ஏற்ப 'தொக்குத்தொகு தொக்குத் தொகுதொகு த்ரிகடக' என்ற தாள ஓசையைக் கூறவும், கூட்டமாகப் பற்பல பறை வாத்தியங்களை அதே தாளத்தில் முழக்கவும், போர்க்களத்தில் கிழக் கோட்டான்கள் 'குக்குக்குகு குக்குக் குகுகுகு' என்ற ஓசையோடு 'குத்திப் புதை, புகுந்து பிடி' என்றெல்லாம் குழறி வட்டமாகச் சுழன்று மேலே எழவும், சினேக எண்ணம் தவிர்த்து விரோத மனப்பான்மையே கொண்ட அசுரர்களை கொன்று பலி கொடுத்து, அசுரர் குல மலை கிரெளஞ்சகிரி தூளாக, தர்ம மார்க்கத்துக்குப் பொருந்த, போர்செய்யவல்ல பெருமாளே.
குறிப்பு: முருகன் அருணகிரிநாதருக்கு அடி எடுத்துக் கொடுக்கப் பாடிய பாட்டு இது.
* தேவயானை கிரியாசக்தி என்பதால், கர்மயோகத்தை முதலில் அனுஷ்டிக்க அவளைக் குறிப்பிட்டார்.
** அஷ்ட பைரவர்கள்: அசிதாங்கன், காபாலி, சண்டன், உருரு, குரோதன், சங்காரன், பீடணன், உன்மத்தன்.
பாடல் 7 - திருப்பரங்குன்றம்
ராகம் - .....; தாளம் - ........
தனத்த தந்தன தனதன தனதன
தனத்த தந்தன தனதன தனதன
தனத்த தந்தன தனதன தனதன ...... தனதான
அருக்கு மங்கையர் மலரடி வருடியெ
கருத்த றிந்துபின் அரைதனில் உடைதனை
அவிழ்த்தும் அங்குள அரசிலை தடவியும் ...... இருதோளுற்
றணைத்தும் அங்கையின் அடிதொறும் நகமெழ
உதட்டை மென்றுபல் இடுகுறி களுமிட
அடிக்க ளந்தனில் மயில்குயில் புறவென ...... மிகவாய்விட்
டுருக்கும் அங்கியின் மெழுகென உருகிய
சிரத்தை மிஞ்சிடும் அநுபவம் உறுபலம்
உறக்கை யின்கனி நிகரென இலகிய ...... முலைமேல்வீழ்ந்
துருக்க லங்கிமெய் உருகிட அமுதுகு
பெருத்த உந்தியின் முழுகிமெ யுணர்வற
உழைத்தி டுங்கன கலவியை மகிழ்வது ...... தவிர்வேனோ
இருக்கு மந்திரம் எழுவகை முநிபெற
உரைத்த சம்ப்ரம சரவண பவகுக
இதத்த இங்கிதம் இலகிய அறுமுக ...... எழில்வேளென்
றிலக்க ணங்களும் இயலிசை களுமிக
விரிக்கும் அம்பல மதுரித கவிதனை
இயற்று செந்தமிழ் விதமொடு புயமிசை ...... புனைவோனே
செருக்கும் அம்பல மிசைதனில் அசைவுற
நடித்த சங்கரர் வழிவழி அடியவர்
திருக்கு ருந்தடி அருள்பெற அருளிய ...... குருநாதர்
திருக்கு ழந்தையு மெனஅவர் வழிபடு
குருக்க ளின்திற மெனவரு பெரியவ
திருப்ப ரங்கிரி தனிலுறை சரவண ...... பெருமாளே.
அருமை வாய்ந்த விலைமாதர்களின் மலர் போன்ற அடிகளைப் பிடித்தும், (அவர்களுடைய) எண்ணத்தை அறிந்த பின்பு இடுப்பில் கட்டிய ஆடையை அவிழ்த்தும், அங்குள்ள அரசிலை போன்ற உறுப்பைத் தடவியும், அவர்களுடைய இரண்டு தோள்களிலும் பொருந்தி அணைத்தும், அங்கையின் அடிப்பாகம் தோறும் நகக் குறிகள் இட்டும், இதழ்களை மென்று பற்களால் பல குறிகள் பதித்தும், அடி நெஞ்சில் மயில் குயில் புறா ஆகிய இப் பறவைகள் போன்று பெரிய ஒலி எழச் செய்தும், உருக்க வல்ல நெருப்பிலிட்ட மெழுகு போல உருகிய ஊக்கம் மிக்க அனுபவத்தால் வருகின்ற பயன்களைப் பெற, கையில் உள்ள பழம் போல் விளங்கிய தனங்களின் மீது விழுந்து உருவம் கலங்கி உடல் உருகி, அமுதம் பெருகும் பெருத்த உந்தித் தடத்தில் முழுகி, மெய் உணர்வு அற்றுப் போகும் வண்ணம் உழைக்கின்ற பெருத்த கலவி இன்பத்தில் மகிழ்ச்சி கொள்ளுவதை விட்டு ஒழியேனோ? ரிக் வேத மந்திரத்தை (வசிஷ்டர் முதலிய) ஏழு வகை ரிஷிகளும் அறியும்படி உரைத்த சிறப்பு வாய்ந்தவனே, சரவணபவனே, குகனே, இதம் தருவதும், இனிமை தருவதுமாய் விளங்கும் ஆறு முகங்கள் கொண்ட அழகிய வேளே என்று, இலக்கணங்கள் பொருந்த இயற்றமிழாலும் இசைத் தமிழாலும் விரித்துரைக்கும் அழகிய பல மதுரம் மிகுந்த கவிகளாக இயற்றப்பட்ட செந்தமிழை வகைவகையாக திருப்புயத்தில் பாமாலையாக அணிந்தவனே, களிப்புடன் பொன்னம்பலத்தின் மீது அசைந்து கூத்தாடும் சங்கரரும், (தமக்கு) வழிவழி அடியவரான மாணிக்க வாசகருக்கு (திருப் பெருந்துறையில். திருக்குருந்த மரத்தடியில் அருள் பெறும் வண்ணம் அருள் செய்த குரு நாதரகிய சிவபெருமானது திருக் குழுந்தை என்ற நிலையிலும் அந்த சிவபெருமானே வழிபட்டு நிற்கும் பெரு நிலையிலும் எழுந்தருளியுள்ள பெரியோனே, திருப்பரங்குன்றத்தில் வீற்றிருக்கும் சரவண மூர்த்தியே, பெருமாளே.
பாடல் 8 - திருப்பரங்குன்றம்
ராகம் - ஸாவேரி; தாளம் - ஆதி
தனத்த தந்தன தனதன தனதன
தனத்த தந்தன தனதன தனதன
தனத்த தந்தன தனதன தனதன ...... தனதான
உனைத்தி னந்தொழு திலனுன தியல்பினை
உரைத்தி லன்பல மலர்கொடுன் அடியிணை
உறப்ப ணிந்திலன் ஒருதவ மிலனுன ...... தருள்மாறா
உளத்து ளன்பினர் உறைவிடம் அறிகிலன்
விருப்பொ டுன்சிக ரமும்வலம் வருகிலன்
உவப்பொ டுன்புகழ் துதிசெய விழைகிலன் ...... மலைபோலே
கனைத்தெ ழும்பக டதுபிடர் மிசைவரு
கறுத்த வெஞ்சின மறலிதன் உழையினர்
கதித்த டர்ந்தெறி கயிறடு கதைகொடு ...... பொருபோதே
கலக்கு றுஞ்செயல் ஒழிவற அழிவுறு
கருத்து நைந்தல முறுபொழு தளவைகொள்
கணத்தில் என்பய மறமயில் முதுகினில் ...... வருவாயே
வினைத்த லந்தனில் அலகைகள் குதிகொள
விழுக்கு டைந்துமெய் உகுதசை கழுகுண
விரித்த குஞ்சியர் எனுமவு ணரைஅமர் ...... புரிவேலா
மிகுத்த பண்பயில் குயில்மொழி அழகிய
கொடிச்சி குங்கும முலைமுக டுழுநறை
விரைத்த சந்தன ம்ருகமத புயவரை ...... உடையோனே
தினத்தி னஞ்சதுர் மறைமுநி முறைகொடு
புனற்சொ ரிந்தலர் பொதியவி ணவரொடு
சினத்தை நிந்தனை செயுமுநி வரர்தொழ ...... மகிழ்வோனே
தெனத்தெ னந்தன எனவரி யளிநறை
தெவிட்ட அன்பொடு பருகுயர் பொழில்திகழ்
திருப் பரங்கிரி தனிலுறை சரவண ...... பெருமாளே.
யான் உன்னைத் தினந்தோறும் தொழுவதும் இல்லை. உன் தன்மைகளை எடுத்து உரைப்பதுமில்லை. பல மலர்கள் கொண்டு உன் திருவடிகளை பொருந்தப் பணியவில்லை. ஒருவகையான தவமும் யான் செய்தவன் இல்லை. உன்னருள் நீங்காத உள்ளத்தை உடைய அன்பர் இருக்கும் இடம்கூட யான் அறிகின்றதும் இல்லை. ஆர்வத்தோடு உன் மலையை வலம்வருவதும் இல்லை. மகிழ்ச்சியோடு உன் புகழைத் துதிக்க விரும்புவதும் இல்லை. மலைபோல் உருவமுடன், கனைத்தவாறு வரும் எருமையின் கழுத்தின் மீது வருகின்ற, கரிய நிறமும் கடுங்கோபமும் உடைய யமனின் தூதர்கள் என்முன் தோன்றி நெருக்கி எறிகின்ற பாசக்கயிறு கொண்டும், துன்புறுத்தும் கதாயுதம் கொண்டும் என்னோடு போரிடும் போது, மனம் கலங்கும் செயலும், ஓய்வின்றி அழிவுறும் எண்ணமும் நைந்துபோய் யான் துன்புறும்போது ஒரு கண அளவில் என் பயம் நீங்கும்படியாக அஞ்சேல் என்று கூறி மயிலின் முதுகினில் நீ வருவாயாக. போர்க்களத்தில் பேய்கள் கூத்தாடுவதால் ஊன் உடைந்து உடல்களிலிருந்து சிதறின மாமிசத்தை கழுகுகள் உண்ணவும், விரித்த தலைமயிர் உடையவர்கள் என்னும் அசுரர்களோடு போர் புரிந்த வேலனே, நிறைய ராகங்களில் பாடவல்ல குயிலின் மொழி ஒத்த குரலாள், அழகான வள்ளிமலைக்காரி, (வள்ளியின்) குங்குமம் அணிந்த மார்பில் அழுந்தும் வாசமிகு சந்தனமும் கஸ்தூரியும் அணிந்த மலை போன்ற தோள்களை உடையவனே, தினந்தோறும், நால்வேதமும்வல்ல பிரம்மா விதிப்படி, நீரால் அபிஷேகம் செய்து, பூக்களை நிறைய அர்ச்சித்து, தேவர்களும் கோபத்தை நிந்தித்து விட்ட முனிவர்களும் தொழ, அந்த நித்ய பூஜையில் மனம் மகிழ்வோனே, தெனத்தெனந்தன என்ற சப்தத்துடன் இசைக்கும் வண்டுகள் தேனைத் தெவிட்டும் அளவுக்கு ஆசையுடன் குடிக்கும் உயர்ந்த சோலைகள் விளங்கும் திருப்பரங்குன்றத்தில் வீற்றிருக்கும் சரவண மூர்த்தியே.
பாடல் 9 - திருப்பரங்குன்றம்
ராகம் - ஹிந்தோளம் / வராளி; தாளம் - அங்கதாளம் - 7 - திஸ்ரத்ருபுடை
தகிட-1 1/2, தகிட-1 1/2, தகதகிட-2 1/2, தகிட-1 1/2
தனனதந்த தத்தத்த தந்த
தனனதந்த தத்தத்த தந்த
தனனதந்த தத்தத்த தந்த ...... தனதான
கருவடைந்து பத்துற்ற திங்கள்
வயிறிருந்து முற்றிப்ப யின்று
கடையில்வந்து தித்துக்கு ழந்தை ...... வடிவாகிக்
கழுவியங்கெ டுத்துச்சு ரந்த
முலையருந்து விக்கக்கி டந்து
கதறியங்கை கொட்டித்த வழ்ந்து ...... நடமாடி
அரைவடங்கள் கட்டிச்ச தங்கை
இடுகுதம்பை பொற்சுட்டி தண்டை
அவையணிந்து முற்றிக்கி ளர்ந்து ...... வயதேறி
அரியபெண்கள் நட்பைப்பு ணர்ந்து
பிணியுழன்று சுற்றித்தி ரிந்த
தமையுமுன்க்ரு பைச்சித்தம் என்று ...... பெறுவேனோ
இரவிஇந்த்ரன் வெற்றிக்கு ரங்கி
னரசரென்றும் ஒப்பற்ற உந்தி
யிறைவன்எண்கி னக்கர்த்த னென்றும் ...... நெடுநீலன்
எரியதென்றும் ருத்ரற்சி றந்த
அநுமனென்றும் ஒப்பற்ற அண்டர்
எவரும்இந்த வர்க்கத்தில் வந்து ...... புனமேவ
அரியதன்ப டைக்கர்த்த ரென்று
அசுரர்தங்கி ளைக்கட்டை வென்ற
அரிமுகுந்தன் மெச்சுற்ற பண்பின் ...... மருகோனே
அயனையும்பு டைத்துச்சி னந்து
உலகமும்ப டைத்துப்ப ரிந்து
அருள்பரங்கி ரிக்குட்சி றந்த ...... பெருமாளே.
கருவிலே சேர்ந்து பத்து மாதங்கள் தாயின் வயிற்றில் இருந்து கரு முற்றிப் பக்குவம் அடைந்து கடைசியில் பூமியில் வந்து பிறந்து குழந்தையின் வடிவத்தில் தோன்றி குழந்தையை அங்கு கழுவியெடுத்து சுரக்கும் முலைப்பாலை ஊட்டுவிக்க தரையிலே கிடந்தும், அழுதும், உள்ளங்கையைக் கொட்டியும், தவழ்ந்தும், நடை பழகியும், அரைநாண் கட்டியும், காலில் சதங்கையும், காதில் இட்ட அணியும், பொன் கொலுசு, தண்டை அவைகளை அணிந்தும், முதிர்ந்து வளர்ந்து வயது ஏறி, அருமையான பெண்களின் நட்பைப் பூண்டு, நோய்வாய்ப்பட்டு அலைந்து திரிந்தது போதும். (இனிமேல்) உனது அருள் கடாட்சத்தை எப்போது பெறுவேனோ? சூரியன் (அவன் அம்சமாக சுக்ரிவன்), இந்திரன் (அவன் அம்சமாக வாலி) வெற்றி வானர அரசர்களாகவும், ஒப்பில்லா திருமால் வயிற்றிலே பிறந்த பிரமன் கர் இனத் தலைவன் (ஜாம்பவான்) ஆகவும், நெடிய நீலன் அக்கினியின் கூறாகவும், ருத்திர அம்சம் அநுமன் என்றும், ஒப்பில்லாத தேவர்கள் யாவரும் இன்னின்ன வகைகளிலே வந்து இப் பூமியில் சேர்ந்திட, (இவர்களே) தன் அரிய படைக்குத் தலைவர் எனத் தேர்ந்து, அசுரர்களின் சுற்றமென்னும் கூட்டத்தை வெற்றி கொண்ட ஹரிமுகுந்தனாம் ஸ்ரீராமன் புகழும் குணம் வாய்ந்த மருமகனே, பிரம்மாவையும் தண்டித்து, கோபித்து, (பிரம்மனைச் சிறையிட்ட பின்) உலகத்தையும் படைத்து, அன்புடன் அருள் பாலிக்கும் திருப்பரங்குன்றத்தில் வீற்றிருக்கும் பெருமாளே.
பாடல் 10 - திருப்பரங்குன்றம்
ராகம் - ....; தாளம் - .......
தனத்த தந்தன தனதன தனதன
தனத்த தந்தன தனதன தனதன
தனத்த தந்தன தனதன தனதன ...... தனதான
கறுக்கும் அஞ்சன விழியிணை அயில்கொடு
நெருக்கி நெஞ்சற எறிதரு பொழுதொரு
கனிக்குள் இன்சுவை அமுதுகும் ஒருசிறு ...... நகையாலே
களக்கொ ழுங்கலி வலைகொடு விசிறியெ
மனைக்கெ ழுந்திரும் எனமனம் உருகஒர்
கவற்சி கொண்டிட மனைதனில் அழகொடு ...... கொடுபோகி
நறைத்த பஞ்சணை மிசையினில் மனமுற
அணைத்த கந்தனில் இணைமுலை எதிர்பொர
நகத்த ழுந்திட அமுதிதழ் பருகியு ...... மிடறூடே
நடித்தெ ழுங்குரல் குமுகுமு குமுவென
இசைத்து நன்கொடு மனமது மறுகிட
நழுப்பு நஞ்சன சிறுமிகள் துயரற ...... அருள்வாயே
நிறைத்த தெண்டிரை மொகுமொகு மொகுவென
உரத்த கஞ்சுகி முடிநெறு நெறுவென
நிறைத்த அண்டமு கடுகிடு கிடுவென ...... வரைபோலும்
நிவத்த திண்கழல் நிசிசர ருரமொடு
சிரக்கொ டுங்குவை மலைபுரை தரஇரு
நிணக்கு ழம்பொடு குருதிகள் சொரிதர ...... அடுதீரா
திறற்க ருங்குழல் உமையவள் அருளுறு
புழைக்கை தண்கட கயமுக மிகவுள
சிவக்கொ ழுந்தன கணபதி யுடன்வரும் ...... இளையோனே
சினத்தொ டுஞ்சமன் உதைபட நிறுவிய
பரற்கு ளன்புறு புதல்வநன் மணியுகு
திருப்ப ரங்கிரி தனிலுறை சரவண ...... பெருமாளே.
கரிய மையிட்ட இரண்டு கண்களாகிய வேல் கொண்டு நெருக்கி, மனம் அழியும்படி எறியும் பொழுது, ஒரு பழச் சுவையையும் அமுதத்தையும் உகுக்கின்ற ஒப்பற்ற புன்னகையாலே, கழுத்தில் நின்று எழும் வளமான ஒலி என்னும் வலையை வீசியே வீட்டுக்கு வாருங்கள் என்று கூறி மனம் உருகும்படியாகவும், ஒரு கவலை கொள்ளும்படியாகவும் வீட்டில் அழகாக அழைத்துக் கொண்டு போய், மணம் தோய்ந்த பஞ்சணையின் மேல் மனம் பொருந்த அணைத்த மார்பில் அவர்களது இரு மார்பகங்களை எதிர்பொர, நகக் குறி அழுந்த, இதழ் அமுதைப் பருகியும், கண்டத்தோடு நடித்து எழுகின்ற புட்குரல் குமு குமு என்று ஒலி செய்ய, நன்றாக மனம் கலங்கும்படி பசப்பி மயக்கும் விஷம் போன்ற விலைமாதர்களால் வரும் துன்பம் நீங்க நீ அருள் புரிவாயே. நிறை கடல் பொங்கி மொகு மொகு எனவும், வலிமையான ஆதிசேஷனது முடி நெறு நெறு எனவும், நிறைந்த அண்டங்களின் உச்சிகளும் கிடு கிடு எனவும், மலையை ஒத்து உயர்ந்த திண்ணிய கழல்களைக் கொண்ட அவுணர்கள் மார்பும் தலைகளின் கொடிய கூட்டமும் மலைக்கு ஒப்பாக பெரிய மாமிசக் குழம்புடன் ரத்தத்தைச் சொரிய வெட்டித் துணித்த தீரனே, ஒளியும் கருமையும் கொண்ட உமா தேவி பெற்றருளிய தொளைக் கையையும், குளிர்ந்த மதமும் உள்ள யானை முகத்தைக் கொண்ட சிவக் கொழுந்து போன்ற விநாயகருடன் வரும் தம்பியே, கோபத்துடன் யமனை உதைபட வைத்த சிவபெருமானது உள்ளம் அன்புறும் புதல்வனே, நல்ல மணிகளைச் சிதறும் திருப்பரங்குன்றத்தில் வீற்றிருக்கும் சரவணனாகிய பெருமாளே.
பாடல் 11 - திருப்பரங்குன்றம்
ராகம் - சங்கராபரணம் / நீலாம்பரி; தாளம் - திஸ்ரத்ருபுடை - 7
தனதந்தன தந்தன தந்தன
தனதந்தன தந்தன தந்தன
தனதந்தன தந்தன தந்தன ...... தனதான
கனகந்திரள் கின்றபெ ருங்கிரி
தனில்வந்துத கன்தகன் என்றிடு
கதிர்மிஞ்சிய செண்டைஎ றிந்திடு ...... கதியோனே
கடமிஞ்சிஅ நந்தவி தம்புணர்
கவளந்தனை உண்டுவ ளர்ந்திடு
கரியின்றுணை என்றுபி றந்திடு ...... முருகோனே
பனகந்துயில் கின்றதி றம்புனை
கடல்முன்புக டைந்தப ரம்பரர்
படரும்புயல் என்றவர் அன்புகொள் ...... மருகோனே
பலதுன்பம்உழன்றுக லங்கிய
சிறியன்புலை யன்கொலை யன்புரி
பவமின்றுக ழிந்திட வந்தருள் ...... புரிவாயே
அனகன்பெயர் நின்றுரு ளுந்திரி
புரமுந்திரி வென்றிட இன்புடன்
அழலுந்தந குந்திறல் கொண்டவர் ...... புதல்வோனே
அடல்வந்துமு ழங்கியி டும்பறை
டுடுடுண்டுடு டுண்டுடு டுண்டென
அதிர்கின்றிட அண்டநெ ரிந்திட ...... வருசூரர்
மனமுந்தழல் சென்றிட அன்றவர்
உடலுங்குட லுங்கிழி கொண்டிட
மயில்வென்றனில் வந்தரு ளுங்கன ...... பெரியோனே
மதியுங்கதி ருந்தட வும்படி
உயர்கின்றவ னங்கள்பொ ருந்திய
வளமொன்றுப ரங்கிரி வந்தருள் ...... பெருமாளே.
தங்கம் திரண்டு சேர்கின்ற பெரிய மேரு மலையை அடைந்து அதன் மேல் தக தக என்று மின்னுகின்ற ஒளிவீசும் செண்டாயுதத்தை (பொற்பிரம்பை)* எறிந்திட்ட புகலிடமானவனே, மிக்க மதம் கொண்டு, பலவித பக்ஷணங்களைப் புசித்து, அனைத்தையும் கவள அளவாக உண்டு வளர்ந்த யானைமுகனுக்கு இளையவனாகப் பிறந்த முருகனே, ஆதிசேஷன் மீது அறிதுயில் கொள்ளும் வல்லமை உடையவரும், பாற்கடலை முன்பு (கூர்மாவதாரத்தில்) தாமே கடைந்த பெரும் பொருளும், வானில் படரும் கார்முகில் நிறத்தவருமான திருமாலின் அன்பார்ந்த மருமகனே, பல துன்பங்களால் மனம் சுழன்று கலக்கமுற்ற அற்பனும், புலால் உண்பவனும், கொலைகாரனுமான நான் செய்கின்ற பாவங்கள் எல்லாம் இன்றோடு அழிந்து போக நீ என் முன் தோன்றி திருவருள் புரியவேண்டும். பாவமில்லாதவன் என்ற பெயர் நிலைத்து நின்று, எப்போதும் சுழன்று திரியும் திரிபுரத்தையும் வெற்றி கொள்ள, அக்கினிதேவன் மகிழ்ச்சியோடு வந்து பற்றிக் கொள்ளும்படியாக சிரித்தே எரித்த திறமைகொண்ட சிவனாரின் திருக்குமரனே, வலிமையோடு வந்து முழங்கும் பறை வாத்தியங்கள் (அதே ஒலியோடு) உலகம் அதிர, அண்டங்கள் கூட்டமிகுதியால் நெரிய, போருக்கு வந்த சூரர்களின் மனத்தில் சென்று அக்கினி சுடும்படி, அந்த நாள் அவர்களின் உடல்களும் குடல்களும் கிழியும்படி, மயிலின் முதுகின் மேல் வந்தருளிய மதிப்பும் பெருமையும் உடையவனே, சந்திரனும் சூரியனும் தடவிச் செல்லும்படியான உயரமான மரங்கள் உள்ள சோலைகள் நிறைந்த வளமிக்க திருப்பரங்குன்றத்தில் எழுந்தருளி அருள் பாலிக்கும் பெருமாளே.
* முருகனது அம்சமான உக்கிர பாண்டியன் ஆட்சியின் போது நாட்டில் வறுமை மிக, பாண்டியன் கனவில் சிவபெருமான் தோன்றி பொன்மலை மேருவைச் செண்டால் அடித்தால் பொன்னாகக் கொட்டும் என, பாண்டியன் மேருவைச் செண்டால் அடித்து பொன் பெற்ற திருவிளையாடல் இங்கு கூறப்படுகிறது.
பாடல் 12 - திருப்பரங்குன்றம்
ராகம் - ....; தாளம் - ......
தானன தந்தன தந்தனந் தந்தன
தானன தந்தன தந்தனந் தந்தன
தானன தந்தன தந்தனந் தந்தன ...... தனதான
காதட ருங்கயல் கொண்டிசைந் தைம்பொறி
வாளிம யங்கம னம்பயந் தந்திருள்
கால்தர விந்துவி சும்பிலங் கும்பொழு ...... தொருகோடி
காய்கதி ரென்றொளிர் செஞ்சிலம் புங்கணை
யாழியு டன்கட கந்துலங் கும்படி
காமனெ டுஞ்சிலை கொண்டடர்ந் தும்பொரு ...... மயலாலே
வாதுபு ரிந்தவர் செங்கைதந் திங்கித
மாகந டந்தவர் பின்திரிந் துந்தன
மார்பில ழுந்தஅ ணைந்திடுந் துன்பம ...... துழலாதே
வாசமி குந்தக டம்பமென் கிண்கிணி
மாலைக ரங்கொளும் அன்பர்வந் தன்பொடு
வாழநி தம்புனை யும்பதந் தந்துன ...... தருள்தாராய்
போதிலு றைந்தருள் கின்றவன் செஞ்சிர
மீதுத டிந்துவி லங்கிடும் புங்கவ
போதவ ளஞ்சிவ சங்கரன் கொண்டிட ...... மொழிவோனே
பூகமு டன்திகழ் சங்கினங் கொண்டகி
¡£வம டந்தைபு ரந்தரன் தந்தருள்
பூவைக ருங்குற மின்கலந் தங்குப ...... னிருதோளா
தீதக மொன்றினர் வஞ்சகந் துஞ்சியி
டாதவர் சங்கரர் தந்ததென் பும்பல
சேர்நிரு தன்குலம் அஞ்சமுன் சென்றடு ...... திறலோனே
சீதள முந்தும ணந்தயங் கும்பொழில்
சூழ்தர விஞ்சைகள் வந்திறைஞ் சும்பதி
தேவர்ப ணிந்தெழு தென்பரங் குன்றுறை ...... பெருமாளே.
காது அளவும் நெருக்கும் கயல் மீன் போன்ற கண்களை மனத்தில் கொண்டு, அப் பொது மகளிர்பால் மனம் ஒருப்பட்டு, ஐம்புலன்களும் மன்மதன் வீசும் அம்புகளால் மயங்க, மனம் அச்சம் கொண்டு, இருள் நீங்கும்படியான சந்திரன் விண்ணில் ஒளி தரும்பொழுது கோடிக் கணக்காக காய்கின்ற நட்சத்திரங்கள் போல் ஒளி வீசும் செவ்விய சிலம்பும், மோதிரமும், கடகமும் விளங்க, மன்மதன் தனது நீண்ட வில்லைக் கொண்டு நெருங்கி சண்டை செய்வதால் வரும் மயக்கத்தினால், பிணங்கியும் இணங்கியும் இனிமையுடன் நடப்பவரான விலைமாதர்களின் பின் திரிந்து அவர்களது மார்பில் அழுந்த அணையும் துன்பச் செயலில் நான் உழலாமல், வாசனை மிக்க கடம்ப மலரால் ஆன மெல்லிய கிண்கிணி மாலைகளை கைகளில் ஏந்திய அடியார்கள் வந்து அன்புடன் தாம் வாழ வேண்டி நாள் தோறும் (அம்மாலைகளைச்) சூட்டும் திருவடியைத் தந்து உனது திருவருளைத் தாராய். (தாமரை) மலரில் உறைந்தருளும் பிரமனது செவ்விய தலை மீது புடைக்கும்படி குட்டி, அவனை விலங்கிட்ட சிறப்பு உடையவனே, ஞான வளப்பத்தை (பிரணவப் பொருளை) சிவசங்கர மூர்த்தி பெறும்படி உரைத்தவனே, கமுக மரங்கள், விளங்கும் சங்குகள் இவைகளின் அழகைக் கொண்ட கழுத்தை உடைய பெண்ணும், இந்திரன் பெற்றருளியவளும் ஆகிய பூவை போன்ற தேவயானை, பெருமை வாய்ந்த குற மகளாகிய வள்ளிநாயகி ஆகியவர்களின் ஆபரணங்கள் தங்கும்படியான பன்னிரு தோள்களை உடையவனே, தீய உள்ளம் பொருந்தினவர்களும், வஞ்சகம் குறையாதவரும், சிவ பெருமான் (முன்பு வரமாகத்) தந்த செருக்குகள் பல கொண்டவர்களுமாகிய அசுரர் கூட்டம் பயப்படும்படி முன் சென்று அவர்களை அழித்த திறம் வாய்ந்தவனே, குளிர்ச்சி முற்பட்டு, மணம் விளங்கும் சோலைகள் சூழ்ந்ததும், கல்வியில் மிக்கோர் வந்து வணங்குவதுமான ஊர், தேவர்கள் வணங்கி எழுகின்ற அழகிய திருப்பரங் குன்றத்தில் வீற்றிருக்கும் பெருமாளே.
பாடல் 13 - திருப்பரங்குன்றம்
ராகம் - ஹிந்தோளம் ; தாளம் - அங்கதாளம் - 7 1/2
தகதகிட-2 1/2, தகதிமி-2, தகதிமிதக-3
தந்தனந் தத்தத் ...... தனதான
தந்தனந் தத்தத் ...... தனதான
சந்ததம் பந்தத் ...... தொடராலே
சஞ்சலந் துஞ்சித் ...... திரியாதே
கந்தனென் றென்றுற் ...... றுனைநாளும்
கண்டுகொண் டன்புற் ...... றிடுவேனோ
தந்தியின் கொம்பைப் ...... புணர்வோனே
சங்கரன் பங்கிற் ...... சிவைபாலா
செந்திலங் கண்டிக் ...... கதிர்வேலா
தென்பரங் குன்றிற் ...... பெருமாளே.
எப்பொழுதும் பாசம் என்ற தொடர்பினாலே துயரத்தால் சோர்ந்து திரியாமல், கந்தன் என அடிக்கடி மனதார உன்னை தினமும் உள்ளக் கண்களால் கண்டு தரிசித்து, யான்அன்பு கொள்வேனோ? (ஐராவதம் என்னும்) யானை வளர்த்த கொடி போன்ற தேவயானையை மணம் செய்துகொண்டு சேர்பவனே, சங்கரனின் பக்கத்தில் தங்கிய பார்வதியின் குழந்தாய், திருச்செந்தூரிலும், அழகிய கண்டியிலும் ஒளிவீசும் வேலோடு விளங்குபவனே, அழகிய திருப்பரங்குன்றில் அமர்ந்த பெருமாளே.
பாடல் 14 - திருப்பரங்குன்றம்
ராகம் - .....; தாளம் - ....
தனதந்தன தந்தன தந்தன
தனதந்தன தந்தன தந்தன
தனதந்தன தந்தன தந்தன ...... தனதான
சருவும்படி வந்தனன் இங்கித
மதனின்றிட அம்புலி யுஞ்சுடு
தழல்கொண்டிட மங்கையர் கண்களின் ...... வசமாகிச்
சயிலங்கொளு மன்றல்பொ ருந்திய
பொழிலின்பயில் தென்றலும் ஒன்றிய
தடவஞ்சுனை துன்றியெ ழுந்திட ...... திறமாவே
இரவும்பகல் அந்தியு நின்றிடு
குயில்வந்திசை தெந்தன என்றிட
இருகண்கள்து யின்றிட லின்றியும் ...... அயர்வாகி
இவணெஞ்சுப தன்பதன் என்றிட
மயல்கொண்டுவ ருந்திய வஞ்சகன்
இனியுன்றன்ம லர்ந்தில கும்பதம் ...... அடைவேனோ
திருவொன்றிவி ளங்கிய அண்டர்கள்
மனையின்தயிர் உண்டவன் எண்டிசை
திகழும்புகழ் கொண்டவன் வண்டமிழ் ...... பயில்வோர்பின்
திரிகின்றவன் மஞ்சுநி றம்புனை
பவன்மிஞ்சுதி றங்கொள வென்றடல்
செயதுங்கமு குந்தன்ம கிழ்ந்தருள் ...... மருகோனே
மருவுங்கடல் துந்திமி யுங்குட
முழவங்கள்கு மின்குமி னென்றிட
வளமொன்றிய செந்திலில் வந்தருள் ...... முருகோனே
மதியுங்கதி ரும்புய லுந்தின
மறுகும்படி அண்டம்இ லங்கிட
வளர்கின்றப ரங்கிரி வந்தருள் ...... பெருமாளே.
சண்டையிடும் கருத்துடன் வந்து மன்மதன் நிற்க, நிலவும் சுடுகின்ற தீயை தன்னுள் வைத்துக் கொள்ள, விலைமாதர்களின் கண்களில் வசப்பட்டு, மலைச் சாரலில் உள்ள மணம் பொருந்திய சோலைகளில் தவழ்ந்துவரும் தென்றல் காற்றும் அங்குள்ள அகன்ற அழகிய சுனைநீரில் படிந்து வலிவுடனே எழ, இரவும் பகலும் அந்திவேளையும் நின்று நிதானமாக குயில் வந்து இசையைத் தெந்தன என்று பாட, எனது இரண்டு கண்களும் தூக்கம் இல்லாமல் களைத்துப் போய், இங்கே என் மனம் பதை பதைக்க, காம மயக்கம் கொண்டு வருந்திய வஞ்சகனாகிய நான் இனிமேல் உன் மலர்ந்து விளங்கும் திருவடியை அடைவேனோ? செல்வம் பொருந்தி விளங்கிய இடையர்களின் வீடுகளிலிருந்த தயிரை (திருடி) உண்டவனும், எட்டு திசைகளிலும் புகழ் பெற்றவனும், வளமான தமிழைப் பயில்வோர்களுடைய பின்னே திரிகின்றவனும்*, மேக நிறம் கொண்டவனும், மிக்க திறல் கொண்டு (மற்போரில்) வெல்லும் வலிமை வாய்ந்தவனும், வெற்றியும் பரிசுத்தமும் கொண்ட முகுந்தனுமாகிய திருமால் மகிழும் மருகனே, பொருந்திய கடல் அலைகளைப் போல, துந்துமிப் பறையும், குடமுழவு வாத்தியமும் குமின் குமின் என்று ஒலி செய்ய, வளம் பொருந்திய திருச் செந்தூரில் வந்து எழுந்தருளி உள்ள முருகனே, திங்களும், சூரியனும், மேகமும் நாள்தோறும் வானில் செல்வதற்குத் தயங்கும்படி, இவ்வுலகம் விளங்கும்படியாக வானளாவி வளர்கின்ற திருப்பரங்குன்றத்தில் எழுந்தருளி அருளுகின்ற பெருமாளே.
* தமிழ் பயில்வோர் பின் திருமால் சென்றது - திருமழிசை ஆழ்வாரின் சீடனாகிய கணிகண்ணனுக்காக காஞ்சீபுரத்து வரதராஜப் பெருமாள் ஊரை விட்டு ஆழ்வார் பின் சென்ற வரலாற்றைக் குறிக்கும்.
பாடல் 15 - திருப்பரங்குன்றம்
ராகம் - ஆனந்த பைரவி; தாளம் - ஸங்கீர்ண சாபு - 4 1/2 - எடுப்பு - அதீதம்
தக-1, திமி-1, தகிட-1 1/2, தக-1
தனத்தத் தந்தனந் தனத்தத் தந்தனந்
தனத்தத் தந்தனந் ......தனதான
தடக்கைப் பங்கயம் கொடைக்குக் கொண்டல்தண்
டமிழ்க்குத் தஞ்சமென் ...... றுலகோரைத்
தவித்துச் சென்றிரந் துளத்திற் புண்படுந்
தளர்ச்சிப் பம்பரந் ...... தனையூசற்
கடத்தைத் துன்பமண் சடத்தைத் துஞ்சிடுங்
கலத்தைப் பஞ்சஇந் ...... த்ரியவாழ்வைக்
கணத்திற் சென்றிடந் திருத்தித் தண்டையங்
கழற்குத் தொண்டுகொண் ...... டருள்வாயே
படைக்கப் பங்கயன் துடைக்கச் சங்கரன்
புரக்கக் கஞ்சைமன் ...... பணியாகப்
பணித்துத் தம்பயந் தணித்துச் சந்ததம்
பரத்தைக் கொண்டிடுந் ...... தனிவேலா
குடக்குத் தென்பரம் பொருப்பிற் றங்குமங்
குலத்திற் கங்கைதன் ...... சிறியோனே
குறப்பொற் கொம்பைமுன் புனத்திற் செங்கரங்
குவித்துக் கும்பிடும் ...... பெருமாளே.
உன் அகன்ற கை தாமரை போன்றது, கொடை வன்மையில் நீ மேகம் போன்றவன், தமிழ்ப் புலவர்க்கு நீயே புகலிடம் என்று கூறி உலகத்தவரைத் தவிப்புடன் நாடி யாசித்து மனம் நொந்து புண்ணாகி தளர்வுற்றுப் பம்பரம் போன்று சுழல்வேனை, உள்ளிருக்கும் பண்டம் ஊசிப்போன மண் சட்டியை, துன்பம் நிறைந்த மண்ணாலான இந்த உடலை, அழிந்துபோகும் இந்தப் பாண்டத்தை, ஐம்பொறிகளால் ஆட்டிவைக்கப்படும் இந்த வாழ்வை, நொடியில் வந்து என் இதயமாம் இடத்தைத் திருத்தி, வீரக்கழல்கள் அணிந்த நின் அழகிய திருப்பாதங்களுக்கு தொண்டு செய்ய என்னை ஏற்றுக்கொண்டு அருள்வாயாக. படைக்கும் தொழிலைச் செய்வதற்குத் தாமரைமலர் மேவும் பிரமன், அழிக்கும் தொழிலைச் செய்வதற்குச் சங்கரன், காக்கும் தொழிலைச் செய்வதற்குத் தாமரையாள் மணாளன் திருமால் என்று தத்தம் தொழில்களை நியமித்து அளித்து, அவரவர் பயங்களைப் போக்கி, எப்போதும் பராகாசத்தில் மேலான நிலையிலே நிற்கும் ஒப்பற்ற வேலாயுதக் கடவுளே, மதுரைக்கு மேற்கே திருப்பரங்குன்றத்தில் தங்கும், உயர்குல நதியாம் கங்கையின் குழந்தாய், குறக்குலத்து அழகிய கொடியாம் வள்ளியை முன்பு தினைப்புனத்தில் நின் செவ்விய கரங்களைக் கூப்பிக் கும்பிட்ட பெருமாளே.
பாடல் 16 - திருப்பரங்குன்றம்
ராகம் - ......; தாளம் - ........
தனத்ததந் தந்தத் தத்தன தத்தந்
தனத்ததந் தந்தத் தத்தன தத்தந்
தனத்ததந் தந்தத் தத்தன தத்தந் ...... தனதான
பதித்தசெஞ் சந்தப் பொற்குட நித்தம்
பருந்துயர்ந் தண்டத் திற்றலை முட்டும்
பருப்பதந் தந்தச் செப்பவை ஒக்குந் ...... தனபாரம்
படப்புயங் கம்பற் கக்குக டுப்பண்
செருக்குவண் டம்பப் பிற்கயல் ஒக்கும்
பருத்தகண் கொண்டைக் கொக்குமி ருட்டென் ...... றிளைஞோர்கள்
துதித்துமுன் கும்பிட் டுற்றது ரைத்தன்
புவக்கநெஞ் சஞ்சச் சிற்றிடை சுற்றுந்
துகிற்களைந் தின்பத் துர்க்கம் அளிக்கும் ...... கொடியார்பால்
துவக்குணும் பங்கப் பித்தன வத்தன்
புவிக்குளென் சிந்தைப் புத்திம யக்கந்
துறக்கநின் தண்டைப் பத்மமெ னக்கென் ...... றருள்வாயே
குதித்துவெண் சங்கத் தைச்சுற வெற்றுங்
கடற்கரந் தஞ்சிப் புக்கஅ ரக்கன்
குடற்சரிந் தெஞ்சக் குத்திவி திர்க்குங் ...... கதிர்வேலா
குலக்கரும் பின்சொற் றத்தையி பப்பெண்
தனக்குவஞ் சஞ்சொற் பொச்சையி டைக்குங்
குகுக்குகுங் குங்குக் குக்குகு குக்குங் ...... குகுகூகூ
திதித்திதிந் தித்தித் தித்தியெ னக்கொம்
பதிர்த்துவெண் சண்டக் கட்கம்வி திர்த்துந்
திரட்குவிந் தங்கட் பொட்டெழ வெட்டுங் ...... கொலைவேடர்
தினைப்புனஞ் சென்றிச் சித்தபெ ணைக்கண்
டுருக்கரந் தங்குக் கிட்டிய ணைத்தொண்
திருப்பரங் குன்றிற் புக்குளி ருக்கும் ...... பெருமாளே.
(மார்பில்) பதிந்துள்ள செவ்விய அழகிய பொற்குடம், நாள் தோறும் பருத்து, உயர்ந்து விண்ணில் தலையை முட்ட வல்ல மலை, (யானையின்) தந்தம், செப்பு ஆகியவைகளை நிகர்க்கும் தன பாரங்கள், படத்தை உடைய பாம்பின் பற்கள் கக்கும் விஷம், பண்களைக் களிப்பில் பாடும் வண்டு, அம்பு, நீரில் உள்ள கயல் மீனை ஒக்கும் பெரிய கண்கள், கூந்தலுக்கு ஒப்பான இருட்டு என்றெல்லாம் இளைஞர்கள் (விலைமாதர்களின்) அங்கங்களைத் துதித்து முன்னதாகக் கும்பிட்டு நடந்த நிகழ்ச்சிகளை உள்ளவாறு அவர்களிடம் சொல்லி, அன்புக் களிப்புடன் உள்ளம் அஞ்ச, சிற்றிடையைச் சுற்றியுள்ள ஆடையை விலக்கி இன்பக் கலக்கத்தைக் கொடுக்கும் கொடியவர்களாகிய வேசிகளிடத்து கட்டுப்பட்டிருக்கும் பாவியாகிய பித்தன், பொய்யன் நான். இப்பூமியில் என்னுடைய மனதிலும், புத்தியிலும் உள்ள மயக்கத்தை விட்டொழிக்க உனது தண்டை அணிந்த தாமரை போன்ற திருவடிகளை எனக்கு என்று தந்து அருள்வாயோ? குதித்து வெண்ணிறச் சங்குகளை சுறா மீன்கள் மோதி எறியும் கடலில் ஒளிந்து பயந்துப் புகுந்த அசுரன் சூரனின் குடல் சரிந்து விழும்படியாகக் குத்தி அசைக்கும் ஒளி வீசும் வேலனே, சிறந்த கரும்பு போன்ற மொழியை உடையவளும், கிளி போன்றவளுமாகிய, (ஐராவதம் என்ற) யானை மகளான தேவயானையிடம் மறைத்த சொல்லுடன் காட்டில், குங்குகுக் குகுங் குங்குக் குக்குகு குக்குங் குகுகூகூ திதித்திதித் திந்தித் தித்தெயென ஊதுக் கொம்புகள் அதிர்ந்து ஒலி செய்ய பளபளக்கும் வலிமை பொருந்திய வாளை வீசி, திரளாகக் குவியும்படி அந்த இடத்திலேயே (பகைவரை) அழிவுற வெட்டும் கொடிய வேடர்களுடைய தினைப் புனத்துக்குப் போய், விரும்பிய பெண்ணாகிய வள்ளியைப் பார்த்து, தன் உண்மையான உருவத்தை மறைத்து, அங்கு நெருங்கிச் சென்று அவளைத் தழுவி, பின்பு ஒளி வீசும் திருப்பரங்குன்றத்தைப் புக்கிடமாகக் கொண்டு அங்கு வீற்றிருக்கும் பெருமாளே.
பாடல் 17 - திருப்பரங்குன்றம்
ராகம் - ...... ; தாளம் -
தனத்தனந் தந்தன தனத்தனந் தந்தன
தனத்தனந் தந்தன ...... தந்ததான
பொருப்புறுங் கொங்கையர் பொருட்கவர்ந் தொன்றிய
பிணக்கிடுஞ் சண்டிகள் ...... வஞ்சமாதர்
புயற்குழன் றங்கமழ் அறற்குலந் தங்கவிர்
முருக்குவண் செந்துவர் ...... தந்துபோகம்
அருத்திடுஞ் சிங்கியர் தருக்கிடுஞ் செங்கயல்
அறச்சிவந் தங்கையில் ...... அன்புமேவும்
அவர்க்குழன் றங்கமும் அறத்தளர்ந் தென்பயன்
அருட்பதம் பங்கயம் ...... அன்புறாதோ
மிருத்தணும் பங்கயன் அலர்க்கணன் சங்கரர்
விதித்தெணுங் கும்பிடு ...... கந்தவேளே
மிகுத்திடும் வன்சம ணரைப்பெருந் திண்கழு
மிசைக்கிடுஞ் செந்தமிழ் ...... அங்கவாயா
பெருக்குதண் சண்பக வனத்திடங் கொங்கொடு
திறற்செழுஞ் சந்தகில் ...... துன்றிநீடு
தினைப்புனம் பைங்கொடி தனத்துடன் சென்றணை
திருப்பரங் குன்றுறை ...... தம்பிரானே.
மலை போன்ற மார்பினர், பொருளை அபகரித்து அதனால் உண்டாகும் (பண விஷயமாக) பிணக்கம் செய்யும் கொடியவர், வஞ்சகம் மிக்க விலைமாதர்கள், மேகம் போன்ற கூந்தல் சுருண்டுள்ளதாய், அழகியதாய், மணம் வீசுவதாய், கருமணற் கூட்டம் போல தங்கி விளங்கி, முருக்கிதழ் போன்று வளங் கொண்டு, செவ்விய பவளம் போன்ற இதழ்களால் போகத்தைத் தந்து, (கரண்டியால்) ஊட்டுகின்ற விஷம் போன்றவர்கள், வாது செய்து, செவ்விய கயல் மீன் போன்ற கண்கள் மிகச் சிவந்து, அழகிய கைப்பொருள் மீது ஆசை வைத்துள்ள அத்தகைய பொது மகளிர் பால் நான் உழன்று, உடலும் மிகத் தளர்வதால் என்ன பயன்? உனது திருவடித் தாமரை (என் மீது) அன்பு கொள்ளாதோ? இறத்தலோடு* கூடிய பிரமன், மலர்ந்த கண்களை உடைய திருமால், சிவ பெருமான் (இம்மூவரும்) முறைப்படி எப்போதும் வணங்கும் கந்தப் பெருமானே, மிக்கு வந்த, வலிய சமணர்களை பெரிய திண்ணிய கழுவின் மேல் ஏற வைத்த, செந்தமிழ் (ஓதிய) வேதாங்க வாயனாகிய (தேவாரம் பாடிய) திருஞானசம்பந்தனே, பெருகிக் குளிர்ந்துள்ள சண்பகக் காட்டில் வாசனையோடு கூடிய, திண்ணியதாயச் செழித்த சந்தனமும் அகிலும் நெருங்கி வளர்ந்துள்ள தினைப் புனத்தில் பசுங் கொடி போன்ற வள்ளியை மார்புறச் சென்று தழுவுகின்றவனே, திருப்பரங் குன்றத்தில் வீற்றிருக்கின்ற பெருமாளே.
* இறத்தலோடு தொடர்வது பிறத்தல். பிறவிக்கு இறைவன் பிரமன். எனவே பிரமன் இறத்தலோடும் கூடியுள்ளான்.
பாடல் 18 - திருப்பரங்குன்றம்
ராகம் - ......; தாளம் - .......
தந்தனந் தந்ததன தந்தனந் தந்ததன
தந்தனந் தந்ததன ...... தனதான
மன்றலங் கொந்துமிசை தெந்தனத் தெந்தனென
வண்டினங் கண்டுதொடர் ...... குழல்மாதர்
மண்டிடுந் தொண்டையமு துண்டுகொண் டன்புமிக
வம்பிடுங் கும்பகன ...... தனமார்பில்
ஒன்றஅம் பொன்றுவிழி கன்றஅங் கங்குழைய
உந்தியென் கின்றமடு ...... விழுவேனை
உன்சிலம் புங்கனக தண்டையுங் கிண்கிணியும்
ஒண்கடம் பும்புனையும் ...... அடிசேராய்
பன்றியங் கொம்புகம டம்புயங் கஞ்சுரர்கள்
பண்டையென் பங்கமணி ...... பவர்சேயே
பஞ்சரங் கொஞ்சுகிளி வந்துவந் தைந்துகர
பண்டிதன் தம்பியெனும் ...... வயலூரா
சென்றுமுன் குன்றவர்கள் தந்தபெண் கொண்டுவளர்
செண்பகம் பைம்பொன்மலர் ...... செறிசோலை
திங்களுஞ் செங்கதிரு மங்குலுந் தங்குமுயர்
தென்பரங் குன்றிலுறை ...... பெருமாளே.
வாசனைபொருந்திய அழகிய பூங்கொத்துக்களின் மீது தெந்தனம் தெந்தனம் என்று ¡£ங்காரம் செய்து கொண்டு வண்டுக் கூட்டங்கள் தேனை உண்ணப்பார்த்து தொடரும்படியான கூந்தலையுடைய பெண்களது நெருக்கமாய் உள்ள கொவ்வைக்கனி போன்ற இதழ் அமிர்தத்தைப் பருகிக் கொண்டு, ஆசை மிகும்படி கச்சணிந்த பெருத்த மார்பில் பொருந்த, அம்பை நிகர்த்த விழிகள் சோர்ந்து போக, சா£ரம் மோகவசத்தால் குழைந்து போக, வயிறு என்னும் மடுவில் விழுகின்ற அடியேனை சிலம்பும், பொன்னால் ஆன தண்டையும், கிண்கிணியையும், அழகிய கடப்ப மலரையும் அணியும் உன் திருவடிகளில் சேர்ப்பாய். பன்றியின் அழகிய கொம்பையும்*, ஆமை ஓட்டையும்**, பாம்பையும், தேவர்களது பழைய எலும்புகளையும் தரிக்கும் *** சிவபிரானின் பாலனே, கூட்டில் இருந்துகொண்டு கொஞ்சுகின்ற கிளிப்பிள்ளைகள் கூட்டின் முகப்பில் மீண்டும் மீண்டும் வந்து ஐங்கரன் விநாயகனாம் ஞான பண்டிதனின் தம்பியே என்று கூறி அழைக்கின்ற, வயலூர் தலத்தில் வாசம் செய்யும் முருகனே, குன்றுகளில் வசிப்பவர்களாகிய வேடுவர்கள் முன்னாளில் கொடுத்த வள்ளிநாயகியாகிய பெண்ணை மணந்து கொண்டு வளர்ந்து ஓங்கிய செண்பக மரங்களின் பசும்பொன்னை ஒத்த மலர்கள் மிகுந்த சோலைகளால் சூழப்பெற்றதும், சந்திரனும், செஞ்சூரியனும், மேகமும் தங்கும்படி உயர்ந்ததும் ஆகிய அழகிய திருப்பரங்குன்றத்தில் எழுந்தருளியுள்ள பெருமாளே.
* விஷ்ணு வராக அவதாரம் செய்து ஹிரண்யாக்ஷனைக் கொன்றபின் தருக்குற்றுத் திரியும்போது, முருகன் வராகத்தை அடக்கி கொம்பைப் பறித்து சிவனிடம் தர, அவர் அதனை மார்பில் அணிந்தார் - வராக புராணம்.
** கூர்மாவதாரம் செய்து மந்தரமலையைத் தாங்கி விஷ்ணு அமிர்தத்தை மோகினியாக வந்து தேவர்களுக்கு விநியோகித்த பின், ஹரிஹரபுத்திரன் ஐயப்பன் அவதரித்தார். பின்னர் கூர்மம் செருக்குற்று உலகத்தையே அழிக்கப் புக, சிவபிரானின் ஆணையால் ஐயப்பன் கூர்மத்தை அடக்கி அதன் ஓட்டைப் பெயர்த்து சிவனிடம் வைக்க அதனை தம் மார்பில் தரித்தார் - கூர்ம புராணம்.
*** பிரளய காலத்தில் சிவபிரான் ஸர்வ ஸம்ஹாரம் செய்தபின் தன் பக்தர்களாகிய பிரம்மாதி தேவர்களின் எலும்புகளையும் எலும்புக் கூட்டையும் 'கங்காளம்' மாலையாக அன்புடன் தரித்தார் - கந்த புராணம்.
பாடல் 19 - திருப்பரங்குன்றம்
ராகம் - ...........; தாளம் - ........
தனத்த தந்தன தனதன தனதன
தனத்த தந்தன தனதன தனதன
தனத்த தந்தன தனதன தனதன ...... தனதான
வடத்தை மிஞ்சிய புளகித வனமுலை
தனைத்தி றந்தெதிர் வருமிளை ஞர்களுயிர்
மயக்கி ஐங்கணை மதனனை ஒருஅரு ...... மையினாலே
வருத்தி வஞ்சக நினைவொடு மெலமெல
நகைத்து நண்பொடு வருமிரும் எனஉரை
வழுத்தி அங்கவ ரொடுசரு வியுமுடல் ...... தொடுபோதே
விடத்தை வென்றிடு படைவிழி கொடுமுள
மருட்டி வண்பொருள் கவர்பொழு தினில்மயல்
விருப்பெ னும்படி மடிமிசை யினில்விழு ...... தொழில்தானே
விளைத்தி டும்பல கணிகையர் தமதுபொய்
மனத்தை நம்பிய சிறியனை வெறியனை
விரைப்ப தந்தனில் அருள்பெற நினைகுவ ...... துளதோதான்
குடத்தை வென்றிரு கிரியென எழில்தள
தளத்த கொங்கைகள் மணிவடம் அணிசிறு
குறக்க ரும்பின்மெய் துவள்புயன் எனவரு ...... வடிவேலா
குரைக்க ருங்கடல் திருவணை எனமுனம்
அடைத்தி லங்கையின் அதிபதி நிசிசரர்
குலத்தொ டும்பட ஒருகணை விடுமரி ...... மருகோனே
திடத்தெ திர்ந்திடும் அசுரர்கள் பொடிபட
அயிற்கொ டும்படை விடுசர வணபவ
திறற்கு கன்குரு பரனென வருமொரு ...... முருகோனே
செழித்த தண்டலை தொறுமில கியகுட
வளைக்கு லந்தரு தரளமு மிகுமுயர்
திருப்ப ரங்கிரி வளநகர் மருவிய ...... பெருமாளே.
அணிந்துள்ள மணி வடத்தைக் காட்டிலும் மேலோங்கி புளகிதம் கொண்ட அழகிய மார்பகத்தைக் காட்டி, எதிரில் வரும் இளைஞர்களின் உயிரை மயக்கி, ஐந்து மலர்ப் பாணங்களை உடைய மன்மதனை ஒப்பற்ற அருமையான வகையால் வருவித்து, வஞ்சகமான எண்ணத்தோடு மெல்ல மெல்ல சிரித்து, நண்பு காட்டி வாருங்கள், உட்காருங்கள் என்று உபசரித்து உரை பேசி அங்கு அவர்களுடன் கொஞ்சிக் குலாவி உடலைத் தொடும்போது, விஷத்தையும் வெல்லும் படை போன்ற கண்களைக் கொண்டு மனத்தை மயக்கி, வளப்பமான பொருளைக் கவரும் போது, உங்கள் மீது எனக்கு மோகம், விருப்பம் என்னும்படியான ஆசை மொழிகளைக் கூறி மடிமீது விழுகின்ற தொழில்களையே செய்கின்ற பல பொது மாதர்களின் பொய்யான மனத்தை நம்பிய சிறியவனை, பித்துப் பிடித்தவனை, நறுமணம் வீசும் திருவடியில் சேரும்படியான திருவருளைப் பெற நீ நினைக்கும்படியான நல்ல விதி எனக்கு உள்ளதோ, அறியேன். உருவத்தில் குடத்தையும் வென்று, இரண்டு மலைகளைப் போல தளதளக்கும் மார்பகங்கள் மணிவடங்களை அணிந்து, கரும்பு போல் இனிக்கும் இளம் குற மங்கையாகிய வள்ளியின் உடலில் துவளும் புயத்தை உடையவன் என்று வருகின்ற அழகிய வேலனே, ஒலிக்கின்ற கரிய கடலில் அழகிய அணை என்னும்படி முன்பு அதை அடைத்து, இலங்கைக்குத் தலைவனான ராவணன் அரக்கர் கூட்டத்துடன் அழியும்படி ஒப்பற்ற அம்பைச் செலுத்திய (ராமனாகிய) திருமாலின் மருகனே, மனத் திடத்துடன் எதிர்த்து வந்த அசுரர்கள் பொடியாக வேலாகிய உக்கிரமான படையை விட்ட சரவணபவனே, திறமை வாய்ந்த குருபரன் என்னும் பெயருடன் வந்துள்ள ஒப்பற்ற முருகனே, செழிப்புள்ள சோலைகள் தோறும் (கிடந்து) விளங்கும் வளைந்த சங்குகளின் கூட்டங்கள் ஈன்ற முத்துக்கள் மிக்குப் பொலியும் சிறந்த திருப்பரங்குன்றம் என்னும் வளப்பம் உள்ள நகரில் வீற்றிருக்கும் பெருமாளே.
பாடல் 20 - திருப்பரங்குன்றம்
ராகம் - ..... ; தாளம் -
தனத்தனந் தந்த தான
தனத்தனந் தந்த தான
தனத்தனந் தந்த தான ...... தனதான
வரைத்தடங் கொங்கை யாலும்
வளைப்படுஞ் செங்கை யாலும்
மதர்த்திடுங் கெண்டை யாலும் ...... அனைவோரும்
வடுப்படுந் தொண்டை யாலும்
விரைத்திடுங் கொண்டை யாலும்
மருட்டிடுஞ் சிந்தை மாதர் ...... வசமாகி
எரிப்படும் பஞ்சு போல
மிகக்கெடுந் தொண்ட னேனும்
இனற்படுந் தொந்த வாரி ...... கரையேற
இசைத்திடுஞ் சந்த பேதம்
ஒலித்திடுந் தண்டை சூழும்
இணைப்பதம் புண்ட ¡£கம் ...... அருள்வாயே
சுரர்க்குவஞ் சஞ்செய் சூரன்
இளக்ரவுஞ் சந்த னோடு
துளக்கெழுந் தண்ட கோளம் ...... அளவாகத்
துரத்தியன் றிந்த்ர லோகம்
அழித்தவன் பொன்று மாறு
சுடப்பருஞ் சண்ட வேலை ...... விடுவோனே
செருக்கெழுந் தும்பர் சேனை
துளக்கவென் றண்ட மூடு
தெழித்திடுஞ் சங்க பாணி ...... மருகோனே
தினைப்புனஞ் சென்று லாவு
குறத்தியின் பம்ப ராவு
திருப்பரங் குன்ற மேவு ...... பெருமாளே.
மலை போலப் பரவி அகன்ற மார்பாலும், வளையல் ஒலிக்கும் சிவந்த கரத்தாலும், செழிப்புள்ள கெண்டை மீன் போன்ற கண்களாலும், பலராலும் வடுப்படுத்தப்படும் கொவ்வைக் கனி ஒத்த இதழாலும், மணம் வீசும் கூந்தலாலும் மயக்குகின்ற மனமுடைய விலைமாதர்களின் வசத்தில் பட்டு, தீயில் இடப்பட்ட பஞ்சு போல மிகவும் கெட்டுப் போகின்ற அடியனாகிய நானும் துன்பப்படும் வினைத் தொடர்புள்ள கடலிலிருந்து கரையேற, இசையுடன் கலந்த பல வகையான சந்த ஒலிகளை எழுப்பும் தண்டைகள் சூழ்ந்த உன் திருவடிகளாகிய தாமரைகளை அருள் புரிவாயாக. தேவர்களுக்கு வஞ்சனை செய்த சூரன், இளைய கிரவுஞ்சன் என்னும் அசுரனோடு கலங்கி எழுந்து ஓட, அண்ட கோளம் அளவும் அவர்களைத் துரத்தி, முன்பு இந்திர லோகத்தை அழித்தவனாகிய சூரன் அழிந்து போகும்படி, சுடுகின்றதும் மிகவும் உக்கிரமானதுமான வேலை விட்டவனே, வீம்புடன் போருக்கு எழுந்த தேவர்களின் சேனை கலங்கும்படி முழக்கம் செய்த சங்கேந்திய கையை* உடைய திருமாலின் மருகனே, தினைப் புனத்துக்குப் போய் உலவுகின்ற குறப் பெண் வள்ளியின் இன்பத்தை நாடிப் பின் அவளை வணங்கிய, திருப்பரங் குன்றத்தில் வீற்றிருக்கும், பெருமாளே.
* தேவர்கள் சேனையை மயங்கச் செய்து சங்க நாதம் முழக்கி பாரிஜாத மரத்தைக் கண்ணன் பூமிக்குக் கொண்டு வந்த வரலாற்றைக் குறிக்கும்.
8 திருச்செந்தூர் திருப்புகழ் தனதனன தனதனன தனதனன தனதனன தனதனன தனதனன ...... தனதானா அறிவழிய மயல்பெருக உரையுமற விழிசுழல அனல்-அவிய மலமொழுக ...... அகலாதே அனையுமனை அருகிலுற வெருவியழ உறவும்-அழ அழலினிகர் மறலியெனை ...... அழையாதே செறியுமிரு வினைகரண மருவுபுலன் ஒழியவுயர் திருவடியில் அணுகவர ...... அருள்வாயே சிவனைநிகர் பொதியவரை முநிவன்-அக மகிழஇரு செவிகுளிர இனியதமிழ் ...... பகர்வோனே நெறிதவறி அலரிமதி நடுவன்மக பதிமுளரி நிருதிநிதி பதிகரிய ...... வனமாலி நிலவுமறை அவன்-இவர்கள் அலையஅர சுரிமைபுரி நிருதனுர மறஅயிலை ...... விடுவோனே மறிபரசு கரம்-இலகு பரமன்-உமை இருவிழியும் மகிழமடிம் இசைவளரும் ...... இளையோனே மதலைதவ ழும்-உததியிடை வருதரள மணிபுளின மறையவுயர் கரையிலுறை ...... பெருமாளே. 31 திருச்செந்தூர் திருப்புகழ் தனதனன தனன தந்தத் ...... தனதான தனதனன தனன தந்தத் ...... தனதான வேல் முருகா வேல் முருகா வேல் முருகா வேல் வேல் முருகா வேல் முருகா வேல் முருகா வேல் இயலிசையி லுசித வஞ்சிக் ...... கயர்வாகி இரவுபகல் மனது சிந்தித் ...... துழலாதே உயர்கருணை புரியு மின்பக் ...... கடல்மூழ்கி உனையெனது ளறியு மன்பைத் ...... தருவாயே மயில்தகர்க லிடைய ரந்தத் ...... தினைகாவல் வனசகுற மகளை வந்தித் ...... தணைவோனே கயிலைமலை யனைய செந்திற் ...... பதிவாழ்வே கரிமுகவ னிளைய கந்தப் ...... பெருமாளே. 36 திருச்செந்தூர் திருப்புகழ் தானன தானன தானன தானன தானன தானன ...... தனதானா ஏவினை நேர்விழி மாதரை மேவிய ஏதனை மூடனை ...... நெறிபேணா ஈனனை வீணனை ஏடெழு தாமுழு ஏழையை மோழையை ...... அகலாநீள் மாவினை மூடிய நோய்பிணி யாளனை வாய்மையி லாதனை ...... யிகழாதே மாமணி நூபுர சீதள தாள்தனி வாழ்வுற ஈவது ...... மொருநாளே நாவலர் பாடிய நூலிசை யால்வரு நாரத னார்புகல் ...... குறமாதை நாடியெ கானிடை கூடிய சேவக நாயக மாமயி ...... லுடையோனே தேவிம நோமணி ஆயிப ராபரை தேன்மொழி யாள்தரு ...... சிறியோனே சேணுயர் சோலையி னீழலி லேதிகழ் சீரலை வாய்வரு ...... பெருமாளே. 56 திருச்செந்தூர் திருப்புகழ் ( - வாரியார் # 92 ) தந்தனா தந்தனா தந்தனா தந்தனா தந்தனா ...... தந்ததான சங்கைதா னொன்றுதா னின்றியே நெஞ்சிலே சஞ்சலா ...... ரம்பமாயன் சந்தொடே குங்குமா லங்க்ருதா டம்பரா சம்ப்ரமா ...... நந்தமாயன் மங்கைமார் கொங்கைசே ரங்கமோ கங்களால் வம்பிலே ...... துன்புறாமே வண்குகா நின்சொரூ பம்ப்ரகா சங்கொடே வந்துநீ ...... யன்பிலாள்வாய் கங்கைசூ டும்பிரான் மைந்தனே அந்தனே கந்தனே ...... விஞ்சையூரா கம்பியா திந்த்ரலோ கங்கள்கா வென்றவா கண்டலே ...... சன்சொல்வீரா செங்கைவேல் வென்றிவேல் கொண்டுசூர் பொன்றவே சென்றுமோ ...... தும்ப்ரதாபா செங்கண்மால் பங்கஜா னன்தொழா நந்தவேள் செந்தில்வாழ் ...... தம்பிரானே. 62 திருச்செந்தூர் திருப்புகழ் தந்ததன தந்தனந் தந்ததன தந்தனந் தந்ததன தந்தனந் ...... தந்ததானா தண்டையணி வெண்டையங் கிண்கிணிச தங்கையுந் தண்கழல்சி லம்புடன் ...... கொஞ்சவேநின் தந்தையினை முன்பரிந் தின்பவுரி கொண்டுநன் சந்தொடம ணைந்துநின் ...... றன்புபோலக் கண்டுறக டம்புடன் சந்தமகு டங்களுங் கஞ்சமலர் செங்கையுஞ் ...... சிந்துவேலும் கண்களுமு கங்களுஞ் சந்திரநி றங்களுங் கண்குளிர என்றன்முன் ...... சந்தியாவோ புண்டரிகர் அண்டமுங் கொண்டபகி ரண்டமும் பொங்கியெழ வெங்களங் ...... கொண்டபோது பொன்கிரியெ னஞ்சிறந் தெங்கினும்வ ளர்ந்துமுன் புண்டரிகர் தந்தையுஞ் ...... சிந்தைகூரக் கொண்டநட னம்பதஞ் செந்திலிலும் என்றன்முன் கொஞ்சிநட னங்கொளுங் ...... கந்தவேளே கொங்கைகுற மங்கையின் சந்தமணம் உண்டிடுங் கும்பமுநி கும்பிடுந் ...... தம்பிரானே. 63 திருச்செந்தூர் திருப்புகழ் தந்த தனதனன தந்த தனதனன தந்த தனதனன ...... தனதானா தந்த பசிதனைய றிந்து முலையமுது தந்து முதுகுதட ...... வியதாயார் தம்பி பணிவிடைசெய் தொண்டர் பிரியமுள தங்கை மருகருயி ...... ரெனவேசார் மைந்தர் மனைவியர்க டும்பு கடனுதவு மந்த வரிசைமொழி ...... பகர்கேடா வந்து தலைநவிர விழ்ந்து தரைபுகம யங்க வொருமகிட ...... மிசையேறி அந்த கனுமெனைய டர்ந்து வருகையினி லஞ்ச லெனவலிய ...... மயில்மேல்நீ அந்த மறலியொடு கந்த மனிதனம தன்ப னெனமொழிய ...... வருவாயே சிந்தை மகிழமலை மங்கை நகிலிணைகள் சிந்து பயமயிலு ...... மயில்வீரா திங்க ளரவுநதி துன்று சடிலரருள் செந்தி னகரிலுறை ...... பெருமாளே. 64 திருச்செந்தூர் திருப்புகழ் தனத்தந்தன தனத்தந்தன தனத்தந்தன ...... தனதானத் தரிக்குங்கலை நெகிழ்க்கும்பர தவிக்குங்கொடி ...... மதனேவிற் றகைக்குந்தனி திகைக்குஞ்சிறு தமிழ்த்தென்றலி ...... னுடனேநின் றெரிக்கும்பிறை யெனப்புண்படு மெனப்புன்கவி ...... சிலபாடி இருக்குஞ்சிலர் திருச்செந்திலை யுரைத்துய்ந்திட ...... அறியாரே அரிக்குஞ்சதுர் மறைக்கும்பிர மனுக்குந்தெரி ...... வரிதான அடிச்செஞ்சடை முடிக்கொண்டிடு மரற்கும்புரி ...... தவபாரக் கிரிக்கும்பநன் முநிக்குங்க்ருபை வரிக்குங்குரு ...... பரவாழ்வே கிளைக்குந்திற லரக்கன்கிளை கெடக்கன்றிய ...... பெருமாளே. 68 திருச்செந்தூர் திருப்புகழ் தந்த தனன தனனா தனனதன தந்த தனன தனனா தனனதன தந்த தனன தனனா தனனதன ...... தனதான தொந்தி சரிய மயிரே வெளிறநிரை தந்த மசைய முதுகே வளையஇதழ் தொங்க வொருகை தடிமேல் வரமகளிர் ...... நகையாடி தொண்டு கிழவ னிவனா ரெனஇருமல் கிண்கி ணெனமு னுரையே குழறவிழி துஞ்சு குருடு படவே செவிடுபடு ...... செவியாகி வந்த பிணியு மதிலே மிடையுமொரு பண்டி தனுமெ யுறுவே தனையுமிள மைந்த ருடைமை கடனே தெனமுடுக ...... துயர்மேவி மங்கை யழுது விழவே யமபடர்கள் நின்று சருவ மலமே யொழுகவுயிர் மங்கு பொழுது கடிதே மயிலின்மிசை ...... வரவேணும் எந்தை வருக ரகுநா யகவருக மைந்த வருக மகனே யினிவருக என்கண் வருக எனதா ருயிர்வருக ...... அபிராம இங்கு வருக அரசே வருகமுலை யுண்க வருக மலர்சூ டிடவருக என்று பரிவி னொடுகோ சலைபுகல ...... வருமாயன் சிந்தை மகிழு மருகா குறவரிள வஞ்சி மருவு மழகா அமரர்சிறை சிந்த அசுரர் கிளைவே ரொடுமடிய ...... அடுதீரா திங்க ளரவு நதிசூ டியபரமர் தந்த குமர அலையே கரைபொருத செந்தி னகரி லினிதே மருவிவளர் ...... பெருமாளே. 78 திருச்செந்தூர் திருப்புகழ் தனதன தனதன தந்தத் தந்தத் ...... தனதானா தனதன தனதன தந்தத் தந்தத் ...... தனதானா பரிமள களபசு கந்தச் சந்தத் ...... தனமானார் படையம படையென அந்திக் குங்கட் ...... கடையாலே வரியளி நிரைமுரல் கொங்குக் கங்குற் ...... குழலாலே மறுகிடு மருளனை யின்புற் றன்புற் ...... றருள்வாயே அரிதிரு மருகக டம்பத் தொங்கற் ...... றிருமார்பா அலைகுமு குமுவென வெம்பக் கண்டித் ...... தெறிவேலா திரிபுர தகனரும் வந்திக் குஞ்சற் ...... குருநாதா ஜெயஜெய ஹரஹர செந்திற் கந்தப் ...... பெருமாளே. 97 திருச்செந்தூர் திருப்புகழ் தந்த தந்த தந்த தந்த தந்த தந்த தந்த தந்த தந்த தந்த தந்த தந்த ...... தனதான வந்து வந்து முன்த வழ்ந்து வெஞ்சு கந்த யங்க நின்று மொஞ்சி மொஞ்சி யென்ற ழுங்கு ...... ழந்தையோடு மண்ட லங்கு லுங்க அண்டர் விண்ட லம்பி ளந்தெ ழுந்த செம்பொன் மண்ட பங்க ளும்ப ...... யின்றவீடு கொந்த ளைந்த குந்த ளந்த ழைந்து குங்கு மந்த யங்கு கொங்கை வஞ்சி தஞ்ச மென்று ...... மங்குகாலம் கொங்க டம்பு கொங்கு பொங்கு பைங்க டம்பு தண்டை கொஞ்சு செஞ்ச தங்கை தங்கு பங்க ...... யங்கள்தாராய் சந்த டர்ந்தெ ழுந்த ரும்பு மந்த ரஞ்செ ழுங்க ரும்பு கந்த ரம்பை செண்ப தங்கொள் ...... செந்தில்வாழ்வே தண்க டங்க டந்து சென்று பண்க டங்க டர்ந்த இன்சொல் திண்பு னம்பு குந்து கண்டி ...... றைஞ்சுகோவே அந்த கன்க லங்க வந்த கந்த ரங்க லந்த சிந்து ரஞ்சி றந்து வந்த லம்பு ...... ரிந்தமார்பா அம்பு னம்பு குந்த நண்பர் சம்பு நன்பு ரந்த ரன்த ரம்ப லும்பர் கும்பர் நம்பு ...... தம்பிரானே. 100 திருச்செந்தூர் திருப்புகழ் தந்தன தான தந்தன தான தந்தன தான ...... தனதான விந்ததி னூறி வந்தது காயம் வெந்தது கோடி ...... யினிமேலோ விண்டுவி டாம லுன்பத மேவு விஞ்சையர் போல ...... அடியேனும் வந்துவி நாச முன்கலி தீர வண்சிவ ஞான ...... வடிவாகி வன்பத மேறி யென்களை யாற வந்தருள் பாத ...... மலர்தாராய் எந்தனு ளேக செஞ்சுட ராகி யென்கணி லாடு ...... தழல்வேணி எந்தையர் தேடு மன்பர்ச காய ரெங்கள்சு வாமி ...... யருள்பாலா சுந்தர ஞான மென்குற மாது தன்றிரு மார்பி ...... லணைவோனே சுந்தர மான செந்திலில் மேவு கந்தசு ரேசர் ...... பெருமாளே. 101 திருச்செந்தூர் திருப்புகழ் தனதான தந்த தனதான தந்த தனதான தந்த ...... தனதான விறல்மார னைந்து மலர்வாளி சிந்த மிகவானி லிந்து ...... வெயில்காய மிதவாடை வந்து தழல்போல வொன்ற வினைமாதர் தந்தம் ...... வசைகூற குறவாணர் குன்றி லுறைபேதை கொண்ட கொடிதான துன்ப ...... மயல்தீர குளிர்மாலை யின்க ணணிமாலை தந்து குறைதீர வந்து ...... குறுகாயோ மறிமானு கந்த இறையோன்ம கிழ்ந்து வழிபாடு தந்த ...... மதியாளா மலைமாவு சிந்த அலைவேலை யஞ்ச வடிவேலெ றிந்த ...... அதிதீரா அறிவால றிந்து னிருதாளி றைஞ்சு மடியாரி டைஞ்சல் ...... களைவோனே அழகான செம்பொன் மயில்மேல மர்ந்து அலைவாயு கந்த ...... பெருமாளே. 106 பழநி திருப்புகழ் தனன தனதனன தந்தத்த தந்ததன தனன தனதனன தந்தத்த தந்ததன தனன தனதனன தந்தத்த தந்ததன ...... தந்ததான அதல விதலமுத லந்தத்த லங்களென அவனி யெனஅமரர் அண்டத்த கண்டமென அகில சலதியென எண்டிக்குள் விண்டுவென ...... அங்கிபாநு அமுத கதிர்களென அந்தித்த மந்த்ரமென அறையு மறையெனஅ ருந்தத்து வங்களென அணுவி லணுவெனநி றைந்திட்டு நின்றதொரு ...... சம்ப்ரதாயம் உதய மெழஇருள்வி டிந்தக்க ணந்தனிலி ருதய கமலமுகி ழங்கட்ட விழ்ந்துணர்வி லுணரு மநுபவம னம்பெற்றி டும்படியை ...... வந்துநீமுன் உதவ இயலினியல் செஞ்சொற்ப்ர பந்தமென மதுர கவிகளில்ம னம்பற்றி ருந்துபுகழ் உரிய அடிமையுனை யன்றிப்ப்ர பஞ்சமதை ...... நம்புவேனோ ததத ததததத தந்தத்த தந்ததத திதிதி திதிதிதிதி திந்தித்தி திந்திதிதி தகுகு தகுதகுகு தந்தத்த தந்தகுகு ...... திந்திதோதி சகக சககெணக தந்தத்த குங்கெணக டிடிடி டிடிடிடிடி டிண்டிட்டி டிண்டிடிடி தகக தகதகக தந்தத்த தந்தகக ...... என்றுதாளம் பதலை திமிலைதுடி தம்பட்ட மும்பெருக அகில நிசிசரர்ந டுங்கக்கொ டுங்கழுகு பரிய குடர்பழுவெ லும்பைப்பி டுங்கரண ...... துங்ககாளி பவுரி யிடநரிபு லம்பப்ப ருந்திறகு கவரி யிடஇகலை வென்றுச்சி கண்டிதனில் பழநி மலையின்மிசை வந்துற்ற இந்திரர்கள் ...... தம்பிரானே. 107 பழநி திருப்புகழ் தனதான தந்தனத் ...... தனதான தனதான தந்தனத் ...... தனதான முருகா முருகா வேல் முருகா முருகா முருகா வேல் முருகா அபகார நிந்தைபட் ...... டுழலாதே அறியாத வஞ்சரைக் ...... குறியாதே உபதேச மந்திரப் ...... பொருளாலே உனைநானி னைந்தருட் ...... பெறுவேனோ இபமாமு கன்தனக் ...... கிளையோனே இமவான்ம டந்தையுத் ...... தமிபாலா ஜெபமாலை தந்தசற் ...... குருநாதா திருவாவி னன்குடிப் ...... பெருமாளே. 110 பழநி திருப்புகழ் தனதனன தான தந்த தனதனன தான தந்த தனதனன தான தந்த ...... தனதான அவனிதனி லேபி றந்து மதலையென வேத வழ்ந்து அழகுபெற வேந டந்து ...... இளைஞோனாய் அருமழலை யேமி குந்து குதலைமொழி யேபு கன்று அதிவிதம தாய்வ ளர்ந்து ...... பதினாறாய் சிவகலைக ளாக மங்கள் மிகவுமறை யோது மன்பர் திருவடிக ளேநி னைந்து ...... துதியாமல் தெரிவையர்க ளாசை மிஞ்சி வெகுகவலை யாயு ழன்று திரியுமடி யேனை யுன்ற ...... னடிசேராய் மவுனவுப தேச சம்பு மதியறுகு வேணி தும்பை மணிமுடியின் மீத ணிந்த ...... மகதேவர் மனமகிழ வேய ணைந்து ஒருபுறம தாக வந்த மலைமகள்கு மார துங்க ...... வடிவேலா பவனிவர வேயு கந்து மயிலின்மிசை யேதி கழ்ந்து படியதிர வேந டந்த ...... கழல்வீரா பரமபத மேசெ றிந்த முருகனென வேயு கந்து பழநிமலை மேல மர்ந்த ...... பெருமாளே. 114 பழநி திருப்புகழ் தானதன தானதன தானதன தானதன தானதன தானதன ...... தந்ததான ஆறுமுகம் ஆறுமுகம் ஆறுமுகம் ஆறுமுகம் ஆறுமுகம் ஆறுமுகம் ...... என்றுபூதி ஆகமணி மாதவர்கள் பாதமலர் சூடுமடி யார்கள்பத மேதுணைய ...... தென்றுநாளும் ஏறுமயில் வாகனகு காசரவ ணாஎனது ஈசஎன மானமுன ...... தென்றுமோதும் ஏழைகள்வி யாகுலமி தேதெனவி னாவிலுனை யேவர்புகழ் வார்மறையு ...... மென்சொலாதோ நீறுபடு மாழைபொரு மேனியவ வேலஅணி நீலமயில் வாகவுமை ...... தந்தவேளே நீசர்கட மோடெனது தீவினையெ லாமடிய நீடுதனி வேல்விடும ...... டங்கல்வேலா சீறிவரு மாறவுண னாவியுணு மானைமுக தேவர்துணை வாசிகரி ...... அண்டகூடஞ் சேருமழ கார்பழநி வாழ்குமர னேபிரம தேவர்வர தாமுருக ...... தம்பிரானே. 134 பழநி திருப்புகழ் தனதனன தான தந்த தனதனன தான தந்த தனதனன தான தந்த ...... தனதான கருவினுரு வாகி வந்து வயதளவி லேவ ளர்ந்து கலைகள்பல வேதெ ரிந்து ...... மதனாலே கரியகுழல் மாதர் தங்க ளடிசுவடு மார்பு தைந்து கவலைபெரி தாகி நொந்து ...... மிகவாடி அரகரசி வாய வென்று தினமுநினை யாமல் நின்று அறுசமய நீதி யொன்று ...... மறியாமல் அசனமிடு வார்கள் தங்கள் மனைகள்தலை வாசல் நின்று அநுதினமு நாண மின்றி ...... யழிவேனோ உரகபட மேல்வ ளர்ந்த பெரியபெரு மாள ரங்கர் உலகளவு மால்ம கிழ்ந்த ...... மருகோனே உபயகுல தீப துங்க விருதுகவி ராஜ சிங்க உறைபுகலி யூரி லன்று ...... வருவோனே பரவைமனை மீதி லன்று ஒருபொழுது தூது சென்ற பரமனரு ளால்வ ளர்ந்த ...... குமரேசா பகையசுரர் சேனை கொன்று அமரர்சிறை மீள வென்று பழநிமலை மீதில் நின்ற ...... பெருமாளே. 145 பழநி திருப்புகழ் தனந்த தனதன தனதன தனதன தனந்த தனதன தனதன தனதன தனந்த தனதன தனதன தனதன ...... தனதான குரம்பை மலசலம் வழுவளு நிணமொடு எலும்பு அணிசரி தசையிரல் குடல்நெதி குலைந்த செயிர்மயிர் குருதியொ டிவைபல ...... கசுமாலக் குடின்பு குதுமவ ரவர்கடு கொடுமையர் இடும்ப ரொருவழி யிணையிலர் கசடர்கள் குரங்க ரறிவிலர் நெறியிலர் மிருகணை ...... விறலான சரம்ப ருறவனை நரகனை துரகனை இரங்கு கலியனை பரிவுறு சடலனை சவுந்த ரிகமுக சரவண பதமொடு ...... மயிலேறித் தழைந்த சிவசுடர் தனையென மனதினில் அழுந்த வுரைசெய வருமுக நகையொளி தழைந்த நயனமு மிருமலர் சரணமு ...... மறவேனே இரும்பை வகுளமொ டியைபல முகில்பொழி லுறைந்த குயிலளி யொலிபர விடமயி லிசைந்து நடமிடு மிணையிலி புலிநகர் ...... வளநாடா இருண்ட குவடிடி பொடிபட வெகுமுக டெரிந்து மகரமொ டிசைகரி குமுறுக இரைந்த அசுரரொ டிபபரி யமபுரம் ...... விடும்வேளே சிரம்பொ னயனொடு முநிவர்க ளமரர்கள் அரம்பை மகளிரொ டரகர சிவசிவ செயம்பு வெனநட மிடுபத மழகியர் ...... குருநாதா செழும்ப வளவொளி நகைமுக மதிநகு சிறந்த குறமக ளிணைமுலை புதைபட செயங்கொ டணைகுக சிவமலை மருவிய ...... பெருமாளே. 156 பழநி திருப்புகழ் ( குருஜி # 71 - வாரியார் # 113 ) தனனா தனந்ததன தனனா தனந்ததன தனனா தனந்ததன ...... தனதான சிவனார் மனங்குளிர உபதேச மந்த்ரமிரு செவிமீதி லும்பகர்செய் ...... குருநாதா சிவகாம சுந்தரிதன் வரபால கந்தநின செயலேவி ரும்பியுளம் ...... நினையாமல் அவமாயை கொண்டுலகில் விருதாவ லைந்துழலு மடியேனை அஞ்சலென ...... வரவேணும் அறிவாக மும்பெருக இடரான துந்தொலைய அருள்ஞான இன்பமது ...... புரிவாயே நவநீத முந்திருடி உரலோடெ யொன்றுமரி ரகுராமர் சிந்தைமகிழ் ...... மருகோனே நவலோக முங்கைதொழு நிசதேவ லங்கிருத நலமான விஞ்சைகரு ...... விளைகோவே தெவயானை யங்குறமின் மணவாள சம்ப்ரமுறு திறல்வீர மிஞ்சுகதிர் ...... வடிவேலா திருவாவி னன்குடியில் வருவேள்ச வுந்தரிக செகமேல்மெய் கண்டவிறல் ...... பெருமாளே. 158 பழநி திருப்புகழ் தானதன தந்த தானதன தந்த தானதன தந்த தானதன தந்த தானதன தந்த தானதன தந்த தனதான சீயுதிர மெங்கு மேய்புழுநி ரம்பு மாயமல பிண்ட நோயிடுகு ரம்பை தீநரிகள் கங்கு காகமிவை தின்ப ...... தொழியாதே தீதுளகு ணங்க ளேபெருகு தொந்த மாயையில்வ ளர்ந்த தோல்தசையெ லும்பு சேரிடுந ரம்பு தானிவைபொ திந்து ...... நிலைகாணா ஆயதுந மன்கை போகவுயி ரந்த நாழிகையில் விஞ்ச ஊசிடுமி டும்பை யாகியவு டம்பு பேணிநிலை யென்று ...... மடவார்பால் ஆசையைவி ரும்பி யேவிரக சிங்கி தானுமிக வந்து மேவிடம யங்கு மாழ்துயர்வி ழுந்து மாளுமெனை யன்பு ...... புரிவாயே மாயைவல கஞ்ச னால்விடவெ குண்டு பார்முழுது மண்ட கோளமுந டுங்க வாய்பிளறி நின்று மேகநிகர் தன்கை ...... யதனாலே வாரியுற அண்டி வீறொடுமு ழங்கு நீரைநுகர் கின்ற கோபமொடெ திர்ந்த வாரண இரண்டு கோடொடிய வென்ற ...... நெடியோனாம் வேயினிசை கொண்டு கோநிரைபு ரந்து மேயல்புரி செங்கண் மால்மருக துங்க வேலகிர வுஞ்ச மால்வரையி டிந்து ...... பொடியாக வேலைவிடு கந்த காவிரிவி ளங்கு கார்கலிசை வந்த சேவகன்வ ணங்க வீரைநகர் வந்து வாழ்பழநி யண்டர் ...... பெருமாளே. 166 பழநி திருப்புகழ் தனதன தந்தான தானான தானதன தனதன தந்தான தானான தானதன தனதன தந்தான தானான தானதன ...... தனதான தலைவலி மருத்தீடு காமாலை சோகைசுரம் விழிவலி வறட்சூலை காயாசு வாசம்வெகு சலமிகு விஷப்பாக மாயாவி காரபிணி ...... யணுகாதே தலமிசை யதற்கான பேரோடு கூறியிது பரிகரி யெனக்காது கேளாது போலுமவர் சரியும்வ யதுக்கேது தாரீர்சொ லீரெனவும் ...... விதியாதே உலைவற விருப்பாக நீள்காவின் வாசமலர் வகைவகை யெடுத்தேதொ டாமாலி காபரண முனதடி யினிற்சூட வேநாடு மாதவர்க ...... ளிருபாதம் உளமது தரித்தேவி னாவோடு பாடியருள் வழிபட எனக்கேத யாவோடு தாளுதவ உரகம தெடுத்தாடு மேகார மீதின்மிசை ...... வரவேணும் அலைகட லடைத்தேம காகோர ராவணனை மணிமுடி துணித்தாவி யேயான ஜானகியை அடலுட னழைத்தேகொள் மாயோனை மாமனெனு ...... மருகோனே அறுகினை முடித்தோனை யாதார மானவனை மழுவுழை பிடித்தோனை மாகாளி நாணமுனம் அவைதனில் நடித்தோனை மாதாதை யேஎனவும் ...... வருவோனே பலகலை படித்தோது பாவாணர் நாவிலுறை யிருசர ணவித்தார வேலாயு தாவுயர்செய் பரண்மிசை குறப்பாவை தோள்மேவ மோகமுறு ...... மணவாளா பதுமவ யலிற்பூக மீதேவ ரால்கள் துயில் வருபுனல் பெருக்காறு காவேரி சூழவளர் பழநிவ ருகற்பூர கோலாக லாவமரர் ...... பெருமாளே. 168 பழநி திருப்புகழ் தனன தனன தனன தனன தனன தனன ...... தனதான வேல் முருகா வேல் வேல்; வேல் முருகா வேல் வேல் வேல் முருகா வேல் வேல்; வேல் முருகா வேல் வேல் திமிர வுததி யனைய நரக செனன மதனில் ...... விடுவாயேல் செவிடு குருடு வடிவு குறைவு சிறிது மிடியு ...... மணுகாதே அமரர் வடிவு மதிக குலமு மறிவு நிறையும் ...... வரவேநின் அருள தருளி யெனையு மனதொ டடிமை கொளவும் ...... வரவேணும் சமர முகவெ லசுரர் தமது தலைக ளுருள ...... மிகவேநீள் சலதி யலற நெடிய பதலை தகர அயிலை ...... விடுவோனே வெமர வணையி லினிது துயிலும் விழிகள் நளினன் ...... மருகோனே மிடறு கரியர் குமர பழநி விரவு மமரர் ...... பெருமாளே. 170 பழநி திருப்புகழ் தான தந்தன தானா தனாதன தான தந்தன தானா தனாதன தான தந்தன தானா தனாதன ...... தனதான நாத விந்துக லாதீ நமோநம வேத மந்த்ரசொ ரூபா நமோநம ஞான பண்டித ஸாமீ நமோநம ...... வெகுகோடி நாம சம்புகு மாரா நமோநம போக அந்தரி பாலா நமோநம நாக பந்தம யூரா நமோநம ...... பரசூரர் சேத தண்டவி நோதா நமோநம கீத கிண்கிணி பாதா நமோநம தீர சம்ப்ரம வீரா நமோநம ...... கிரிராஜ தீப மங்கள ஜோதீ நமோநம தூய அம்பல லீலா நமோநம தேவ குஞ்சரி பாகா நமோநம ...... அருள்தாராய் ஈத லும்பல கோலா லபூஜையும் ஓத லுங்குண ஆசா ரநீதியும் ஈர முங்குரு சீர்பா தசேவையு ...... மறவாத ஏழ்த லம்புகழ் காவே ரியால்விளை சோழ மண்டல மீதே மநோகர ராஜ கெம்பிர நாடா ளுநாயக ...... வயலூரா ஆத ரம்பயி லாரூ ரர்தோழமை சேர்தல் கொண்டவ ரோடே முனாளினில் ஆடல் வெம்பரி மீதே றிமாகயி ...... லையிலேகி ஆதி யந்தவு லாவா சுபாடிய சேரர் கொங்குவை காவூர் நனாடதில் ஆவி னன்குடி வாழ்வா னதேவர்கள் ...... பெருமாளே. நாத விந்துக லாதீ நமோநம வேத மந்த்ரசொ ரூபா நமோநம ஞான பண்டித ஸாமீ நமோநம ...... வெகுகோடி நாம சம்புகு மாரா நமோநம போக அந்தரி பாலா நமோநம நாக பந்தம யூரா நமோநம ...... பரசூரர் சேத தண்டவி நோதா நமோநம கீத கிண்கிணி பாதா நமோநம தீர சம்ப்ரம வீரா நமோநம ...... கிரிராஜ தீப மங்கள ஜோதீ நமோநம தூய அம்பல லீலா நமோநம தேவ குஞ்சரி பாகா நமோநம ...... அருள்தாராய் ஈத லும்பல கோலா லபூஜையும் ஓத லுங்குண ஆசா ரநீதியும் ஈர முங்குரு சீர்பா தசேவையு ...... மறவாத ஏழ்த லம்புகழ் காவே ரியால்விளை சோழ மண்டல மீதே மநோகர ராஜ கெம்பிர நாடா ளுநாயக ...... வயலூரா ஆத ரம்பயி லாரூ ரர்தோழமை சேர்தல் கொண்டவ ரோடே முனாளினில் ஆடல் வெம்பரி மீதே றிமாகயி ...... லையிலேகி ஆதி யந்தவு லாவா சுபாடிய சேரர் கொங்குவை காவூர் நனாடதில் ஆவி னன்குடி வாழ்வா னதேவர்கள் ...... பெருமாளே. 179 பழநி திருப்புகழ் தான தந்தன தானா தனாதன தான தந்தன தானா தனாதன தான தந்தன தானா தனாதன ...... தனதான போத கந்தரு கோவே நமோநம நீதி தங்கிய தேவா நமோநம பூத லந்தனை யாள்வாய் நமோநம ...... பணியாவும் பூணு கின்றபி ரானே நமோநம வேடர் தங்கொடி மாலா நமோநம போத வன்புகழ் சாமீ நமோநம ...... அரிதான வேத மந்திர ரூபா நமோநம ஞான பண்டித நாதா நமோநம வீர கண்டைகொள் தாளா நமோநம ...... அழகான மேனி தங்கிய வேளே நமோநம வான பைந்தொடி வாழ்வே நமோநம வீறு கொண்டவி சாகா நமோநம ...... அருள்தாராய் பாத கஞ்செறி சூரா திமாளவெ கூர்மை கொண்டயி லாலே பொராடியெ பார அண்டர்கள் வானா டுசேர்தர ...... அருள்வோனே பாதி சந்திர னேசூ டும்வேணியர் சூல சங்கர னார்கீ தநாயகர் பார திண்புய மேசே ருசோதியர் ...... கயிலாயர் ஆதி சங்கர னார்பா கமாதுமை கோல அம்பிகை மாதா மநோமணி ஆயி சுந்தரி தாயா னநாரணி ...... அபிராமி ஆவல் கொண்டுவி றாலே சிராடவெ கோம ளம்பல சூழ்கோ யில்மீறிய ஆவி னன்குடி வாழ்வா னதேவர்கள் ...... பெருமாளே. போத கந்தரு கோவே நமோநம நீதி தங்கிய தேவா நமோநம பூத லந்தனை யாள்வாய் நமோநம ...... பணியாவும் பூணு கின்றபி ரானே நமோநம வேடர் தங்கொடி மாலா நமோநம போத வன்புகழ் சாமீ நமோநம ...... அரிதான வேத மந்திர ரூபா நமோநம ஞான பண்டித நாதா நமோநம வீர கண்டைகொள் தாளா நமோநம ...... அழகான மேனி தங்கிய வேளே நமோநம வான பைந்தொடி வாழ்வே நமோநம வீறு கொண்டவி சாகா நமோநம ...... அருள்தாராய் பாத கஞ்செறி சூரா திமாளவெ கூர்மை கொண்டயி லாலே பொராடியெ பார அண்டர்கள் வானா டுசேர்தர ...... அருள்வோனே பாதி சந்திர னேசூ டும்வேணியர் சூல சங்கர னார்கீ தநாயகர் பார திண்புய மேசே ருசோதியர் ...... கயிலாயர் ஆதி சங்கர னார்பா கமாதுமை கோல அம்பிகை மாதா மநோமணி ஆயி சுந்தரி தாயா னநாரணி ...... அபிராமி ஆவல் கொண்டுவி றாலே சிராடவெ கோம ளம்பல சூழ்கோ யில்மீறிய ஆவி னன்குடி வாழ்வா னதேவர்கள் ...... பெருமாளே. 182 பழநி திருப்புகழ் தனத்ததன தான தந்த தனத்ததன தான தந்த தனத்ததன தான தந்த ...... தனதான மனக்கவலை யேது மின்றி உனக்கடிமை யேபு ரிந்து வகைக்குமநு நூல்வி தங்கள் ...... தவறாதே வகைப்படிம னோர தங்கள் தொகைப்படியி னாலி லங்கி மயக்கமற வேத முங்கொள் ...... பொருள்நாடி வினைக்குரிய பாத கங்கள் துகைத்துவகை யால்நி னைந்து மிகுத்தபொரு ளாக மங்கள் ...... முறையாலே வெகுட்சிதனை யேது ரந்து களிப்பினுட னேந டந்து மிகுக்குமுனை யேவ ணங்க ...... வரவேணும் மனத்தில்வரு வோனெ என்று னடைக்கலம தாக வந்து மலர்ப்பதம தேப ணிந்த ...... முநிவோர்கள் வரர்க்குமிமை யோர்க ளென்பர் தமக்குமன மேயி ரங்கி மருட்டிவரு சூரை வென்ற ...... முனைவேலா தினைப்புனமு னேந டந்து குறக்கொடியை யேம ணந்து செகத்தைமுழு தாள வந்த ...... பெரியோனே செழித்தவள மேசி றந்த மலர்ப்பொழில்க ளேநி றைந்த திருப்பழநி வாழ வந்த ...... பெருமாளே. 192 பழநி திருப்புகழ் தனதனன தாத்த ...... தனதான தனதனன தாத்த ...... தனதான வசனமிக வேற்றி ...... மறவாதே மனதுதுய ராற்றி ...... லுழலாதே இசைபயில்ஷ டாக்ஷ ...... ரமதாலே இகபரசெள பாக்ய ...... மருள்வாயே பசுபதிசி வாக்ய ...... முணர்வோனே பழநிமலை வீற்ற ...... ருளும்வேலா அசுரர்கிளை வாட்டி ...... மிகவாழ அமரர்சிறை மீட்ட ...... பெருமாளே. 201 சுவாமிமலை திருப்புகழ் தனாதன தனாதன தனாதன தனாதன தனாதனன தானந் ...... தனதானா அவாமரு வினாவசு தைகாணும டவாரெனு மவார்கனலில் வாழ்வென் ...... றுணராதே அராநுக ரவாதையு றுதேரைக திநாடும றிவாகியுள மால்கொண் ...... டதனாலே சிவாயவெ னுநாமமொ ருகாலுநி னையாததி மிராகரனை வாவென் ...... றருள்வாயே திரோதம லமாறும டியார்கள ருமாதவர் தியானமுறு பாதந் ...... தருவாயே உவாவினி யகானுவி னிலாவும யில்வாகன முலாசமுட னேறுங் ...... கழலோனே உலாவுத யபாநுச தகோடியு ருவானவொ ளிவாகுமயில் வேலங் ...... கையிலோனே துவாதச புயாசல ஷடாநந வராசிவ சுதாஎயினர் மானன் ...... புடையோனே சுராதிப திமாலய னுமாலொடு சலாமிடு சுவாமிமலை வாழும் ...... பெருமாளே. 203 சுவாமிமலை திருப்புகழ் தானான தனதனத் தான தனதன தானான தனதனத் தான தனதன தானான தனதனத் தான தனதன ...... தந்ததான ஆனாத பிருதிவிப் பாச நிகளமும் மாமாய விருளுமற் றேகி பவமென வாகாச பரமசிற் சோதி பரையைய ...... டைந்துளாமே ஆறாறி னதிகமக் க்ராய மநுதினம் யோகீச ரெவருமெட் டாத பரதுரி யாதீத மகளமெப் போது முதயம ...... நந்தமோகம் வானாதி சகலவிஸ்த் தார விபவரம் லோகாதி முடிவுமெய்ப் போத மலரயன் மாலீச ரெனுமவற் கேது விபுலம ...... சங்கையால்நீள் மாளாத தனிசமுற் றாய தரியநி ராதார முலைவில்சற் சோதி நிருபமு மாறாத சுகவெளத் தாணு வுடனினி ...... தென்றுசேர்வேன் நானாவி தகருவிச் சேனை வகைவகை சூழ்போது பிரபலச் சூரர் கொடுநெடு நாவாய்செல் கடலடைத் தேறி நிலைமையி ...... லங்கைசாய நாலாறு மணிமுடிப் பாவி தனையடு சீராமன் மருகமைக் காவில் பரிமள நாவீசு வயலியக் கீசர் குமரக ...... டம்பவேலா கானாளு மெயினர்தற் சாதி வளர்குற மானொடு மகிழ்கருத் தாகி மருடரு காதாடு முனதுகட் பாண மெனதுடை ...... நெஞ்சுபாய்தல் காணாது மமதைவிட் டாவி யுயவருள் பாராயெ னுரைவெகுப் ப்ரீதி யிளையவ காவேரி வடகரைச் சாமி மலையுறை ...... தம்பிரானே. 212 சுவாமிமலை திருப்புகழ் தானனத் தனந்த ...... தனதான தானனத் தனந்த ...... தனதான காமியத் தழுந்தி ...... யிளையாதே காலர்கைப் படிந்து ...... மடியாதே ஓமெழுத் திலன்பு ...... மிகவூறி ஓவியத் திலந்த ...... மருள்வாயே தூமமெய்க் கணிந்த ...... சுகலீலா சூரனைக் கடிந்த ...... கதிர்வேலா ஏமவெற் புயர்ந்த ...... மயில்வீரா ஏரகத் தமர்ந்த ...... பெருமாளே. 216 சுவாமிமலை திருப்புகழ் தனதனன தான தத்த தனதனன தான தத்த தனதனன தான தத்த ...... தனதான வேல் முருகா வேல் வேல்; வேல் முருகா வேல் வேல் வேல் முருகா வேல் வேல்; வேல் முருகா வேல் வேல் சரணகம லால யத்தை அரைநிமிஷ நேர மட்டில் தவமுறைதி யானம் வைக்க ...... அறியாத சடகசட மூட மட்டி பவவினையி லேச னித்த தமியன்மிடி யால்ம யக்க ...... முறுவேனோ கருணைபுரி யாதி ருப்ப தெனகுறையி வேளை செப்பு கயிலைமலை நாதர் பெற்ற ...... குமரோனே கடகபுய மீதி ரத்ந மணியணிபொன் மாலே செச்சை கமழுமண மார்க டப்ப ...... மணிவோனே தருணமிதை யாமி குத்த கனமதுறு நீள்ச வுக்ய சகலசெல்வ யோக மிக்க ...... பெருவாழ்வு தகைமைசிவ ஞான முத்தி பரகதியு நீகொ டுத்து தவிபுரிய வேணு நெய்த்த ...... வடிவேலா அருணதள பாத பத்ம மதுநிதமு மேது திக்க அரியதமிழ் தான ளித்த ...... மயில்வீரா அதிசயம நேக முற்ற பழநிமலை மீது தித்த அழகதிரு வேர கத்தின் ...... முருகோனே. 217 சுவாமிமலை திருப்புகழ் தத்ததன தத்ததன தத்ததன தத்ததன தத்ததன தத்ததன தத்ததன தத்ததன தத்ததன தத்ததன தத்ததன தத்ததன ...... தந்ததான சுத்தியந ரப்புடனெ லுப்புறுத சைக்குடலொ டப்புடனி ணச்சளிவ லிப்புடனி ரத்தகுகை சுக்கிலம் விளைப்புழுவொ டக்கையும ழுக்குமயிர் ...... சங்குமூளை துக்கம்விளை வித்தபிணை யற்கறைமு னைப்பெருகு குட்டமொடு விப்புருதி புற்றெழுதல் முட்டுவலி துச்சிபிள வைப்பொருமல் பித்தமொடு றக்கமிக ...... வங்கமூடே எத்தனைநி னைப்பையும்வி ளைப்பையும யக்கமுற லெத்தனைச லிப்பொடுக லிப்பையுமி டற்பெருமை எத்தனைக சத்தையும லத்தையும டைத்தகுடில் ...... பஞ்சபூதம் எத்தனைகு லுக்கையுமி னுக்கையும னக்கவலை யெத்தனைக வட்டையுந டக்கையுமு யிர்க்குழுமல் எத்தனைபி றப்பையுமி றப்பையுமெ டுத்துலகில் ...... மங்குவேனோ தத்தனத னத்தனத னத்தனவெ னத்திமிலை யொத்தமுர சத்துடியி டக்கைமுழ வுப்பறைகள் சத்தமறை யத்தொகுதி யொத்தசெனி ரத்தவெள ...... மண்டியோடச் சக்கிரிநெ ளிப்பஅவு ணப்பிணமி தப்பமரர் கைத்தலம்வி ரித்தரஹ ரச்சிவபி ழைத்தொமென சக்கிரகி ரிச்சுவர்கள் அக்கணமே பக்குவிட ...... வென்றவேலா சித்தமதி லெத்தனைசெ கத்தலம்வி தித்துடன ழித்துகம லத்தனைம ணிக்குடுமி பற்றிமலர் சித்திரக ரத்தலம்வ லிப்பபல குட்டிநட ...... னங்கொள்வேளே செட்டிவடி வைக்கொடுதி னைப்புனம திற்சிறுகு றப்பெணம ளிக்குள்மகிழ் செட்டிகுரு வெற்பிலுறை சிற்பரம ருக்கொருகு ருக்களென முத்தர்புகழ் ...... தம்பிரானே. 222 சுவாமிமலை திருப்புகழ் தானனந் தனதனன தனதனா தத்த தந்த ...... தனதான தானனந் தனதனன தனதனா தத்த தந்த ...... தனதான நாசர்தங் கடையதனில் விரவிநான் மெத்த நொந்து ...... தடுமாறி ஞானமுங் கெடஅடைய வழுவியா ழத்த ழுந்தி ...... மெலியாதே மாசகந் தொழுமுனது புகழினோர் சொற்ப கர்ந்து ...... சுகமேவி மாமணங் கமழுமிரு கமலபா தத்தை நின்று ...... பணிவேனோ வாசகம் புகலவொரு பரமர்தா மெச்சு கின்ற ...... குருநாதா வாசவன் தருதிருவை யொருதெய்வா னைக்கி ரங்கு ...... மணவாளா கீசகஞ் சுரர்தருவு மகிழுமா வத்தி சந்து ...... புடைசூழுங் கேசவன் பரவுகுரு மலையில்யோ கத்த மர்ந்த ...... பெருமாளே. 223 சுவாமிமலை திருப்புகழ் தானான தான தத்த தானான தான தத்த தானான தான தத்த ...... தனதான நாவேறு பாம ணத்த பாதார மேநி னைத்து நாலாறு நாலு பற்று ...... வகையான நாலாரு மாக மத்தி னூலாய ஞான முத்தி நாடோறு நானு ரைத்த ...... நெறியாக நீவேறெ னாதி ருக்க நான்வேறெ னாதி ருக்க நேராக வாழ்வ தற்கு ...... னருள்கூர நீடார்ஷ டாத ரத்தின் மீதேப ராப ரத்தை நீகாணெ னாவ னைச்சொ ...... லருள்வாயே சேவேறு மீசர் சுற்ற மாஞான போத புத்தி சீராக வேயு ரைத்த ...... குருநாதா தேரார்கள் நாடு சுட்ட சூரார்கள் மாள வெட்டு தீராகு காகு றத்தி ...... மணவாளா காவேரி நேர்வ டக்கி லேவாவி பூம ணத்த காவார்சு வாமி வெற்பின் ...... முருகோனே கார்போலு மேனி பெற்ற மாகாளி வாலை சத்தி காமாரி வாமி பெற்ற ...... பெருமாளே. 228 சுவாமிமலை திருப்புகழ் தான தனதன தான தனதன தான தனதன ...... தனதான பாதி மதிநதி போது மணிசடை நாத ரருளிய ...... குமரேசா பாகு கனிமொழி மாது குறமகள் பாதம் வருடிய ...... மணவாளா காது மொருவிழி காக முறஅருள் மாய னரிதிரு ...... மருகோனே கால னெனையணு காம லுனதிரு காலில் வழிபட ...... அருள்வாயே ஆதி யயனொடு தேவர் சுரருல காளும் வகையுறு ...... சிறைமீளா ஆடு மயிலினி லேறி யமரர்கள் சூழ வரவரு ...... மிளையோனே சூத மிகவளர் சோலை மருவுசு வாமி மலைதனி ...... லுறைவோனே சூர னுடலற வாரி சுவறிட வேலை விடவல ...... பெருமாளே. 232 சுவாமிமலை திருப்புகழ் தானதன தான தந்த தானதன தான தந்த தானதன தான தந்த ...... தனதான வாதமொடு சூலை கண்ட மாலைகுலை நோவு சந்து மாவலிவி யாதி குன்ம ...... மொடுகாசம் வாயுவுட னேப ரந்த தாமரைகள் பீன சம்பின் மாதர்தரு பூஷ ணங்க ...... ளெனவாகும் பாதகவி யாதி புண்க ளானதுட னேதொ டர்ந்து பாயலைவி டாது மங்க ...... இவையால்நின் பாதமல ரான தின்க ணேயமற வேம றந்து பாவமது பான முண்டு ...... வெறிமூடி ஏதமுறு பாச பந்த மானவலை யோடு ழன்று ஈனமிகு சாதி யின்க ...... ணதிலேயான் ஈடழித லான தின்பின் மூடனென வோது முன்புன் ஈரஅருள் கூர வந்து ...... எனையாள்வாய் சூதமகிழ் பாலை கொன்றை தாதுவளர் சோலை துன்றி சூழமதில் தாவி மஞ்சி ...... னளவாகத் தோரணநன் மாட மெங்கு நீடுகொடி யேத ழைந்த சுவாமிமலை வாழ வந்த ...... பெருமாளே. 239 திருத்தணிகை திருப்புகழ் தனனத் தனனத் தனனத் தனனத் தனனத் தனனத் ...... தனதான அமைவுற் றடையப் பசியுற் றவருக் கமுதைப் பகிர்தற் ...... கிசையாதே அடையப் பொருள்கைக் கிளமைக் கெனவைத் தருள்தப் பிமதத் ...... தயராதே தமர்சுற் றியழப் பறைகொட் டியிடச் சமனெட் டுயிரைக் ...... கொடுபோகுஞ் சரிரத் தினைநிற் குமெனக் கருதித் தளர்வுற் றொழியக் ...... கடவேனோ இமயத் துமயிற் கொருபக் கமளித் தவருக் கிசையப் ...... புகல்வோனே இரணத் தினிலெற் றுவரைக் கழுகுக் கிரையிட் டிடுவிக் ...... ரமவேலா சமயச் சிலுகிட் டவரைத் தவறித் தவமுற் றவருட் ...... புகநாடும் சடுபத் மமுகக் குகபுக் ககனத் தணியிற் குமரப் ...... பெருமாளே. 240 திருத்தணிகை திருப்புகழ் தனதன தனதன தனதன தனதன தனதன தனதன ...... தனதான முருகைய்யா முருகைய்யா முத்து குமரன் நீ ஐயா முருகைய்யா முருகைய்யா முத்து குமரன் நீ ஐயா அரகர சிவனரி அயனிவர் பரவிமு னறுமுக சரவண ...... பவனேயென் றநுதின மொழிதர அசுரர்கள் கெடஅயில் அநலென எழவிடு ...... மதிவீரா பரிபுர கமலம தடியிணை யடியவர் உளமதி லுறவருள் ...... முருகேசா பகவதி வரைமகள் உமைதர வருகுக பரமன திருசெவி ...... களிகூர உரைசெயு மொருமொழி பிரணவ முடிவதை உரைதரு குருபர ...... வுயர்வாய உலகம னலகில வுயிர்களு மிமையவ ரவர்களு முறுவர ...... முநிவோரும் பரவிமு னநுதின மனமகிழ் வுறவணி பணிதிகழ் தணிகையி ...... லுறைவோனே பகர்தரு குறமகள் தருவமை வநிதையு மிருபுடை யுறவரு ...... பெருமாளே. 242 திருத்தணிகை திருப்புகழ் தனத்தன தனத்தன தனத்தன தனத்தன தனத்தன தனத்தன ...... தனதான இருப்பவல் திருப்புகழ் விருப்பொடு படிப்பவர் இடுக்கினை யறுத்திடு ...... மெனவோதும் இசைத்தமிழ் நடத்தமி ழெனத்துறை விருப்புட னிலக்கண இலக்கிய ...... கவிநாலுந் தரிப்பவ ருரைப்பவர் நினைப்பவர் மிகச்சக தலத்தினில் நவிற்றுத ...... லறியாதே தனத்தினில் முகத்தினில் மனத்தினி லுருக்கிடு சமர்த்திகள் மயக்கினில் ...... விழலாமோ கருப்புவில் வளைத்தணி மலர்க்கணை தொடுத்தியல் களிப்புட னொளித்தெய்த ...... மதவேளைக் கருத்தினில் நினைத்தவ னெருப்பெழ நுதற்படு கனற்கணி லெரித்தவர் ...... கயிலாயப் பொருப்பினி லிருப்பவர் பருப்பத வுமைக்கொரு புறத்தினை யளித்தவர் ...... தருசேயே புயற்பொழில் வயற்பதி நயப்படு திருத்தணி பொருப்பினில் விருப்புறு ...... பெருமாளே. 243 திருத்தணிகை திருப்புகழ் தனதன தான தனதன தான தனதன தான ...... தனதான இருமலு ரோக முயலகன் வாத மெரிகுண நாசி ...... விடமேநீ ரிழிவுவி டாத தலைவலி சோகை யெழுகள மாலை ...... யிவையோடே பெருவயி றீளை யெரிகுலை சூலை பெருவலி வேறு ...... முளநோய்கள் பிறவிகள் தோறு மெனைநலி யாத படியுன தாள்கள் ...... அருள்வாயே வருமொரு கோடி யசுரர்ப தாதி மடியஅ நேக ...... இசைபாடி வருமொரு கால வயிரவ ராட வடிசுடர் வேலை ...... விடுவோனே தருநிழல் மீதி லுறைமுகி லூர்தி தருதிரு மாதின் ...... மணவாளா சலமிடை பூவி னடுவினில் வீறு தணிமலை மேவு ...... பெருமாளே. 249 திருத்தணிகை திருப்புகழ் தனத்தன தானம் தனத்தன தானம் தனத்தன தானம் ...... தனதான எனக்கென யாவும் படைத்திட நாளும் இளைப்பொடு காலந் ...... தனிலோயா எடுத்திடு காயந் தனைக்கொடு மாயும் இலச்சையி லாதென் ...... பவமாற உனைப்பல நாளுந் திருப்புக ழாலும் உரைத்திடு வார்தங் ...... குளிமேவி உணர்த்திய போதந் தனைப்பிரி யாதொண் பொலச்சர ணானுந் ...... தொழுவேனோ வினைத்திற மோடன் றெதிர்த்திடும் வீரன் விழக்கொடு வேள்கொன் ...... றவனீயே விளப்பென மேலென் றிடக்கய னாரும் விருப்புற வேதம் ...... புகல்வோனே சினத்தொடு சூரன் தனைக்கொடு வேலின் சிரத்தினை மாறும் ...... முருகோனே தினைப்புன மோவுங் குறக்கொடி யோடுந் திருத்தணி மேவும் ...... பெருமாளே. 269 திருத்தணிகை திருப்புகழ் தனத்தன தனத்தம் தனத்தன தனத்தம் தனத்தன தனத்தம் ...... தனதான சினத்தவர் முடிக்கும் பகைத்தவர் குடிக்குஞ் செகுத்தவர் ருயிர்க்குஞ் ...... சினமாகச் சிரிப்பவர் தமக்கும் பழிப்பவர் தமக்கும் திருப்புகழ் நெருப்பென் ...... றறிவோம்யாம் நினைத்தது மளிக்கும் மனத்தையு முருக்கும் நிசிக்கரு வறுக்கும் ...... பிறவாமல் நெருப்பையு மெரிக்கும் பொருப்பையு மிடிக்கும் நிறைப்புக ழுரைக்குஞ் ...... செயல்தாராய் தனத்தன தனத்தந் திமித்திமி திமித்திந் தகுத்தகு தகுத்தந் ...... தனபேரி தடுட்டுடு டுடுட்டுண் டெனத்துடி முழக்குந் தளத்துட னடக்குங் ...... கொடுசூரர் சினத்தையு முடற்சங் கரித்தம லைமுற்றுஞ் சிரித்தெரி கொளுத்துங் ...... கதிர்வேலா தினைக்கிரி குறப்பெண் தனத்தினில் சுகித்தெண் திருத்தணி யிருக்கும் ...... பெருமாளே. 278 திருத்தணிகை திருப்புகழ் தனத்த தத்தனத் ...... தனதான தனத்த தத்தனத் ...... தனதான நினைத்த தெத்தனையிற் ...... றவறாமல் நிலைத்த புத்திதனைப் ...... பிரியாமற் கனத்த தத்துவமுற் ...... றழியாமற் கதித்த நித்தியசித் ...... தருள்வாயே மனித்தர் பத்தர்தமக் ...... கெளியோனே மதித்த முத்தமிழிற் ...... பெரியோனே செனித்த புத்திரரிற் ...... சிறியோனே திருத்த ணிப்பதியிற் ...... பெருமாளே. நினைத்தது எத்தனையில் தவறாமல் நிலைத்த புத்திதனைப் பிரியாமல் கனத்த தத்துவம் உற்றழியாமல் கதித்த நித்தியசித்தருள்வாயே மனித்தர் பத்தர்தமக்கு எளியோனே மதித்த முத்தமிழில் பெரியோனே செனித்த புத்திரரிற் சிறியோனே திருத்தணிப்பதியிற் பெருமாளே. 280 திருத்தணிகை திருப்புகழ் தனத்தனத் தனத்தனத் தனத்தனத் தனத்தனத் தனத்தனத் தனத்தனத் ...... தனதான பருத்தபற் சிரத்தினைக் குருத்திறற் கரத்தினைப் பரித்தவப் பதத்தினைப் ...... பரிவோடே படைத்தபொய்க் குடத்தினைப் பழிப்பவத் திடத்தினைப் பசிக்குடற் கடத்தினைப் ...... பயமேவும் பெருத்தபித் துருத்தனைக் கிருத்திமத் துருத்தியைப் பிணித்தமுக் குறத்தொடைப் ...... புலனாலும் பிணித்தவிப் பிணிப்பையைப் பொறுத்தமிழ்ப் பிறப்பறக் குறிக்கருத் தெனக்களித் ...... தருள்வாயே கருத்திலுற் றுரைத்தபத் தரைத்தொறுத் திருக்கரைக் கழித்தமெய்ப் பதத்தில்வைத் ...... திடுவீரா கதித்தநற் றினைப்புனக் கதித்தநற் குறத்தியைக் கதித்தநற் றிருப்புயத் ...... தணைவோனே செருத்தெறுத் தெதிர்த்தமுப் புரத்துரத் தரக்கரைச் சிரித்தெரித் தநித்தர்பொற் ...... குமரேசா சிறப்புறப் பிரித்தறத் திறத்தமிழ்க் குயர்த்திசைச் சிறப்புடைத் திருத்தணிப் ...... பெருமாளே. 314 காஞ்சீபுரம் திருப்புகழ் தனதனந் தத்தத் தத்தன தத்தம் தனதனந் தத்தத் தத்தன தத்தம் தனதனந் தத்தத் தத்தன தத்தம் ...... தனதான புனமடந் தைக்குத் தக்கபு யத்தன் குமரனென் றெத்திப் பத்தர்து திக்கும் பொருளைநெஞ் சத்துக் கற்பனை முற்றும் ...... பிறிதேதும் புகலுமெண் பத்தெட் டெட்டியல் தத்வம் சகலமும் பற்றிப் பற்றற நிற்கும் பொதுவையென் றொக்கத் தக்கதொ ரத்தந் ...... தனைநாளும் சினமுடன் தர்க்கித் துச்சிலு கிக்கொண் டறுவருங் கைக்குத் திட்டொரு வர்க்குந் தெரிவரும் சத்யத் தைத்தெரி சித்துன் ...... செயல்பாடித் திசைதொறுங் கற்பிக் கைக்கினி யற்பந் திருவுளம் பற்றிச் செச்சைம ணக்குஞ் சிறுசதங் கைப்பொற் பத்மமெ னக்கென் ...... றருள்வாயே கனபெருந் தொப்பைக் கெட்பொரி யப்பம் கனிகிழங் கிக்குச் சர்க்கரை முக்கண் கடலைகண் டப்பிப் பிட்டொடு மொக்கும் ...... திருவாயன் கவளதுங் கக்கைக் கற்பக முக்கண் திகழுநங் கொற்றத் தொற்றைம ருப்பன் கரிமுகன் சித்ரப் பொற்புகர் வெற்பன் ...... றனையீனும் பனவியொன் றெட்டுச் சக்ரத லப்பெண் கவுரிசெம் பொற்பட் டுத்தரி யப்பெண் பழயஅண் டத்தைப் பெற்றம டப்பெண் ...... பணிவாரைப் பவதரங் கத்தைத் தப்பநி றுத்தும் பவதிகம் பர்க்குப் புக்கவள் பக்கம் பயில்வரம் பெற்றுக் கச்சியில் நிற்கும் ...... பெருமாளே. 330 காஞ்சீபுரம் திருப்புகழ் தத்தத் தத்தத் ...... தனதான தத்தத் தத்தத் ...... தனதான முருகா முருகா வேல் முருகா; முருகா முருகா வேல் முருகா முட்டுப் பட்டுக் ...... கதிதோறும் முற்றச் சுற்றிப் ...... பலநாளும் தட்டுப் பட்டுச் ...... சுழல்வேனைச் சற்றுப் பற்றக் ...... கருதாதோ வட்டப் புட்பத் ...... தலமீதே வைக்கத் தக்கத் ...... திருபாதா கட்டத் தற்றத் ...... தருள்வோனே கச்சிச் சொக்கப் ...... பெருமாளே. 339 காஞ்சீபுரம் திருப்புகழ் தனன தானன தத்தன தனதன தானா தத்தத் ...... தனதான கரும மானபி றப்பற வொருகதி காணா தெய்த்துத் ...... தடுமாறுங் கலக காரண துற்குண சமயிகள் நானா வர்க்கக் ...... கலைநூலின் வரும நேகவி கற்பவி பரிதம னோபா வத்துக் ...... கரிதாய மவுன பூரித சத்திய வடிவினை மாயா மற்குப் ...... புகல்வாயே தரும வீம அருச்சுன நகுலச காதே வர்க்குப் ...... புகலாகிச் சமர பூமியில் விக்ரம வளைகொடு நாளோர் பத்தெட் ...... டினிலாளுங் குரும கீதல முட்பட வுளமது கோடா மற்க்ஷத் ...... ரியர்மாளக் குலவு தேர்கட வச்சுதன் மருககு மாரா கச்சிப் ...... பெருமாளே. 355 திருவானைக்கா திருப்புகழ் தனத்த தான தானான தனத்த தான தானான தனத்த தான தானான ...... தனதான அனித்த மான வூனாளு மிருப்ப தாக வேநாசி யடைத்து வாயு வோடாத ...... வகைசாதித் தவத்தி லேகு வால்மூலி புசித்து வாடு மாயாச அசட்டு யோகி யாகாமல் ...... மலமாயை செனித்த காரி யோபாதி யொழித்து ஞான ஆசார சிரத்தை யாகி யான்வேறெ ...... னுடல்வேறு செகத்தி யாவும் வேறாக நிகழ்ச்சி யாம நோதீத சிவச்சொ ரூபமாயோகி ...... யெனஆள்வாய் தொனித்த நாத வேயூது சகஸ்ர நாம கோபால சுதற்கு நேச மாறாத ...... மருகோனே சுவர்க்க லோக மீகாம சமஸ்த லோக பூபால தொடுத்த நீப வேல்வீர ...... வயலுரா மனித்த ராதி சோணாடு தழைக்க மேவு காவேரி மகப்ர வாக பானீய ...... மலைமோதும் மணத்த சோலை சூழ்காவை அனைத்து லோக மாள்வாரு மதித்த சாமி யேதேவர் ...... பெருமாளே. 359 திருவானைக்கா திருப்புகழ் தான தனன தனதந்த தந்தன தான தனன தனதந்த தந்தன தான தனன தனதந்த தந்தன ...... தனதான ஓல மறைக ளறைகின்ற வொன்றது மேலை வெளியி லொளிரும் பரஞ்சுடர் ஓது சரியை க்ரியையும் புணர்ந்தவ ...... ரெவராலும் ஓத வரிய துரியங் கடந்தது போத அருவ சுருபம் ப்ரபஞ்சமும் ஊனு முயிரு முழுதுங் கலந்தது ...... சிவஞானம் சால வுடைய தவர்கண்டு கொண்டது மூல நிறைவு குறைவின்றி நின்றது சாதி குலமு மிலதன்றி யன்பர்சொ ...... னவியோமஞ் சாரு மநுப வரமைந்த மைந்தமெய் வீடு பரம சுகசிந்து இந்த்ரிய தாப சபல மறவந்து நின்கழல் ...... பெறுவேனோ வால குமர குககந்த குன்றெறி வேல மயில எனவந்து கும்பிடு வான விபுதர் பதியிந்த்ரன் வெந்துயர் ...... களைவோனே வாச களப வரதுங்க மங்கல வீர கடக புயசிங்க சுந்தர வாகை புனையும் ரணரங்க புங்கவ ...... வயலூரா ஞால முதல்வி யிமயம் பயந்தமின் நீலி கவுரி பரைமங்கை குண்டலி நாளு மினிய கனியெங்க ளம்பிகை ...... த்ரிபுராயி நாத வடிவி யகிலம் பரந்தவ ளாலி னுதர முளபைங் கரும்புவெ ணாவ லரசு மனைவஞ்சி தந்தருள் ...... பெருமாளே. 363 திருவானைக்கா திருப்புகழ் தானத் தானத் ...... தனதான தானத் தானத் ...... தனதான நாடித் தேடித் ...... தொழுவார்பால் நானத் தாகத் ...... திரிவேனோ மாடக் கூடற் ...... பதிஞான வாழ்வைச் சேரத் ...... தருவாயே பாடற் காதற் ...... புரிவோனே பாலைத் தேனொத் ...... தருள்வோனே ஆடற் றோகைக் ...... கினியோனே ஆனைக் காவிற் ...... பெருமாளே. 366 திருவானைக்கா திருப்புகழ் தானத் தானன தத்தன தத்தன தானத் தானன தத்தன தத்தன தானத் தானன தத்தன தத்தன ...... தனதான வேலைப் போல்விழி யிட்டும ருட்டிகள் காமக் ரோதம்வி ளைத்திடு துட்டிகள் வீதிக் கேதிரி பப்பர மட்டைகள் ...... முலையானை மேலிட் டேபொர விட்டபொ றிச்சிகள் மார்பைத் தோளைய சைத்துந டப்பிகள் வேளுக் காண்மைசெ லுத்துச மர்த்திகள் ...... களிகூருஞ் சோலைக் கோகில மொத்தமொ ழிச்சிகள் காசற் றாரையி தத்திலொ ழிச்சிகள் தோலைப் பூசிமி னுக்கியு ருக்கிகள் ...... எவரேனும் தோயப் பாயல ழைக்கும வத்திகள் மோகப் போகமு யக்கிம யக்கிகள் சூறைக் காரிகள் துக்கவ லைப்பட ...... லொழிவேனோ காலைக் கேமுழு கிக்குண திக்கினில் ஆதித் யாயஎ னப்பகர் தர்ப்பண காயத் ரீசெப மர்ச்சனை யைச்செயு ...... முநிவோர்கள் கானத் தாசிர மத்தினி லுத்தம வேள்விச் சாலைய ளித்தல்பொ ருட்டெதிர் காதத் தாடகை யைக்கொல்க்ரு பைக்கடல் ...... மருகோனே ஆலைச் சாறுகொ தித்துவ யற்றலை பாயச் சாலித ழைத்திர தித்தமு தாகத் தேவர்கள் மெச்சிய செய்ப்பதி ...... யுறைவேலா ஆழித் தேர்மறு கிற்பயில் மெய்த்திரு நீறிட் டான்மதிள் சுற்றிய பொற்றிரு ஆனைக் காவினி லப்பர்ப்ரி யப்படு ...... பெருமாளே. 367 திருவருணை திருப்புகழ் தனன தனதன தனதன தனதன தனன தனதன தனதன தனதன தனன தனதன தனதன தனதன ...... தனதான குமர குருபர குணதர நிசிசர திமிர தினகர சரவண பவகிரி குமரி சுதபகி ரதிசுத சுரபதி ...... குலமானுங் குறவர் சிறுமியு மருவிய திரள்புய முருக சரணென வுருகுதல் சிறிதுமில் கொடிய வினையனை யவலனை யசடனை ...... யதிமோகக் கமரில் விழவிடு மழகுடை யரிவையர் களவி னொடுபொரு ளளவள வருளிய கலவி யளறிடை துவளுறும் வெளிறனை ...... யினிதாளக் கருணை யடியரொ டருணையி லொருவிசை சுருதி புடைதர வருமிரு பரிபுர கமல மலரடி கனவிலு நனவிலு ...... மறவேனே தமர மிகுதிரை யெறிவளை கடல்குடல் மறுகி யலைபட விடநதி யுமிழ்வன சமுக முககண பணபணி பதிநெடு ...... வடமாகச் சகல வுலகமு நிலைபெற நிறுவிய கனக கிரிதிரி தரவெகு கரமலர் தளர வினியதொ ரமுதினை யொருதனி ...... கடையாநின் றமரர் பசிகெட வுதவிய க்ருபைமுகில் அகில புவனமு மளவிடு குறியவன் அளவு நெடியவ னளவிட அரியவன் ...... மருகோனே அரவு புனைதரு புநிதரும் வழிபட மழலை மொழிகொடு தெளிதர வொளிதிகழ் அறிவை யறிவது பொருளென அருளிய ...... பெருமாளே. 397 திருவருணை திருப்புகழ் தனதாதன தானன தத்தம் ...... தனதான தனதாதன தானன தத்தம் ...... தனதான இமராஜனி லாவதெ றிக்குங் ...... கனலாலே இளவாடையு மூருமொ றுக்கும் ...... படியாலே சமராகிய மாரனெ டுக்குங் ...... கணையாலே தனிமானுயிர் சோரும தற்கொன் ...... றருள்வாயே குமராமுரு காசடி லத்தன் ...... குருநாதா குறமாமக ளாசைத ணிக்குந் ...... திருமார்பா அமராவதி வாழ்வம ரர்க்கன் ...... றருள்வோனே அருணாபுரி வீதியி னிற்கும் ...... பெருமாளே. 401 திருவருணை திருப்புகழ் தனதன தந்த தனதன தந்த தனதன தந்த ...... தனதான இருவினை யஞ்ச மலவகை மங்க இருள்பிணி மங்க ...... மயிலேறி இனவரு ளன்பு மொழியக டம்பு வினதக முங்கொ ...... டளிபாடக் கரிமுக னெம்பி முருகனெ னண்டர் களிமலர் சிந்த ...... அடியேன்முன் கருணைபொ ழிந்து முகமும லர்ந்து கடுகிந டங்கொ ...... டருள்வாயே திரிபுர மங்க மதனுடல் மங்க திகழ்நகை கொண்ட ...... விடையேறிச் சிவம்வெளி யங்க ணருள்குடி கொண்டு திகழந டஞ்செய் ...... தெமையீண அரசியி டங்கொள் மழுவுடை யெந்தை அமலன்ம கிழ்ந்த ...... குருநாதா அருணைவி லங்கல் மகிழ்குற மங்கை அமளிந லங்கொள் ...... பெருமாளே. 414 திருவருணை திருப்புகழ் தான தனான தத்த ...... தனதான தான தனான தத்த ...... தனதான கீத விநோத மெச்சு ...... குரலாலே கீறு மையார் முடித்த ...... குழலாலே நீதி யிலாத ழித்து ...... முழலாதே நீமயி லேறி யுற்று ...... வரவேணும் சூதமர் சூர ருட்க ...... பொருசூரா சோண கிரீயி லுற்ற ...... குமரேசா ஆதியர் காதொ ருச்சொ ...... லருள்வோனே ஆனை முகார்க னிட்ட ...... பெருமாளே. 421 திருவருணை திருப்புகழ் தனனா தனனா தனனா தனனா தனனா தனனா ...... தனதான சிவமா துடனே அநுபோ கமதாய் சிவஞா னமுதே ...... பசியாறித் திகழ்வோ டிருவோ ரொருரூ பமதாய் திசைலோ கமெலா ...... மநுபோகி இவனே யெனமா லயனோ டமரோ ரிளையோ னெனவே ...... மறையோத இறையோ னிடமாய் விளையா டுகவே யியல்வே லுடன்மா ...... அருள்வாயே தவலோ கமெலா முறையோ வெனவே தழல்வேல் கொடுபோ ...... யசுராரைத் தலைதூள் படஏழ் கடல்தூள் படமா தவம்வாழ் வுறவே ...... விடுவோனே கவர்பூ வடிவாள் குறமா துடன்மால் கடனா மெனவே ...... அணைமார்பா கடையேன் மிடிதூள் படநோய் விடவே கனல்மால் வரைசேர் ...... பெருமாளே. 425 திருவருணை திருப்புகழ் தனதன தனனாத் தனதன தனனத் தனதன தனனாத் தனதன தனனத் தனதன தனனாத் தனதன தனனத் ...... தனதான செயசெய அருணாத் திரிசிவ யநமச் செயசெய அருணாத் திரிமசி வயநச் செயசெய அருணாத் திரிநம சிவயத் ...... திருமூலா செயசெய அருணாத் திரியந மசிவச் செயசெய அருணாத் திரிவய நமசிச் செயசெய அருணாத் திரிசிவ யநமஸ்த் ...... தெனமாறி செயசெய அருணாத் திரிதனின் விழிவைத் தரகர சரணாத் திரியென உருகிச் செயசெய குருபாக் கியமென மருவிச் ...... சுடர்தாளைச் சிவசிவ சரணாத் திரிசெய செயெனச் சரண்மிசை தொழுதேத் தியசுவை பெருகத் திருவடி சிவவாக் கியகட லமுதைக் ...... குடியேனோ செயசெய சரணாத் திரியென முநிவர்க் கணமிது வினைகாத் திடுமென மருவச் செடமுடி மலைபோற் றவுணர்க ளவியச் ...... சுடும்வேலா திருமுடி யடிபார்த் திடுமென இருவர்க் கடிதலை தெரியாப் படிநிண அருணச் சிவசுடர் சிகிநாட் டவனிரு செவியிற் ...... புகல்வோனே செயசெய சரணாத் திரியெனு மடியெற் கிருவினை பொடியாக் கியசுடர் வெளியிற் றிருநட மிதுபார்த் திடுமென மகிழ்பொற் ...... குருநாதா திகழ்கிளி மொழிபாற் சுவையித ழமுதக் குறமகள் முலைமேற் புதுமண மருவிச் சிவகிரி அருணாத் திரிதல மகிழ்பொற் ...... பெருமாளே. 431 திருவருணை திருப்புகழ் தான தத்த தந்த தான தத்த தந்த தான தத்த தந்த ...... தனதான தோத கப்பெ ரும்ப யோத ரத்தி யங்கு தோகை யர்க்கு நெஞ்ச ...... மழியாதே சூலை வெப்ப டர்ந்த வாத பித்த மென்று சூழ்பி ணிக்க ணங்க ...... ளணுகாதே பாத கச்ச மன்தன் மேதி யிற்பு குந்து பாசம் விட்டெ றிந்து ...... பிடியாதே பாவ லற்கி ரங்கி நாவ லர்க்கி சைந்த பாடல் மிக்க செஞ்சொல் ...... தரவேணும் வேத மிக்க விந்து நாத மெய்க்க டம்ப வீர பத்ர கந்த ...... முருகோனே மேரு வைப்பி ளந்து சூர னைக்க டிந்து வேலை யிற்றொ ளைந்த ...... கதிர்வேலா கோதை பொற்கு றிஞ்சி மாது கச்ச ணிந்த கோம ளக்கு ரும்பை ...... புணர்வோனே கோல முற்றி லங்கு சோண வெற்பு யர்ந்த கோபு ரத்த மர்ந்த ...... பெருமாளே. 470 சிதம்பரம் திருப்புகழ் தனதன தனதன தானான தானன தனதன தனதன தானான தானன தனதன தனதன தானான தானன ...... தந்ததான அவகுண விரகனை வேதாள ரூபனை அசடனை மசடனை ஆசார ஈனனை அகதியை மறவனை ஆதாளி வாயனை ...... அஞ்சுபூதம் அடைசிய சவடனை மோடாதி மோடனை அழிகரு வழிவரு வீணாதி வீணனை அழுகலை யவிசலை ஆறான வூணனை ...... அன்பிலாத கவடனை விகடனை நானாவி காரனை வெகுளியை வெகுவித மூதேவி மூடிய கலியனை அலியனை ஆதேச வாழ்வனை ...... வெம்பிவீழுங் களியனை யறிவுரை பேணாத மாநுட கசனியை யசனியை மாபாத னாகிய கதியிலி தனையடி நாயேனை யாளுவ ...... தெந்தநாளோ மவுலியி லழகிய பாதாள லோகனு மரகத முழுகிய காகோத ராஜனு மநுநெறி யுடன்வளர் சோணாடர் கோனுட ...... னும்பர்சேரும் மகபதி புகழ்புலி யூர்வாழு நாயகர் மடமயில் மகிழ்வுற வானாடர் கோவென மலைமக ளுமைதரு வாழ்வேம னோகர ...... மன்றுளாடும் சிவசிவ ஹரஹர தேவா நமோநம தெரிசன பரகதி யானாய் நமோநம திசையினு மிசையினும் வாழ்வே நமோநம ...... செஞ்சொல்சேருந் திருதரு கலவி மணாளா நமோநம திரிபுர மெரிசெய்த கோவே நமோநம ஜெயஜெய ஹரஹர தேவா சுராதிபர் ...... தம்பிரானே. 487 சிதம்பரம் திருப்புகழ் தான தத்ததன தான தத்ததன தான தத்ததன தான தத்ததன தான தத்ததன தான தத்ததன ...... தந்ததான வாத பித்தமொடு சூலை விப்புருதி யேறு கற்படுவ னீளை பொக்கிருமல் மாலை புற்றெழுத லூசல் பற்சனியொ ...... டந்திமாலை மாச டைக்குருடு காத டைப்பு செவி டூமை கெட்டவலி மூல முற்றுதரு மாலை யுற்றதொணு றாறு தத்துவர்க ...... ளுண்டகாயம் வேத வித்துபரி கோல முற்றுவிளை யாடு வித்தகட லோட மொய்த்தபல வேட மிட்டுபொரு ளாசை பற்றியுழல் ...... சிங்கியாலே வீடு கட்டிமய லாசை பட்டுவிழ வோசை கெட்டுமடி யாமல் முத்திபெற வீட ளித்துமயி லாடு சுத்தவெளி ...... சிந்தியாதோ ஓத அத்திமுகி லோடு சர்ப்பமுடி நீறு பட்டலற சூர வெற்பவுண ரோடு பட்டுவிழ வேலை விட்டபுக ...... ழங்கிவேலா ஓந மச்சிவய சாமி சுத்தஅடி யார்க ளுக்குமுப காரி பச்சையுமை ஓர்பு றத்தருள்சி காம ணிக்கடவுள் ...... தந்தசேயே ஆதி கற்பகவி நாய கர்க்குபிற கான பொற்சரவ ணாப ரப்பிரம னாதி யுற்றபொருள் ஓது வித்தமைய ...... றிந்தகோவே ஆசை பெற்றகுற மாதை நித்தவன மேவி சுத்தமண மாடி நற்புலியு ராட கப்படிக கோபு ரத்தின்மகிழ் ...... தம்பிரானே. 493 சிதம்பரம் திருப்புகழ் தனதன தனன தனதன தனன தனதன தனன ...... தனதான எழுகடல் மணலை அளவிடி னதிக மெனதிடர் பிறவி ...... அவதாரம் இனியுன தபய மெனதுயி ருடலு மினியுடல் விடுக ...... முடியாது கழுகொடு நரியு மெரிபுவி மறலி கமலனு மிகவு ...... மயர்வானார் கடனுன தபய மடிமையு னடிமை கடுகியு னடிகள் ...... தருவாயே விழுதிக ழழகி மரகத வடிவி விமலிமு னருளு ...... முருகோனே விரிதல மெரிய குலகிரி நெரிய விசைபெறு மயிலில் ...... வருவோனே எழுகடல் குமுற அவுணர்க ளுயிரை யிரைகொளும் அயிலை ...... யுடையோனே இமையவர் முநிவர் பரவிய புலியு ரினில்நட மருவு ...... பெருமாளே. 513 சிதம்பரம் திருப்புகழ் தனனா தனத்ததன தனனா தனத்ததன தனனா தனத்ததன ...... தனதானா மனமே உனக்குறுதி புகல்வே னெனக்கருகில் வருவா யுரைத்தமொழி ...... தவறாதே மயில்வாக னக்கடவுள் அடியார் தமக்கரசு மனமாயை யற்றசுக ...... மதிபாலன் நினைவே துனக்கமரர் சிவலோக மிட்டுமல நிலைவே ரறுக்கவல ...... பிரகாசன் நிதிகா நமக்குறுதி அவரே பரப்பிரம நிழலாளி யைத்தொழுது ...... வருவாயே இனமோ தொருத்திருபி நலமேர் மறைக்கரிய இளையோ ளொரொப்புமிலி ...... நிருவாணி எனையீ ணெடுத்தபுகழ் கலியாணி பக்கமுறை யிதழ்வேணி யப்பனுடை ...... குருநாதா முனவோர் துதித்து மலர் மழைபோ லிறைத்துவர முதுசூ ரரைத்தலை கொள் ...... முருகோனே மொழிபாகு முத்துநகை மயிலாள் தனக்குருகு முருகா தமிழ்ப்புலியுர் ...... பெருமாளே. 519 கயிலைமலை திருப்புகழ் தனத்த தனத்த தனத்த தனத்த தனத்த தனத்த ...... தனதான நகைத்து வுருக்கி விழித்து மிரட்டி நடித்து விதத்தி ...... லதிமோகம் நடத்து சமத்தி முகத்தை மினுக்கி நலத்தி லணைத்து ...... மொழியாலுந் திகைத்த வரத்தி லடுத்த பொருட்கை திரட்டி யெடுத்து ...... வரவேசெய் திருட்டு முலைப்பெண் மருட்டு வலைக்குள் தெவிட்டு கலைக்குள் ...... விழுவேனோ பகைத்த அரக்கர் சிரத்தை யறுத்து படர்ச்சி கறுத்த ...... மயிலேறிப் பணைத்த கரத்த குணத்த மணத்த பதத்த கனத்த ...... தனமாதை மிகைத்த புனத்தி லிருத்தி யணைத்து வெளுத்த பொருப்பி ...... லுறைநாதா விரித்த சடைக்கு ளொருத்தி யிருக்க ம்ருகத்தை யெடுத்தொர் ...... பெருமாளே. 521 கயிலைமலை திருப்புகழ் தனதனனத் ...... தனதான தனதனனத் ...... தனதான புமியதனிற் ......ப்ரபுவான புகலியில்வித் ...... தகர்போல அமிர்தகவித் ...... தொடைபாட அடிமைதனக் ...... கருள்வாயே சமரிலெதிர்த் ...... தசுர்மாளத் தனியயில்விட் ...... டருள்வோனே நமசிவயப் ...... பொருளானே ரசதகிரிப் ...... பெருமாளே. 523 ஸ்ரீ சைலம் திருமலை திருப்புகழ் தனதன தனதன தனதன தனதன தனதன தனதன ...... தனதான முருகைய்யா முருகைய்யா முத்து குமரன் நீ ஐயா முருகைய்யா முருகைய்யா முத்து குமரன் நீ ஐயா ஒருபது மிருபது மறுபது முடனறு முணர்வுற இருபத ...... முளநாடி உருகிட முழுமதி தழலென வொளிதிகழ் வெளியொடு வொளிபெற ...... விரவாதே தெருவினில் மரமென எவரொடு முரைசெய்து திரிதொழி லவமது ...... புரியாதே திருமகள் மருவிய திரள்புய அறுமுக தெரிசனை பெறஅருள் ...... புரிவாயே பரிவுட னழகிய பழமொடு கடலைகள் பயறொடு சிலவகை ...... பணியாரம் பருகிடு பெருவயி றுடையவர் பழமொழி எழுதிய கணபதி ...... யிளையோனே பெருமலை யுருவிட அடியவ ருருகிட பிணிகெட அருள்தரு ...... குமரேசா பிடியொடு களிறுகள் நடையிட கலைதிரள் பிணையமர் திருமலை ...... பெருமாளே. 525 திருவேங்கடம் திருப்புகழ் தனதன தனதன தனதன தனதன தனதன தனதன தனதன தனதன தனதன தனதன தனதன தனதன ...... தனதான சரவண பவநிதி யறுமுக குருபர சரவண பவநிதி யறுமுக குருபர சரவண பவநிதி யறுமுக குருபர ...... எனவோதித் தமிழினி லுருகிய வடியவ ரிடமுறு சனனம ரணமதை யொழிவுற சிவமுற தருபிணி துளவர மெமதுயிர் சுகமுற ...... வருள்வாயே கருணைய விழிபொழி யொருதனி முதலென வருகரி திருமுகர் துணைகொளு மிளையவ கவிதைய முதமொழி தருபவ ருயிர்பெற ...... வருள்நேயா கடலுல கினில்வரு முயிர்படு மவதிகள் கலகமி னையதுள கழியவும் நிலைபெற கதியுமு னதுதிரு வடிநிழல் தருவது ...... மொருநாளே திரிபுர மெரிசெயு மிறையவ ரருளிய குமரச மரபுரி தணிகையு மிகுமுயர் சிவகிரி யிலும்வட மலையிலு முலவிய ...... வடிவேலா தினமுமு னதுதுதி பரவிய அடியவர் மனதுகு டியுமிரு பொருளிலு மிலகுவ திமிரம லமொழிய தினகர னெனவரு ...... பெருவாழ்வே அரவணை மிசைதுயில் நரகரி நெடியவர் மருகனெ னவெவரு மதிசய முடையவ அமலிவி மலிபரை உமையவ ளருளிய ...... முருகோனே அதலவி தலமுதல் கிடுகிடு கிடுவென வருமயி லினிதொளிர் ஷடுமையில் நடுவுற அழகினு டனமரு மரகர சிவசிவ ...... பெருமாளே. 530 வள்ளிமலை திருப்புகழ் தய்யதன தான தய்யதன தான தய்யதன தானத் ...... தனதான அல்லிவிழி யாலு முல்லைநகை யாலு மல்லல்பட ஆசைக் ...... கடலீயும் அள்ளவினி தாகி நள்ளிரவு போலு முள்ளவினை யாரத் ...... தனமாரும் இல்லுமிளை யோரு மெல்ல அயலாக வல்லெருமை மாயச் ...... சமனாரும் எள்ளியென தாவி கொள்ளைகொளு நாளில் உய்யவொரு நீபொற் ...... கழல்தாராய் தொல்லைமறை தேடி யில்லையெனு நாதர் சொல்லுமுப தேசக் ...... குருநாதா துள்ளிவிளை யாடு புள்ளியுழை நாண வெள்ளிவன மீதுற் ...... றுறைவோனே வல்லசுரர் மாள நல்லசுரர் வாழ வல்லைவடி வேலைத் ...... தொடுவோனே வள்ளிபடர் சாரல் வள்ளிமலை மேவு வள்ளிமண வாளப் ...... பெருமாளே. 544 திருக்கழுக்குன்றம் திருப்புகழ் தான தத்த தான தத்த தான தத்த ...... தனதான தான தத்த தான தத்த தான தத்த ...... தனதான வேத வெற்பி லேபு னத்தில் மேவி நிற்கு ...... மபிராம வேடு வச்சி பாத பத்ம மீது செச்சை ...... முடிதோய ஆத ரித்து வேளை புக்க ஆறி ரட்டி ...... புயநேய ஆத ரத்தோ டாத ரிக்க ஆன புத்தி ...... புகல்வாயே காது முக்ர வீர பத்ர காளி வெட்க ...... மகுடாமா காச முட்ட வீசி விட்ட காலர் பத்தி ...... யிமையோரை ஓது வித்த நாதர் கற்க வோது வித்த ...... முநிநாண ஓரெ ழுத்தி லாறெ ழுத்தை யோது வித்த ...... பெருமாளே. 557 சென்னிமலை திருப்புகழ் தனதனதனத் ...... தனதான தனதனதனத் ...... தனதான பகலிரவினிற் ...... றடுமாறா பதிகுருவெனத் ...... தெளிபோத ரகசியமுரைத் ...... தநுபூதி ரதநிலைதனைத் ...... தருவாயே இகபரமதற் ...... கிறையோனே இயலிசையின்முத் ...... தமிழோனே சகசிரகிரிப் ...... பதிவேளே சரவணபவப் ...... பெருமாளே. 561 திருசிராப்பள்ளி திருப்புகழ் ( குருஜி # 176 - வாரியார் # 342 ) தானத்தத் தான தானன தானத்தத் தான தானன தானத்தத் தான தானன ...... தந்ததான வாசித்துக் காணொ ணாதது பூசித்துக் கூடொ ணாதது வாய்விட்டுப் பேசொ ணாதது ...... நெஞ்சினாலே மாசர்க்குத் தோணொ ணாதது நேசர்க்குப் பேரொ ணாதது மாயைக்குச் சூழொ ணாதது ...... விந்துநாத ஓசைக்குத் தூர மானது மாகத்துக் கீற தானது லோகத்துக் காதி யானது ...... கண்டுநாயேன் யோகத்தைச் சேரு மாறுமெய்ஞ் ஞானத்தைப் போதி யாயினி யூனத்தைப் போடி டாதும ...... யங்கலாமோ ஆசைப்பட் டேனல் காவல்செய் வேடிச்சிக் காக மாமய லாகிப்பொற் பாத மேபணி ...... கந்தவேளே ஆலித்துச் சேல்கள் பாய்வய லூரத்திற் காள மோடட ராரத்தைப் பூண்ம யூரது ...... ரங்கவீரா நாசிக்குட் ப்ராண வாயுவை ரேசித்தெட் டாத யோகிகள் நாடிற்றுக் காணொ ணாதென ...... நின்றநாதா நாகத்துச் சாகை போயுயர் மேகத்தைச் சேர்சி ராமலை நாதர்க்குச் சாமி யேசுரர் ...... தம்பிரானே. வாசித்துக் காணொ ணாதது பூசித்துக் கூடொ ணாதது வாய்விட்டுப் பேசொ ணாதது நெஞ்சினாலே மாசர்க்குத் தோணொ ணாதது நேசர்க்குப் பேரொ ணாதது மாயைக்குச் சூழொ ணாதது விந்துநாத ஓசைக்குத் தூர மானது மாகத்துக் கீற தானது லோகத்துக் காதி யானது கண்டுநாயேன் யோகத்தைச் சேரு மாறு மெய்ஞ் ஞானத்தைப் போதி யாய் இனி யூனத்தைப் போடி டாது மயங்கலாமோ ஆசைப்பட்டு ஏனல் காவல்செய் வேடிச்சிக் காக மாமயலாகி பொற் பாத மேபணி கந்தவேளே ஆலித்துச் சேல்கள் பாய் வய லூரத்தில் காள மோடு அடர் ஆரத்தைப் பூண் ம யூர துரங்கவீரா நாசிக்குட் ப்ராண வாயுவை ரேசித்தெட் டாத யோகிகள் 567 இரத்னகிரி திருப்புகழ் ( குருஜி # 148 - வாரியார் # 348 ) தத்தனா தானனத் ...... தனதான தத்தனா தானனத் ...... தனதான வேல் முருகா வேல் முருகா வேல் முருகா வேல் வேல் முருகா வேல் முருகா வேல் முருகா வேல் பத்தியால் யானுனைப் ...... பலகாலும் பற்றியே மாதிருப் ...... புகழ்பாடி முத்தனா மாறெனைப் ...... பெருவாழ்வின் முத்தியே சேர்வதற் ...... கருள்வாயே உத்தமா தானசற் ...... குணர்நேயா ஒப்பிலா மாமணிக் ...... கிரிவாசா வித்தகா ஞானசத் ...... திநிபாதா வெற்றிவே லாயுதப் ...... பெருமாளே. பத்தியால் யானுனை பலகாலும் பற்றியே மாதிருப்புகழ் பாடி முத்தனாம் ஆறெனை பெருவாழ்வின் முத்தியே சேர்வதற்கு அருள்வாயே உத்தம அதான சற் குணர்நேயா ஒப்பிலா மா மணிக்கிரிவாசா வித்தகா ஞானசத்தி நிபாதா வெற்றிவே லாயுதப் பெருமாளே. 568 விராலிமலை திருப்புகழ் ( - வாரியார் # 349 ) தானான தான தான தனதன தானான தான தான தனதன தானான தான தான தனதன ...... தனதான சீரான கோல கால நவமணி மாலாபி ஷேக பார வெகுவித தேவாதி தேவர் சேவை செயுமுக ...... மலராறும் சீராடு வீர மாது மருவிய ஈராறு தோளு நீளும் வரியளி சீராக மோது நீப பரிமள ...... இருதாளும் ஆராத காதல் வேடர் மடமகள் ஜீமூத மூர்வ லாரி மடமகள் ஆதார பூத மாக வலமிட ...... முறைவாழ்வும் ஆராயு நீதி வேலு மயிலுமெய்ஞ் ஞானாபி ராம தாப வடிவமும் ஆபாத னேனு நாளு நினைவது ...... பெறவேணும் ஏராரு மாட கூட மதுரையில் மீதேறி மாறி யாடு மிறையவர் ஏழேழு பேர்கள் கூற வருபொரு ...... ளதிகாரம் ஈடாய வூமர் போல வணிகரி லூடாடி யால வாயில் விதிசெய்த லீலாவி சார தீர வரதர ...... குருநாதா கூராழி யால்முன் வீய நினைபவ னீடேறு மாறு பாநு மறைவுசெய் கோபால ராய னேய முளதிரு ...... மருகோனே கோடாம லார வார அலையெறி காவேரி யாறு பாயும் வயலியில் கோனாடு சூழ்வி ராலி மலையுறை ...... பெருமாளே. சீரான கோலகால நவ மணி மால் அபிஷேக பார வெகு வித தேவாதி தேவர் சேவை செயு முக மலர் ஆறும் சீராடு வீர மாது மருவிய ஈராறு தோளும் நீளும் வரி அளி சீராகம் ஓதும் நீப பரிமள இரு தாளும் ஆராத காதல் வேடர் மட மகள் ஜீமூதம் ஊர் வலாரி மட மகள் ஆதார பூதமாக வலம் இடம் உறை வாழ்வும் ஆராயும் நீதி வேலும் மயிலும் மெய்ஞ் ஞான அபிராம தாப வடிவமும் ஆபாதனேனும் நாளும் நினைவது பெற வேணும் ஏர் ஆரும் மாட கூட மதுரையில் மீது ஏறி மாறி ஆடும் இறையவர் ஏழேழு பேர்கள் கூற வரு பொருள் அதிகாரம் ஈடாய ஊமர் போல வணிகரில் ஊடாடி ஆலவாயில் விதி செய்த லீலா விசார தீர வரதர குருநாதா முன் வீய நினைபவன் ஈடேறுமாறு கூர் ஆழியால் பாநு மறைவு செய் கோபாலராய நேயம் உள திரு மருகோனே கோடாமல் ஆரவார அலை எறி காவேரி ஆறு பாயும் வயலியில் கோனாடு சூழ் விராலி மலை உறை பெருமாளே. Back to Top 571 விராலிமலை திருப்புகழ் ( குருஜி # 201 - வாரியார் # 352 ) தனாதன தனாதன தனாதன தனாதன தனாதன தனாதனத் ...... தனதான நிராமய புராதன பராபர வராம்ருத நிராகுல சிராதிகப் ...... ப்ரபையாகி நிராசசி வராஜத வராஜர்கள் பராவிய நிராயுத புராரியச் ...... சுதன்வேதா சுராலய தராதல சராசர பிராணிகள் சொரூபமி வராதியைக் ...... குறியாமே துரால்புகழ் பராதின கராவுள பராமுக துரோகரை தராசையுற் ...... றடைவேனோ இராகவ இராமன்முன் இராவண இராவண இராவண இராஜனுட் ...... குடன்மாய்வென் றிராகன்ம லராணிஜ புராணர்கு மராகலை யிராஜசொ லவாரணர்க் ...... கிளையோனே விராகவ சுராதிப பொராதுத விராதடு விராயண பராயணச் ...... செருவூரா விராவிய குராவகில் பராரைமு திராவளர் விராலிம லைராஜதப் ...... பெருமாளே. நிராமய புராதன பராபர வராம்ருத நிராகுல சிராதிகப் ப்ரபையாகி நிராச சிவராஜ தவராஜர்கள் பராவிய நிராயுத புர அரி அச்சுதன்வேதா சுராலய தராதல சர அசர பிராணிகள் சொரூபமிவர் ஆதியைக் குறியாமே துரால்புகழ் பர ஆதின கராவுள பராமுக துரோகரை தராசையுற்று அடைவேனோ இராகவ இராமன் முன் இராவண இராவண இராவண இராஜன் உட்குடன்மாய் வென்ற இராகன்மலர் ஆள் நிஜ புராணர் குமரா கலை இராஜ சொலவாரணர்க்கு இளையோனே விராகவ சுராதிப பொராது தவிராது அடு விராயண பராயண செருவூரா விராவிய குராவகில் பராரை முதிராவளர் விராலிமலை ராஜதப் பெருமாளே. 585 திருச்செங்கோடு திருப்புகழ் ( குருஜி # 177 - வாரியார் # 375 ) தந்தான தந்த தந்தான தந்த தந்தான தந்த ...... தனதான செங்கோட மர்ந்த ...... பெருமாளே மங்காம லுன்ற ...... னருள்தாராய் அன்பாக வந்து உன்றாள் பணிந்து ஐம்பூத மொன்ற ...... நினையாமல் அன்பால் மிகுந்து நஞ்சாரு கண்க ளம்போரு கங்கள் ...... முலைதானும் கொந்தே மிகுந்து வண்டாடி நின்று கொண்டாடு கின்ற ...... குழலாரைக் கொண்டே நினைந்து மன்பேது மண்டி குன்றா மலைந்து ...... அலைவேனோ மன்றாடி தந்த மைந்தா மிகுந்த வம்பார் கடம்பை ...... யணிவோனே வந்தே பணிந்து நின்றார் பவங்கள் வம்பே தொலைந்த ...... வடிவேலா சென்றே யிடங்கள் கந்தா எனும்பொ செஞ்சேவல் கொண்டு ...... வரவேணும் செஞ்சாலி கஞ்ச மொன்றாய் வளர்ந்த செங்கோ டமர்ந்த ...... பெருமாளே. அன்பாக வந்து உன்தாள் பணிந்து ஐம்பூதம் ஒன்ற நினையாமல் அன்பால் மிகுந்து நஞ்சாரு கண்கள் அம்போருகங்கள் முலைதானும் கொந்தே மிகுந்து வண்டாடி நின்று கொண்டாடுகின்ற குழலாரைக் கொண்டே நினைந்து மன்பேது மண்டி குன்றா மலைந்து அலைவேனோ மன்றாடி தந்த மைந்தா மிகுந்த வம்பார் கடம்பை அணிவோனே வந்தே பணிந்து நின்றார் பவங்கள் வம்பே தொலைந்த வடிவேலா சென்றே யிடங்கள் கந்தா எனும்பொ செஞ்சேவல் கொண்டு வரவேணும் செஞ்சாலி கஞ்சம் ஒன்றாய் வளர்ந்த செங்கோடு அமர்ந்த பெருமாளே. 586 திருச்செங்கோடு திருப்புகழ் ( - வாரியார் # 376 ) தந்தான தந்த தந்தான தந்த தந்தான தந்த ...... தனதான செங்கோட மர்ந்த ...... பெருமாளே மங்காம லுன்ற ...... னருள்தாராய் பந்தாடி யங்கை நொந்தார் பரிந்து பைந்தார் புனைந்த ...... குழல்மீதே பண்பார் சுரும்பு பண்பாடு கின்ற பங்கே ருகங்கொள் ...... முகமீதே மந்தார மன்றல் சந்தார மொன்றி வன்பாத கஞ்செய் ...... தனமீதே மண்டாசை கொண்டு விண்டாவி நைந்து மங்காம லுன்ற ...... னருள்தாராய் கந்தா அரன்றன் மைந்தா விளங்கு கன்றா முகுந்தன் ...... மருகோனே கன்றா விலங்க லொன்றாறு கண்ட கண்டா வரம்பை ...... மணவாளா செந்தா தடர்ந்த கொந்தார் கடம்பு திண்டோள் நிரம்ப ...... அணிவோனே திண்கோ டரங்க ளெண்கோ டுறங்கு செங்கோட மர்ந்த ...... பெருமாளே. பந்து ஆடி அம் கை நொந்தார் பரிந்து பைம் தார் புனைந்த குழல் மீதே பண்பு ஆர் சுரும்பு பண் பாடுகின்ற பங்கேருகம் கொள் முகம் மீதே மந்தார மன்றல் சந்து ஆரம் ஒன்றி வன் பாதகம் செய் தனம் மீதே மண்டு ஆசை கொண்டு விண்டு ஆவி நைந்து மங்காமல் உன் தன் அருள் தாராய் கந்தா அரன் தன் மைந்தா விளங்கு கன்று ஆ முகுந்தன் மருகோனே கன்றா விலங்கல் ஒன்று ஆறு கண்ட கண்டா அரம்பை மணவாளா செம் தாது அடர்ந்த கொந்து ஆர் கடம்பு திண் தோள் நிரம்ப அணிவோனே திண் கோடரங்கள் எண்கோடு உறங்கு செங்கோடு அமர்ந்த பெருமாளே. Back to Top 598 திருச்செங்கோடு திருப்புகழ் ( குருஜி # 178 - வாரியார் # 388 ) தான தனத் ...... தனதான காலனிடத் ...... தணுகாதே காசினியிற் ...... பிறவாதே சீலஅகத் ...... தியஞான தேனமுதைத் ...... தருவாயே மாலயனுக் ...... கரியானே மாதவரைப் ...... பிரியானே நாலுமறைப் ...... பொருளானே நாககிரிப் ...... பெருமாளே. காலனிடத்து அணுகாதே காசினியிற் பிறவாதே சீலஅகத்திய ஞான தேனமுதைத் தருவாயே மாலயனுக்கு அரியானே மாதவரைப் பிரியானே நாலுமறைப் பொருளானே நாககிரிப் பெருமாளே. 599 திருச்செங்கோடு திருப்புகழ் ( - வாரியார் # 389 ) தானா தானா தானா தானா தானா தானத் ...... தனதான சீரா ரூரிற் ...... பெருவாழ்வே தேவே தேவப் ...... பெருமாளே. தாமா தாமா லாபா லோகா தாரா தாரத் ...... தரணீசா தானா சாரோ பாவா பாவோ நாசா பாசத் ...... தபராத யாமா யாமா தேசா ரூடா யாரா யாபத் ...... தெனதாவி யாமா காவாய் தீயே னீர்வா யாதே யீமத் ...... துகலாமோ காமா காமா தீனா நீணா காவாய் காளக் ...... கிரியாய்கங் காளா லீலா பாலா நீபா காமா மோதக் ...... கனமானின் தேமார் தேமா காமீ பாகீ தேசா தேசத் ...... தவரோதுஞ் சேயே வேளே பூவே கோவே தேவே தேவப் ...... பெருமாளே. தாமா தாம ஆலாபா லோக ஆதாரா தார(ம்) தரணி ஈசா தான ஆசாரோ பாவா பாவோ நாசா பாசத்து அபராத யாமா யாமா தேசார் ஊடு ஆராயா ஆபத்து எனது ஆவி ஆமா காவாய் தீயேன் நீர் வாயாதே ஈமத்து உகலாமோ காமா காம ஆதீனா நீள் நாகா வாய் காள கிரியாய் கங்காளா லீலா பாலா நீபா காம ஆமோதக் கன மானின் தேம் ஆர் தே மா காமீ பாகீ தேசா தேசத்தவர் ஓதும் சேயே வேளே பூவே கோவே தேவே தேவப் பெருமாளே. Back to Top 602 திருச்செங்கோடு திருப்புகழ் ( குருஜி # 180 - வாரியார் # 392 ) தத்தன தத்தன தத்தன தத்தன தத்தன தத்தன ...... தனதான நந்தவனத்தில் ஓர் ஆண்டி பத்தர்க ணப்ரிய நிர்த்தந டித்திடு பட்சிந டத்திய ...... குகபூர்வ பச்சிம தட்சிண வுத்தர திக்குள பத்தர்க ளற்புத ...... மெனவோதுஞ் சித்ரக வித்துவ சத்தமி குத்ததி ருப்புக ழைச்சிறி ...... தடியேனுஞ் செப்பென வைத்துல கிற்பர வத்தெரி சித்தவ நுக்ரக ...... மறவேனே கத்திய தத்தைக ளைத்துவி ழத்திரி கற்கவ ணிட்டெறி ...... தினைகாவல் கற்றகு றத்திநி றத்தக ழுத்தடி கட்டிய ணைத்தப ...... னிருதோளா சத்தியை யொக்கஇ டத்தினில் வைத்தத கப்பனு மெச்சிட ...... மறைநூலின் தத்துவ தற்பர முற்றுமு ணர்த்திய சர்ப்பகி ரிச்சுரர் ...... பெருமாளே. பத்தர் கணப்ரிய நிர்த்த நடித்திடு பட்சி நடத்திய குக பூர்வ பச்சிம தட்சிண உத்தர திக்குள பத்தர்கள் அற்புதம் எனவோதும் சித்ர கவித்துவ சத்தமிகுத்த திருப்புகழைச் சிறிதடியேனும் செப்பென வைத்து உலகிற்பரவ தெரிசித்த அநுக்ரகம் மறவேனே கத்திய தத்தை களைத்துவிழ திரி கற்கவணிட்டெறி தினைகாவல் கற்ற குறத்தி நிறத்த கழுத்தடி கட்டியணைத்த பனிருதோளா சத்தியை யொக்க இடத்தினில் வைத்த தகப்பனு மெச்சிட மறைநூலின் தத்துவ தற்பர முற்றும் உணர்த்திய சர்ப்பகிரிச்சுரர் பெருமாளே. Back to Top 610 ஞானமலை திருப்புகழ் ( குருஜி # 167 - வாரியார் # 400 ) தனதன தனத்த தான தனதன தனத்த தான தனதன தனத்த தான ...... தனதான மனையவள் நகைக்க வூரி னனைவரு நகைக்க லோக மகளிரு நகைக்க தாதை ...... தமரோடும் மனமது சலிப்ப நாய னுளமது சலிப்ப யாரும் வசைமொழி பிதற்றி நாளு ...... மடியேனை அனைவரு மிழிப்ப நாடு மனவிருள் மிகுத்து நாடி னகமதை யெடுத்த சேம ...... மிதுவோவென் றடியனு நினைத்து நாளு முடலுயிர் விடுத்த போது மணுகிமு னளித்த பாத ...... மருள்வாயே தனதன தனத்த தான எனமுர சொலிப்ப வீணை தமருக மறைக்கு ழாமு ...... மலைமோதத் தடிநிக ரயிற்க டாவி யசுரர்க ளிறக்கு மாறு சமரிடை விடுத்த சோதி ...... முருகோனே எனைமன முருக்கி யோக அநுபுதி யளித்த பாத எழுதரிய பச்சை மேனி ...... யுமைபாலா இமையவர் துதிப்ப ஞான மலையுறை குறத்தி பாக இலகிய சசிப்பெண் மேவு ...... பெருமாளே. மனையவள் நகைக்க வூரின் அனைவரு நகைக்க லோக மகளிரு நகைக்க தாதை தமரோடும் மனமது சலிப்ப நாயன் உளமது சலிப்ப யாரும் வசைமொழி பிதற்றி நாளும் அடியேனை அனைவரும் இழிப்ப நாடு மனவிருள் மிகுத்து நாடின் அகமதை யெடுத்த சேமம் இதுவோவென்று அடியனு நினைத்து நாளும் உடலுயிர் விடுத்த போதும் அணுகிமுன் அளித்த பாதம் அருள்வாயே தனதன தனத்த தான என முரசொலிப்ப வீணை தமருக மறைக்குழாமும் அலைமோத தடிநிகர் அயிற்கடாவி அசுரர்கள் இறக்குமாறு சமரிடை விடுத்த சோதி முருகோனே எனைமனம் உருக்கி யோக அநுபுதி யளித்த பாத எழுதரிய பச்சை மேனி உமைபாலா இமையவர் துதிப்ப ஞான மலையுறை குறத்தி பாக இலகிய சசிப்பெண் மேவு பெருமாளே. Back to Top 616 கொங்கணகிரி திருப்புகழ் ( குருஜி # 165 - வாரியார் # 406 ) தந்ததன தத்ததன தந்ததன தத்ததன தந்ததன தத்ததன ...... தனதான ஐங்கரனை யொத்தமன மைம்புலம கற்றிவள ரந்திபக லற்றநினை ...... வருள்வாயே அம்புவித னக்குள்வளர் செந்தமிழ்வ ழுத்தியுனை அன்பொடுது திக்கமன ...... மருள்வாயே தங்கியத வத்துணர்வு தந்தடிமை முத்திபெற சந்திரவெ ளிக்குவழி ...... யருள்வாயே தண்டிகைக னப்பவுசு எண்டிசைம திக்கவளர் சம்ப்ரமவி தத்துடனெ ...... யருள்வாயே மங்கையர்சு கத்தைவெகு இங்கிதமெ னுற்றமன முன்றனைநி னைத்தமைய ...... அருள்வாயே மண்டலிக ரப்பகலும் வந்தசுப ரட்சைபுரி வந்தணைய புத்தியினை ...... யருள்வாயே கொங்கிலுயிர் பெற்றுவளர் தென்கரையி லப்பரருள் கொண்டுஉட லுற்றபொரு ...... ளருள்வாயே குஞ்சரமு கற்கிளைய கந்தனென வெற்றிபெறு கொங்கணகி ரிக்குள்வளர் ...... பெருமாளே. ஐங்கரனை ஒத்த மனம் ஐம்புலம் அகற்றி வளர் அந்தி பகல் அற்ற நினைவு அருள்வாயே அம்புவி தனக்குள் வளர் செந்தமிழ் வழுத்தியுனை அன்பொடு துதிக்க மனம் அருள்வாயே தங்கிய தவத் துணர்வு தந்து அடிமை முத்தி பெற சந்திர வெளிக்கு வழி அருள்வாயே தண்டிகை ககனப்பவுசு எண்டிசை மதிக்க வளர் சம்ப்ரம விதத்துடனே அருள்வாயே மங்கையர் சுகத்தை வெகு இங்கிதமெனுற்றமனம் உன்றனை நினைத் தமைய அருள்வாயே மண்டலிக ரப்பகலும் வந்தசுப ரட்சைபுரி வந்தணைய புத்தியினை அருள்வாயே கொங்கிலுயிர் பெற்றுவளர் தென்கரையில் அப்பரருள் கொண்டு உடலுற்ற பொருள் அருள்வாயே குஞ்சர முகற்கிளைய கந்தனென வெற்றி பெறு கொங்கண கிரிக்குள் வளர் பெருமாளே. 635 வள்ளியூர் திருப்புகழ் ( குருஜி # 193 - வாரியார் # 416 ) தய்ய தானன ...... தனதான அல்லில் நேருமி ...... னதுதானும் அல்ல தாகிய ...... உடல்மாயை கல்லி னேரஅ ...... வழிதோறுங் கையு நானுமு ...... லையலாமோ சொல்லி நேர்படு ...... முதுசூரர் தொய்ய வூர்கெட ...... விடும்வேலா வல்லி மாரிரு ...... புறமாக வள்ளி யூருறை ...... பெருமாளே. அல்லில் நேரும் மின்னதுதானும் அல்லதாகிய உடல் மாயை கல்லி னேரஅவ்வழிதோறும் கையும் நானும் உலையலாமோ சொல்லி நேர்படு முதுசூரர் தொய்ய வூர்கெட விடும்வேலா வல்லிமார் இருபுறமாக வள்ளியூர் உறை பெருமாளே. Back to Top 636 கதிர்காமம் திருப்புகழ் ( குருஜி # 155 - வாரியார் # 417 ) தனதனன தான தனதனன தான தனதனன தானத் ...... தனதான திருமகளு லாவு மிருபுயமு ராரி திருமருக நாமப் ...... பெருமாள்காண் செகதலமும் வானு மிகுதிபெறு பாடல் தெரிதருகு மாரப் ...... பெருமாள்காண் மருவுமடி யார்கள் மனதில்விளை யாடு மரகதம யூரப் ...... பெருமாள்காண் மணிதரளம் வீசி யணியருவி சூழ மருவுகதிர் காமப் ...... பெருமாள்காண் அருவரைகள் நீறு படஅசுரர் மாள அமர்பொருத வீரப் ...... பெருமாள்காண் அரவுபிறை வாரி விரவுசடை வேணி அமலர்குரு நாதப் ...... பெருமாள்காண் இருவினையி லாத தருவினைவி டாத இமையவர்கு லேசப் ...... பெருமாள்காண் இலகுசிலை வேடர் கொடியினதி பார இருதனவி நோதப் ...... பெருமாளே. திருமகள் உலாவும் இருபுய முராரி திருமருக நாமப் பெருமாள்காண் செகதலமும் வானும் மிகுதிபெறு பாடல் தெரிதரு குமாரப் பெருமாள்காண் மருவும் அடியார்கள் மனதில்விளையாடு மரகதமயூரப் பெருமாள்காண் மணிதரளம் வீசி யணியருவி சூழ மருவு கதிர்காமப் பெருமாள்காண் அருவரைகள் நீறு படஅசுரர் மாள அமர்பொருத வீரப் பெருமாள்காண் அரவுபிறை வாரி விரவுசடை வேணி அமலர்குரு நாதப் பெருமாள்காண் இருவினையிலாத தருவினைவி டாத இமையவர் குலேசப் பெருமாள்காண் இலகுசிலை வேடர் கொடியின் அதிபார இருதனவிநோதப் பெருமாளே. 638 கதிர்காமம் திருப்புகழ் ( குருஜி # 150 - வாரியார் # 419 ) தனத்தத் தனதான தானன தனத்தத் தனதான தானன தனத்தத் தனதான தானன ...... தனதான உடுக்கத் துகில்வேணு நீள்பசி யவிக்கக் கனபானம் வேணுநல் ஒளிக்குப் புனலாடை வேணுமெய் ...... யுறுநோயை ஒழிக்கப் பரிகாரம் வேணுமுள் இருக்கச் சிறுநாரி வேணுமொர் படுக்கத் தனிவீடு வேணுமிவ் ...... வகையாவுங் கிடைத்துக் க்ருஹவாசி யாகிய மயக்கக் கடலாடி நீடிய கிளைக்குப் பரிபால னாயுயி ...... ரவமேபோம் க்ருபைச்சித் தமுஞான போதமு மழைத்துத் தரவேணு மூழ்பவ கிரிக்குட் சுழல்வேனை யாளுவ ...... தொருநாளே குடக்குச் சிலதூதர் தேடுக வடக்குச் சிலதூதர் நாடுக குணக்குச் சிலதூதர் தேடுக ...... வெனமேவிக் குறிப்பிற் குறிகாணு மாருதி யினித்தெற் கொருதூது போவது குறிப்பிற் குறிபோன போதிலும் ...... வரலாமோ அடிக்குத் திரகார ராகிய அரக்கர்க் கிளையாத தீரனு மலைக்கப் புறமேவி மாதுறு ...... வனமேசென் றருட்பொற் றிருவாழி மோதிர மளித்துற் றவர்மேல் மனோகர மளித்துக் கதிர்காம மேவிய ...... பெருமாளே. உடுக்கத் துகில் வேணும் நீள்பசியவிக்கக் கனபானம் வேணும் நல்ஒளிக்குப் புனலாடை வேணும் மெய்யுறு நோயை ஒழிக்கப் பரிகாரம் வேணும் உள்இருக்கச் சிறுநாரி வேணும் படுக்க யொர் தனிவீடு வேணும் இவ் வகையாவுங் கிடைத்து க்ருஹவாசியாகி அம்மயக்க கடல் ஆடி நீடிய கிளைக்குப் பரிபாலனாய் உயிர் அவமேபோம் க்ருபைச்சித்தமு ஞான போதமும் அழைத்துத் தரவேணும் ஊழ்பவ கிரிக்குட் சுழல்வேனை ஆளுவது ஒருநாளே குடக்குச் சிலதூதர் தேடுக வடக்குச் சிலதூதர் நாடுக குணக்குச் சிலதூதர் தேடுகவென மேவி குறிப்பிற் குறிகாணு மாருதி இனித் தெற்கொரு தூது போவது குறிப்பிற் குறிபோன போதிலும் வரலாமோ அடிக் குத்திரகாரராகிய அரக்கர்க்கு இளையாத தீரனும் அலைக்கு அப்புறமேவி மாதுறு வனமேசென்று அருட்பொற் றிருவாழி மோதிரமளித்து உற்றவர்மேல் மனோகரம் அளித்து கதிர்காம மேவிய பெருமாளே. Back to Top 656 வெள்ளிகரம் திருப்புகழ் ( குருஜி # 312 - வாரியார் # 666 ) தனதன தனன தனதன தனன தய்ய தனத்த தந்த ...... தனதானா அடலரி மகவு விதிவழி யொழுகு மைவ ருமொய்க்கு ரம்பை ...... யுடனாளும் அலைகட லுலகி லலம்வரு கலக வைவர் தமக்கு டைந்து ...... தடுமாறி இடர்படு மடிமை யுளமுரை யுடலொ டெல்லை விடப்ர பஞ்ச ...... மயல்தீர எனதற நினது கழல்பெற மவுன வெல்லை குறிப்ப தொன்று ...... புகல்வாயே வடமணி முலையு மழகிய முகமும் வள்ளை யெனத்த யங்கு ...... மிருகாதும் மரகத வடிவு மடலிடை யெழுதி வள்ளி புனத்தில் நின்ற ...... மயில்வீரா விடதர திகுணர் சசிதரர் நிமலர் வெள்ளி மலைச்ச யம்பு ...... குருநாதா விகசித கமல பரிபுர முளரி வெள்ளி கரத்த மர்ந்த ...... பெருமாளே. அடல் அரி மகவு விதி வழி ஒழுகு(ம்) ஐவரும் மொய் குரம்பையுடன் நாளும் அலைகடல் உலகில் அலம் வரு கலக ஐவர் தமக்கு உடைந்து தடுமாறி இடர் படும் அடிமை உளம் உரை உடலொடு எல்லை விட ப்ரபஞ்ச மயல் தீர எனது அற நினது கழல் பெற மவுன எல்லை குறிப்பது ஒன்று புகல்வாயே வட மணி முலையும் அழகிய முகமும் வள்ளை என தயங்கும் இரு காதும் மரகத வடிவும் மடல் இடை எழுதி வள்ளி புனத்தில் நின்ற மயில் வீரா விடதர் அதி குணர் சசிதரர் நிமலர் வெள்ளி மலை சயம்பு குருநாதா விகசிதம் கமல பரிபுர முளரி வெள்ளி கரத்து அமர்ந்த பெருமாளே. 664 வெள்ளிகரம் திருப்புகழ் ( குருஜி # 315 - வாரியார் # 671 ) தனன தனாதன தனன தனாதன தய்ய தனத்த தந்த தானாதன தானந் தானன ...... தந்ததான வதன சரோருக நயன சிலீமுக வள்ளி புனத்தில் நின்று வாராய்பதி காதங் காதரை ...... யொன்றுமூரும் வயலு மொரேவிடை யெனவொரு காவிடை வல்லப மற்றழிந்து மாலாய்மட லேறுங் காமுக ...... எம்பிரானே இதவிய காணிவை ததையென வேடுவ னெய்திடு மெச்சில் தின்று லீலாசல மாடுந் தூயவன் ...... மைந்தநாளும் இளையவ மூதுரை மலைகிழ வோனென வெள்ள மெனக் கலந்து நூறாயிர பேதஞ் சாதமொ ...... ழிந்தவாதான் கதைகன சாபதி கிரிவளை வாளொடு கைவசி வித்தநந்த கோபாலம கீபன் தேவிம ...... கிழ்ந்துவாழக் கயிறொ டுலூகல முருள வுலாவிய கள்வ னறப் பயந்து ஆகாயக பாலம் பீறநி ...... மிர்ந்துநீள விதரண மாவலி வெருவ மகாவ்ருத வெள்ள வெளுக்க நின்ற நாராயண மாமன் சேயைமு ...... னிந்தகோவே விளைவய லூடிடை வளைவிளை யாடிய வெள்ளிநகர்க் கமர்ந்த வேலாயுத மேவுந் தேவர்கள் ...... தம்பிரானே. வதன சரோருக நயன சிலீமுக வள்ளி புனத்தில் நின்று வாராய்பதி காதங் காதரை ஒன்றுமூரும் வயலும் ஒரே இடை எனவொரு காவிடை வல்லபம் அற்றழிந்து மாலாய் மடல் ஏறுங் காமுக எம்பிரானே இதவிய காண் இவை ததையென வேடுவன் எய்திடும் எச்சில் தின்று லீலாசலம் ஆடுந் தூயவன் மைந்த நாளும் இளையவ மூதுரை மலைகிழவோனென வெள்ள மெனக் கலந்து நூறாயிர பேதஞ் சாதம் ஒழிந்தவாதான் கதை கன சாப திகிரி வளை வாளொடு கை வசிவித்த நந்த கோபால மகீபன் தேவி மகிழ்ந்துவாழ கயிறொடு உலூகலம் உருள உலாவிய கள்வன் அறப் பயந்து ஆகாய கபாலம் பீற நிமிர்ந்துநீள விதரண மாவலி வெருவ மகாவ்ருத வெள்ள வெளுக்க நின்ற நாராயண மாமன் சேயை முனிந்தகோவே விளைவயலூடிடை வளைவிளையாடிய வெள்ளிநகர்க் கமர்ந்த வேலாயுத மேவுந் தேவர்கள் தம்பிரானே. Back to Top 675 திருவாலங்காடு திருப்புகழ் ( - வாரியார் # 685 ) தனதன தானந் தாத்த தனதன தானந் தாத்த தனதன தானந் தாத்த ...... தனதான புவிபுனல் காலுங் காட்டி சிகியொடு வானுஞ் சேர்த்தி புதுமன மானும் பூட்டி ...... யிடையூடே பொறிபுல னீரைந் தாக்கி கருவிகள் நாலுங் காட்டி புகல்வழி நாலைந் தாக்கி ...... வருகாயம் பவவினை நூறுங் காட்டி சுவமதி தானுஞ் சூட்டி பசுபதி பாசங் காட்டி ...... புலமாயப் படிமிசை போவென் றோட்டி அடிமையை நீவந் தேத்தி பரகதி தானுங் காட்டி ...... யருள்வாயே சிவமய ஞானங் கேட்க தவமுநி வோரும் பார்க்க திருநட மாடுங் கூத்தர் ...... முருகோனே திருவளர் மார்பன் போற்ற திசைமுக னாளும் போற்ற ஜெகமொடு வானங் காக்க ...... மயிலேறிக் குவடொடு சூரன் தோற்க எழுகடல் சூதந் தாக்கி குதர்வடி வேலங் கோட்டு ...... குமரேசா குவலயம் யாவும் போற்ற பழனையி லாலங் காட்டில் குறமகள் பாதம் போற்று ...... பெருமாளே. புவிபுனல் காலுங் காட்டி சிகியொடு வானுஞ் சேர்த்தி புதுமன மானும் பூட்டி இடையூடே பொறிபுலன் ஈரைந்தாக்கி கருவிகள் நாலுங் காட்டி புகல்வழி நாலைந் தாக்கி வருகாயம் பவவினை நூறுங் காட்டி சுவமதி தானுஞ் சூட்டி பசுபதி பாசங் காட்டி புலமாயப் படிமிசை போவென்று ஓட்டி அடிமையை நீவந்து ஏத்தி பரகதி தானுங் காட்டி யருள்வாயே சிவமய ஞானங் கேட்க தவமுநிவோரும் பார்க்க திருநட மாடுங் கூத்தர் முருகோனே திருவளர் மார்பன் போற்ற திசைமுகன் நாளும் போற்ற ஜெகமொடு வானங் காக்க மயிலேறி குவடொடு சூரன் தோற்க எழுகடல் சூதந் தாக்கி குதர்வடி வேல் அங்கு ஓட்டு குமரேசா குவலயம் யாவும் போற்ற பழனையில் ஆலங் காட்டில் குறமகள் பாதம் போற்று பெருமாளே. Back to Top 676 திருவாலங்காடு திருப்புகழ் ( - வாரியார் # 686 ) தனதன தானந் தாத்த தனதன தானந் தாத்த தனதன தானந் தாத்த ...... தனதான வடிவது நீலங் காட்டி முடிவுள காலன் கூட்டி வரவிடு தூதன் கோட்டி ...... விடுபாசம் மகனொடு மாமன் பாட்டி முதலுற வோருங் கேட்டு மதிகெட மாயந் தீட்டி ...... யுயிர்போமுன் படிமிசை தாளுங் காட்டி யுடலுறு நோய்பண் டேற்ற பழவினை பாவந் தீர்த்து ...... னடியேனைப் பரிவொடு நாளுங் காத்து விரிதமி ழாலங் கூர்த்த பரபுகழ் பாடென் றாட்கொ ...... டருள்வாயே முடிமிசை சோமன் சூட்டி வடிவுள ஆலங் காட்டில் முதிர்நட மாடுங் கூத்தர் ...... புதல்வோனே முருகவிழ் தாருஞ் சூட்டி யொருதனி வேழங் கூட்டி முதல்மற மானின் சேர்க்கை ...... மயல்கூர்வாய் இடியென வேகங் காட்டி நெடிதரு சூலந் தீட்டி யெதிர்பொரு சூரன் தாக்க ...... வரஏகி இலகிய வேல்கொண் டார்த்து உடலிரு கூறன் றாக்கி யிமையவ ரேதந் தீர்த்த ...... பெருமாளே. வடிவது நீலம் காட்டி முடிவுள காலன் கூட்டிவர விடு தூதன் கோட்டி விடு பாசம் மகனொடு மாமன் பாட்டி முதல் உறவோரும் கேட்டு மதி கெட மாயம் தீட்டி உயிர் போ முன் படி மிசை தாளும் காட்டி உடல் உறு நோய் பண்டு ஏற்ற பழ வினை பாவம் தீர்த்து அடியேனை பரிவோடு நாளும் காத்து விரி தமிழால் அம் கூர்த்த பர புகழ் பாடு என்று ஆட் கொண்டு அருள்வாயே முடி மிசை சோமன் சூட்டி வடிவுள ஆலங்காட்டில் முதிர் நடமாடும் கூத்தர் புதல்வோனே முருகு அவிழ் தாரும் சூட்டி ஒரு தனி வேழம் கூட்டி முதல் மற மானின் சேர்க்கை மயல் கூர்வாய் இடி என வேகம் காட்டி நெடிதரு சூலம் தீட்டி எதிர் பொரு சூரன் தாக்க வர ஏகி இலகிய வேல் கொண்டு ஆர்த்து உடல் இரு கூறு அன்று ஆக்கி இமையவர் ஏதம் தீர்த்த பெருமாளே. Back to Top 724 சிறுவை திருப்புகழ் ( குருஜி # 230 - வாரியார் # 735 ) தந்ததன தனதான தந்ததன தனதான தந்ததன தனதான ...... தனதான அண்டர்பதி குடியேற மண்டசுரர் உருமாற அண்டர்மன மகிழ்மீற ...... வருளாலே அந்தரியொ டுடனாடு சங்கரனு மகிழ்கூர ஐங்கரனு முமையாளு ...... மகிழ்வாக மண்டலமு முநிவோரு மெண்டிசையி லுளபேரு மஞ்சினனு மயனாரு ...... மெதிர்காண மங்கையுட னரிதானு மின்பமுற மகிழ்கூற மைந்துமயி லுடனாடி ...... வரவேணும் புண்டரிக விழியாள அண்டர்மகள் மணவாள புந்திநிறை யறிவாள ...... வுயர்தோளா பொங்குகட லுடனாகம் விண்டுவரை யிகல்சாடு பொன்பரவு கதிர்வீசு ...... வடிவேலா தண்டரள மணிமார்ப செம்பொனெழில் செறிரூப தண்டமிழின் மிகுநேய ...... முருகேசா சந்ததமு மடியார்கள் சிந்தையது குடியான தண்சிறுவை தனில்மேவு ...... பெருமாளே. அண்டர்பதி குடியேற மண்டசுரர் உருமாற அண்டர்மன மகிழ்மீற அருளாலே அந்தரியொடு உடனாடு சங்கரனு மகிழ்கூர ஐங்கரனும் உமையாளு மகிழ்வாக மண்டலமு முநிவோரும் எண்டிசையி லுளபேரு மஞ்சினனும் அயனாரும் எதிர்காண மங்கையுடன் அரிதானும் இன்பமுற மகிழ்கூற மைந்து மயிலுடன் ஆடி வரவேணும் புண்டரிக விழியாள அண்டர்மகள் மணவாளா புந்திநிறை யறிவாள வுயர்தோளா பொங்குகடலுடன் நாகம் விண்டு வரை யிகல்சாடு பொன்பரவு கதிர்வீசு வடிவேலா தண் தரள மணிமார்ப செம்பொனெழில் செறிரூப தண்டமிழின் மிகுநேய முருகேசா சந்ததமும் அடியார்கள் சிந்தையது குடியான தண்சிறுவை தனில்மேவு பெருமாளே. 725 சிறுவை திருப்புகழ் ( குருஜி # 231 - வாரியார் # 736 ) தானன தானன தானான தானன தானன தானன தானான தானன தானன தானன தானான தானன ...... தனதான சீதள வாரிஜ பாதாந மோநம நாரத கீதவி நோதாந மோநம சேவல மாமயில் ப்ரீதாந மோநம ...... மறைதேடுஞ் சேகர மானப்ர தாபாந மோநம ஆகம சாரசொ ரூபாந மோநம தேவர்கள் சேனைம கீபாந மோநம ...... கதிதோயப் பாதக நீவுகு டாராந மோநம மாவசு ரேசக டோராந மோநம பாரினி லேஜய வீராந மோநம ...... மலைமாது பார்வதி யாள்தரு பாலாந மோநம நாவல ஞானம னோலாந மோநம பாலகு மாரசு வாமீந மோநம ...... அருள்தாராய் போதக மாமுக னேரான சோதர நீறணி வேணியர் நேயாப்ர பாகர பூமக ளார்மரு கேசாம கோததி ...... யிகல்சூரா போதக மாமறை ஞானாத யாகர தேனவிழ் நீபந றாவாரு மார்பக பூரண மாமதி போலாறு மாமுக ...... முருகேசா மாதவர் தேவர்க ளோடேமு ராரியு மாமலர் மீதுறை வேதாவு மேபுகழ் மாநில மேழினு மேலான நாயக ...... வடிவேலா வானவ ரூரினும் வீறாகி வீறள காபுரி வாழ்வினு மேலாக வேதிரு வாழ்சிறு வாபுரி வாழ்வேசு ராதிபர் ...... பெருமாளே. சீதள வாரிஜ பாதா நமோநம நாரத கீத விநோதா நமோநம சேவல மாமயில் ப்ரீதா நமோநம மறைதேடுஞ் சேகரமானப்ர தாபா நமோநம ஆகம சார சொரூபா நமோநம தேவர்கள் சேனை மகீபா நமோநம கதிதோயப் பாதக நீவு குடாரா நமோநம மா அசுரேச கடோரா நமோநம பாரினிலே ஜய வீரா நமோநம மலைமாது பார்வதியாள் தரு பாலா நமோநம நாவல ஞான மனஉலா நமோநம பாலகுமாரசுவாமீ நமோநம அருள்தாராய் போதக மாமுக நேரான சோதர நீறணி வேணியர் நேயா ப்ரபாகர பூமகளார் மருகேசா மகோததி யிகல்சூரா போதக மாமறை ஞானா தயாகர தேனவிழ் நீப நறாவாரு மார்பக பூரண மாமதி போலாறு மாமுக முருகேசா மாதவர் தேவர்களோடே முராரியும் மாமலர் மீதுறை வேதாவுமே புகழ் மாநிலம் ஏழினு மேலான நாயக வடிவேலா வானவ ரூரினும் வீறாகி வீறளகாபுரி வாழ்வினு மேலாகவே திருவாழ் சிறுவாபுரி வாழ்வே சுராதிபர் பெருமாளே. Back to Top 730 திருவாமாத்தூர் திருப்புகழ் ( - வாரியார் # 741 ) தனதன தானத் தானன, தனதன தானத் தானன தனதன தானத் தானன ...... தனதான கருமுகில் போல்மட் டாகிய அளகிகள் தேனிற் பாகொடு கனியமு தூறித் தேறிய ...... மொழிமாதர் கலவிகள் நேரொப் பாகிகள் மதனிகள் காமக் க்ரோதிகள் கனதன பாரக் காரிகள் ...... செயலோடே பொருகயல் வாளைத் தாவிய விழியினர் சூறைக் காரிகள் பொருளள வாசைப் பாடிகள் ...... புவிமீதே பொதுவிகள் போகப் பாவிகள் வசமழி வேனுக் கோரருள் புரிவது தானெப் போதது ...... புகல்வாயே தருவடு தீரச் சூரர்கள் அவர்கிளை மாளத் தூளெழ சமனிலை யேறப் பாறொடு ...... கொடிவீழத் தனதன தானத் தானன எனஇசை பாடிப் பேய்பல தசையுண வேல்விட் டேவிய ...... தனிவீரா அரிதிரு மால்சக் ராயுத னவனிளை யாள் முத் தார்நகை அழகுடை யாள்மெய்ப் பாலுமை ...... யருள்பாலா அரவொடு பூளைத் தார்மதி அறுகொடு வேணிச் சூடிய அழகர்தென் மாதைக் கேயுறை ...... பெருமாளே. கரு முகில் போல் மட்டாகிய அளகிகள் தேனில் பாகொடு கனி அமுது ஊறித் தேறிய மொழி மாதர் கலவிகள் நேர் ஒப்பாகிகள் மதனிகள் காம க்ரோதிகள் கன தன பாரக் காரிகள் செயலோடே பொரு கயல் வாளைத் தாவிய விழியினர் சூறைக்காரிகள் பொருள் அளவு ஆசைப் பாடிகள் புவி மீதே பொதுவிகள் போகப் பாவிகள் வசம் அழிவேனுக்கு ஓர் அருள் புரிவது தான் எப்போது அது புகல்வாயே தரு அடு தீரச் சூரர்கள் அவர் கிளை மாளத் தூள் எழ சமன் நிலை ஏறப் பாறொடு கொடி வீழ தனதன தானத் தானன என இசை பாடிப் பேய் பல தசை உ(ண்)ண வேல் விட்டு ஏவிய தனி வீரா அரி திரு மால் சக்ராயுதன் அவன் இளையாள் முத்தார் நகை அழகு உடையாள் மெய்ப் பால் உமை அருள் பாலா அரவொடு பூளைத் தார் மதி அறுகொடு வேணிச் சூடிய அழகர் தென் மாதைக்கே உறை பெருமாளே. Back to Top 735 தேவனூர் திருப்புகழ் ( குருஜி # 284 - வாரியார் # 746 ) தான தான தந்த தந்த, தான தான தந்த தந்த தான தான தந்த தந்த ...... தனதான தார காசு ரன்ச ரிந்து வீழ வேரு டன்ப றிந்து சாதி பூத ரங்கு லுங்க ...... முதுமீனச் சாக ரோதை யங்கு ழம்பி நீடு தீகொ ளுந்த அன்று தாரை வேல்தொ டுங்க டம்ப ...... மததாரை ஆர வார வும்பர் கும்ப வார ணாச லம்பொ ருந்து மானை யாளு நின்ற குன்ற ...... மறமானும் ஆசை கூரு நண்ப என்று மாம யூர கந்த என்றும் ஆவல் தீர என்று நின்று ...... புகழ்வேனோ பார மார்த ழும்பர் செம்பொன் மேனி யாளர் கங்கை வெண்க பால மாலை கொன்றை தும்பை ...... சிறுதாளி பார மாசு ணங்கள் சிந்து வார வார மென்ப டம்பு பானல் கூவி ளங்க ரந்தை ...... அறுகோடே சேர வேம ணந்த நம்ப ரீச னாரி டஞ்சி றந்த சீத ளார விந்த வஞ்சி ...... பெருவாழ்வே தேவர் யாவ ருந்தி ரண்டு பாரின் மீது வந்தி றைஞ்சு தேவ னூர்வி ளங்க வந்த ...... பெருமாளே. தாரகாசுரன்சரிந்து வீழ வேருடன்பறிந்து சாதி பூதரம் குலுங்க முதுமீனச் சாகர ஓதை அம் குழம்பி நீடு தீகொளுந்த அன்று தாரை வேல்தொ டுங்கடம்ப மததாரை ஆரவார உம்பர் கும்ப வாரண அசலம் பொருந்து மானை யாளு நின்ற குன்ற மறமானும் ஆசை கூரு நண்ப என்று மாம யூர கந்த என்றும் ஆவல் தீர என்று நின்று புகழ்வேனோ பார மார்தழும்பர் செம்பொன் மேனியாளர் கங்கை வெண்கபால மாலை கொன்றை தும்பை சிறுதாளி பார மாசுணங்கள் சிந்து வார ஆரம் என்பு அடம்பு பானல் கூவிளம் கரந்தை அறுகோடே சேரவே மணந்த நம்பர் ஈசனார் இடம் சிறந்த சீதளாரவிந்த வஞ்சி பெருவாழ்வே தேவர் யாவருந்திரண்டு பாரின் மீது வந்திறைஞ்சு தேவனூர்விளங்க வந்த பெருமாளே. Back to Top 747 திருவேட்களம் திருப்புகழ் ( குருஜி # 276 - வாரியார் # 757 ) தனனத்தன தாத்தன தானன தனனத்தன தாத்தன தானன தனனத்தன தாத்தன தானன ......தனதான சதுரத்தரை நோக்கிய பூவொடு கதிரொத்திட ஆக்கிய கோளகை தழையச்சிவ பாக்கிய நாடக ...... அநுபூதி சரணக்கழல் காட்டியெ னாணவ மலமற்றிட வாட்டிய ஆறிரு சயிலக்குல மீட்டிய தோளொடு ...... முகமாறுங் கதிர்சுற்றுக நோக்கிய பாதமு மயிலிற்புற நோக்கிய னாமென கருணைக்கடல் காட்டிய கோலமும் ...... அடியேனைக் கனகத்தினு நோக்கினி தாயடி யவர்முத்தமி ழாற்புக வேபர கதிபெற்றிட நோக்கிய பார்வையு ...... மறவேனே சிதறத்தரை நாற்றிசை பூதர நெரியப்பறை மூர்க்கர்கள் மாமுடி சிதறக்கட லார்ப்புற வேயயில் ...... விடுவோனே சிவபத்தினி கூற்றினை மோதிய பதசத்தினி மூத்தவி நாயகி செகமிப்படி தோற்றிய பார்வதி ...... யருள்பாலா விதுரற்கும ராக்கொடி யானையும் விகடத்துற வாக்கிய மாதவன் விசையற்குயர் தேர்ப்பரி யூர்பவன் ...... மருகோனே வெளியெட்டிசை சூர்ப்பொரு தாடிய கொடிகைக்கொடு கீர்த்தியு லாவிய விறல்மெய்த்திரு வேட்கள மேவிய ...... பெருமாளே. சதுரத்தரை நோக்கிய பூவொடு கதிர் ஒத்திட ஆக்கிய கோளகை தழைய சிவ பாக்கிய நாடக அநுபூதி சரணக் கழல் காட்டியே என் ஆணவ மலம் அற்றிட வாட்டிய ஆறிரு சயிலக் குலம் ஈட்டிய தோளொடு முகம் ஆறும் கதிர் சுற்று உக நோக்கிய பாதமும் மயிலின் புறம் நோக்கியனாம் என கருணைக் கடல் காட்டிய கோலமும் அடியேனை கனகத்தினும் நோக்கி இனிதாய் அடியவர் முத்தமிழால் புகவே பர கதி பெற்றிட நோக்கிய பார்வையும் மறவேனே சிதறத் தரை நால்திசை பூதர(ம்) நெரிய பறை மூர்க்கர்கள் மா முடி சிதற கடல் ஆர்ப்பு உறவே அயில் விடுவோனே சிவ பத்தினி கூற்றினை மோதிய பத சத்தினி மூத்த விநாயகி செகம் இப்படி தோற்றிய பார்வதி அருள்பாலா விதுரற்கும் அராக் கொடி யானையும் விகடத் துறவு ஆக்கிய மாதவன் விசையற்கு உயர் தேர்ப் பரி ஊர்பவன் மருகோனே வெளி எண் திசை சூரப் பொருது ஆடிய கொடி கைக்கொடு கீர்த்தி உலாவிய விறல் மெய்த் திருவேட்களம் மேவிய பெருமாளே. Back to Top 766 சீகாழி திருப்புகழ் ( குருஜி # 233 - வாரியார் # 784 ) தானத்தன தான தனந்த தானத்தன தான தனந்த தானத்தன தான தனந்த ...... தனதான ஊனத்தசை தோல்கள் சுமந்த காயப்பொதி மாய மிகுந்த ஊசற்சுடு நாறு குரம்பை ...... மறைநாலும் ஓதப்படு நாலு முகன்ற னாலுற்றிடு கோல மெழுந்து ஓடித்தடு மாறி யுழன்று ...... தளர்வாகிக் கூனித்தடி யோடு நடந்து ஈனப்படு கோழை மிகுந்த கூளச்சட மீதை யுகந்து ...... புவிமீதே கூசப்பிர மாண ப்ரபஞ்ச மாயக்கொடு நோய்க ளகன்று கோலக்கழ லேபெற இன்று ...... அருள்வாயே சேனக்குரு கூடலி லன்று ஞானத்தமிழ் நூல்கள் பகர்ந்து சேனைச்சம ணோர்கழு வின்கண் ...... மிசையேறத் தீரத்திரு நீறு புரிந்து மீனக்கொடி யோனுடல் துன்று தீமைப்பிணி தீர வுவந்த ...... குருநாதா கானச்சிறு மானை நினைந்து ஏனற்புன மீது நடந்து காதற்கிளி யோடு மொழிந்து ...... சிலைவேடர் காணக்கணி யாக வளர்ந்து ஞானக்குற மானை மணந்து காழிப்பதி மேவி யுகந்த ...... பெருமாளே. ஊனத் தசை தோல்கள் சுமந்த காயப் பொதி மாயம் மிகுந்த ஊசல் சுடும் நாறும் குரம்பை மறை நாலும் ஓதப் படும் நாலு முகன் த(ன்)னால் உற்றிடும் கோலம் எழுந்து ஓடித் தடுமாறி உழன்று தளர்வாகி கூனித் தடியோடு நடந்து ஈனப்படு கோழை மிகுந்த கூளச் சடம் ஈதை உகந்து புவி மீதே கூசப் பிரமாண ப்ரபஞ்ச மாயக் கொடு நோய்கள் அகன்று கோலக் கழலே பெற இன்று அருள்வாயே சேனக் குரு கூடலில் அன்று ஞானத் தமிழ் நூல்கள் பகர்ந்து சேனைச் சமணோர் கழுவின் கண் மிசை ஏற தீரத் திரு நீறு புரிந்து மீனக் கொடியோன் உடல் துன்று தீமைப் பிணி தீர உவந்த குருநாதா கானச் சிறு மானை நினைந்து ஏனல் புனம் மீது நடந்து காதல் கிளியோடு மொழிந்து சிலை வேடர் காணக் கணியாக வளர்ந்து ஞானக் குற மானை மணந்து காழிப் பதி மேவி உகந்த பெருமாளே. Back to Top 780 வைத்தீசுரன் கோயில் திருப்புகழ் ( குருஜி # 319 - வாரியார் # 790 ) தத்தன தான தான தத்தன தான தான தத்தன தான தான ...... தனதான எத்தனை கோடி கோடி விட்டுட லோடி யாடி யெத்தனை கோடி போன ...... தளவேதோ இப்படி மோக போக மிப்படி யாகி யாகி யிப்படி யாவ தேது ...... இனிமேலோ சித்திடில் சீசி சீசி குத்திர மாய மாயை சிக்கினி லாயு மாயு ...... மடியேனைச் சித்தினி லாட லோடு முத்தமிழ் வாண ரோது சித்திர ஞான பாத ...... மருள்வாயே நித்தமு மோது வார்கள் சித்தமெ வீட தாக நிர்த்தம தாடு மாறு ...... முகவோனே நிட்கள ரூபர் பாதி பச்சுரு வான மூணு நெட்டிலை சூல பாணி ...... யருள்பாலா பைத்தலை நீடு மாயி ரத்தலை மீது பீறு பத்திர பாத நீல ...... மயில்வீரா பச்சிள பூக பாளை செய்க்கயல் தாவு வேளூர் பற்றிய மூவர் தேவர் ...... பெருமாளே. எத்தனை கோடி கோடி விட்டுடல் ஓடி ஆடி எத்தனை கோடி போனது அளவேதோ இப்படி மோக போகம் இப்படி யாகி யாகி இப்படி யாவ தேது இனிமேல் யோசித்திடில் சீசி சீசி குத்திர மாய மாயை சிக்கினில் ஆயும் மாயும் அடியேனை சித்தினில் ஆடலோடு முத்தமிழ் வாணர் ஓது சித்திர ஞான பாதம் அருள்வாயே நித்தமும் ஓதுவார்கள் சித்தமெ வீடதாக நிர்த்தமது ஆடும் ஆறுமுகவோனே நிட்கள ரூபர் பாதி பச்சுருவான மூணு நெட்டிலை சூல பாணி அருள்பாலா பைத்தலை நீடும் ஆயிரத்தலை மீது பீறு பத்திர பாத நீல மயில் வீரா பச்சிள பூக பாளை செய்க்கயல் தாவு வேளூர் பற்றிய மூவர் தேவர் பெருமாளே. 786 திருக்கடவூர் திருப்புகழ் ( - வாரியார் # 796 ) தானதன தான தத்த தானதன தான தத்த தானதன தான தத்த ...... தனதான சூலமென வோடு சர்ப்ப வாயுவைவி டாத டக்கி தூயவொளி காண முத்தி ...... விதமாகச் சூழுமிருள் பாவ கத்தை வீழ அழ லூடெ ரித்து சோதிமணி பீட மிட்ட ...... மடமேவி மேலைவெளி யாயி ரத்து நாலிருப ராப ரத்தின் மேவியரு ணாச லத்தி ...... னுடன்மூழ்கி வேலுமயில் வாக னப்ர காசமதி லேத ரித்து வீடுமது வேசி றக்க ...... அருள்தாராய் ஓலசுர ராழி யெட்டு வாளகிரி மாய வெற்பு மூடுருவ வேல்தொ டுத்த ...... மயில்வீரா ஓதுகுற மான்வ னத்தில் மேவியவள் கால்பி டித்து ளோமெனுப தேச வித்தொ ...... டணைவோனே காலனொடு மேதி மட்க வூழிபுவி மேல்கி டத்து காலனிட மேவு சத்தி ...... யருள்பாலா காலமுதல் வாழ்பு விக்க தாரநகர் கோபு ரத்துள் கானமயில் மேல்த ரித்த ...... பெருமாளே. சூலம் என ஓடு சர்ப்ப வாயுவை விடாது அடக்கி தூய ஒளி காண முத்தி விதமாக சூழும் இருள் பாவகத்தை வீழ அழல் ஊடு எரித்து சோதி மணி பீடம் இட்ட மடம் மேவி மேலை வெளி ஆயிரத்து நால் இரு பராபரத்தின் மேவி அருணாசலத்தினுடன் மூழ்கி வேலு மயில் வாகன ப்ரகாசம் அதிலே தரித்து வீடும் அதுவே சிறக்க அருள் தாராய் ஓல அசுரர் ஆழி எட்டு வாளகிரி மாய வெற்பும் ஊடுருவ வேல் தொடுத்த மயில் வீரா ஓது குற மான் வனத்தில் மேவி அவள் கால் பிடித்து உள் ஓம் எனும் உபதேச வித்தொடு அணைவோனே காலனொடு மேதி மட்க ஊழி புவி மேல் கிடத்து காலன் இடம் மேவு சத்தி அருள் பாலா காலம் முதல் வாழ் புவிக்கு அதார நகர் கோபுரத்துள் கான மயில் மேல் தரித்த பெருமாளே. 798 திருவிடைக்கழி திருப்புகழ் ( குருஜி # 273 - வாரியார் # 799 ) தனத்த தானன தனதன ...... தனதான மருக்கு லாவிய மலரணை ...... கொதியாதே வளர்த்த தாய்தமர் வசையது ...... மொழியாதே கருக்கு லாவிய அயலவர் ...... பழியாதே கடப்ப மாலையை யினிவர ...... விடவேணும் தருக்கு லாவிய கொடியிடை ...... மணவாளா சமர்த்த னேமணி மரகத ...... மயில்வீரா திருக்கு ராவடி நிழல்தனி ...... லுறைவோனே திருக்கை வேல்வடி வழகிய ...... பெருமாளே. மருக்கு லாவிய மலரணை கொதியாதே வளர்த்த தாய்தமர் வசையது மொழியாதே கருக்கு லாவிய அயலவர் பழியாதே கடப்ப மாலையை யினி வரவிடவேணும் தருக்கு லாவிய கொடியிடை மணவாளா சமர்த்த னேமணி மரகத மயில்வீரா திருக்கு ராவடி நிழல்தனில் உறைவோனே திருக்கை வேல்வடி வழகிய பெருமாளே. Back to Top 816 திருவாரூர் திருப்புகழ் ( - வாரியார் # 830 ) தானா தானா தானா தானா தானா தானத் ...... தனதான சீரா ரூரிற் ...... பெருவாழ்வே தேவே தேவப் ...... பெருமாளே. கூசா தேபா ரேசா தேமால் கூறா நூல்கற் ...... றுளம்வேறு கோடா தேவேல் பாடா தேமால் கூர்கூ தாளத் ...... தொடைதோளில் வீசா தேபேர் பேசா தேசீர் வேதா தீதக் ...... கழல்மீதே வீழா தேபோய் நாயேன் வாணாள் வீணே போகத் ...... தகுமோதான் நேசா வானோ ரீசா வாமா நீபா கானப் ...... புனமானை நேர்வா யார்வாய் சூர்வாய் சார்வாய் நீள்கார் சூழ்கற் ...... பகசாலத் தேசா தீனா தீனா ரீசா சீரா ரூரிற் ...... பெருவாழ்வே சேயே வேளே பூவே கோவே தேவே தேவப் ...... பெருமாளே. கூசாதே பார் ஏசாதே மால் கூறா நூல்கற்று உளம்வேறு கோடாதே வேல் பாடாதே மால் கூர் கூதாளத் தொடைதோளில் வீசாதே பேர் பேசாதே சீர் வேத அதீதக் கழல்மீதே வீழாதே போய் நாயேன் வாணாள் வீணே போகத் தகுமோதான் நேசா வானோர் ஈசா வாமா நீபா கானப் புனமானை நேர்வாய் ஆர்வாய் சூர்வாய் சார்வாய் நீள்கார் சூழ்கற்பகசாலத் தேச ஆதீனா தீனார் ஈசா சீர் ஆரூரிற் பெருவாழ்வே சேயே வேளே பூவே கோவே Back to Top 817 திருவாரூர் திருப்புகழ் ( - வாரியார் # 831 ) தானா தானா தானா தானா தானா தானத் ...... தனதான சீரா ரூரிற் ...... பெருவாழ்வே தேவே தேவப் ...... பெருமாளே. கூர்வாய் நாராய் வாராய் போனார் கூடா ரேசற் ...... றலஆவி கோதா னேன்மா தாமா றானாள் கோளே கேள்மற் ...... றிளவாடை ஈர்வாள் போலே மேலே வீசா ஏறா வேறிட் ...... டதுதீயின் ஈயா வாழ்வோர் பேரே பாடா ஈடே றாரிற் ...... கெடலாமோ சூர்வா ழாதே மாறா தேவாழ் சூழ்வா னோர்கட் ...... கருள்கூருந் தோலா வேலா வீறா ரூர்வாழ் சோதீ பாகத் ...... துமையூடே சேர்வாய் நீதீ வானோர் வீரா சேரா ரூரைச் ...... சுடுவார்தஞ் சேயே வேளே பூவே கோவே தேவே தேவப் ...... பெருமாளே. கூர்வாய் நாராய் வாராய் போனார் கூடாரே(ரோ) சற்று அல ஆவி கோது ஆனேன் மாதா மாறு ஆனாள் கோளே கேள் மற்று இள வாடை ஈர் வாள் போலே மேலே வீசா ஏறா வேறிட்டு அது தீயின் ஈயா வாழ்வோர் பேரே பாடா ஈடு ஏறாரில் கெடலாமோ சூர் வாழாதே மாறாதே வாழ் சூழ் வானோர்கட்கு அருள் கூரும் தோலா வேலா வீறு ஆரூர் வாழ் சோதீ பாகத்து உமை ஊடே சேர்வாய் நீதி வானோர் வீரா சேரார் ஊரை சுடுவார் தம் சேயே வேளே பூவே கோவே தேவே தேவ பெருமாளே. Back to Top 818 திருவாரூர் திருப்புகழ் ( குருஜி # 268 - வாரியார் # 832 ) தானா தானா தானா தானா தானா தானத் ...... தனதான சீரா ரூரிற் ...... பெருவாழ்வே தேவே தேவப் ...... பெருமாளே. பாலோ தேனோ பாகோ வானோர் பாரா வாரத் ...... தமுதேயோ பாரோர் சீரோ வேளேர் வாழ்வோ பானோ வான்முத் ...... தெனநீளத் தாலோ தாலே லோபா டாதே தாய்மார் நேசத் ...... துனுசாரந் தாரா தேபே ரீயா தேபே சாதே யேசத் ...... தகுமோதான் ஆலோல் கேளா மேலோர் நாண்மா லானா தேனற் ...... புனமேபோய் ஆயாள் தாள்மேல் வீழா வாழா ஆளா வேளைப் ...... புகுவோனே சேலோ டேசே ராரால் சாலார் சீரா ரூரிற் ...... பெருவாழ்வே சேயே வேளே பூவே கோவே தேவே தேவப் ...... பெருமாளே. பாலோ தேனோ பாகோ வானோர் பாராவாரத்து அமுதேயோ பாரோர் சீரோ வேள் ஏர் வாழ்வோ பானோ வான்முத்தென நீளத் தாலோ தாலேலோ பாடாதே தாய்மார் நேசத்து உனு சாரந் தாராதே பேர் ஈயாதே பேசாதே ஏசத் தகுமோதான் ஆலோல் கேளா மேலோர் நாள் மால் ஆனாது ஏனற்புனமேபோய் ஆயாள் தாள்மேல் வீழா வாழா ஆளா வேளைப்புகுவோனே சேலோடே சேர் ஆரால் சாலார் சீர் ஆரூரிற் பெருவாழ்வே சேயே வேளே பூவே கோவே தேவே தேவப்பெருமாளே. 821 திருவாரூர் திருப்புகழ் ( - வாரியார் # 828 ) தனன தனதன தனதன தனதன தனன தனதன தனதன தனதன தனன தனதன தனதன தனதன ...... தனதான கரமு முளரியின் மலர்முக மதிகுழல் கனம தெணுமொழி கனிகதிர் முலைநகை கலக மிடுவிழி கடலென விடமென ...... மனதூடே கருதி யனநடை கொடியிடை யியல்மயில் கமழு மகிலுட னிளகிய ம்ருகமத களப புளகித கிரியினு மயல்கொடு ...... திரிவேனும் இரவு பகலற இகலற மலமற இயலு மயலற விழியினி ரிழிவர இதய முருகியெ யொருகுள பதமுற ...... மடலூடே யெழுத அரியவள் குறமக ளிருதன கிரியில் முழுகின இளையவ னெனுமுரை யினிமை பெறுவது மிருபத மடைவது ...... மொருநாளே சுரபி மகவினை யெழுபொருள் வினவிட மனுவி னெறிமணி யசைவுற விசைமிகு துயரில் செவியினி லடிபட வினவுமி ...... னதிதீது துணிவி லிதுபிழை பெரிதென வருமநு உருகி யரகர சிவசிவ பெறுமதொர் சுரபி யலமர விழிபுனல் பெருகிட ...... நடுவாகப் பரவி யதனது துயர்கொடு நடவிய பழுதின் மதலையை யுடலிரு பிளவொடு படிய ரதமதை நடவிட மொழிபவ ...... னருளாரூர்ப் படியு லறுமுக சிவசுத கணபதி யிளைய குமரநி ருபபதி சரவண பரவை முறையிட அயில்கொடு நடவிய ...... பெருமாளே. கரமு(ம்) முளரியின் மலர் முக மதி குழல் கனமது எ(ண்)ணு(ம்) மொழி கனி கதிர் மு(ல்)லை நகை கலகம் இடு விழி கடல் என விடம் என மனது ஊடே கருதி அ(ன்)ன நடை கொடி இடை இயல் மயில் கமழும் அகில் உடன் இளகிய ம்ருகமத களப புளகித கிரியினு(ம்) மயல் கொடு திரிவேனும் இரவு பகல் அற இகல் அற மலம் அற இயலும் மயல் அற விழியில் நி(நீ)ர் இழிவர இதயம் உருகியெ ஒரு குள பதம் உற மடல் ஊடே எழுத அரியவள் குற மகள் இரு தன கிரியில் முழுகின இளையவன் எனும் உரையின் இனிமை பெறுவதும் இரு பதம் அடைவதும் ஒரு நாளே சுரபி மகவினை எழு பொருள் வினவிட மனுவின் நெறி மணி அசைவு உற அவ் இசை மிகு துயரில் செவியினில் அடி பட வினவுமின் அதி தீது துணிவில் இது பிழை பெரிது என வரும் மநு உருகி அரகர சிவ சிவ பெறுமது ஒர் சுரபி அலமர விழி புனல் பெருகிட நடுவாகப் பரவி அதனது துயர் கொடு நடவிய பழுதின் மதலையை உடல் இரு பிளவொடு படிய ரதம் அதை நடவிய மொழிபவன் அருள் ஆரூர்ப் படியில் அறுமுக சிவசுத கணபதி இளைய குமர நிருப பதி சரவண பரவை முறையிட அயில் கொடு நடவிய பெருமாளே. 847 திருவீழிமிழலை திருப்புகழ் ( குருஜி # 274 - வாரியார் # 857 ) தனனா தனனா தனனா தனனா தனனா தனனா ...... தனதான எருவாய் கருவாய் தனிலே யுருவா யிதுவே பயிராய் ...... விளைவாகி இவர்போ யவரா யவர்போ யிவரா யிதுவே தொடர்பாய் ...... வெறிபோல ஒருதா யிருதாய் பலகோ டியதா யுடனே யவமா ...... யழியாதே ஒருகால் முருகா பரமா குமரா உயிர்கா வெனவோ ...... தருள்தாராய் முருகா வெனவோர் தரமோ தடியார் முடிமே லிணைதா ...... ளருள்வோனே முநிவோ ரமரோர் முறையோ வெனவே முதுசூ ருரமேல் ...... விடும்வேலா திருமால் பிரமா வறியா தவர்சீர் சிறுவா திருமால் ...... மருகோனே செழுமா மதில்சே ரழகார் பொழில்சூழ் திருவீ ழியில்வாழ் ...... பெருமாளே. எருவாய் கருவாய் தனிலே யுருவாய் இதுவே பயிராய் விளைவாகி இவர்போ யவராய் அவர்போ யிவராய் இதுவே தொடர்பாய் வெறிபோல ஒருதா யிருதாய் பலகோ டியதாய் உடனே அவமா யழியாதே ஒருகால் முருகா பரமா குமரா உயிர்கா வெனவோத அருள்தாராய் முருகா வென ஓர் தரம் ஓதடியார் முடிமேல் இணைதாள் அருள்வோனே முநிவோர் அமரோர் முறையோ வெனவே முதுசூ ருரமேல் விடும்வேலா திருமால் பிரமா அறியா தவர் சீர்ச் சிறுவா திருமால் மருகோனே செழுமா மதில்சேர் அழகார் பொழில்சூழ் திருவீ ழியில்வாழ் பெருமாளே. 858 திருவிடைமருதூர் திருப்புகழ் ( - வாரியார் # 868 ) தனதனன தனதனன தனதனன தனதனன தான தானனா தான தானனா தனதனன தனதனன தனதனன தனதனன தான தானனா தான தானனா தனதனன தனதனன தனதனன தனதனன தான தானனா தான தானனா ...... தனதன தனதான அறுகுநுனி பனியனைய சிறியதுளி பெரியதொரு ஆக மாகியோர் பால ரூபமாய் அருமதலை குதலைமொழி தனிலுருகி யவருடைய ஆயி தாதையார் மாய மோகமாய் அருமையினி லருமையிட மொளுமொளென வுடல்வளர ஆளு மேளமாய் வால ரூபமாய் ...... அவரொரு பெரியோராய் அழகுபெறு நடையடைய கிறுதுபடு மொழிபழகி ஆவி யாயவோர் தேவி மாருமாய் விழுசுவரை யரிவையர்கள் படுகுழியை நிலைமையென வீடு வாசலாய் மாட கூடமாய் அணுவளவு தவிடுமிக பிதிரவிட மனமிறுகி ஆசை யாளராய் ஊசி வாசியாய் ...... அவியுறு சுடர்போலே வெறுமிடிய னொருதவசி யமுதுபடை யெனுமளவில் மேலை வீடுகேள் கீழை வீடுகேள் திடுதிடென நுழைவதன்முன் எதிர்முடுகி யவர்களொடு சீறி ஞாளிபோல் ஏறி வீழ்வதாய் விரகினொடு வருபொருள்கள் சுவறியிட மொழியுமொரு வீணி யார்சொலே மேல தாயிடா ...... விதிதனை நினையாதே மினுகுமினு கெனுமுடல மறமுறுகி நெகிழ்வுறவும் வீணர் சேவையே பூணு பாவியாய் மறுமையுள தெனுமவரை விடும்விழலை யதனின்வரு வார்கள் போகுவார் காணு மோஎனா விடுதுறவு பெரியவரை மறையவரை வெடுவெடென மேள மேசொலா யாளி வாயராய் ...... மிடையுற வருநாளில் வறுமைகளு முடுகிவர வுறுபொருளு நழுவசில வாத மூதுகா மாலை சோகைநோய் பெருவயிறு வயிறுவலி படுவன்வர இருவிழிகள் பீளை சாறிடா ஈளை மேலிடா வழவழென உமிழுமது கொழகொழென ஒழுகிவிழ வாடி யூனெலாம் நாடி பேதமாய் ...... மனையவள் மனம்வேறாய் மறுகமனை யுறுமவர்கள் நணுகுநணு கெனுமளவில் மாதர் சீயெனா வாலர் சீயெனா கனவுதனி லிரதமொடு குதிரைவர நெடியசுடு காடு வாவெனா வீடு போவெனா வலதழிய விரகழிய வுரைகுழறி விழிசொருகி வாயு மேலிடா ஆவி போகுநாள் ...... மனிதர்கள் பலபேச இறுதியதொ டறுதியென உறவின்முறை கதறியழ ஏழை மாதராள் மோதி மேல்விழா எனதுடைமை யெனதடிமை யெனுமறிவு சிறிதுமற ஈமொ லேலெனா வாயை ஆவெனா இடுகுபறை சிறுபறைகள் திமிலையொடு தவிலறைய ஈம தேசமே பேய்கள் சூழ்வதாய் ...... எரிதனி லிடும்வாழ்வே இணையடிகள் பரவுமுன தடியவர்கள் பெறுவதுவும் ஏசி டார்களோ பாச நாசனே இருவினைமு மலமுமற இறவியொடு பிறவியற ஏக போகமாய் நீயு நானுமாய் இறுகும்வகை பரமசுக மதனையரு ளிடைமருதில் ஏக நாயகா லோக நாயகா ...... இமையவர் பெருமாளே. அறுகு நுனி பனி அனைய சிறிய துளி பெரியது ஒரு ஆகம் ஆகி ஓர் பால ரூபமாய் அரு மதலை குதலை மொழி தனில் உருகி அவருடைய ஆயி தாதையார் மாய மோகமாய் அருமையினில் அருமை இட மொளு மொளு என உடல் வளர ஆளு(ம்) மேளமாய் வால ரூபமாய் அவர் ஒரு பெரியோராய் அழகு பெறு நடை அடைய கிறிது படு மொழி பழகி ஆவியாய ஓர் தேவிமாருமாய் விழு சுவரை அரிவையர்கள் படு குழியை நிலைமை என வீடு வாசலாய் மாட கூடமாய் அணு அளவு தவிடும் இக பிதிரவிட மனம் இறுகி ஆசை ஆளராய் ஊசி வாசியாய் அவி உறு(ம்) சுடர் போலே வெறு மிடியன் ஒரு தவசி அமுது படை எனும் அளவில் மேலை வீடு கேள் கீழை வீடு கேள் திடு திடு என நுழைவதன் முன் எதிர் முடுகி அவர்களொடு சீறி ஞாளி போல் ஏறி வீழ்வதாய் விரகினொடு வரு பொருள்கள் சுவறி இட மொழியும் ஒரு வீணியார் சொ(ல்)லே மேலது ஆயிடா விதி தனை நினையாதே மினுகு மினுகு எனும் உடலம் அற முறுகி நெகிழ்வு உறவும் வீணர் சேவையே பூணு பாவியாய் மறுமை உளது எனும் அவரை விடும் விழலை அதனின் வருவார்கள் போகுவார் காணுமோ எனா விடு துறவு பெரியவரை மறையவரை வெடு வெடு என மேளமே சொலாய் ஆளி வாயராய் மிடை உற வரு நாளில் வறுமைகளு(ம்) முடுகி வர உறு பொருளு(ம்) நழுவ சில வாதம் ஊது காமாலை சோகை நோய் பெரு வயிறு வயிறு வலி படுவன் வர இரு விழிகள் பீளை சாறு இடா ஈளை மேலிடா வழ வழ என உமிழும் அது கொழ கொழ என ஒழுகி விழ வாடி ஊன் எலாம் நாடி பேதமாய் மனையவள் மனம் வேறாய் மறுக மனை உறும் அவர்கள் நணுகு நணுகு எனும் அளவில் மாதர் சீ எனா வாலர் சீ எனா கனவு தனில் இரதமொடு குதிரை வர நெடிய சுடு காடு வா எனா வீடு போ எனா வலது அழிய விரகு அழிய உரை குழறி விழி சொருகி வாயு மேலிடா ஆவி போகு நாள் மனிதர்கள் பல பேச இறுதி அதொடு அறுதி என உறவின் முறை கதறி அழ ஏழை மாதராள் மோதி மேல் விழா எனது உடைமை எனது அடிமை எனும் அறிவு சிறிதும் அற ஈ மொலேல் எனா வாயை ஆ எனா இடுகு பறை சிறு பறைகள் திமிலையொடு தவில் அறைய ஈம தேசமே பேய்கள் சூழ்வதாய் எரிதனில் இடும் வாழ்வே இணை அடிகள் பரவும் உனது அடியவர்கள் பெறுவதுவும் ஏசிடார்களோ பாச நாசனே இரு வினை மு(ம்)மலமும் அற இறவி ஒடு பிறவி அற ஏக போகமாய் நீயு(ம்) நானுமாய் இறுகும் வகை பரம சுக மதனை அருள் இடை மருதில் ஏக நாயகா லோக நாயகா இமையவர் பெருமாளே. 894 குறட்டி திருப்புகழ் ( - வாரியார் # 904 ) தானன தனத்த தான தானன தனத்த தான தானன தனத்த தான ...... தனதான நீரிழிவு குட்ட மீளை வாதமொடு பித்த மூல நீள்குளிர் வெதுப்பு வேறு ...... முளநோய்கள் நேருறு புழுக்கள் கூடு நான்முக னெடுத்த வீடு நீடிய விரத்த மூளை ...... தசைதோல்சீ பாரிய நவத்து வார நாறுமு மலத்தி லாறு பாய்பிணி யியற்று பாவை ...... நரிநாய்பேய் பாறோடு கழுக்கள் கூகை தாமிவை புசிப்ப தான பாழுட லெடுத்து வீணி ...... லுழல்வேனோ நாரணி யறத்தி னாரி ஆறுச மயத்தி பூத நாயக ரிடத்து காமி ...... மகமாயி நாடக நடத்தி கோல நீலவ ருணத்தி வேத நாயகி யுமைச்சி நீலி ...... திரிசூலி வாரணி முலைச்சி ஞான பூரணி கலைச்சி நாக வாணுத லளித்த வீர ...... மயிலோனே மாடம தில்முத்து மேடை கோபுர மணத்த சோலை வாகுள குறட்டி மேவு ...... பெருமாளே. நீரிழிவு குட்டம் ஈளை வாதமொடு பித்த(ம்) மூலம் நீள் குளிர் வெதுப்பு வேறும் உள நோய்கள் வேர் உறு புழுக்கள் கூடு(ம்) நான் முகன் எடுத்த வீடு நீடிய இரத்த(ம்) மூளை தசை தோல் சீ பாரிய நவத் துவார நாறும் மு(ம்) மலத்தில் ஆறு பாய் பிணி இயற்று பாவை நரி நாய் பேய் பாறொடு கழுக்கள் கூகை தாம் இவை புசிப்பதானபாழ் உடல் எடுத்து வீணில் உழல்வேனோ நாரணி அறத்தின் நாரி ஆறு சமயத்தி பூத நாயகரிடத்து காமி மகமாயி நாடக நடத்தி கோல நீல வருணத்தி வேத நாயகி உமைச்சி நீலி திரிசூலி வார் அணி முலைச்சி ஞான பூரணி கலைச்சி நாக வாள் நுதல் அளித்த வீர மயிலோனே மாட மதில் முத்து மேடை கோபுரம் மணத்த சோலை வாகு உள குறட்டி மேவு(ம்) பெருமாளே. Back to Top 904 வயலூர் திருப்புகழ் ( குருஜி # 302 - வாரியார் # 910 ) தந்தான தந்த தந்தான தந்த தந்தான தந்த ...... தனதான செங்கோட மர்ந்த ...... பெருமாளே மங்காம லுன்ற ...... னருள்தாராய் என்னால் பிறக்கவும் என்னா லிறக்கவும் என்னால் துதிக்கவும் ...... கண்களாலே என்னா லழைக்கவும் என்னால் நடக்கவும் என்னா லிருக்கவும் ...... பெண்டிர்வீடு என்னால் சுகிக்கவும் என்னால் முசிக்கவும் என்னால் சலிக்கவும் ...... தொந்தநோயை என்னா லெரிக்கவும் என்னால் நினைக்கவும் என்னால் தரிக்கவும் ...... இங்குநானார் கன்னா ருரித்தஎன் மன்னா எனக்குநல் கர்ணா மிர்தப்பதம் ...... தந்தகோவே கல்லார் மனத்துட னில்லா மனத்தவ கண்ணா டியிற்றடம் ...... கண்டவேலா மன்னான தக்கனை முன்னாள்மு டித்தலை வன்வாளி யிற்கொளும் ...... தங்கரூபன் மன்னா குறத்தியின் மன்னா வயற்பதி மன்னா முவர்க்கொரு ...... தம்பிரானே. என்னால் பிறக்கவும் என்னால் இறக்கவும் என்னால் துதிக்கவும் கண்களாலே என்னால் அழைக்கவும் என்னால் நடக்கவும் என்னால் இருக்கவும் பெண்டிர்வீடு என்னால் சுகிக்கவும் என்னால் முசிக்கவும் என்னால் சலிக்கவும் தொந்தநோயை என்னால் எரிக்கவும் என்னால் நினைக்கவும் என்னால் தரிக்கவும் இங்கு நான் ஆர் கன்னார் உரித்த என் மன்னா எனக்குநல் கர்ணாமிர்தப்பதம் தந்தகோவே கல்லார் மனத்துடன் நில்லா மனத்தவ கண்ணாடியில் தடம் கண்டவேலா மன்னான தக்கனை முன்னாள் முடித்தலை வன்வாளியிற் கொளும் தங்கரூபன் மன்னா குறத்தியின் மன்னா வயற்பதி மன்னா முவர்க்கொரு தம்பிரானே. Back to Top 923 கருவூர் திருப்புகழ் ( குருஜி # 217 - வாரியார் # 933 ) தனதானத் தனதான தனதானத் ...... தனதான மதியால்வித் தகனாகி மனதாலுத் ...... தமனாகிப் பதிவாகிச் சிவஞான பரயோகத் ...... தருள்வாயே நிதியேநித் தியமேயென் நினைவேநற் ...... பொருளாயோய் கதியேசொற் பரவேளே கருவூரிற் ...... பெருமாளே. மதியால் வித்தகனாகி மனதால் உத்தமனாகி பதிவாகிச் சிவஞான பரயோகத்து அருள்வாயே நிதியே நித்தியமே யென் நினைவே நற் பொருளாயோய் கதியே சொற் பரவேளே கருவூரிற் பெருமாளே. Back to Top 925 கருவூர் திருப்புகழ் ( குருஜி # 215 - வாரியார் # 937 ) தனனா தனனத் தனனா தனனத் தனனா தனனத் ...... தனதான தசையா கியகற் றையினால் முடியத் தலைகா லளவொப் ...... பனையாயே தடுமா றுதல்சற் றொருநா ளுலகிற் றவிரா வுடலத் ...... தினைநாயேன் பசுபா சமும்விட் டறிவா லறியப் படுபூ ரணநிட் ...... களமான பதிபா வனையுற் றநுபூ தியிலப் படியே யடைவித் ...... தருள்வாயே அசலே சுரர்புத் திரனே குணதிக் கருணோ தயமுத் ...... தமிழோனே அகிலா கமவித் தகனே துகளற் றவர்வாழ் வயலித் ...... திருநாடா கசிவா ரிதயத் தமிர்தே மதுபக் கமலா லயன்மைத் ...... துனவேளே கருணா கரசற் குருவே குடகிற் கருவூ ரழகப் ...... பெருமாளே. தசையாகிய கற்றையினால் முடிய தலைகால் அளவு ஒப்பனையாயே தடுமாறுதல் சற்று ஒருநாள் உலகில் தவிரா உடலத்தினை நாயேன் பசுபாசமும் விட்டு அறிவால் அறிய படுபூ ரண நிட்களமான பதிபாவனை உற்று அநுபூ தியில் அப்படியே அடைவித்து அருள்வாயே அசலேசுரர் புத்திரனே குணதிக்கு அருணோதய முத்தமிழோனே அகில ஆகம வித்தகனே துகளற்றவர்வாழ் வயலித்திருநாடா கசிவார் இதயத்து அமிர்தே மதுபக் கமலா லயன்மைத்துனவேளே கருணாகர சற்குருவே குடகிற் கருவூர் அழகப் பெருமாளே. Back to Top 943 அவிநாசி திருப்புகழ் ( குருஜி # 204 - வாரியார் # 953 ) தனதானத் தனதான தனதானத் ...... தனதான இறவாமற் பிறவாமல் எனையாள்சற் ...... குருவாகிப் பிறவாகித் திரமான பெருவாழ்வைத் ...... தருவாயே குறமாதைப் புணர்வோனே குகனேசொற் ...... குமரேசா அறநாலைப் புகல்வோனே அவிநாசிப் ...... பெருமாளே. இறவாமற் பிறவாமல் எனையாள்சற்குருவாகி பிறவாகி திரமான பெருவாழ்வைத் தருவாயே குறமாதைப் புணர்வோனே குகனேசொற் குமரேசா அறநாலைப் புகல்வோனே அவிநாசிப் பெருமாளே. 946 திருப்புக்கொளியூர் திருப்புகழ் ( குருஜி # 252 - வாரியார் # 956 ) தத்தன தானான தத்தன தானான தத்தன தானான ...... தனதான பக்குவ வாசார லட்சண சாகாதி பட்சண மாமோன ...... சிவயோகர் பத்தியி லாறாறு தத்துவ மேல்வீடு பற்றுநி ராதார ...... நிலையாக அக்கண மேமாய துர்க்குணம் வேறாக அப்படை யேஞான ...... வுபதேசம் அக்கற வாய்பேசு சற்குரு நாதாவு னற்புத சீர்பாத ...... மறவேனே உக்கிர வீராறு மெய்ப்புய னேநீல வுற்பல வீராசி ...... மணநாற ஒத்தநி லாவீசு நித்தில நீராவி யுற்பல ராசீவ ...... வயலூரா பொக்கமி லாவீர விக்ரம மாமேனி பொற்ப்ரபை யாகார ...... அவிநாசிப் பொய்க்கலி போமாறு மெய்க்கருள் சீரான புக்கொளி யூர்மேவு ...... பெருமாளே. பக்குவ ஆசார லட்சண சாகாதி பட்சணமா மோன சிவயோகர் பத்தியில் ஆறாறு தத்துவ மேல்வீடு பற்று நிராதார நிலையாக அக்கணமே மாய துர்க்குணம் வேறாக அப்படையேஞானவுபதேசம் அக்கற வாய்பேசு சற்குரு நாதா உன் அற்புத சீர்பாத மறவேனே உக்கிர ஈராறு மெய்ப்புயனே நீல உற்பல வீராசி மணநாற ஒத்தநி லாவீசு நித்தில நீராவி உற்பல ராசீவ வயலூரா பொக்கமி லாவீர விக்ரம மாமேனி பொற்ப்ரபை யாகார அவிநாசிப் பொய்க்கலி போமாறு மெய்க்கருள் சீரான புக்கொளி யூர்மேவு பெருமாளே. 949 பேரூர் திருப்புகழ் ( குருஜி # 291 - வாரியார் # 960 ) தானாத் தனதான தானாத் ...... தனதான தீராப் பிணிதீர சீவாத் ...... துமஞான ஊராட் சியதான ஓர்வாக் ...... கருள்வாயே பாரோர்க் கிறைசேயே பாலாக் ...... கிரிராசே பேராற் பெரியோனே பேரூர்ப் ...... பெருமாளே. தீராப் பிணிதீர சீவ ஆத்தும ஞான ஊராட்சியதான ஓர்வாக்கு அருள்வாயே பாரோர்க் கிறைசேயே பாலாக் கிரிராசே பேராற் பெரியோனே பேரூர்ப் பெருமாளே. Back to Top 967 மதுரை திருப்புகழ் ( - வாரியார் # 975 ) தத்ததன தத்ததன தத்ததன தத்ததன தத்ததன தத்ததன ...... தனதான வித்தகம ருப்புடைய ...... பெருமாளே செப்பெனஎ னக்கருள் கை ...... மறவேனே முத்துநவ ரத்நமணி பத்திநிறை சத்தியிட மொய்த்தகிரி முத்திதரு ...... வெனவோதும் முக்கணிறை வர்க்குமருள் வைத்தமுரு கக்கடவுள் முப்பதுமு வர்க்கசுர ...... ரடிபேணி பத்துமுடி தத்தும்வகை யுற்றகணி விட்டஅரி பற்குனனை வெற்றிபெற ...... ரதமூரும் பச்சைநிற முற்றபுய லச்சமற வைத்தபொருள் பத்தர்மன துற்றசிவம் ...... அருள்வாயே தித்திமிதி தித்திமிதி திக்குகுகு திக்குகுகு தெய்த்ததென தெய்தததென ...... தெனனான திக்குவென மத்தளமி டக்கைதுடி தத்ததகு செச்சரிகை செச்சரிகை ...... யெனஆடும் அத்தனுட னொத்தநட நித்ரிபுவ னத்திநவ சித்தியருள் சத்தியருள் ...... புரிபாலா அற்பவிடை தற்பமது முற்றுநிலை பெற்றுவள ரற்கனக பத்மபுரி ...... பெருமாளே. முத்து நவ ரத்ந மணி பத்தி நிறை சத்தி இடம் மொய்த்த கிரி முத்தி தரு என ஓதும் முக்கண் இறைவர்க்கும் அருள் வைத்த முருகக் கடவுள் முப்பது முவர்க்க சுரர் அடி பேணி பத்து முடி தத்தும் வகை உற்ற கணி விட்ட அரி பற்குனனை வெற்றி பெற ரதம் ஊரும் பச்சை நிறம் உற்ற புயல் அச்சம் அற வைத்த பொருள் பத்தர் மனது உற்ற சிவம் அருள்வாயே தித்திமிதி தித்திமிதி திக்குகுகு திக்குகுகு தெய்த்ததென தெய்தததென தெனனான திக்குவென மத்தளம் இடக்கைதுடி தத்ததகு செச்சரிகை செச்சரிகை யெனஆடும் அத்தனுடன் ஒத்த நடநி த்ரிபுவனத்தி நவசித்தி அருள் சத்தி அருள் புரிபாலா அற்ப இடை தற்பம் அது முற்று நிலை பெற்று வளர் அல் கனக பத்ம புரி பெருமாளே. Back to Top 973 இலஞ்சி திருப்புகழ் ( - வாரியார் # 983 ) தனந்தன தந்த தனந்தன தந்த தனந்தன தந்த ...... தனதானா சுரும்பணி கொண்டல் நெடுங்குழல் கண்டு துரந்தெறி கின்ற ...... விழிவேலால் சுழன்றுசு ழன்று துவண்டுது வண்டு சுருண்டும யங்கி ...... மடவார்தோள் விரும்பிவ ரம்பு கடந்துந டந்து மெலிந்துத ளர்ந்து ...... மடியாதே விளங்குக டம்பு விழைந்தணி தண்டை விதங்கொள்ச தங்கை ...... யடிதாராய் பொருந்தல மைந்து சிதம்பெற நின்ற பொலங்கிரி யொன்றை ...... யெறிவோனே புகழ்ந்தும கிழ்ந்து வணங்குகு ணங்கொள் புரந்தரன் வஞ்சி ...... மணவாளா இரும்புன மங்கை பெரும்புள கஞ்செய் குரும்பைம ணந்த ...... மணிமார்பா இலஞ்சியில் வந்த இலஞ்சிய மென்று இலஞ்சிய மர்ந்த ...... பெருமாளே. சுரும்பு அணி கொண்டல் நெடும் குழல் கண்டு துரந்து எறிகின்ற விழி வேலால் சுழன்று சுழன்று துவண்டு துவண்டு சுருண்டு மயங்கி மடவார் தோள் விரும்பி வரம்பு கடந்து நடந்து மெலிந்து தளர்ந்து மடியாதே விளங்கு கடம்பு விழைந்து அணி தண்டை விதம் கொள் சதங்கை அடி தாராய் பொருந்தல் அமைந்து உசிதம் பெற நின்ற பொன் அம் கிரி ஒன்றை எறிவோனே புகழ்ந்து மகிழ்ந்து வணங்கு குணம் கொள் புரந்தரன் வஞ்சி மணவாளா இரும் புன மங்கை பெரும் புளகம் செய் குரும்பை மணந்த மணி மார்பா இலஞ்சியில் வந்த இலஞ்சியம் என்று இலஞ்சி அமர்ந்த பெருமாளே. Back to Top 974 இலஞ்சி திருப்புகழ் ( - வாரியார் # 984 ) தான தனந்த தான தனந்த தனா தனந்த ...... தனதான மாலையில் வந்து மாலை வழங்கு மாலை யநங்கன் ...... மலராலும் வாடை யெழுந்து வாடை செறிந்து வாடை யெறிந்த ...... அனலாலுங் கோல மழிந்து சால மெலிந்து கோமள வஞ்சி ...... தளராமுன் கூடிய கொங்கை நீடிய அன்பு கூரவு மின்று ...... வரவேணும் கால னடுங்க வேலது கொண்டு கானில் நடந்த ...... முருகோனே கான மடந்தை நாண மொழிந்து காத லிரங்கு ...... குமரேசா சோலை வளைந்து சாலி விளைந்து சூழு மிலஞ்சி ...... மகிழ்வோனே சூரிய னஞ்ச வாரியில் வந்த சூரனை வென்ற ...... பெருமாளே. மாலையில் வந்து மாலை வழங்கு மாலை அனங்கன் மலராலும் வாடை எழுந்து வாடை செறிந்து வாடை எறிந்த அனலாலும் கோலம் அழிந்து சால மெலிந்து கோமள வஞ்சி தளரா முன் கூடிய கொங்கை நீடிய அன்பு கூரவும் இன்று வரவேணும் காலன் நடுங்க வேல் அது கொண்டு கானில் நடந்த முருகோனே கான மடந்தை நாண மொழிந்து காதல் இரங்கு குமரேசா சோலை வளைந்து சாலி விளைந்து சூழும் இலஞ்சி மகிழ்வோனே சூரியன் அஞ்ச வாரியில் வந்த சூரனை வென்ற பெருமாளே. Back to Top 986 எழுகரைநாடு திருப்புகழ் ( குருஜி # 212 - வாரியார் # 996 ) தனதன தாத்தன தனதன தாத்தன தனதன தாத்தன ...... தந்ததான விரகற நோக்கியு முருகியும் வாழ்த்தியும் விழிபுனல் தேக்கிட ...... அன்புமேன்மேல் மிகவுமி ராப்பகல் பிறிதுப ராக்கற விழைவுகு ராப்புனை ...... யுங்குமார முருகஷ டாக்ஷர சரவண கார்த்திகை முலைநுகர் பார்த்திப ...... என்றுபாடி மொழிகுழ றாத்தொழு தழுதழு தாட்பட முழுதும லாப்பொருள் தந்திடாயோ பரகதி காட்டிய விரகசி லோச்சய பரமப ராக்ரம ...... சம்பராரி படவிழி யாற்பொரு பசுபதி போற்றிய பகவதி பார்ப்பதி ...... தந்தவாழ்வே இரைகடல் தீப்பட நிசிசரர் கூப்பிட எழுகிரி யார்ப்பெழ ...... வென்றவேலா இமையவர் நாட்டினில் நிறைகுடி யேற்றிய எழுகரை நாட்டவர் ...... தம்பிரானே. விரகற நோக்கியும் உருகியும் வாழ்த்தியும் விழிபுனல் தேக்கிட அன்புமேன்மேல் மிகவும் இராப்பகல் பிறிது பராக்கற விழைவு குராப் புனையுங் குமார முருக ஷடாக்ஷர சரவண கார்த்திகை முலைநுகர் பார்த்திப என்றுபாடி மொழிகுழறாத் தொழுது அழுதழுது ஆட்பட முழுதும் அலாப்பொருள் தந்திடாயோ பரகதி காட்டிய விரக சிலோச்சய பரம பராக்ரம சம்பராரி படவிழியாற்பொரு பசுபதி போற்றிய பகவதி பார்ப்பதி தந்தவாழ்வே இரைகடல் தீப்பட நிசிசரர் கூப்பிட எழுகிரி யார்ப்பெழ வென்றவேலா இமையவர் நாட்டினில் நிறைகுடி யேற்றிய எழுகரை நாட்டவர் தம்பிரானே. Back to Top 998 பொதுப்பாடல்கள் திருப்புகழ் ( குருஜி # 385 - வாரியார் # 1237 ) தான தந்தன தானா தானன தான தந்தன தானா தானன தான தந்தன தானா தானன ...... தனதான நாலி ரண்டித ழாலே கோலிய ஞால முண்டக மேலே தானிள ஞாயி றென்றுறு கோலா காலனு ...... மதின்மேலே ஞால முண்டபி ராணா தாரனும் யோக மந்திர மூலா தாரனு நாடி நின்றப்ர பாவா காரனு ...... நடுவாக மேலி ருந்தகி ரீடா பீடமு நூல றிந்தம ணீமா மாடமு மேத கும்ப்ரபை கோடா கோடியு ...... மிடமாக வீசி நின்றுள தூபா தீபவி சால மண்டப மீதே யேறிய வீர பண்டித வீரா சாரிய ...... வினைதீராய் ஆல கந்தரி மோடா மோடிகு மாரி பிங்கலை நானா தேசிய மோகி மங்கலை லோகா லோகியெ ...... வுயிர்பாலும் ஆன சம்ப்ரமி மாதா மாதவி ஆதி யம்பிகை ஞாதா வானவ ராட மன்றினி லாடா நாடிய ...... அபிராமி கால சங்கரி சீலா சீலித்ரி சூலி மந்த்ரச பாஷா பாஷணி காள கண்டிக பாலீ மாலினி ...... கலியாணி காம தந்திர லீலா லோகினி வாம தந்திர நூலாய் வாள்சிவ காம சுந்தரி வாழ்வே தேவர்கள் ...... பெருமாளே. நாலிரண்டு இதழாலே கோலிய ஞால் அம் முண்டகம் மேலே தான் இள ஞாயிறு என்று உறு கோலா காலனும் அதின் மேலே ஞாலம் உண்ட பிராண ஆதாரனும் யோக மந்திர மூலாதாரனு(ம்) நாடி நின்ற ப்ரபாவ ஆகாரனு(ம்) நடுவாக மேல் இருந்த கிரீடா பீடமு(ம்) நூல் அறிந்த மணீ மா மாடமும் மே தகு ப்ரபை கோடா கோடியும் இடமாக வீசி நின்று உள தூபா தீப விசால மண்டபம் மீதே ஏறிய வீர பண்டித வீர ஆசாரிய வினை தீராய் ஆல கந்தரி மோடா மோடி குமாரி பிங்கலை நானா தேசி அமோகி மங்கலை லோக லோகி எவ்வுயிர் பாலும் ஆன சம்ப்ரமி மாதா மாதவி ஆதி அம்பிகை ஞாதா ஆனவர் ஆட மன்றினில் ஆடா நாடிய அபிராமி கால சங்கரி சீலா சீலி த்ரிசூலி மந்த்ர சபாஷா பாஷிணி காள கண்டி கபாலி மாலினி கலியாணி காம தந்திர லீலா லோகினி வாம தந்திர நூல் ஆய்வாள் சிவகாம சுந்தரி வாழ்வே தேவர்கள் பெருமாளே. Back to Top 1002 பொதுப்பாடல்கள் திருப்புகழ் ( - வாரியார் # 1241 ) தனன தனதன தனதன தனதன தனன தனதன தனதன தனதன தனன தனதன தனதன தனதன ...... தனதான கடலை பயறொடு துவரையெ ளவல்பொரி சுகியன் வடைகனல் கதலியி னமுதொடு கனியு முதுபல கனிவகை நலமிவை ...... யினிதாகக் கடல்கொள் புவிமுதல் துளிர்வொடு வளமுற அமுது துதிகையில் மனமது களிபெற கருணை யுடனளி திருவருள் மகிழ்வுற ...... நெடிதான குடகு வயிறினி லடைவிடு மதகரி பிறகு வருமொரு முருகசண் முகவென குவிய இருகர மலர்விழி புனலொடு ...... பணியாமற் கொடிய நெடியன அதிவினை துயர்கொடு வறுமை சிறுமையி னலைவுட னரிவையர் குழியில் முழுகியு மழுகியு முழல்வகை ...... யொழியாதோ நெடிய கடலினில் முடுகியெ வரமுறு மறலி வெருவுற ரவிமதி பயமுற நிலமு நெறுநெறு நெறுவென வருமொரு ...... கொடிதான நிசிசர் கொடுமுடி சடசட சடவென பகர கிரிமுடி கிடுகிடு கிடுவென நிகரி லயில்வெயி லெழுபசு மையநிற ...... முளதான நடன மிடுபரி துரகத மயிலது முடுகி கடுமையி லுலகதை வலம்வரு நளின பதவர நதிகுமு குமுவென ...... முநிவோரும் நறிய மலர்கொடு ஹரஹர ஹரவென அமரர் சிறைகெட நறைகமழ் மலர்மிசை நணியெ சரவண மதில்வள ரழகிய ...... பெருமாளே. கடலை பயறொடு துவரை எள் அவல் பொரி சுகியன் வடை க(ன்)னல் கதலி இ(ன்)னமுதொடு கனியும் முது பல கனி வகை நலம் இவை இனிதாகக் கடல் கொள் புவி முதல் துளிர்வொடு வளம் உற அமுது துதி கையில் மனம் அது களி பெற கருணையுடன் அ(ள்)ளி திருவருள் மகிழ்வுற நெடிதான குடகு வயிறினில் அடைவிடு மத கரி பிறகு வரும் ஒரு முருகு சண்முக என குவிய இரு கரம் மலர் விழி புனலொடு பணியாமல் கொடிய நெடியன அதி வினை துயர் கொடு வறுமை சிறுமையின் அலைவுடன் அரிவையர் குழியில் முழுகியும் அழுகியும் உழல் வகை ஒழியாதோ நெடிய கடலினில் முடுகியெ வரம் உறு மறலி வெரு உற ரவி மதி பயம் உற நிலமும் நெறு நெறு நெறு என வரும் ஒரு கொடிதான நிசிரர் கொடுமுடி சட சட சட என பகர கிரி முடி கிடு கிடு கிடு என நிகர் இல் அயில் வெயில் எழு பசுமைய நிறம் உளதான நடனம் இடு(ம்) பரி துரகதம் மயில் அது முடுகி கடுமையில் உலகதை வலம் வரும் நளின பத வர நதி குமு குமு என முநிவோரும் நறிய மலர் கொடு ஹர ஹர ஹர என அமரர் சிறை கெட நறை கமழ் மலர் மிசை ந(ண்)ணியே சரவணம் அதில் வளர் அழகிய பெருமாளே. Back to Top 1015 பொதுப்பாடல்கள் திருப்புகழ் ( - வாரியார் # 1254 ) தனதன தனதன தனதன தனதன தனதன தனதன தத்தத் தத்தன தத்தத் தத்தன ...... தந்ததான விடமென அயிலென அடுவன நடுவன மிளிர்வன சுழல்விழி வித்தைத் குப்பக ரொப்புச் சற்றிலை ...... யென்றுபேசும் விரகுடை வனிதைய ரணைமிசை யுருகிய வெகுமுக கலவியில் இச்சைப் பட்டுயிர் தட்டுப் பட்டுவு ...... ழன்றுவாடும் நடலையில் வழிமிக அழிபடு தமியனை நமன்விடு திரளது கட்டிச் சிக்கென வொத்திக் கைக்கொடு ...... கொண்டுபோயே நரகதில் விடுமெனு மளவினி லிலகிய நறைகமழ் திருவடி முத்திக் குட்படு நித்யத் தத்துவம் ...... வந்திடாதோ இடியென அதிர்குரல் நிசிசரர் குலபதி யிருபது திரள்புய மற்றுப் பொற்றலை தத்தக் கொத்தொடு ...... நஞ்சுவாளி எரியெழ முடுகிய சிலையின ரழகொழு கியல்சிறு வினைமகள் பச்சைப் பட்சித னைக்கைப் பற்றிடு ...... மிந்த்ரலோகா வடவரை யிடிபட அலைகடல் சுவறிட மகவரை பொடிபட மைக்கட் பெற்றிடு முக்ரக் கட்செவி ...... யஞ்சசூரன் மணிமுடி சிதறிட அலகைகள் பலவுடன் வயிரவர் நடமிட முட்டிப் பொட்டெழ வெட்டிக் குத்திய ...... தம்பிரானே. விடம் என அயில் என அடுவன நடுவன மிளிர்வன சுழல் விழி வித்தைக்குப் பகர் ஒப்புச் சற்று இ(ல்)லை என்று பேசும் விரகுடை வனிதையர் அணை மிசை உருகிய வெகுமுக கலவியில் இச்சைப் பட்டு உயிர் தட்டுப்பட்டு உழன்று வாடும் நடலையில் வழி மிக அழி படு தமியனை நமன் விடு திரள் அது கட்டிச் சிக்கென ஒத்திக் கைக்கொடு கொண்டு போயே நரகதில் விடும் எனும் அளவினில் இலகிய நறை கமழ் திருவடி முத்திக்குள் படு நித்யத் தத்துவம் வந்திடாதோ இடி என அதிர் குரல் நிசிசரர் குல பதி இருபது திரள் புயம் அற்றுப் பொன் தலை தத்தக் கொத்தொடு நஞ்சு வாளி எரிஎழ முடுகிய சிலையினர் அழகு ஒழுகு இயல் சிறு வினைமகள் பச்சைப் பட்சி தனைக் கைப்பற்றிடும் இந்த்ரலோகா வடவரை இடிபட அலை கடல் சுவறிட மக வரை பொடி பட மை கண் பெற்றிடும் உக்ரக் கண் செவி அஞ்ச சூரன்மணி முடி சிதறிட அலகைகள் பலவுடன் வயிரவர் நடம் இட முட்டிப் பொட்டு எழ வெட்டிக் குத்திய தம்பிரானே. Back to Top 1028 பொதுப்பாடல்கள் திருப்புகழ் ( குருஜி # 357 - வாரியார் # 1267 ) தான தான தானான தானத் ...... தனதான காதி மோதி வாதாடு நூல்கற் ...... றிடுவோருங் காசு தேடி யீயாமல் வாழப் ...... பெறுவோரும் மாதுபாகர் வாழ்வே யெனாநெக் ...... குருகாரும் மாறி லாத மாகால னூர்புக் ...... கலைவாரே நாத ரூப மாநாத ராகத் ...... துறைவோனே நாக லோக மீரேழு பாருக் ...... குரியோனே தீதி லாத வேல்வீர சேவற் ...... கொடியோனே தேவ தேவ தேவாதி தேவப் ...... பெருமாளே. காதி மோதி வாதாடு நூல்கற்றிடுவோரும் காசு தேடி யீயாமல் வாழப் பெறுவோரும் மாதுபாகர் வாழ்வே யென நெக்குருகாரும் மாறிலாத மாகாலனூர் புக்கலைவாரே நாத ரூப மாநாதர் ஆகத்து உறைவோனே நாகலோக மீரேழு பாருக்கு உரியோனே தீதி லாத வேல்வீர சேவற்கொடியோனே தேவ தேவ தேவாதி தேவப் பெருமாளே. Back to Top 1034 பொதுப்பாடல்கள் திருப்புகழ் ( குருஜி # 382 - வாரியார் # 1273 ) தானத்த தானத்த தானத்த தானத்த தானத்த தானத்த ...... தனதான தோலத்தி யாலப்பி னாலொப்பி லாதுற்ற தோளுக்கை காலுற்ற ...... குடிலூடே சோர்வற்று வாழ்வுற்ற கால்பற்றி யேகைக்கு வேதித்த சூலத்த ...... னணுகாமுன் கோலத்தை வேலைக்கு ளேவிட்ட சூர்கொத்தொ டேபட்டு வீழ்வித்த ...... கொலைவேலா கோதற்ற பாதத்தி லேபத்தி கூர்புத்தி கூர்கைக்கு நீகொற்ற ...... அருள்தாராய் ஆலத்தை ஞாலத்து ளோர்திக்கு வானத்த ராவிக்கள் மாள்வித்து ...... மடியாதே ஆலித்து மூலத்தொ டேயுட்கொ ளாதிக்கு மாம்வித்தை யாமத்தை ...... யருள்வோனே சேலொத்த வேலொத்த நீலத்து மேலிட்ட தோதக்கண் மானுக்கு ...... மணவாளா தீதற்ற நீதிக்கு ளேய்பத்தி கூர்பத்தர் சேவிக்க வாழ்வித்த ...... பெருமாளே. தோல் அத்தியால் அப்பினால் ஒப்பிலாது உற்ற தோளு கை கால் உற்ற குடிலூடே சோர்வு அற்று வாழ்வு உற்ற கால் பற்றி ஏகைக்கு வேதித்த சூலத்தன் அணுகா முன் கோலத்தை வேலைக்கு உள்ளே விட்ட சூர் கொத்தோடே பட்டு வீழ்வித்த கொலை வேலா கோது அற்ற பாதத்திலே பத்தி கூர் புத்தி கூர்கைக்கு நீ கொற்ற அருள் தாராய் ஆலத்தை ஞாலத்து உளோர் திக்கு வானத்தர் ஆவிக்கள் மாள்வித்து மடியாதே ஆலித்து மூலத்தோடே உட் கொள் ஆதிக்கும் ஆம் வித்தையாம் அத்தை அருள்வோனே சேல் ஒத்த வேல் ஒத்த நீலத்து மேலிட்ட தோதக் கண் மானுக்கு மணவாளா தீது அற்ற நீதிக்குள் ஏய் பத்தி கூர் பத்தர் சேவிக்க வாழ்வித்த பெருமாளே. Back to Top 1040 பொதுப்பாடல்கள் திருப்புகழ் ( குருஜி # 384 - வாரியார் # 1279 ) தானா தானா தானா தானா தானா தானத் ...... தனதான சீரா ரூரிற் ...... பெருவாழ்வே தேவே தேவப் ...... பெருமாளே. நாரா லேதோல் நீரா லேயாம் நானா வாசற் ...... குடிலூடே ஞாதா வாயே வாழ்கா லேகாய் நாய்பேய் சூழ்கைக் ...... கிடமாமுன் தாரா ரார்தோ ளீரா றானே சார்வா னோர்நற் ...... பெருவாழ்வே தாழா தேநா யேனா வாலே தாள்பா டாண்மைத் ...... திறல்தாராய் பாரே ழோர்தா ளாலே யாள்வோர் பாவார்வேதத் ...... தயனாரும் பாழூ டேவா னூடே பாரூ டேயூர் பாதத் ...... தினைநாடாச் சீரார் மாதோ டேவாழ் வார்நீள் சேவூர் வார்பொற் ...... சடையீசர் சேயே வேளே பூவே கோவே தேவே தேவப் ...... பெருமாளே. நாராலே தோல் நீராலேயாம் நானா வாசற் குடிலூடே ஞாதாவாயே வாழ்கால் ஏகாய் நாய்பேய் சூழ்கைக்கு இடமாமுன் தாரார் ஆர்தோள் ஈராறானே சார்வானோர்நற் பெருவாழ்வே தாழாதே நாயேன் நாவாலே தாள்பாடாண்மைத் திறல்தாராய் பாரேழோர்தாளாலே யாள்வோர் பாவார்வேதத்து அயனாரும் பாழூடே வானூடே பாரூடேயூர் பாதத்தினை நாடா சீரார் மாதோடேவாழ்வார் நீள் சேவூர்வார் பொற் சடையீசர் சேயே வேளே பூவே கோவே தேவே தேவப் பெருமாளே. Back to Top 1041 பொதுப்பாடல்கள் திருப்புகழ் ( - வாரியார் # 1280 ) தானா தானா தானா தானா தானா தானத் ...... தனதான சீரா ரூரிற் ...... பெருவாழ்வே தேவே தேவப் ...... பெருமாளே. மாதா வோடே மாமா னானோர் மாதோ டேமைத் ...... துனமாரும் மாறா னார்போ னீள்தீ யூடே மாயா மோகக் ...... குடில்போடாப் போதா நீரூ டேபோய் மூழ்கா வீழ்கா வேதைக் ...... குயிர்போமுன் போதா காரா பாராய் சீரார் போதார் பாதத் ...... தருள்தாராய் வேதா வோடே மாலா னார்மேல் வானோர் மேனிப் ...... பயமீள வேதா னோர்மே லாகா தேயோர் வேலால் வேதித் ...... திடும்வீரா தீதார் தீயார் தீயு டேமூள் சேரா சேதித் ...... திடுவோர்தஞ் சேயே வேளே பூவே கோவே தேவே தேவப் ...... பெருமாளே. மாதாவோடே மாமான் ஆனோர் மாதோடே மைத்துனமாரும் மாறானார் போல் நீள்தீ யூடே மாயா மோகக் குடில்போடாப் போதா நீரூடே போய் மூழ்கா வீழ்கா வேதைக்கு உயிர்போமுன் போதா காரா பாராய் சீரார் போதார் பாதத்து அருள்தாராய் வேதாவோடே மால் ஆனார்மேல் வானோர் மேனிப் பயமீளவே தானோர் மேல் ஆகாதேயோர் வேலால் வேதித்திடும் வீரா தீதார் தீயார் தீயு டேமூள் சேரா சேதித்திடுவோர்தம் சேயே வேளே பூவே கோவே தேவே தேவப் பெருமாளே. Back to Top 1045 பொதுப்பாடல்கள் திருப்புகழ் ( குருஜி # 327 - வாரியார் # 1284 ) தனன தான தானான தனன தான தானான தனன தான தானான ...... தனதான அமல வாயு வோடாத கமல நாபி மேல்மூல அமுத பான மேமூல ...... அனல்மூள அசைவு றாது பேராத விதமு மேவி யோவாது அரிச தான சோபான ...... மதனாலே எமனை மோதி யாகாச கமன மாம னோபாவ மெளிது சால மேலாக ...... வுரையாடும் எனதி யானும் வேறாகி எவரும் யாதும் யானாகும் இதய பாவ னாதீத ...... மருள்வாயே விமலை தோடி மீதோடு யமுனை போல வோரேழு விபுத மேக மேபோல ...... வுலகேழும் விரிவு காணு மாமாயன் முடிய நீளு மாபோல வெகுவி தாமு காகாய ...... பதமோடிக் கமல யோனி வீடான ககன கோள மீதோடு கலப நீல மாயூர ...... இளையோனே கருணை மேக மேதூய கருணை வாரி யேயீறில் கருணை மேரு வேதேவர் ...... பெருமாளே. அமல வாயு ஓடாத கமல நாபி மேல் மூல அமுத பானமே மூல அனல் மூள அசைவுறாது பேராத விதமும் மேவி ஓவாது அரிச(ம்) அதான சோபானம் அதனாலே எமனை மோதி ஆகாச கமனமாம் மனோபாவம் எளிது சால மேலாக உரையாடும் எனது யானும் வேறாகி எவரும் யாதும் யான் ஆகும் இதய பாவன அதீதம் அருள்வாயே விமலை தோடி மீதோடு யமுனை போல ஓர் ஏழு விபுத மேகமே போல உலகு ஏழும் விரிவு காணும் மாமாயன் முடிய நீளு மாறு போல வெகு விதா முக ஆகாய பதம் ஓடி கமல யோனி வீடான ககன கோள மீது ஓடும் கலப நீல மாயூர இளையோனே கருணை மேகமே தூய கருணை வாரியே ஈறு இல் கருணை மேருவே தேவர் பெருமாளே. Back to Top 1053 பொதுப்பாடல்கள் திருப்புகழ் ( குருஜி # 325 - வாரியார் # 1292 ) தனன தான தானான தனன தான தானான தனன தான தானான ...... தனதான அதல சேட னாராட அகில மேரு மீதாட அபின காளி தானாட ...... அவளோடன் றதிர வீசி வாதாடும் விடையி லேறு வாராட அருகு பூத வேதாள ...... மவையாட மதுர வாணி தானாட மலரில் வேத னாராட மருவு வானு ளோராட ...... மதியாட வனச மாமி யாராட நெடிய மாம னாராட மயிலு மாடி நீயாடி ...... வரவேணும் கதைவி டாத தோள்வீம னெதிர்கொள் வாளி யால்நீடு கருத லார்கள் மாசேனை ...... பொடியாகக் கதறு காலி போய்மீள விஜய னேறு தேர்மீது கனக வேத கோடூதி ...... அலைமோதும் உததி மீதி லேசாயு முலக மூடு சீர்பாத உவண மூர்தி மாமாயன் ...... மருகோனே உதய தாம மார்பான ப்ரபுட தேவ மாராஜ னுளமு மாட வாழ்தேவர் ...... பெருமாளே. அதல சேட னாராட அகில மேரு மீதாட அபின காளி தானாட ...... அவளோடன் றதிர வீசி வாதாடும் விடையி லேறு வாராட அருகு பூத வேதாள ...... மவையாட மதுர வாணி தானாட மலரில் வேத னாராட மருவு வானு ளோராட ...... மதியாட வனச மாமி யாராட நெடிய மாம னாராட மயிலு மாடி நீயாடி ...... வரவேணும் கதைவி டாத தோள்வீம னெதிர்கொள் வாளி யால்நீடு கருத லார்கள் மாசேனை ...... பொடியாகக் கதறு காலி போய்மீள விஜய னேறு தேர்மீது கனக வேத கோடூதி ...... அலைமோதும் உததி மீதி லேசாயு முலக மூடு சீர்பாத உவண மூர்தி மாமாயன் ...... மருகோனே உதய தாம மார்பான ப்ரபுட தேவ மாராஜ னுளமு மாட வாழ்தேவர் ...... பெருமாளே. Back to Top 1078 பொதுப்பாடல்கள் திருப்புகழ் ( - வாரியார் # 1190 ) தனதன தனதன தத்தத் தத்தத் தாந்தாந் ...... தனதான கொடியன பிணிகொடு விக்கிக் கக்கிக் கூன்போந் ...... தசடாகுங் குடிலுற வருமொரு மிக்கச் சித்ரக் கோண்பூண் ...... டமையாதே பொடிவன பரசம யத்துத் தப்பிப் போந்தேன் ...... தலைமேலே பொருளது பெறஅடி நட்புச் சற்றுப் பூண்டாண் ...... டருள்வாயே துடிபட அலகைகள் கைக்கொட் டிட்டுச் சூழ்ந்தாங் ...... குடனாடத் தொகுதொகு திகுதிகு தொக்குத் திக்குத் தோந்தாந் ...... தரிதாளம் படிதரு பதிவ்ரதை யொத்தச் சுத்தப் பாழ்ங்கான் ...... தனிலாடும் பழயவர் குமரகு றத்தத் தைக்குப் பாங்காம் ...... பெருமாளே. கொடியன பிணி கொ(ண்)டு விக்கிக் கக்கிக் கூன் போந்து அசடு ஆகும் குடில் உற வரும் ஒரு மிக்கச் சித்ரக் கோண் பூண்டு அமையாதே பொடிவன பர சமயத்துத் தப்பிப் போந்தேன் தலை மேலே பொருள் அது பெற அடி நட்புச் சற்றுப் பூண்டு ஆண்டு அருள்வாயே துடி பட அலகைகள் கைக் கொட்டிட்டுச் சூழ்ந்து ஆங்கு உடன் ஆட தொகு தொகு திகு திகு தொக்குத் திக்குத் தோம் தாம் தரி தாளம் படி தரு பதிவ்ரதை ஒத்த சுத்தப் பாழ்ங் கான் தனில் ஆடும் பழயவர் குமர குறத் தத்தைக்குப் பாங்காம் பெருமாளே. 1177 பொதுப்பாடல்கள் திருப்புகழ் ( குருஜி # 399 - வாரியார் # 1056 ) தனன தானன தந்தன தந்தன தனன தானன தந்தன தந்தன தனன தானன தந்தன தந்தன ...... தனதான புகரில் சேவல தந்துர சங்க்ரம நிருதர் கோபக்ர வுஞ்சநெ டுங்கிரி பொருத சேவக குன்றவர் பெண்கொடி ...... மணவாளா புனித பூசுர ருஞ்சுர ரும்பணி புயச பூதர என்றிரு கண்புனல் பொழிய மீமிசை யன்புது ளும்பிய ...... மனனாகி அகில பூதவு டம்புமு டம்பினில் மருவு மாருயி ருங்கர ணங்களு மவிழ யானுமி ழந்தஇ டந்தனி ...... லுணர்வாலே அகில வாதிக ளுஞ்சம யங்களும் அடைய ஆமென அன்றென நின்றதை யறிவி லேனறி யும்படி யின்றருள் ...... புரிவாயே மகர கேதன முந்திகழ் செந்தமிழ் மலய மாருத மும்பல வெம்பரி மளசி லீமுக மும்பல மஞ்சரி ...... வெறியாடும் மதுக ராரம்வி குஞ்சணி யுங்கர மதுர கார்முக மும்பொர வந்தெழு மதன ராஜனை வெந்துவி ழும்படி ...... முனிபால முகிழ்வி லோசன ரஞ்சிறு திங்களு முதுப கீரதி யும்புனை யுஞ்சடை முடியர் வேதமு நின்றும ணங்கமழ் ...... அபிராமி முகர நூபுர பங்கய சங்கரி கிரிகு மாரித்ரி யம்பகி தந்தருள் முருக னேசுர குஞ்சரி ரஞ்சித ...... பெருமாளே. புகரில் சேவல தந்துர சங்க்ரம நிருதர் கோப க்ரவுஞ்சநெ டுங்கிரி பொருத சேவக குன்றவர் பெண்கொடி மணவாளா புனித பூசுரருஞ் சுரரும்பணி புயச பூதர என்று இரு கண்புனல் பொழிய மீமிசை யன்பு துளும்பிய மனனாகி அகில பூதவுடம்பும் உடம்பினில் மருவு மாருயிரும் கரணங்களும் அவிழ யானுமிழந்த இடந்தனில் உணர்வாலே அகில வாதிகளுஞ்சம யங்களும் அடைய ஆமென அன்றென நின்றதை அறிவி லேனறி யும்படி இின்றருள் புரிவாயே மகர கேதன முந்திகழ் செந்தமிழ் மலய மாருதமும் பல வெம்பரிமள சிலீமுகமும் பல மஞ்சரி வெறியாடும் மதுக ராரம் விகுஞ்சணியும் கர மதுர கார்முகமும் பொர வந்தெழு மதன ராஜனை வெந்துவிழும்படி முனி பால முகிழ்விலோசனர் அஞ்சிறு திங்களு முதுபகீரதியும் புனையுஞ்சடைமுடியர் வேதமு நின்று மணங்கமழ் அபிராமி முகர நூபுர பங்கய சங்கரி கிரிகு மாரித்ரி யம்பகி தந்தருள் முருகனே சுர குஞ்சரி ரஞ்சித பெருமாளே. Back to Top 1250 பொதுப்பாடல்கள் திருப்புகழ் ( - வாரியார் # 1153 ) தானான தாத்த தானான தாத்த தானான தாத்த ...... தனதான தீயூதை தாத்ரி பானீய மேற்ற வானீதி யாற்றி ...... கழுமாசைச் சேறூறு தோற்பை யானாக நோக்கு மாமாயை தீர்க்க ...... அறியாதே பேய்பூத மூத்த பாறோரி காக்கை பீறாஇ ழாத்தி ...... னுடல்பேணிப் பேயோன டாத்து கோமாளி வாழ்க்கை போமாறு பேர்த்து ...... னடிதாராய் வேயூறு சீர்க்கை வேல்வேடர் காட்டி லேய்வாளை வேட்க ...... வுருமாறி மீளாது வேட்கை மீதூர வாய்த்த வேலோடு வேய்த்த ...... இளையோனே மாயூர வேற்றின் மீதே புகாப்பொன் மாமேரு வேர்ப்ப ...... றியமோதி மாறான மாக்கள் நீறாக வோட்டி வானாடு காத்த ...... பெருமாளே. தீ ஊதை தாத்ரி பானீயம் ஏற்ற வான் ஈதியால் திகழும் ஆசைச் சேறு ஊறு தோல் பை யானாக நோக்கு(ம்) மா மாயை தீர்க்க அறியாதே பேய் பூதம் மூத்த பாறு ஓரி காக்கை பீறா இழாத் தி(ன்)னு(ம்) உடல் பேணி பேயோன் நடாத்து கோமாளி வாழ்க்கை போம் ஆறு பேர்த்து உன் அடி தாராய் வேய் ஊறு சீரக் கை வேல் வேடர் காட்டில் ஏய்வாளை வேட்க உரு மாறி மீளாது வேட்கை மீது ஊர வாய்த்த வேலோடு வேய்த்த இளையோனே மாயூர ஏற்றின் மீதே புகாப் பொன் மா மேரு வேர்ப் பறிய மோதி மாறு ஆன மாக்கள் நீறாக ஓட்டி வான் நாடு காத்த பெருமாளே. Back to Top 1291 பொதுப்பாடல்கள் திருப்புகழ் ( குருஜி # 380 - வாரியார் # 1092 ) தய்யதன தானத் ...... தனதான துள்ளுமத வேள்கைக் ...... கணையாலே தொல்லைநெடு நீலக் ...... கடலாலே மெள்ளவரு சோலைக் ...... குயிலாலே மெய்யுருகு மானைத் ...... தழுவாயே தெள்ளுதமிழ் பாடத் ...... தெளிவோனே செய்யகும ரேசத் ...... திறலோனே வள்ளல்தொழு ஞானக் ...... கழலோனே வள்ளிமண வாளப் ...... பெருமாளே. துள்ளுமத வேள் கைக் கணையாலே தொல்லைநெடு நீலக் கடலாலே மெள்ளவரு சோலைக் குயிலாலே மெய்யுருகு மானை தழுவாயே தெள்ளுதமிழ் பாட தெளிவோனே செய்யகும ரேச திறலோனே வள்ளல்தொழு ஞானக் கழலோனே வள்ளிமண வாளப் பெருமாளே. Back to Top 1296 பொதுப்பாடல்கள் திருப்புகழ் ( குருஜி # 391 - வாரியார் # 1097 ) தானந்த தானத்தம் ...... தனதான நீலங்கொள் மேகத்தின் ...... மயில்மீதே நீவந்த வாழ்வைக்கண் ...... டதனாலே மால்கொண்ட பேதைக்குன் ...... மணநாறும் மார்தங்கு தாரைத்தந் ...... தருள்வாயே வேல்கொண்டு வேலைப்பண் ...... டெறிவோனே வீரங்கொள் சூரர்க்குங் ...... குலகாலா நாலந்த வேதத்தின் ...... பொருளோனே நானென்று மார்தட்டும் ...... பெருமாளே. நீலங்கொள் மேகத்தின் மயில்மீதே நீவந்த வாழ்வைக்கண்டதனாலே மால்கொண்ட பேதைக்கு உன் மணநாறும் மார்தங்கு தாரைத் தந்தருள்வாயே வேல்கொண்டு வேலைப்பண்டெறிவோனே வீரங்கொள் சூரர்க்குங் குலகாலா நாலந்த வேதத்தின் பொருளோனே நானென்று மார்தட்டும் பெருமாளே. Back to Top 1297 பொதுப்பாடல்கள் திருப்புகழ் ( குருஜி # 394 - வாரியார் # 1098 ) தத்தத் தனான ...... தனதான பட்டுப் படாத ...... மதனாலும் பக்கத்து மாதர் ...... வசையாலும் சுட்டுச் சுடாத ...... நிலவாலும் துக்கத்தி லாழ்வ ...... தியல்போதான் தட்டுப் படாத ...... திறல்வீரா தர்க்கித்த சூரர் ...... குலகாலா மட்டுப் படாத ...... மயிலோனே மற்றொப்பி லாத ...... பெருமாளே. பட்டுப் படாத மதனாலும் பக்கத்து மாதர் வசையாலும் சுட்டுச் சுடாத நிலவாலும் துக்கத்தில் ஆழ்வது இயல்போதான் தட்டுப் படாத திறல்வீரா தர்க்கித்த சூரர் குலகாலா மட்டுப் படாத மயிலோனே மற்றொப்பி லாத பெருமாளே. Back to Top 1306 க்ஷேத்திரக் கோவை திருப்புகழ் ( குருஜி # 322 - வாரியார் # 1002 ) தந்த தானன தானான தந்தன தந்த தானன தானான தந்தன தந்த தானன தானான தந்தன ...... தனதான கும்ப கோணமொ டாரூர் சிதம்பரம் உம்பர் வாழ்வுறு சீகாழி நின்றிடு கொன்றை வேணியர் மாயூர மம்பெறு ...... சிவகாசி கொந்து லாவிய ராமே சுரந்தனி வந்து பூஜைசெய் நால்வேத தந்திரர் கும்பு கூடிய வேளூர் பரங்கிரி ...... தனில்வாழ்வே செம்பு கேசுர மாடானை யின்புறு செந்தி லேடகம் வாழ்சோலை யங்கிரி தென்றன் மாகிரி நாடாள வந்தவ ...... செகநாதஞ் செஞ்சொ லேரக மாவா வினன்குடி குன்று தோறுடன் மூதூர் விரிஞ்சைநல் செம்பொன் மேனிய சோணாடு வஞ்சியில் ...... வருதேவே கம்பை மாவடி மீதேய சுந்தர கம்பு லாவிய காவேரி சங்கமு கஞ்சி ராமலை வாழ்தேவ தந்திர ...... வயலூரா கந்த மேவிய போரூர் நடம்புரி தென்சி வாயமு மேயா யகம்படு கண்டி யூர்வரு சாமீக டம்பணி ...... மணிமார்பா எம்பி ரானொடு வாதாடு மங்கையர் உம்பர் வாணிபொ னீள்மால் சவுந்தரி எந்த நாள்தொறு மேர்பாக நின்றுறு ...... துதியோதும் இந்தி ராணிதன் மாதோடு நன்குற மங்கை மானையு மாலாய்ம ணந்துல கெங்கு மேவிய தேவால யந்தொறு ...... பெருமாளே. கும்ப கோணமொ டாரூர் சிதம்பரம் உம்பர் வாழ்வுறு சீகாழி நின்றிடு கொன்றை வேணியர் மாயூரம் அம்பெறு சிவகாசி கொந்து உலாவிய ராமேசுரம் தனி வந்து பூஜைசெய் நால்வேத தந்திரர் கும்பு கூடிய வேளூர் பரங்கிரி தனில்வாழ்வே செம்பு கேசுரம் ஆடானை இன்புறு செந்தில் ஏடகம் வாழ்சோலை யங்கிரி தென்றன் மாகிரி நாடாள வந்தவ செகநாத செஞ்சொல் ஏரக மாவாவினன்குடி குன்று தோறுடன் மூதூர் விரிஞ்சை நல் செம்பொன் மேனிய சோணாடு வஞ்சியில் வருதேவே கம்பை மாவடி மீதேய சுந்தர கம்பு உலாவிய காவேரி சங்கமுகம் சிராமலை வாழ்தேவ தந்திர வயலூரா கந்த மேவிய போரூர் நடம்புரி தென்சிவாயமு மேயாய் அகம்படு கண்டி யூர்வரு சாமீ க டம்பணி மணிமார்பா எம்பிரானொடு வாதாடு மங்கையர் உம்பர் வாணி பொன் நீள்மால் சவுந்தரி எந்த நாள்தொறும் ஏர்பாக நின்று உறு துதியோதும் இந்தி ராணிதன் மாதோடு நன்குற மங்கை மானையு மாலாய்மணந்து உலகெங்கு மேவிய தேவாலயந்தொறு பெருமாளே. Back to Top 1307 பழமுதிர்ச்சோலை திருப்புகழ் ( குருஜி # 494 - வாரியார் # 441 ) தனதன தான தனதன தான தனதன தான ...... தனதான அகரமு மாகி யதிபனு மாகி யதிகமு மாகி ...... அகமாகி அயனென வாகி அரியென வாகி அரனென வாகி ...... அவர்மேலாய் இகரமு மாகி யெவைகளு மாகி யினிமையு மாகி ...... வருவோனே இருநில மீதி லெளியனும் வாழ எனதுமு னோடி ...... வரவேணும் மகபதி யாகி மருவும் வலாரி மகிழ்களி கூரும் ...... வடிவோனே வனமுறை வேட னருளிய பூஜை மகிழ்கதிர் காம ...... முடையோனே செககண சேகு தகுதிமி தோதி திமியென ஆடு ...... மயிலோனே திருமலி வான பழமுதிர் சோலை மலைமிசை மேவு ...... பெருமாளே. அகரமும் ஆகி அதிபனும் ஆகி அதிகமும் ஆகி அகமாகி அயனென வாகி அரியென வாகி அரனென வாகி அவர் மேலாய் இகரமும் ஆகி எவைகளும்ஆகி இனிமையும் ஆகி வருவோனே இருனில மீதில் எளியனும் வாழ எனதுமுன் ஓடி வரவேணும் மகபதி ஆகி மருவும் வலாரி மகிழ் களி கூரும் வடிவோனே வனமுறை வேடன் அருளிய பூஜை மகிழ் கதிர்காமம் உடையோனே ஜெககண ஜேகு தகுதிமி தோதி திமி என ஆடு மயிலோனே திருமலிவான பழமுதிர்ச்சோலை மலை மிசை மேவு பெருமாளே. Back to Top 1309 பழமுதிர்ச்சோலை திருப்புகழ் ( குருஜி # 497 - வாரியார் # 443 ) தானதன தான தந்த ...... தனதான காரணம தாக வந்து ...... புவிமீதே காலனணு காதி சைந்து ...... கதிகாண நாரணனும் வேதன் முன்பு ...... தெரியாத ஞானநட மேபு ரிந்து ...... வருவாயே ஆரமுத மான தந்தி ...... மணவாளா ஆறுமுக மாறி ரண்டு ...... விழியோனே சூரர்கிளை மாள வென்ற ...... கதிர்வேலா சோலைமலை மேவி நின்ற ...... பெருமாளே. காரணமதாக வந்து புவிமீதே காலனணுகாது இசைந்து கதிகாண நாரணனும் வேதன் முன்பு தெரியாத ஞானநடமே புரிந்து வருவாயே ஆரமுத மான தந்தி மணவாளா ஆறுமுக மாறி ரண்டு விழியோனே சூரர்கிளை மாள வென்ற கதிர்வேலா சோலைமலை மேவி நின்ற பெருமாளே. Back to Top 1313 பழமுதிர்ச்சோலை திருப்புகழ் ( குருஜி # 495 - வாரியார் # 447 ) தான தானதன தத்ததன தத்ததன தான தானதன தத்ததன தத்ததன தான தானதன தத்ததன தத்ததன ...... தந்ததான ஆசை நாலுசது ரக்கமல முற்றினொளி வீசி யோடியிரு பக்கமொடு றச்செல்வளி ஆவல் கூரமண்மு தற்சலச பொற்சபையு ...... மிந்துவாகை ஆர மூணுபதி யிற்கொளநி றுத்திவெளி யாரு சோதிநுறு பத்தினுட னெட்டுஇத ழாகி யேழுமள விட்டருண விற்பதியின் ...... விந்துநாத ஓசை சாலுமொரு சத்தமதி கப்படிக மோடு கூடியொரு மித்தமுத சித்தியொடு மோது வேதசர சத்தியடி யுற்றதிரு ...... நந்தியூடே ஊமை யேனையொளிர் வித்துனது முத்திபெற மூல வாசல்வெளி விட்டுனது ரத்திலொளிர் யோக பேதவகை யெட்டுமிதி லொட்டும்வகை ...... யின்றுதாராய் வாசி வாணிகனெ னக்குதிரை விற்றுமகிழ் வாத வூரனடி மைக்கொளுக்ரு பைக்கடவுள் மாழை ரூபன்முக மத்திகைவி தத்தருண ...... செங்கையாளி வாகு பாதியுறை சத்திகவு ரிக்குதலை வாயின் மாதுதுகிர் பச்சைவடி விச்சிவையென் மாசு சேரழுபி றப்பையும றுத்தவுமை ...... தந்தவாழ்வே காசி ராமெசுரம் ரத்நகிரி சர்ப்பகிரி ஆரூர் வேலுர் தெவுர் கச்சிமது ரைப்பறியல் காவை மூதுரரு ணக்கிரிதி ருத்தணியல் ...... செந்தில்நாகை காழி வேளுர்பழ நிக்கிரி குறுக்கைதிரு நாவ லூர்திருவெ ணெய்ப்பதியின் மிக்கதிகழ் காதல் சோலைவளர் வெற்பிலுறை முத்தர்புகழ் ...... தம்பிரானே. ஆசை நாலு சதுர கமல முற்றின் ஒளி வீசி ஓடி இரு பக்கமொடு உற செல் வளி ஆவல் கூர மண் முதல் சலசம் பொன் சபையும் இந்து வாகை ஆர மூணு பதியில் கொள நிறுத்தி வெளி ஆரு சோதி நூறு பத்தினுடன் எட்டு இதழாகி ஏழும் அளவு இட்டு Back to Top 1315 பழமுதிர்ச்சோலை திருப்புகழ் ( - வாரியார் # 449 ) தானதத்த தான தனாதனா தன தானதத்த தான தனாதனா தன தானதத்த தான தனாதனா தன ...... தனதானா சீர்சிறக்கு மேனி பசேல் பசே லென நூபுரத்தி னோசை கலீர் கலீ ரென சேரவிட்ட தாள்கள் சிவேல் சிவே லென ...... வருமானார் சேகரத்தின் வாலை சிலோர் சிலோர் களு நூறுலக்ஷ கோடி மயால் மயால் கொடு தேடியொக்க வாடி யையோ வையோ வென ...... மடமாதர் மார்படைத்த கோடு பளீர் பளீ ரென ஏமலித்தெ னாவி பகீர் பகீ ரென மாமசக்கி லாசை யுளோ முளோ மென ...... நினைவோடி வாடைபற்று வேளை யடா வடா வென நீமயக்க மேது சொலாய் சொலா யென வாரம்வைத்த பாத மிதோ இதோ என ...... அருள்வாயே பாரதத்தை மேரு வெளீ வெளீ திகழ் கோடொடித்த நாளில் வரைஇ வரைஇ பவர் பானிறக்க ணேசர் குவா குவா கனர் ...... இளையோனே பாடல்முக்ய மாது தமீழ் தமீ ழிறை மாமுநிக்கு காதி லுணார் வுணார் விடு பாசமற்ற வேத குரூ குரூ பர ...... குமரேசா போர்மிகுத்த சூரன் விடோம் விடோ மென நேரெதிர்க்க வேலை படீர் படீ ரென போயறுத்த போது குபீர் குபீ ரென ...... வெகுசோரி பூமியுக்க வீசு குகா குகா திகழ் சோலைவெற்பின் மேவு தெய்வா தெய்வா னைதொள் பூணியிச்சை யாறு புயா புயா றுள ...... பெருமாளே. சீர் சிறக்கும் மேனி பசேல் பசேல் என நூபுரத்தின் ஓசை கலீர் கலீர் என சேர விட்ட தாள்கள் சிவேல் சிவேல் என வரு மானார் சேகரத்தின் வாலை சிலோர் சிலோர்களு(ம்) நூறு லக்ஷ கோடி மயால் மயால் கொடு தேடி ஒக்க வாடி ஐயோ ஐயோ என மடமாதர் மார்பு அடைத்த கோடு பளீர் பளீர் என ஏமலித்து என் ஆவி பகீர் பகீர் என மா மசக்கில் ஆசை உளோம் உளோம் என நினைவு ஓடி வாடை பற்று வேளை அடா அடா என நீ மயக்கம் ஏது சொலாய் சொலாய் என வாரம் வைத்த பாதம் இதோ இதோ என அருள்வாயே பாரதத்தை மேரு வெளீ வெளீ திகழ் கோடு ஒடித்த நாளில் வரை (இ)வரை (இ)பவர் பா(னு) நிறக் கணேசர் கு ஆகு வாகனர் இளையோனே பாடல் முக்ய மாது தமீழ் தமீழ் இறை மா முநிக்கு காதில் உணார் உணார் விடு பாசம் அற்ற வேத குரூ குரூபர குமரேசா போர் மிகுத்த சூரன் விடோம் விடோம் என நேர் எதிர்க்க வேலை படீர் படீர் என போய் அறுத்த போது குபீர் குபீர் என வெகு சோரி பூமி உக்க வீசு குகா குகா திகழ் சோலை வெற்பின் மேவு தெய்வா தெய்வானை தோள் பூணி இச்சை ஆறு புயா புயா ஆறு உள பெருமாளே. Back to Top 1316 பழமுதிர்ச்சோலை திருப்புகழ் ( குருஜி # 500 - வாரியார் # 450 ) தனன தான தான தத்த தனன தான தான தத்த தனன தான தான தத்த ...... தனதான துடிகொ ணோய்க ளோடு வற்றி தருண மேனி கோழை துற்ற இரும லீளை வாத பித்த ...... மணுகாமல் துறைக ளோடு வாழ்வு விட்டு உலக நூல்கள் வாதை யற்று சுகமு ளாநு பூதி பெற்று ...... மகிழாமே உடல்செய் கோர பாழ்வ யிற்றை நிதமு மூணி னாலு யர்த்தி யுயிரி னீடு யோக சித்தி ...... பெறலாமே உருவி லாத பாழில் வெட்ட வெளியி லாடு நாத நிர்த்த உனது ஞான பாத பத்ம ...... முறுவேனோ கடிது லாவு வாயு பெற்ற மகனும் வாலி சேயு மிக்க மலைகள் போட ஆழி கட்டி ...... யிகலூர்போய்க் களமு றானை தேர்நு றுக்கி தலைக ளாறு நாலு பெற்ற அவனை வாளி யால டத்தன் ...... மருகோனே முடுகு வீர சூர பத்மர் தலையின் மூளை நீறு பட்டு முடிவ தாக ஆடு நிர்த்த ...... மயில்வீரா முநிவர் தேவர் ஞான முற்ற புநித சோலை மாமலைக்குள் முருக வேல த்யாகர் பெற்ற ...... பெருமாளே. துடிகொள் நோய்களோடு வற்றி தருண மேனி கோழை துற்ற இருமல் ஈளை வாத பித்தம் அணுகாமல் துறைகளோடு வாழ்வு விட்டு உலக நூல்கள் வாதை யற்று சுகமுள அநுபூதி பெற்று மகிழாமே உடல்செய் கோர பாழ்வயிற்றை நிதமும் ஊணினால் உயர்த்தி உயிரி னீடு யோக சித்தி பெறலாமே உருவிலாத பாழில் வெட்ட வெளியிலாடு நாத நிர்த்த உனது ஞான பாத பத்மம் உறுவேனோ கடிது உலாவு வாயு பெற்ற மகனும் வாலி சேயு மிக்க மலைகள் போட ஆழி கட்டி இகலூர்போய்க் களமுற ஆனை தேர்நுறுக்கி தலைகள் ஆறு நாலு பெற்ற அவனை வாளியால் அடு அத்தன்மருகோனே முடுகு வீர சூர பத்மர் தலையின் மூளை நீறு பட்டு முடிவதாக ஆடு நிர்த்த மயில்வீரா முநிவர் தேவர் ஞான முற்ற புநித சோலை மாமலைக்குள் முருக வேல த்யாகர் பெற்ற பெருமாளே. Back to Top 1318 பழமுதிர்ச்சோலை திருப்புகழ் ( குருஜி # 501 - வாரியார் # 439 ) தானதன தந்த தானதன தந்த தானதன தந்த ...... தனதான வாதினை யடர்ந்த வேல்விழியர் தங்கள் மாயமதொ ழிந்து ...... தெளியேனே மாமலர்கள் கொண்டு மாலைகள் புனைந்து மாபதம ணிந்து ...... பணியேனே ஆதியொடு மந்த மாகிய நலங்கள் ஆறுமுக மென்று ...... தெரியேனே ஆனதனி மந்த்ர ரூபநிலை கொண்ட தாடுமயி லென்ப ...... தறியேனே நாதமொடு விந்து வானவுடல் கொண்டு நானிலம லைந்து ...... திரிவேனே நாகமணி கின்ற நாதநிலை கண்டு நாடியதில் நின்று ...... தொழுகேனே சோதியுணர் கின்ற வாழ்வுசிவ மென்ற சோகமது தந்து ...... எனையாள்வாய் சூரர்குலம் வென்று வாகையொடு சென்று சோலைமலை நின்ற ...... பெருமாளே. வாதினை யடர்ந்த வேல்விழியர் தங்கள் மாயமது ஒழிந்து தெளியேனே மாமலர்கள் கொண்டு மாலைகள் புனைந்து மாபதம் அணிந்து பணியேனே ஆதியொடு மந்த மாகிய நலங்கள் ஆறுமுக மென்று தெரியேனே ஆனதனி மந்த்ர ரூபநிலை கொண்டது ஆடுமயி லென்பது அறியேனே நாதமொடு விந்து வானவுடல் கொண்டு நானிலம் அலைந்து திரிவேனே நாகம் அணிகின்ற நாதநிலை கண்டு நாடியதில் நின்று தொழுகேனே சோதியுணர் கின்ற வாழ்வுசிவ மென்ற சோகமது தந்து எனையாள்வாய் சூரர்குலம் வென்று வாகையொடு சென்று சோலைமலை நின்ற பெருமாளே.
1328 திருவருணைதிருப்புகழ்()
ஏறுமயிலேறிவிளையாடுமுகமொன்றே
ஈசருடன்ஞானமொழிபேசுமுகமொன்றே
கூறுமடியார்கள்வினைதீர்க்குமுகமொன்று
குன்றுருவவேல்வாங்கிநின்றமுகமொன்றே
மாறுபடுசூரரைவதைத்தமுகமொன்றே
வள்ளியைமணம்புணரவந்தமுகமொன்றே
ஆறுமுகமானபொருள்நீயருளல்வேண்டும்
ஆதியருணாசலமமர்ந்தபெருமாளே.