⇰ To Index Page |
Selected Pasurams |
1 and 2:
பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு பலகோடிநூறாயிரம்
மல்லாண்டதிண்தோள் மணிவண்ணா. உன் செவ்வடிசெவ்விதிருக்காப்பு.
அடியோமோடும்நின்னோடும் பிரிவின்றி ஆயிரம்பல்லாண்டு
வடிவாய்நின்வலமார்பினில் வாழ்கின்ற மங்கையும்பல்லாண்டு
வடிவார்சோதிவலத்துறையும் சுடராழியும்பல்லாண்டு
படைபோர்புக்குமுழங்கும் அப்பாஞ்சசன்னியமும் பல்லாண்டே.
Periyalwar blesses Vishnu many and many a thousand years. To the bond between us, many and many a thousand years. To the divine lady resting on your manly chest and always staying with you, many and many a thousand years. To the fiery discus adorning your right shoulder, many and many a thousand years. To the conch Panchajanya that strikes terror in the battlefield, many and many a thousand years.
3: வாழாட்பட்டுநின்றீருள்ளீரேல் வந்துமண்ணும்மணமும்கொண்மின்
கூழாட்பட்டுநின்றீர்களை எங்கள்குழுவினில்புகுதலொட்டோ ம்
ஏழாட்காலும்பழிப்பிலோம்நாங்கள் இராக்கதர்வாழ்இலங்கை
பாழாளாகப்படைபொருதானுக்குப் பல்லாண்டுகூறுதமே. 3
If you are steady in the service to the Lord, come quickly and accept the mud for His utsavam and be affectionate (to that utsavam).We (who seek nothing but Him) will not allow in our group you who are standing (everywhere) in service (to others) for food. For 21 generations (the current seven, the prior seven and we are without any sins/drawbacks. To the Lord who fought the asuras such as Ravana who lived in Lanka and destroyed them in battle, from this day forward we sing Thiruppallandu.
4: ஏடுநிலத்தில்இடுவதன்முன்னம்வந்து எங்கள்குழாம்புகுந்து
கூடுமனமுடையீர்கள் வரம்பொழிவந்துஒல்லைக்கூடுமினோ
நாடும்நகரமும்நன்கறிய நமோநாராயணாயவென்று
பாடுமனமுடைப்பத்தருள்ளீர். வந்துபல்லாண்டுகூறுமினே. 4
Those who have the mind to join our group, before you are placed in the cremation ground, come (from your group) and enter ours. Leaving the limit (of experiencing the soul alone) quickly join us. Those having the bhakti of reciting the Thirumanthra such that the regular people and the intellectuals well understand, and having the thought to sing, come and sing Thiruppallandu.
5: அண்டக்குலத்துக்கதிபதியாகி அசுரரிராக்கதரை
இண்டைக்குலத்தைஎடுத்துக்களைந்த இருடீகேசன்தனக்கு
தொண்டக்குலத்திலுள்ளீர். வந்தடிதொழுது ஆயிரநாமம்சொல்லி
பண்டைக்குலத்தைத்தவிர்ந்து பல்லாண்டுபல்லாயிரத்தாண்டென்மினே. 5.
To the Hrishikesa (one who rules the senses) who becoming the ruler to the collection of worlds collected and destroyed the thronging crowd of asuras and rakshasas, those in the group that performs services come to our group and pray to His divine feet and say His thousand names. Remove the old nature of going to Him, seeking other things and and perform managalashasanam to Him many times.
6: எந்தைதந்தைதந்தைதந்தைதம்மூத்தப்பன் ஏழ்படிகால்தொடங்கி
வந்துவழிவழிஆட்செய்கின்றோம் திருவோணத்திருவிழவில்
அந்தியம்போதிலரியுருவாகி அரியையழித்தவனை
பந்தனைதீரப்பல்லாண்டு பல்லாயிரத்தாண்டென்றுபாடுதமே. 6.
For seven generations starting with me and my father, his father, his father, his father, his father and grandfather, we come (at the right moment to perform in the proper way and perform services. We will perform mangalashasanam to Him for all time to remove the shiver (of being just born) / to remove the who in the form of Narasimha killed the enemy (Hiranya, of His devotee Prahlada) on the divine day of Thiruvonam (Sravanam), at the dusk time (when the strength of asuras grows).
7: தீயிற்பொலிகின்றசெஞ்சுடராழி திகழ்திருச்சக்கரத்தின்
கோயிற்பொறியாலேஒற்றுண்டுநின்று குடிகுடிஆட்செய்கின்றோம்
மாயப்பொருபடைவாணனை ஆயிரந்தோளும்பொழிகுருதி
பாய சுழற்றியஆழிவல்லானுக்குப் பல்லாண்டுகூறுதுமே. 7.
Marked by the spark of the round and shining Sri Sudarshana Chakra's place, which has the glowing red light that is greater than fire, the Sun, etc, for generations and generations we came to perform service. To the One who can hold (in His divine hand) the Sudarshana Chakra that spun (and caused) the blood to pour out like a flood from the thousand shoulders of Banasura, who has the armies that fight with trickery, we sing Thiruppallandu.
8: நெய்யிடைநல்லதோர்சோறும் நியதமும்அத்தாணிச்சேவகமும்
கையடைக்காயும்கழுத்துக்குப்பூணொடு காதுக்குக்குண்டலமும்
மெய்யிடநல்லதோர்சாந்தமும்தந்து என்னைவெள்ளுயிராக்கவல்ல
பையுடைநாகப்பகைக்கொடியானுக்குப் பல்லாண்டுகூறுவனே. 8.
(He) gave me food between ghee that has purity and unparalleled taste; the unbroken service that lasts forever; betel leaves and nuts from His divine hand; ornament for the neck; and the fragrant and unparalleled sandal paste to rub on the body; and made the lowly me as one with sattva guNas. To Him, who has on His flag Garuda, the enemy of the snake with hoods, I am bound to perform mangalashasanam.
9: உடுத்துக்களைந்த நின்பீதகவாடையுடுத்துக் கலத்ததுண்டு
தொடுத்ததுழாய்மலர்சூடிக்களைந்தன சூடும்இத்தொண்டர்களோம்
விடுத்ததிசைக்கருமம்திருத்தித் திருவோணத்திருவிழவில்
படுத்தபைந்நாகணைப்பள்ளிகொண்டானுக்குப் பல்லாண்டுகூறுதுமே. 9.
divine pItAmbara (yellow cloth) that was worn around Your waist and removed (we) wear; the leftovers (from what You accepted) (we) eat; the garlands (made by devotees) made of Tulasi flowers that You wore and removed (we) wear; the actions sent in all directions by such devotees as us are well completed (by You); To You who rests on the bed that is Adisesha which is laid down with its hoods, on the divine day of Thiruvonam we sing Thiruppallandu.
10: எந்நாள்எம்பெருமான் உன்தனக்கடியோமென்றெழுத்துப்பட்ட
அந்நாளே அடியோங்களடிக்குடில் வீடுபெற்றுஉய்ந்ததுகாண்
செந்நாள்தோற்றித் திருமதுரையுள்சிலைகுனித்து ஐந்தலைய
பைந்நாகத்தலைபாய்ந்தவனே. உன்னைப்பல்லாண்டுகூறுதுமே. 10.
Our Lord! whichever day we gave in writing that we are in Your service to You (who is Supreme), on that day itself the household (including our children and grandchildren) of we who are in Your service became Your servants, and escaping from kaivalya attained upliftment. Descended (Born) in the beautiful divine day in the divine Mathura city, and (in Kamsa's weaponry) bent and broke the bow, the Lord who jumped on on the head of the snake Kaliya with its five heads and hoods; to You we perform mangalashasanam.
11: அல்வழக்கொன்றுமில்லா அணிகோட்டியர்கோன் அபிமானதுங்கன்
செல்வனைப்போலத் திருமாலே. நானும்உனக்குப்பழவடியேன்
நல்வகையால்நமோநாராயணாவென்று நாமம்பலபரவி
பல்வகையாலும்பவித்திரனே. உன்னைப்பல்லாண்டுகூறுவனே. (2) 11.
Sriman Narayana! Like Selva Nambi who does not having anything to do with wrong ways, who is head of those in Thirukkottiyur which is a jewel (to this world), who is great in the thought that he is the Lord's servant, I too am Your old servant. O! Lord who removes sins through all ways (svarUpa, Reciting Thirumanthra in the right way and saying in any way Your many divine names, I will perform mangalashasanam to You.
12: பல்லாண்டென்றுபவித்திரனைப்பரமேட்டியை சார்ங்கமென்னும்
வில்லாண்டான்தன்னை வில்லிபுத்தூர்விட்டுசித்தன்விரும்பியசொல்
நல்லாண்டென்றுநவின்றுரைப்பார் நமோநாராயணாயவென்று
பல்லாண்டும்பரமாத்மனைச் சூழ்ந்திருந்தேத்துவர்பல்லாண்டே. (2) 12.
About Him who wields the bow named Sarngam, who is (naturally) pure who resides in the lofty abode of Sri Vaikuntha, Periyazhvar who is named Vishnuchiththa born in Srivilliputtur, saying let auspiciousness happen forever gave with desire this Sri Sukti; those who say it without break that the good time (of singing it for a long time is will surround Sriman Narayana, who is the inner soul of all, and reciting Thirumanthra will praise Him forever.
These words were uttered with love by Villiputtur’s Vishnuchitta (Periyalwar), wishing ‘Pallandu’ for the pure Lord, the large-hearted one, wielder of the Sarnga bow. Those who enjoy singing this surround the Lord at all times chanting ‘Namo Narayanaya’, for them too, many many good years.
முதல் திருமொழி - 13
வண்ணமாடங்கள்சூழ் திருக்கோட்டியூர்
கண்ணன்கேசவன் நம்பிபிறந்தினில்
எண்ணெய்சுண்ணம் எதிரெதிர்தூவிடக்
கண்ணன்முற்றம் கலந்துஅளராயிற்றே.
In Thirukottiyur, a town full of beautiful mansions, people celebrated the birthday of Kannan by sprinkling oil and lime powder, turning the courtyard into mud in joy. அழகிய மாட மாளிகைகள் நிறைந்த திருக்கோட்டியூரில், கண்ணன் பிறந்த நாளைக் கொண்டாட மக்கள் எண்ணெய், சுண்ணப்பொடி தூவி மகிழ்ச்சியில் முற்றம் சேறாக மாறக் கொண்டாடிய திருவிழா.
வேயர்தங்கள்குலத்துதித்த விட்டுசித்தன்மனத்தே
கோயில்கொண்டகோவலனைக் கொழுங்குளிர்முகில்வண்ணனை
ஆயரேற்றைஅமரர்கோவை அந்தணர்தமமுதத்தினை
சாயைபோலப்பாடவல்லார்தாமும் அணுக்கர்களே. 473:
This pasuram is the final song of the Periyazhwar Thirumozhi. The benefit is that those who sing these pasurams like shadows of Gopalan, Megavannan, Ayar Thalaivan, and Devar Koman, who reside in the mind of Periyazhwar (Vittachitthan), will become the closest servants of God. இந்தப் பாசுரம் பெரியாழ்வார் திருமொழியின் பலன் கூறும் இறுதிப் பாடலாகும். பெரியாழ்வார் (விட்டுசித்தன்) மனதில் வீற்றிருக்கும் கோபாலனையும், மேகவண்ணனையும், ஆயர் தலைவனையும், தேவர் கோமானையும் இப்பசுரங்களைப் நிழல் போலத் தொடர்ந்து பாடுவோர் இறைவனின் அணுக்கர்களாக (நெருங்கிய தொண்டர்களாக) மாறுவர் எனப் பலன் உரைக்கிறது.
அன்ன வயற்புதுவை ஆண்டாள் அரங்கற்குப் | பன்னு திருப்பாவைப் பல்பதியம்
இன்னிசையால் பாடிக்கொடுத்தாள் நற்பாமாலை | பூமாலை சூடிக் கொடுத்தாளைச் சொல்லு
சூடிக் கொடுத்தாள் சுடர்க் கொடியே | தொல்பாவைபாடி அருளவல்ல பல்வளையாய்
நாடி நீ வேங்கடவற்கு என்னை விதி ஒன்ற இம்மாற்றம் நாங்கடவா வண்ணமே நல்கு.
Andal from the swan filled fields or Puduvai, composed and sang these songs in her sweet voice. These enchanting songs sung during Pavai festivals are garland to Lord. Like flower garlands were offered to Lord, after wearing
them first (Andal enjoyed these song garlands).
(1)மார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாளால்
நீராடப் போதுவீர் போதுமினோ நேரிழையீர்
சீர் மல்கும் ஆய்ப்பாடிச் செல்வச் சிறுமீர்காள்
கூர்வேல் கொடுந்தொழிலன் நந்தகோபன் குமரன்
ஏரார்ந்த கண்ணி யசோதை இளம் சிங்கம்
கார் மேனி செங்கண் கதிர் மதியம் போல் முகத்தான்
நாராயணனே நமக்கே பறை தருவான்
பாரோர் புகழப் படிந்தேலோர் எம்பாவாய்
Now is the month of Maargazhi and the auspicious full moon day. Come for bathing, Oh richly dressed ladies, from rich homes of cowherds! hear about son of Nanda gopa who protects us with the sharp spear. He is the darling son of Yasodha (lion cub), wearing scented flower garlands, pretty dark-cloud like complexion, eyes of crimson lotus hue, with his lustrous face shining like the sun and cool like the full moon. He will surely grant us all our desires! Come, let us bathe and celebrate the festival, and worship Our Goddess Pavai, for which the world will praise us.
அழகிய அணிகலன்களை அணிந்த கன்னியரே! சிறப்பு மிக்க ஆயர்பாடியில் வசிக்கும் செல்வவளமிக்க சிறுமிகளே! மார்கழியில் முழுநிலா ஒளி வீசும் நல்ல நாள் இது. இன்று நாம் நீராடக் கிளம்புவோம். கூர்மையான வேலுடன் நம்மைப் பாதுகாத்து வரும் அரிய தொழிலைச் செய்யும் நந்தகோபன், அழகிய கண்களையுடைய யசோதாபிராட்டி ஆகியோரின் சிங்கம் போன்ற மகனும், கரிய நிறத்தவனும், சிவந்த கண்களை உடையவனும், சூரியனைப் போல் பிரகாசமான முகத்தையுடையவனும், நாராயணன் நமக்கு அருள் தர காத்திருக்கிறான். அவனை நாம் பாடிப் புகழ்ந்தால், இந்த உலகமே நம்மை வாழ்த்தும்.
(2) வையத்து வாழ்வீர்காள்! நாமும் நம்பாவைக்குச்
செய்யும் கிரிசைகள் கேளீரோ பாற்கடலுள்
பையத் துயின்ற பரமனடி பாடி
நெய்யுண்ணோம் பாலுண்ணோம் நாட் காலே நீராடி
மையிட்டு எழுதோம் மலரிட்டு நாம் முடியோம்
செய்யாதன செய்யோம் தீக்குறளைச் சென்றோதோம்
ஐயமும் பிச்சையும் ஆந்தனையும் கை காட்டி
உய்யுமாற் எண்ணி உகந்தேலோர் எம்பாவாய்.
Oh, people of this world, listen to the austerities we shall perform during daily worship of Pavai. We shall sing the praise of Naarayana who sleeps in the milky ocean. We shall abstain from ghee and milk. We will daily bathe before the dawn, We will not decorate with any collyrium to the eyeor flowers in our hair. We shall neither indulge in gossip nor perform evil actions. Of alms and gifts, we shall give liberally. We shall follow the path of a life of contentment and happiness.
திருமால் கண்ணனாக அவதரித்த ஆயர்பாடியில் வாழும் சிறுமிகளே! நாம், இவ்வுலகில் இருந்து விடுபட்டு, அந்த பரந்தாமனின் திருவடிகளை அடைவதற்காக, நாம் செய்த பாவையை வணங்கி விரதமிருக்கும் வழிமுறைகளைக் கேளுங்கள். நெய் உண்ணக்கூடாது, பால் குடிக்கக்கூடாது. அதிகாலையே நீராடி விட வேண்டும். கண்ணில் மை தீட்டக்கூடாது. கூந்தலில் மலர் சூடக்கூடாது. தீய செயல்களை மனதாலும் நினைக்கக்கூடாது. தீய சொற்களை சொல்லக்கூடாது. இல்லாதவர்களுக்கும், துறவிகளுக்கும், ஞானிகளுக்கும் அவர்கள் போதும் என்று சொல்லுமளவு தர்மம் செய்ய வேண்டும். திருப்தியுடன் மகிழ்ச்சியான வாழ்க்கையின் பாதையை நாம் பின்பற்றுவோம்
(3) ஓங்கி உலகளந்த உத்தமன் பேர் பாடி
நாங்கள் நம் பாவைக்குச் சாற்றி நீராடினால்
தீங்கின்றி நாடெல்லாம் திங்கள் மும் மாரி பெய்து
ஓங்கு பெறும் செந் நெல் ஊடு கயலுகளப்
பூங்குவளைப் போதில் பொறி வண்டு கண் படுப்பத்
தேங்காதே புக்கிருந்து சீர்த்த முலை பற்றி
வாங்க, குடம் நிறைக்கும் வள்ளல் பெரும் பசுக்கள்
நீங்காத செல்வம் நிறைந்தேலோர் எம்பாவாய்
When we sing the glory of the the Lord (Trivikrama) who took the cosmic form and measured the world, And worship our Goddess Pavai to free us from evils. It will then rain three times every month, so that there will be no water shortage. Fishes will gleam and leap amidst the rich paddy plants. Spotted bees will fall sleep among the water lillies. Cow milked tirelessly will yield copious bounties enough to fill pots. Prosperity will thus prevade the land.
வாமனன் மூன்றடிகளால் விண்ணையும் மண்ணையும் அளந்து தன்னுடையதாக்கிக் கொண்ட உத்தமன். அவனது சிறப்பைக் குறித்து பாடி, நம் பாவைக்கு மலர்கள் சாத்தி வழிபடுவதற்கு முன் நீராடச் செல்வோம். இந்த விரதமிருப்பதால், உலகம் முழுவதும் மாதம் மும்முறை மழை பெய்து தண்ணீர் இல்லாத குறையைப் போக்கும். மழை காரணமாக வயல்களில் செந்நெல் செழித்து வளரும். மீன்கள் வயலுக்குள் பாய்ந்தோடி மகிழும். குவளை மலர்களில் புள்ளிகளையுடைய வண்டுகள் தேன் குடிக்க வந்து கிறங்கிக் கிடக்கும். வள்ளல் போன்ற பசுக்கள் பாலை நிரம்பத்தரும். என்றும் வற்றாத செல்வத்தை இந்த விரதம் தரும்.
(4) ஆழி மழைக் கண்ணா! ஒன்று நீ கை கரவேல்
ஆழி உள் புக்கு முகந்து கொடு ஆர்த்து ஏறி
ஊழி முதல்வன் உருவம் போல் மெய் கறுத்துப்
பாழிய் அம் தோளுடைப் பற்பனாபன் கையில்
ஆழி போல் மின்னி வலம்புரி போல் நின்று அதிர்ந்து
தாழாதே சார்ங்க முதைத்த சர மழை போல்
வாழ உலகினில் பெய்திடாய் நாங்களும்
மார்கழி நீராட மகிழ்ந்தேலோர் எம்பாவாய்
O Lord of Rains and Clouds, please do not hold back your gift of rains. For the sake of the global prosperity and for us to bathe in the river during this scared month, Plunge into the sea, gather as much water as there is, make thunder, and rise into the sky in the form of a cloud which would resemble, in its black colour, the body of our l Lord. May you then pour down your bountiful showers! Make lightning like the discus held by Lord Padmanabha. Your thunderous roar would reverberate like the conch Panchajanya held by our Lord in his left hand. May you bring forth rains in abundance without a pause like the flow of arrows from the Lord's bow Sarangam! This will make everyone happy!
மேகத்திற்கு அதிபதியே! உன்னிடம் ஒரு சொட்டு தண்ணீரைக் கூட வைத்துக் கொள்ளாதே. கடல் நீர் முழுவதையும் முகர்ந்து கொண்டு மேலே சென்று, உலகாளும் முதல்வனாகிய கண்ணனின் நிறம் போல் கருத்து, வலிமையான தோள்களையுடைய பத்மநாபனின் கையிலுள்ள பிரகாசமான சக்கரத்தைப் போல் மின்னலை வீசி, வலம்புரி சங்கு ஒலிப்பது போல் இடி ஒலியெழுப்பி, வெற்றியை மட்டுமே ஈட்டும் அவனது சார்ங்கம் என்னும் வில்லில் இருந்து புறப்படும் அம்புகளைப் போல் மழை பொழிவாயாக! அம்மழையால் இவ்வுலகில் எல்லோரும் மகிழ்வுடன் வாழ்வோம். மார்கழி நீராடலுக்காக எல்லா நீர்நிலைகளையும் நிரப்பி எல்லோரையும் மகிழ்ச்சியடையச் செய்வாயாக.
(5) மாயனை மன்னு வட மதுரை மைந்தனைத்
தூய பெரு நீர் யமுனைத் துறைவனை
ஆயர் குலத்தினில் தோன்றும் அணி விளக்கைத்
தாயைக் குடல் விளக்கம் செய்த தாமோதரனைத்
தூயோமாய் வந்து நாம் தூமலர் தூவித் தொழுது
வாயினால் பாடி மனத்தினால் சிந்திக்கப்
போய பிழையும் புகுதருவான் நின்றனவும்
தீயினில் தூசாகும் செப்பேலோர் எம்பாவாய்.
Our mysterious Lord, born at North Mathura, who sports in the pure deep waters of river Yamuna and who is the jewel-light of the race of cowherds! , Damodhara who made , His mothers womb holy, (also foster mother Yasoda joyful by showing her his little belly with the imprint of the tiny ropes with which she bound him). If we approached Him with pure mind and body and worship Him with fresh and fragant flowers, singing His praise and meditating on Him, then all our mistakes of the past, And all that we will do in future, Will vanish as ashes in fire.
வியப்புக்குரிய செயல்களைச் செய்பவனும், மதுராபுரியில் அவதரித்தவனும், பெருகியோடும் தூய்மையான நீரைக் கொண்ட யமுனை நதிக்கரையில் விளையாடி மகிழ்ந்தவனும், ஆயர்குலத்தில் பிறந்த அழகிய விளக்கு போன்றவனும், தேவகி தாயாரின் வயிற்றுக்கு பெருமை அளித்தவனும், இவனது சேஷ்டை பொறுக்காத யசோதை தாய் இடுப்பில் கயிறைக் கட்ட அது அழுத்தியதால் ஏற்பட்ட தழும்பை உடையவனும் ஆன எங்கள் கண்ணனை, நாங்கள் தூய்மையாக நீராடி, மணம் வீசும் மலர்களுடன் காண புறப்படுவோம். அவனை மனதில் இருத்தி அவன் புகழ் பாடினாலே போதும்! செய்த பாவ பலன்களும், செய்கின்ற பாவ பலன்களும் தீயினில் புகுந்த தூசு போல காணாமல் போய்விடும்.
(6) புள்ளும் சிலம்பின காண் புள்ளரையன் கோயில்
வெள்ளை விளி சங்கின் பேரரவம் கேட்டிலையோ
பிள்ளாய்! எழுந்திராய் பேய் முலை நஞ்சுண்டு
கள்ளச் சகடம் கலக்கழியக் காலோச்சி
வெள்ளத்தரவில் துயிலமர்ந்த வித்தினை
உள்ளத்துக் கொண்டு முனிவர்களும் யோகிகளும்
மெள்ள எழுந்து அரி என்ற பேரரவம்
உள்ளம் புகுந்து குளிர்ந்தேலோர் எம்பாவாய்
Did you not hear the chirp of the early birds? Did you not hear the loud sound of white conch, from the temple of the king of Garuda? girls wake up, Let us hear the holy sounds of “Hari from sages and ascetics, who are reenacting in their own minds the deeds of the child-God who sucked the pioson from the breast of the demoness, Putana and who kicked to death, with his little toe, the demon who came to destroy Him in the guise of a cart. Their minds are focussed on the great Lord, who sleeps on the serpent-couch in the ocean of milk
பறவைகள் அதிகாலையில் எழுந்து கீச்சிடும் இனிய ஒலி இன்னும் கேட்கவில்லையா? கருடனை வாகனமாகக் கொண்ட எம்பிரானின் கோயிலில் வெள்ளை நிற சங்குகள் எழுப்பும் முழக்கம் காதில் விழவில்லையா? பேய் வடிவம் எடுத்து. தன்னைக் கொல்ல வந்த பூதகி என்ற அரக்கியிடம் பால் குடிப்பது போல் நடித்து அவளது உயிரைப் பறித்தவனும், சக்கர வடிவில் வந்த சகடன் என்ற அரக்கனின் உயிரைக் குடித்தவனுமான கண்ண பிரானை யோகிகளும், முனிவர்களும் ஹரி ஹரி என்று அழைக்கும் குரலுமா உன்னை எட்டவில்லை! உடனே எழுந்து இவற்றையெல்லாம் கேட்டு உள்ளம் குளிர்வாயாக.
(7) கீசு கீசு என்று எங்கும் ஆனைச் சாத்தான் கலந்து
பேசின பேச்சரவம் கேட்டிலையோ பேய்ப் பெண்ணே
காசும் பிறப்பும் கலகலப்பக் கை பேர்த்து
வாச நறும் குழல் ஆய்ச்சியர் மத்தினால்
ஓசை படுத்த தயிரரவம் கேட்டிலையோ
நாயகப் பெண் பிள்ளாய் நாராயணன் மூர்த்தி
கேசவனைப் பாடவும் நீ கேட்டே கிடத்தியோ
தேசமுடையாய் திறவேலோர் எம்பாவாய்
Did you not hear , screeching chatter of the king-crows? And the sound of the cowherd women wearing fragant flowers in their locks of hair churning the curd in the urns, using both thier hands, with their bracelets and other ornaments clashing against one another and producing that jingling sound? How can you sleep, after you have heard our singing about Narayana and Kesava? Dear girl of radiant presence! Come on open the door!
ஆனைச்சாத்தன் என்றழைக்கப்படும் வலியன்குருவிகள் கீச்சிடும் குரலும், அவை தங்கள் துணையுடன் பேசும் ஒலியும் உனக்கு கேட்கவில்லையா? வாசனை மிக்க கூந்தலை உடைய ஆய்க்குலப் பெண்கள் மத்து கொண்டு தயிர் கடையும் ஓசையும், அவர்களது அணிந்துள்ள ஆபரணங்கள் ஒலியெழுப்புவதும், இன்னுமா கேட்கவில்லை? நாங்கள் நாராயணான கேசவனைப் புகழ்ந்து பாடுவது உன் காதில் கேட்டும் உறங்கும் மர்மமென்ன? பிரகாசமான முகத்தைக் கொண்டவளே! உன் வீட்டுக்கதவைத் திற.
(8) கீழ் வானம் வெள்ளென்று எருமை சிறு வீடு
மேய்வான் பரந்தன காண் மிக்குள்ள பிள்ளைகளும்
போவான் போகின்றாரைப் போகாமல் காத்து உன்னைக்
கூவுவான் வந்து நின்றோம் கோதுகலம் உடைய
பாவாய்! எழுந்திராய் பாடிப் பறை கொண்டு
மாவாய் பிளந்தானை மல்லரை மாட்டிய
தேவாதி தேவனைச் சென்று நாம் சேவித்தால்
ஆவாவென்று ஆராய்ந்து அருளேலோர் எம்பாயாய்
The eastern sky has become white and buffalos are free to walk and graze. Even kept the other girls from moving ahead, for your sake and here we are, at you doorstep. to call you. Let us march singing the praise of our Lord of Lords who killed the demon Kesi who came in the guise of a horse by cleaving his mouth and who slew the wrestlers sent by Kamsaa. Our Lord will surely bestow His grace on us after due consideration for our devotion.
கிழக்கே வெளுத்து எருமைகள் மேய்ச்சலுக்காக புல் மைதானங்களில் நிற்கின்றன. எல்லாப் பெண்களும் நீராடுவதற்காகப் போக வேண்டும் என அவசரப்படுத்துகிறார்கள். ஆனாலும் உனக்காக தடுத்து நிறுத்தி விட்டு, உன்னைக் கூவிக் கூவி அழைக்கிறோம். கேசி என்னும் அரக்கன் குதிரை வடிவில் வந்த போது அதன் வாயைப் பிளந்து கொன்றவனும், கம்சனால் அனுப்பப்பட்ட முஷ்டிகர் உள்ளிட்ட மல்லர்களை வென்றவனும், தேவாதி தேவனுமான கிருஷ்ணனை நாம் வணங்கினால், அவன் ‘ஆ’ என்று அலறிக்கொண்டு நமக்கு அருள் தருவான். பெண்ணே! உடனே கிளம்பு.
(9) தூமணி மாடத்து சுற்றும் விளக்கெரியத்
தூபம் கமழத் துயிலணைமேல் கண் வளரும்
மாமான் மகளே மணிக் கதவம் தாழ் திறவாய்
மாமீர் அவளை எழுப்பீரோ? உன் மகள் தான்
ஊமையோ? அன்றி செவிடோ? அனந்தலோ?
ஏமப் பெருந் துயில் மந்திரப் பட்டாளோ?
மாமாயன் மாதவன் வைகுந்தன் என்றென்று
நாமன் பலவும் நவின்றேலோர் என்பாவாய்
Oh my uncle’s daughter , who sleeps luxurious bed in the gem-studded mansion, surrounded by lights all around and bathed in fragrance of incense! Please open the ornamental door. Oh aunt, why don’t you wake her up, Is your daughter dumb or deaf or lazy? Is she in trance of deep pleasurable sleep because of magic/spell? Shall we chant the thousand and odd names of our Lord-God of the great mystic power, the spouse of Goddess Mahalaksimi, the supreme Lord of Vaikunda and so on
(Indulgence/Comforts make one lazy and forget their duty and commitment)
பிரகாசமான நவரத்தினங் களால் கட்டப்பட்ட மாளிகையில், சுற்றிச்சூழ விளக்கெரிய, நறுமணதிரவியம் மணம் வீச, அழகிய பஞ்சுமெத்தையில் உறங்கும் எங்கள் மாமன் மகளே! உன் வீட்டு மணிக்கதவைத் திறப்பாயாக. எங்கள் அன்பு மாமியே! அவளை நீ எழுப்பு. உன் மகளை எத்தனை நேரமாக நாங்கள் கூவி அழைக்கிறோம்! அவள் பதிலே சொல்லவில்லையே! அவள் ஊமையா? செவிடா? சோம்பல் அவளை ஆட்கொண்டு விட்டதா? அல்லது எழ முடியாதபடி ஏதாவது மந்திரத்தில் சிக்கி விட்டாளா? உடனே எழு. எங்களுடன் இணைந்து மாயங்கள் செய்பவன், மாதவத்துக்கு சொந்தக்காரன், வைகுண்டத்துக்கு அதிபதி என்றெல்லாம் அந்த நாராயணனின் திருநாமங்களைச் சொல்.
(10) நோற்றுச் சுவர்க்கம் புகுகின்ற அம்மனாய்!
மாற்றமும் தாராரோ? வாசல் திறவாதார்
நாற்றத் துழாய் முடி நாராயணன் நம்மால்
போற்றப் பறை தரும் புண்ணியனால் பண்டு ஒரு நாள்
கூற்றத்தின் வாய் வீழ்ந்த கும்பகரணனும்
தோற்றும் உனக்கே பெருந்துயில் தான் தந்தானோ?
ஆற்ற அனந்தல் உடையாய்; அருங்கலமே!
தேற்றமாய் வந்து திறவேலோர் எம்பாவாய்.
Striving to enter heaven through practising austerties? If you can't open the door, can't you at least respond to our call? If we pray to Narayana, with the scented garland of holy basil, He would give us gifts , many, He is the same who is holy in times ancient, sent Kumbhakarna to his death , after beating him in the field of war. Did that Kumbhakarna give you his sleep, before dying? Come on, our precious gem! Shake off your inertia and come with a clear head! Do open the door!
நோன்பிருந்ததன் பயனாக, இப்போது சொர்க்கம் போல் சுகத்தை அனுபவிக்கின்ற பெண்ணே! உன் இல்லக்கதவை திறக்காவிட்டாலும் பரவாயில்லை. பேசவும் மாட்டாயோ? நறுமணம் வீசும் துளசியை தலையில் அணிந்த நாராயணனை நாம் போற்றி பாடினால் அவன் நம் நோன்புக்குரிய பலனை உடனே தருவான். முன்னொரு காலத்தில், கும்பகர்ணன் என்பவனை தூக்கத்திற்கு உதாரணமாகச் சொல்வார்கள். உன் தூக்கத்தைப் பார்த்தால், நீ அவனையும் தோற்கடித்து விடுவாய் போல் தெரிகிறது. சோம்பல் திலகமே! கிடைத்தற்கரிய அணிகலனே! எந்த தடுமாற்றமும் இல்லாமல் கதவைத் திறந்து வெளியே வா.
(11) கற்றுக் கறவைக் கணங்கள் பல கறந்து
செற்றார் திறலழியச் சென்று செருச் செய்யும்
குற்றம் ஒன்றில்லாத கோவலர்த்தம் பொற்கொடியே!
புற்று அரவு அல்குல் புனமயிலே போதராய்
சுற்றத்து தோழிமார் எல்லாரும் வந்து நின்
முற்றம் புகுந்து முகில் வண்ணன் பேர் பாட
சிற்றாதே பேசாதே செல்வ பெண்டாட்டி! நீ
எற்றுக்கு உறங்கும் பொருளேலோர் எம்பாவாய்
Oh daughter of the cattle baron, Who milks herds of cows, wages war on enemies, makes his enemies loose their strength! You charming peacock-like darling with your waist resembling the hood of the snake! Is it proper for you to lie motionless and without response to so many of us, your relations and friends who have gathered in the court-yard of your house, when we sing the praise of our Lord, Who has the colour of the cloud! Oh rich lady, How can you neither move nor talk, And lie in deep trance!
கன்றுகளோடு கூடிய பசுக்களிடமிருந்து பால் கறப்பவனாகவும், தங்களைப் பகைத்தவர்களை எதிர்த்து நின்று போரிடும் தன்மையுடையவனும், மாசுமருவற்றவனுமான கோபாலனை தழுவத் துடிக்கின்ற பொற்கொடியே! புற்றில் இருக்கும் பாம்பின் படத்தைப் போன்ற இடுப்பை உடைய, மயில் போன்றவளே! நம் சுற்றுப்புறத்திலுள்ள எல்லாத் தோழியரும் உன் வீட்டு வாசலில் வந்து கூடிவிட்டார்கள். அவர்கள் மேகவண்ணனாகிய கண்ணனைப் புகழ்ந்து பாடிக் கொண்டிருக்கிறார்கள். செல்வத்தையும், பெண்மையையும் புனிதமாய் காப்பவளே! இதையெல்லாம் கேட்டும் அசையாமலும், பேசாமலும் உறங்கிக்கொண்டிருக்கிறாயே! அர்த்தமற்ற இந்த உறக்கத்தினால் உனக்கு என்ன பலன் கிடைக்கப் போகிறது?
(12) கனைத்து இளம் கற்றெருமை கன்றுக்கு இரங்கி
நினைத்து முலை வழியே நின்று பால் சோர
நனைத்து இல்லம் சேறாக்கும் நற் செல்வன் தங்காய்
பனித் தலை வீழ நின் வாசற் கடை பற்றிச்
சினத்தினால் தென் இலங்கைக் கோமானைச் செற்ற
மனத்துக்கு இனியானைப் பாடவும் நீ வாய் திறவாய்
இனித்தான் எழுந்திராய் ஈதென்ன பேர் உறக்கம்
அனைத்து இல்லத்தாரும் அறிந்தேலோர் எம்பாவாய்
Hey, sister of the rich one owning mooing she buffalo with a calf! The mansion is filled with mud and slush with the buffaloes pouring forth milk from their udder in their yearning to suckle their young calves. We are assembled in thine yard, unmindful of dew falling on our head, singing the glory of our beloved Lord, who destroyed, out of righteous indignation the King of Lanka, in the south. What about you? Not a word in reponse to our call! All the residents are awake! Why is all this deep slumber? At least now, get up and get going!
பசியால் கதறித் திரியும் தங்கள் கன்றுகளை எண்ணிய எருமைகள் தங்கள் மடியில் சொரியும் பாலைச் சிந்தியபடியே அங்குமிங்கும் செல்கின்றன. அவை சொரிந்த பால் இல்லத்து வாசல்களை சேறாக்குகின்றது. இந்த அளவுக்கு விடாமல் பால் சொரியும் எருமைகளுக்கு சொந்தக்காரனான ஆயனின் தங்கையே! கொட்டுகின்ற பனி எங்கள் தலையில் விழ, உன் வீட்டு தலைவாசலில் நாங்கள் காத்து நிற்கிறோம். சீதையைக் கவர்ந்து சென்ற ராவணனின் மீது கோபம் கொண்டு அவனை அழிக்க ராமாவதாரம் எடுத்த கோமானாகிய அந்த நாராயணனின் பெருமையைப் பாடுகிறோம். நீயோ, இன்னும் பேசாமல் இருக்கிறாய். எல்லா வீடுகளிலும் அனைவரும் எழுந்து விட்ட பிறகும், உனக்கு மட்டும் ஏன்பேருறக்கம்?
(13) புள்ளின் வாய் கீண்டானைப் பொல்லா அரக்கனைக்
கிள்ளிக் களைந்தானைக் கீர்த்தி மை பாடிப் போய்ப்
பிள்ளைகள் எல்லாரும் பாவைக் களம்புக்கார்
வெள்ளி எழுந்து வியாழம் உறங்கிற்று
புள்ளும் சிலம்பின காண் போதரிக் கண்ணினாய்!
குள்ளக் குளிரக் குடைந்து நீராடாதே
பள்ளிக் கிடத்தியோ. பாவாய். நீ நன் நாளால்
கள்ளம் தவிர்ந்து கலந்தேலோர் எம்பாவாய்.
The lasses have reached, The place of prayer for Pavai, Singing the fame of our Lord. Who killed the ogre who came like a stork. And who cut off the heads of the bad ogre , One by one. The nevus has risen in the morn, The Jupiter has vanished from the sky, The birds are making lot of sound, Of beautiful one with wide eyes red as a flower. Without taking bath by dipping again and again, In ice cold water, Would you prefer to sleep. Oh lass, On this holy day, Do not stay aside, And come to bathe with us. And worship our Goddess Pavai.
பறவை வடிவம் கொண்டு வந்த பகாசுரனின் வாயைப் பிளந்து அழிக்கவும், பிறன்மனை நாடிய ராவணனின் தலையைக் கொய்யவும் அவதாரம் எடுத்த நாராயணனின் புகழைப் பாடியபடியே, நம் தோழியர் எல்லாரும் பாவை விரதம் இருக்கும் இடத்திற்கு சென்றாகி விட்டது. கீழ்வானத்தில் வெள்ளி முளைத்து விட்டது. வியாழன் மறைந்து விட்டது. பறவைகள் கீச்சிட்டு பாடுகின்றன. தாமரை மலர் போன்ற கண்களையுடைய பெண்ணே! விடியலை உணர்த்தும் இந்த அறிகுறிகள் தெரிந்தும் உடல்நடுங்கும்படி, குளிர்ந்த நீரில் நீச்சலடித்து குளிக்க வராமல் என்ன செய்கிறாய்? அந்தக் கண்ணனை நினைக்கும் ஒவ்வொரு நாளும் நன்னாளே! மார்கழியில் அவனை நினைப்பது இன்னும் சிறப்பல்லவா? எனவே, தூக்கம் என்கிற திருட்டை தவிர்த்து எங்களுடன் நீராட வா.
(14) உங்கள் புழக்கடைத் தோட்டத்து வாவியுள்
செங்கழுனீர் வாய் நெகிழ்ந்து ஆம்பல் வாய் கூம்பின காண்
செங்கற் பொடிக் கூரை வெண்பல் தவத்தவர்
தங்கள் திருக்கோயில் சங்கிடுவான் போதன்றார்
எங்களை முன்னம் எழுப்புவான் வாய்பேசும்
நங்காய் எழுந்திராய் நாணாதாய் நாவுடையாய்
சங்கோடு சக்கரம் ஏந்தும் தடக்கையன்
பங்கயக் கண்ணானைப் பாடேலோர் எம்பாவாய்.
In the pond in the backyard of your house. The lily in the ponds have opened, The night flowers have closed, The white toothed sages, Who wear clothes as red as, The powder of brick, Are going to their temples. To sound the conch. You who promised to wake us up, Please wake up, Are you not ashamed, You chatter box, Let us all sing about the lotus eyed one, Who has a holy conch and wheel , In his hands, And worship our Goddess Pavai.
எங்களை முன்னதாகவே வந்து எழுப்புவேன் என்று வீரம் பேசிய பெண்ணே! கொடுத்த வாக்கை மறந்ததற்காக வெட்கப்படாதவளே! உங்கள் வீட்டின் பின்வாசலிலுள்ள தோட்டத்து தடாகத்தில் செங்கழுநீர் மலர்கள் மலர்ந்து விட்டன. ஆம்பல் மலர்கள் தலை கவிழ்ந்தன. காவி உடையணிந்த துறவிகள் தங்கள் வெண்பற்கள் ஒளிவீச கோயில்களை நோக்கி, திருச்சங்கு முழக்கம் செய்வதற்காக சென்று கொண்டிருக்கின்றனர்.ஆனால், பெண்ணே! சங்கும் சக்கரமும் ஏந்திய பலமான கரங்களை உடையவனும், தாமரை போன்ற விரிந்த கண்களையுடையவனுமான கண்ணனைப் பாட இன்னும் நீ எழாமல் இருக்கிறாயே!
விளக்கம்: கொடுத்த வாக்கை தவற விடவே கூடாது. வாக்கு கொடுப்பது மிக எளிது. அதைக் காப்பாற்ற முடியுமா என தெரிந்து பேச வேண்டும். வாக்கு கொடுத்து விட்டு பிறரை ஏமாற்றுபவர்கள், கொஞ்சம் கூட வெட்கமின்றித் திரிகிறார்களே என ஆண்டாள் வருந்துகிறாள். நாக்கு சரியானதை மட்டுமே பேச வேண்டும், சொன்னதைச் செய்ய வேண்டும் என்பது இப்பாடல் உணர்த்தும் கருத்து.
(15) எல்லே. இளம் கிளியே இன்னம் உறங்குதியோ?
சில் என்று அழையேன் மின் நங்கையீர் போதருகின்றேன்
வல்லை உன் கட்டுரைகள் பண்டே உன் வாய் அறிதும்
வல்லீர்கள் நீங்களே நானே தான் ஆயிடுக
ஒல்லை நீ போதாய் உனக்கென்ன வேறுடையை
எல்லாரும் போந்தாரோ போந்தார் போந்து எண்ணிக்கொள்
வல் ஆனை கொன்றானை மாற்றாரை மாற்றழிக்க
வல்லானை மாயனைப் பாடேலோர் எம்பாவாய்
“Hey, little bird, Are you still sleeping? ” “Don’t disturb my sleep , Lasses, I will just come”. “You are good in your speech, We know what you mean.” “You be good, but leave me alone” “Come quickly, why is it different for you?” “Have every one gone?” “Gone, think they have gone” “Please wake up and sing, Of he who killed the big elephant , Of him who can remove enmity from enemies, And of him who is the holy enchanter, And worship our Goddess Pavai.”
ஏலே என் தோழியே! இளமைக் கிளியே! நாங்களெல்லாம் உனக்காக இவ்வளவு நேரம் காத்திருந்தும், இப்படியெல்லாம் அழைத்தும் உறங்குகிறாயே? என்று சற்று கடுமையாகவே தோழிகள் அவளை அழைத்தனர். அப்போது அந்த தோழி, கோபத்துடன் என்னை அழைக்காதீர்கள்! இதோ வந்து விடுகிறேன், என்கிறாள். உடனே தோழிகள், உன்னுடைய வார்த்தைகள் மிக நன்றாக இருக்கிறது. இவ்வளவு நேரம் தூங்கிவிட்டு இப்போது எங்களிடம் கோபிக்காதே என்கிறாயே, என்று சிடுசிடுத்தனர்.அப்போது அவள், சரி..சரி…எனக்கு பேசத்தெரியவில்லை. நீங்களே பேச்சில் திறமைசாலிகளாய் இருங்கள். நான் ஏமாற்றுக்காரியாக இருந்து விட்டுப் போகிறேன், என்கிறாள்.அடியே! நாங்களெல்லாம் முன்னமே எழுந்து வர வேண்டும். உனக்காக காத்திருக்க வேண்டும். அப்படியென்ன எங்களிடமில்லாத சிறப்பு உனக்கு இருக்கிறது? என்று கடிந்து கொள்கிறார்கள். அவளும் சண்டைக்காரி. பேச்சை விட மறுக்கிறாள். என்னவோ நான் மட்டும் எழாதது போல் பேசுகிறீர்களே! எல்லாரும் வந்துவிட்டார்களா? என்கிறாள்.தோழிகள் அவளிடம், நீயே வெளியே வந்து இங்கிருப்போரை எண்ணிப் பார். வலிமை பொருந்திய குவலயாபீடம் என்னும் யானையை அழித்தவனும், எதிரிகளை வேட்டையாடும் திறம் கொண்டவனுமான மாயக்கண்ணனை வணங்கி மகிழ உடனே வருவாய், என்கிறார்கள்.
(16) நாயகனாய் நின்ற நந்தகோபன் உடைய
கோயில் காப்பானே. கொடி தோன்றும் தோரண
வாயில் காப்பானே. மணிக் கதவம் தாள் திறவாய்
ஆயர் சிறுமியரோமுக்கு அறை பறை
மாயன் மணி வண்ணன் நென்னலே வாய் நேர்ந்தான்
தூயோமாய் வந்தோம் துயில் எழப் பாடுவான்
வாயால் முன்னம் முன்னம் மாற்றாதே அம்மா. நீ
நேய நிலைக் கதவம் நீக்கேலோர் எம்பாவாய்
Hey , He who guards the palace of Nanda Gopa , Hey, who guards the ornamental door with flags, Please be kind to open the door with bells, For yesterday the enchanter Kannan , Has promised to give beating drums, To us the girls from the houses of cow herds. We have come after purification, To wake Him up with song, So do not talk of this and that, Hey dear man, And open the door with closed latches, So that we can worship our Goddess Pavai.
தலைவன் நந்தகோபனின் திருமாளிகையை பாதுகாக்கும் காவலனே! கொடித் தோரணம் கட்டப்பட்ட வாசல் காவலனே! ஆயர்குல சிறுமியரான எங்களுக்காக இந்த மாளிகைக் கதவைத் திறப்பாயாக. மாயச்செயல்கள் செய்பவனும், கரிய நிறத்தவனுமான கண்ணன் எங்களுக்கு ஒலியெழுப்பும் பறை (சிறு முரசு) தருவதாக நேற்றே சொல்லியிருக்கிறான். அதனைப் பெற்றுச்செல்ல நாங்கள் நீராடி வந்திருக்கிறோம். அவனைத் துயிலெழுப்பும் பாடல்களையும் பாட உள்ளோம். அதெல்லாம் முடியாது என உன் வாயால் முதலிலேயே சொல்லி விடாதே. மூடியுள்ள இந்த நிலைக்கதவை எங்களுக்கு திறப்பாயாக. ஒருவர் ஒரு செயலைச் செய்யப் போவதாக தெரிந்த ஒருவரிடம் சொல்கிறார். ஒருவேளை, அது அவருக்கு பிடிக்காமல் இருந்தாலும் கூட, ஆரம்பத்திலேயே, இதைச் செய்யாதே, நீ செய்யப் போவது உருப்படவா போகுது போன்ற அபசகுனமான வார்த்தைகளை பேசிவிடக்கூடாது. அப்படியா? என்று ஆரம்பித்து, செய்யப்போகும் பணியைப் பற்றி முழுமையாகத் தெரிந்துகொண்டு, அதன் பின், இப்படி செய்தால் நன்றாக இருக்குமே என்று சாந்தமாக அறிவுரை சொல்லலாம். சொற்கள் மனித வாழ்வில் மிக முக்கியமானவை என்று ஆண்டாள் இப்பாடல் மூலம் நமக்கு அறிவுறுத்துகிறாள்.
(17) அம்பரமே தண்ணீரே சோறே அறம் செய்யும்
எம்பெருமான் நந்தகோபாலா எழுந்திராய்
கொம்பனார்க்கு எல்லாம் கொழுந்தே குல விளக்கே!
எம்பெருமாட்டி யசோதாய் அறிவுறாய்
அம்பரம் ஊட அறுத்து ஓங்கி உளகு அளந்த
உம்பர் கோமானே உறங்காது எழுந்திராய்
செம் பொற் கழலடிச் செல்வா! பலதேவா!
உம்பியும் நீயும் உறங்கேலோர் எம்பாவாய்.
Hey Nandagopa , who does good deeds and charity, Who gives water, cloth and food to others, Pleas wake up. Our lady Yasodha, who is the light of the homes of cow herds, She who is dear to all the ladies, Please wake up. Hey, Krishna who is the king of Gods, Who went up tearing th sky. Please wake up, and do not sleep. Hey Baladeva , who wears pure golden anklets, Please wake up along with your brother, So we can worship our Goddess Pavai.
ஆடைகளையும், குளிர்ந்த நீரையும், உணவும் பிறர் திருப்திப்படும் அளவுக்கு தர்மம் செய்யும் எங்கள் தலைவரான நந்தகோபரே! தாங்கள் எழுந்தருள வேண்டும். கொடிபோன்ற இடைகளையுடைய பெண்களுக்கு எல்லாம் தலைவியான இளகிய மனம் கொண்ட யசோதையே! மங்களகரமான தீபம் போன்ற முகத்துடன் பிரகாசிப்பவளே! நீ எழ வேண்டும். விண்ணையே கிழித்து உன் திருவடிகளால் உலகளந்த தேவர்களின் தலைவனான எங்கள் கண்ணனே! நீ கண் விழிக்க வேண்டும். செம்பொன்னால் செய்த சிலம்புகளை அணிந்த செல்வத்திருமகனான பலராமனே! நீயும், உன் தம்பியும் உறக்கத்தில் இருந்து எழுந்து எங்களுக்கு தரிசனம் தர வேண்டும். திருப்பாவையில் வாமன அவதாரத்தைச் சிறப்பாக பாடுகிறாள் ஆண்டாள். மூன்று பாசுரங்களில் இந்த அவதாரத்தை அவள் சிறப்பித்திருக்கிறாள். ஓங்கி உலகளந்த உத்தமன் பேர்பாடி என்று மூன்றாவது பாடலிலும், இந்தப் பாடலிலும், 24வது பாடலில் அன்று இவ்வுலகம் அளந்தாய் அடி போற்றி என்றும் சொல்கிறாள். அசுரனாயினும் நல்லவனான மகாபலி, தேவர்களை அடக்கி கர்வம் கொண்டிருந்தான். இந்த கர்வம் அடங்கினால் இறைவனை அடைவது உறுதி என்பதாலேயே நாராயணன் வாமனனாக வந்து அவனை ஆட்கொண்டார். திருப்பாவை பாடுபவர்கள் தான் என்ற கர்வத்தை அடக்க வேண்டும் என்பது இப்பாடல் உணர்த்தும் கருத்து.
(18) உந்து மத களிற்றன் ஓடாத தோள் வலியன்
நந்தகோபன் மருமகளே நப்பின்னாய்!
கந்தம் கமழும் குழலி கடை திறவாய்
வந்து எங்கும் கோழி அழைத்தன காண் மாதவிப்
பந்தல் மேல் பல் கால் குயிலினங்கள் கூவின காண்
பந்து ஆர் விரலி உன் மைத்துனன் பேர் பாடச்
செந்தாமரைக் கையால் சீரார் வளை ஒலிப்ப
வந்து திறவாய் மகிழ்ந்தேலோர் எம்பாவாய்.
Hey , Who is the fair daughter in law, Of Nanda gopa , who has several elephants, And who is a great hero who never ran away from his enemies, Hey Lady Nappinnai ,who has hair surrounded by holy scent, Please be kind to open the door. The cocks are everywhere waking us up, The koels flock on the jasmine Pandals, And coo so that we all wake up, Hey Lady who happily plays ball, To help us sing your Lords fame, With your hands with tingling bangles, Please open the door with happiness, So that we can worship our Goddess Pavai.
மதநீர் சிந்தும் யானைகளை உடையவனும், போரில் பின்வாங்காத தோள்வலிமை உடையவனுமான நந்தகோபனின் மருமகளே! நப்பின்னை பிராட்டியே! வாசனை சிந்தும் கூந்தலை உடையவளே! உன் வாசல் கதவைத் திற! கோழிகள் கூவும் ஒலி நாலாபுறத்தில் இருந்தும் கேட்கிறது. குருக்கத்திக் கொடியின் மேல் அமர்ந்து குயில்கள் பாடத் துவங்கி விட்டன. பூப்பந்தைப் போன்ற மென்மையான விரல்களைக் கொண்டவளே! உன் கணவனின் புகழ் பாட நாங்கள் வந்துள்ளோம். அளவுமாறாத உன் அழகிய வளையல்கள் ஒலிக்க, செந்தாமரைக் கையால் உன் வாசல் கவைத் திறந்தால் எங்கள் உள்ளம் மகிழ்ச்சியடையும். பெருமாள் கோயிலுக்குப் போனால் நேராக சுவாமி சன்னதிக்கு போகக்கூடாது. தாயாரை முதலில் சேவிக்க வேண்டும். வீட்டில் கூட அப்படித்தானே! அப்பாவிடம் கோரிக்கை வைத்தால் எதற்கடா அதெல்லாம் என்று மீசையை முறுக்குவார். அதையே, அம்மாவிடம் சொல்லி அப்பாவிடம் கேட்கச்சொன்னால், அதே கோரிக்கை பத்தே நிமிடத்தில் நிறைவேறி விடும். இதுபோல் தான் நாராயணனிடம் ஒரு கோரிக்கை வைத்தால்…அந்த மாயன் அவ்வளவு எளிதில் ஏற்கமாட்டான். அதையே தாயாரிடம் சொல்லி வைத்துவிட்டால் அவனால் தப்பவே முடியாது. நரசிம்மரின் கோபத்தைக் கூட அடக்கியவள் அல்லவா அவள்! அதனால், கண்ணனின் மனைவி நப்பின்னையை எழுப்பி, கண்ணனை எழுப்புகிறார்கள் பாவை நோன்பிருக்கும் பெண்கள்.
(19) குத்து விளக்கெரிய கோட்டுக் கால் கட்டில் மேல்
மெத்தென்ற பஞ்ச சயனத்தின் மேல் ஏறிக்
கொத்தலர் பூங்குழல் நப்பினை கொங்கை மேல்
வைத்துக் கிடந்த மலர் மார்பா வாய் திறவாய்
மைத் தடம் கண்ணினாய் நீ உன் மணாளனை
எத்தனை போதும் துயிலெழ ஒட்டாய் காண்
எத்தனையேலும் பிரிவு ஆற்றகில்லாயால்
தத்துவம் அன்று தகவேலோர் எம்பாவாய்
In the light of the oil lamp, On the ornamental four legged ivory cot, On the soft bed filled with cotton, Reclining on the busts of Nappinnai , You sleep, Oh he who has a flower like heart, Please open your mouth . She who has , wide black eyes with collyrium. We know that you will never allow him to wake up, For you can never bear to be away from Him, This is not that good, And cannot be accepted by us. Please allow us to worship our Goddess Pavai.
குத்து விளக்கெரிய, யானைத் தந்தத்தால் ஆன கட்டில் மேல் விரிக்கப்பட்ட மிருதுவான பஞ்சுமெத்தையில், விரிந்த கொத்தாக பூ சூடிய நப்பின்னையின் மார்பில் தலை வைத்து கண் மூடியிருக்கும் மலர் மாலை தரித்த கண்ணனே! நீ எங்களுடன் பேசுவாயாக. மை பூசிய கண்களை உடைய நப் பின்னையே! நீ உன் கணவனாகிய கண்ணனை எவ்வளவு நேரமானாலும் தூக்கத்தில் இருந்து எழுப்புவதில்லை. காரணம், கணநேரம் கூட அவனைப் பிரிந்திருக்கும் சக்தியை இழந்து விட்டாய். இப்படிசெய்வது உன் சுபாவத்துக்கு தகுதியாகுமா? பஞ்சசயனம் என்பது அன்னத்தின் தூரிகை, இலவம்பஞ்சு, பூக்கள், கோரைப்புல், மயில் தூரிகை ஆகிய ஐவகை பொருட்களால் செய்யப்பட்ட மெத்தையில், தன் மனைவியின் மார்பின் மீது தலை வைத்து தூங்குகிறானாம் கண்ணன். எழுவானா? அவள் தான் எழ விடுவாளா? ஆனாலும், கண்ணன் ஓரக்கண்ணால் தன் பக்தைகளைப் பார்க்கிறானாம்.நீ எங்களுடன் பேசு என்று பாவைப் பெண்கள் கோரிக்கை எழுப்ப, அவன் ஓரக்கண்களால் பார்த்து நீங்களே அவளிடம் சொல்லுங்கள் என்று தன் மனைவியை நோக்கிசைகை காட்டுகிறானாம். தாயே! நீயே எங்கள் கோரிக்கையை கவனிக்க வில்லையானால், அந்த மாயவனிடம் யார் எடுத்துச் சொல்வார்கள்? அவன் உன் மார்பில் தலைவைத்து கிடக்கும் பாக்கியத்தைப் பெற்றவள் நீ. எங்களுக்கு அவன் வாயால் நன்றாயிருங்கள் என்று ஒரே ஒரு ஆசி வார்த்தை கிடைத்தால் போதும் என்கிறார்கள்.
(20) முப்பத்து மூவர் அமரர்க்கு முன் சென்று
கப்பம் தவிர்க்கும் கலியே! துயில் எழாய்
செப்பம் உடையாய் திறல் உடையாய்! செற்றார்க்கு
வெப்பம் கொடுக்கும் விமலா! துயில் எழாய்
செப்பென்ன மென் முலைச் செவ்வாய்ச் சிறு மருங்குல்
நப்பின்னை நங்காய்! திருவே! துயில் எழாய்
உக்கமும் தட்டொளியும் தந்து உன் மணாளனை
இப்போதே எம்மை நீராட்டேலோர் எம்பாவாய்
Please wake up Oh, Lord, Who removed sorrow and fear, From the thirty three sections of Devas , Even before they approached you, Oh Lord, Who is glittering like gold, Oh Lord, who has inimitable valour, Please wake up, Oh Lady Nappinnai, Who has desirable busts like golden pots. Who has little red mouth, And who has thin narrow hips, Please wake up, Oh Goddess of wealth. Please give mirror and fan, Just now to your consort, And allow us to take bath, And thus worship our Goddess Pavai.
முப்பத்து மூன்று கோடி தேவர்கள் இருந்தாலும், அவர்களுக்கெல்லாம் முன்னதாகச் சென்று பக்தர்களின் துயர் துடைக்கும் கலியுக தெய்வமே! நீ எழுவாயாக! நேர்மையானவனே! ஆற்றல் மிக்கவனே! பகைவர்களுக்கு வியர்வை பெருக்கெடுக்கும்படி செய்யும் தூயவனே! துயில் எழுவாயாக. பொற்கலசம் போன்ற மென்மையான ஸ்தனங்களும், பவளச் செவ்வாயும், சிற்றிடையும் கொண்ட நப்பின்னை பிராட்டியே! லட்சுமிக்கு நிகரானவளே! துயில் எழுவாயாக. எங்களுக்கு விசிறி, கண்ணாடி ஆகியவற்றையும், உன் கணவனாகிய கண்ணனையும் தந்து இப்போதே எங்களை அருள்மழையில் நனையச் செய்வாயாக.
கண்ணனின் திருக்குணங்களையும், நப்பின்னையின் அழகையும் வர்ணிக்கிறார்கள் ஆயர்குலப் பெண்கள். கண்ணன் கடவுள். அவள் எல்லோருக்கும் பொதுவானவன், அவன் நப்பின்னைக்கு மட்டும் சொந்தமானவன் என்று எடுத்துக் கொள்ள முடியாது என்பதால் அவனையும் கேட்கிறார்கள். உக்கமும் தட்டொளியும் ஆகிய விசிறியையும், கண்ணாடியையும் ஏன் கேட்கிறார்கள். விசிறினால் காற்று வரும். வீசுபவனுக்கு மட்டுமல்ல, அருகிலுள்ளவனுக்கும் சேர்த்து! நம் செயல்பாடுகள் நமக்கு மட்டுமின்றி பிறருக்கும் பயன் தருவதாக அமைய வேண்டும் என்பது இதன் உட்கருத்து. கண்ணாடி உருவத்தைக் காட்டும். ஆனால், உருவத்தில் ஒட்டியுள்ள அழகையோ, அழுக்கையோ தன்னில் ஒட்டிக்கொள்ளாது. வாழ்க்கை என்றால் பட்டும் படாமலும், இந்த உடல் ஒரு வாடகை வீடு, இதை எந்த நேரமும் காலி செய்ய வேண்டும் என்ற எண்ணத்துடனும் இருக்க வேண்டும் என்பதை விளக்குகிறது. ஆண்டாளின் கவித்திறமையில் ஒளிந்துள்ள மறைபொருளுக்கு ஈடேது!
(21) ஏற்ற கலங்கள் எதிர் பொங்கி மீதளிப்ப
மாற்றாதே பால் சொரியும் வள்ளல் பெரும் பசுக்கள்
ஆற்றப் படைத்தான் மகனே! அறிவுறாய்
ஊற்றம் உடையாய் பெரியாய் உலகினில்
தோற்றமாய் நின்ற சுடரே துயில் எழாய்
மாற்றார் உனக்கு வலி தொலைந்து உன் வாசற் கண்
ஆற்றாது வந்து உன் அடி பணியுமா போலே
போற்றியாம் வந்தோம் புகழ்ந்தேலோர் எம்பாவாய்
Oh son of him, Who owned several cows, Which gave so much milk, That always the milking vessel got overflowed, Please wake up. Oh Lord, who is full of mercy, Oh Lord, who is better than the best, Oh lord, who is the light that began the world, Please wake up. Like your flock of defeated enemies, Falling at your feet in surrender, We came praising you, So that we get fame, And worship our Goddess Pavai.
கறக்கும் நேரமெல்லாம் பாத்திரங்கள் நிரம்பி வழியும் வகையில் பாலைச் சுரக்கும் வள்ளல் தன்மை கொண்ட பசுக் களுக்கு உரிமையாளரான நந்தகோபனின் மகனே! கண்ணனே! நீ எழுவாயாக. வேதங் களால் போற்றப் படும் வலிமையானவனே! அந்த வேதங்களாலும் அறிய முடியாத பெரியவனே! உலகிற்கே ஒளிகாட்டும் சுடரே! துயில் எழுவாயாக! உன்னை எதிர்த்தவர்களெல்லாம் வலிமையிழந்து, உன் வாசலில் உன் பாதத்தில் விழ காத்துக் கிடப்பது போல, நாங்களும் உன் திருவடியைப் புகழ்ந்து பாட காத்திருக்கிறோம். எங்கள் வேண்டுகோளை ஏற்பாயாக. மன்னாதி மன்னர்களெல்லாம் உன் காலில் விழ காத்துக் கிடப்பது உன்னிடமுள்ள பயத்தால்! ஆனால், நாங்கள் அவர்களைப் போல பயந்த சுபாவம் உள்ளவர்கள் அல்ல! நாங்கள் வா என்று அழைத்தால் நீ வந்தாக வேண்டும். வர மறுத்தால், உன்னை எங்கள் அன்பென்னும் கயிறால் கட்டிப் போட்டு விடுவோம். அப்போது, நீ தப்பவே முடியாது என்கிறார்கள் ஆயர்குலப் பெண்கள். ஆம்… ஆண்டாள் மாலைக்குள் புதைந்து கிடந்த ஒரு தலைமுடியால் அவனைக் கட்டிப் போட்டு விட்டாளே! அந்த ரங்கநாதன் அவளிடம் வசமாக சிக்கிக் கொண்டானே! இதுதான் பக்தியின் உச்சநிலை. பகவானிடம் நம்மை அர்ப்பணித்து விட்டால், அவன் நம்மிடமிருந்து தப்பி ஓடமுடியாது என்பது இப்பாடலின் உட்கருத்து.
(22) அம் கண் மா ஞாலத்து அரசர் அபிமான
பங்கமாய் வந்து நின் பள்ளிக் கட்டிற் கீழே
சங்கம் இருப்பார் போல் வந்து தலைப்பெய்தோம்
கிங்கிணி வாய்ச் செய்த தாமரைப் பூப் போலே
செங்கண் சிறுச் சிறிதே எம்மேல் விழியாவோ
திங்களும் ஆதித்தனும் எழுந்தாற் போல்
அம் கண் இரண்டும் கொண்டு எங்கள் மேல் நோக்குதியேல்
எங்கள் மேல் சாபம் இழிந்தேலோர் எம்பாவாய்
Like all the famous kings Of the wide World, that is pretty, Have crowded near your cot, After surrendering their ego, We also have come near. Will not the sight , Of your red eyes which is like the lotus Fall little by little on us? If you see us using those eyes, Which are like sun and the moon, All the curse on us will vanish, And we can worship our Goddess Pavai
கண்ணா! எங்களை விட உயர்ந்த வீரர்கள் இருக்கிறார்களா என தங்களைப் பற்றி பெருமையடித்துக் கொண்டவர்களும், இந்த பரந்த பூமியை ஆட்சி செய்தவர்களுமான அரசர்கள் மிகுந்த பணிவுடன் உன் பள்ளி கொண்டுள்ள கட்டிலைச் சுற்றிலும், சத்சங்கத்துக்கு வந்த பக்தர்கள் போல் காத்து நிற்கிறார்கள். அவர்களைப் போல் நாங்களும் உன் அருகில் நிற்கிறோம். எங்கள் மீது, கிண்கிணி என ஒலிக்கும் சிறுமணியின் வாய்போலவும், தாமரைப்பூ மெதுவாக மலர்வது போலவும், உன் சிவந்த தாமரைக் கண்களை சிறுகச் சிறுக திறந்து விழிக்கமாட்டாயா? சந்திரனும், சூரியனும் உதித்தது போல, அந்தக் கண்களைக் கொண்டு எங்களைப் பார்ப்பாயானால், எங்கள் மீதுள்ள எல்லா பாவங்களும் சாபங்களும் தீர்ந்து விடுமே!
இறைவனின் கடைக்கண் பார்வை பட்டால் போதும். சாபங்கள் கருகிப்போகும். எப்படி அவனது பார்வையை நம் மீது திருப்புவது. மிக எளிதாக ஆண்டாள் பாடிய திருப்பாவையின் பாடல்களையும் மார்கழியில் மட்டுமல்ல! எந்நாளும் பக்தியுடன் படித்தால் போதுமே! அதற்கு அவகாசமில்லையா! அவள் சொல்லியிருக்கிறாளே! இந்த பாவையில் கோவிந்தா, விக்ரமா போன்ற எளிய பதங்களை… அவற்றைச் சொன்னாலே போதுமே! அவனது பார்வை பட்டுவிடும்.
(23) மாரி மலை முழைஞ்சில் மன்னிக் கிடந்து உறங்கும்
சீரிய சிங்கம் அறிவுற்றுத் தீ விழித்து
வேரி மயிர் பொங்க எப்பாடும் பேர்ந்து உதறி
மூரி நிமிர்ந்து முழங்கிப் புறப்பட்டுப்
போதருமா போலே நீ பூவைப்பூ வண்ணா! உன்
கோயில் நின்று இங்ஙனே போந்தருளிக் கோப்புடைய
சீரிய சிங்காசனத்து இருந்து யாம் வந்த
காரியம் ஆராய்ந்து அருளேலோர் எம்பாவாய்
Like the majestic lion wakes up with ire, From the mountain cave in the rainy season, Looks with fiery sight, And with deep angry sweat from all the hairs, Turns up its head with awe, And comes out making lots of din, Hey Lord , who is the colour of the blue lotus, Come from your temple to here, And sit on the majestic royal throne, And hear with compassion, For why we have come here, And help us to worship our Goddess Pavai.
மழைக்காலத்தில் மலையிலுள்ள குகையில் உறங்கும் பெருமை மிக்க சிங்கம் விழிக்கிறது. அதன் கண்களில் நெருப்பு பொறி பறக்கிறது. நாற்புறமும் நடமாடி பிடரி மயிரை சிலிர்த்து, பெருமையுடன் நிமிர்ந்து கர்ஜனையுடன் வெளியே கிளம்புகிறது. அதுபோல, காயாம்பூ நிறத்தையுடைய கண்ணனே! நீயும் வீரநடை போட்டு உன் கோயிலில் இருந்து வெளியேறி, இங்கே வந்து அருள் செய். வேலைப்பாடுகளைக் கொண்ட மிகச்சிறந்த சிம்மாசனத்தில் அமர்ந்து, நாங்கள் எதற்காக இங்கே வந்தோம் என்பதை அறிந்து, அந்த கோரிக்கைகளைப் பரிசீலனை செய்து நிறைவேற்றி அருள வேண்டுகிறோம்.
எதிரே இருப்பவன் கடவுள் என்பதற்காக வீட்டைக் கொடு, பொருளைக் கொடு, நகையைக் கொடு, வாகனத்தைக் கொடு…என நம் கோரிக்கைகளை ஆண்டவன் முன்னால் வைக்கக்கூடாது. அவை நமக்கு அமைய வேண்டுமென்ற விதியிருந்தால், நம் உழைப்பைப் பொறுத்து அவை இறைவனால் நமக்குத் தரப்பட்டு விடும். எனவே, நியாயமான கோரிக்கைகளையே இறைவனிடம் சொல்ல வேண்டும். இதைத்தான் ஆயர்குலப் பெண் கள் நாங்கள் கேட்பது நியாயம் எனத் தெரிந்தால் மட்டும் அதைக் கொடு எனக் கேட்கிறார்கள். அவர்கள் கேட்டது என்ன? அந்தக் கண்ணனையே கேட்டார்கள். அவனோடு கலந்து விட்டால் சோறு எதற்கு? வாகனம் எதற்கு? இதர வசதிகள் எதற்கு? அதற்கெல்லாம் மேலான பேரின்பமல்லவா கிடைக்கும். அதனால் அவனையே கேட்டார்கள் ஆயர்குலப் பெண்கள்.
(24) அன்று இவ் உலகம் அளந்தாய் அடி போற்றி
சென்றங்குத் தென் இலங்கை செற்றாய் திறல் போற்றி
பொன்றச் சகடம் உதைத்தாய் புகழ் போற்றி
கன்று குணில் ஆவெறிந்தாய் கழல் போற்றி
குன்று குடையாய் எடுத்தாய் குணம் போற்றி
வென்று பகை கெடுக்கும் நின் கையில் வேல் போற்றி
என்றென்றும் உன் சேவகமே ஏத்திப் பறை கொள்வான்
இன்று யாம் வந்தோம் இரங்கேலோர் எம்பாவாய்
Glory to your feet which measured the world then! Glory to your fame of winning over the king of Southern Lanka! Glory to you, who kicked the cart with your tender feet and destroyed the demon Sakataasura! Glory to you, who use demon Vatsaasura who came in the guise of a calf, as a missile to destroy Kapiththaasura as well who had taken the form of a wood-apple tree? Glory to you, for lifting the Govardhana hill and holding it as an umbrella! Glory to the spear in your Hands which works the destruction of your foes! We are at your service at all times. Bless our Nonbu! Shower your grace on us!
மகாபலி இந்த உலகத்தை கைப்பற்றிய காலத்தில், அதை மூன்றடிகளால் அளந்து உன்னுடையது என்று உணர்த்தியவனே! உன் திருவடிகளுக்கு வணக்கம். ராமாவதாரம் எடுத்த போது, சீதையை மீட்க தெற்கிலுள்ள இலங்கைக்கு சென்று ராவணனை வெற்றி கொண்டவனே! உன் வீரத்துக்கு நமஸ்காரம். சக்கர வடிவில் வந்த சகடன் எனற அசுரனை ஒரே உதையில் வீழ்த்தியவனே! உன் புகழுக்கு வந்தனம்.கன்று வடிவில் வந்த வத்சாசுரனை தடியாகக் கருதி, அவனை விளாமர வடிவில் வந்த கபித்தாசுரன் மீது எறிந்து அழித்தவனே! உன் கால்களில் அணிந்த வீரக்கழலுக்கு மங்களம் உண்டாகட்டும். கோவர்த்தனகிரியை குடையாக்கி ஆயர்குலத்தவரை இந்திரன் அனுப்பிய மழையில் இருந்து காத்தவனே! உன் இரக்க குணத்துக்கு தலை வணங்குகிறோம்.பகைவர்கள் எவ்வளவு பலவான்களாயினும் அவர்களை உன் கையிலுள்ள வேலால் அழித்தவனே! அந்த வேலாயுதத்துக்கு நமஸ்காரம். உன் வீரச்செயல்களைப் பாடி, உன்னருளைப் பெறுவதற்கு, இப்போது நாங்கள் வந்துள்ளோம். எங்கள் மீது இரக்கம் காட்ட வேண்டுகிறோம்.
இந்த பாசுரம் மிக முக்கியமானது. இதை தினமும் நாம் பாராயணம் செய்யலாம். இதை போற்றிப் பாசுரம் என்பர். இந்த பாசுரத்தை குழந்தைகளுக்கு கற்றுக்கொடுத்து, கண்ணன் பாலகனாக இருந்த போது நிகழ்த்திய வீரச்செயல்களை அவர்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டும். இதன் மூலம் அவர்கள் தைரியத்தை வளர்த்துக் கொள்வார்கள்.
(25) ஒருத்தி மகனாய்ப் பிறந்து ஓர் இரவில்
ஒருத்தி மகனாய் ஒளித்து வளரத்
தரிக்கிலான் ஆகித் தான் தீங்கு நினைந்த
கருத்தைப் பிழைப்பித்துக் கஞ்சன் வயிற்றில்
நெருப்பென்ன நின்ற நெடுமாலே., உன்னை
அருத்தித்து வந்தோம் பறை தருதியாகில்
திருத்தக்க செல்வமும் சேவகமும் யாம் பாடி
வருத்தமும் தீர்ந்து மகிழ்ந்தேலோர் எம்பாவாய்
Being born to woman, And in the same night in hiding . You became the son of another, But this he could not tolerate, And wanted to cause more harm to you, And you great one , became , The fire in the stomach of that Kamsa , We have come here with desire for a drum, And if you give the drum to us, We would sing about thine great fame and wealth, And would end our sorrows and become happy, And worship our Goddess Pavai.
தேவகியின் மைந்தனாக நள்ளிரவில் பிறந்தவனே! அன்று இரவே யசோதையிடம் ஒளிந்து வளர்வதற்காகச் சென்றவனே! அவ்வாறு மறைந்து வளர்வதைப் பொறுக்க முடியாத கம்சன் உன்னை அழிக்க வேண்டும் என்று நினைத்தான். அந்த கருத்து அழியும் வகையில், அவனது வயிற்றில் பயத்தால் ஏற்படும் நெருப்பை விளைவித்த உயர்ந்த குணங்களையுடைய திருமாலே! உனது அருளை யாசித்து நாங்கள் வந்தோம். அந்த அருளைத் தந்தாயானால், உனது விரும்பத்தக்க செல்வச்சிறப்பையும், பக்தர்களுக்காக நீ செய்த பணிகளையும் பாராட்டி நாங்கள் பாடுவோம். உனது பெருமையைப் பாடுவதால், துன்பங்கள் நீங்கி இன்பமாய் மகிழ்ந்திருப்போம்.
பக்தன் பக்தி செலுத்தும் போது, இறைவன் அவனுக்கு சேவகனாகி விடுகிறான். தனது உயிருக்குயிரான பக்தன் பிரகலாதனுக்கும் அவனது தந்தை இரணியனுக்கும் வாதம் நடக்கிறது. உன் நாராயணன் எங்கே இருக்கிறான்? என்று இரணியன் கேட்க, பெருமாளுக்கு கை, கால் உதறி விடுகிறது. உடனே உலகிலுள்ள எல்லா ஜீவன்களுக்குள்ளும் அவன் சென்று விட்டான். ஒரு அணுவைக் கூட அவன் பாக்கி வைக்கவில்லை. பிரகலாதன் என்ன பதில் சொன்னாலும் அதற்குள் இருந்து வெளிப்பட வேண்டுமே என்ற பயத்தில் அவன் இருந்தான். அவன் தூண் என்று சொல்லவே, அதற்குள்ளும் மறைந்திருந்த பகவான், நரசிம்மமாய் வெளிப்பட்டார். பக்தனுக்கு அவர் செய்த சேவையைப் பார்த்தீர்களா! தன்னிடம் பக்தி செலுத்திய பாண்டவர்களுக்காக அமாவாசை நேரத்தையே மாற்றிய தயாள குணம் படைத்த வரல்லவா! இவற்றையெல்லாம் படித்தாலே நாம் அவனை அடைந்து விடலாம் என்பது இப்பாடலின் உட்கருத்து.
(26) மாலே. மணிவண்ணா. மார்கழி நீராடுவான்
மேலையார் செய்வனகள் வேண்டுவன கேட்டியேல்
ஞாலத்தை எல்லாம் நடுங்க முரல்வன
பால் அன்ன வண்ணத்து உன் பாஞ்ச சன்னியமே
போல்வன சங்கங்கள் போய்ப் பாடுடையனவே
சாலப் பெரும் பறையே பல்லாண்டு இசைப்பாரே
கோல விளக்கே கொடியே விதானமே
ஆலின் இலையாய் அருளேலோர் எம்பாவாய்
Oh lord Vishnu , Oh lord who is like the blue sapphire, If you ask us what we need , In your great grace and great deeds, For our holy bath of Marghazhi, We will ask for very many conches Like the milk white conch of yours called Pancha Janya, Very many big drums whose sound can be heard everywhere, Several musicians of fame to sing “Pallandu ” Several beautiful pretty lamps, Several flags and cloths to make tents, Oh , He who sleeps on a banyan leaf at time of deluge, Please give us them all, So that we worship our Goddess Pavai.
பக்தர்களிடம் மிகுந்த அன்பு கொண்டவனே! நீலக்கல் நிறத்தவனே! பெரிய கடலில் ஆலிலையில் மிதப்பவனே! பெரியவர்களால் வழிவழியாக மேற்கொள்ளப்படும் மார்கழி நோன்பிற்கு, உலகத்தையே அதிர வைக்கும் ஒலியையும், பால் சாதம் போன்ற நிறத்தையும், உன் சங்காகிய பாஞ்சஜன்யத்தைப் போன்றதுமான வலம்புரி சங்குகளையும், பெரிய முரசுகளையும், பல்லாண்டு பாடும் பெரியோரையும், மங்கள தீபங்களையும், கொடிகளையும் தந்து, இந்த நோன்பை நிறைவேற்றுவதற்குரிய இடத்தையும் அளித்து அருள் செய்ய வேண்டும்.
பாஞ்சஜன்யம் என்னும் சங்கை திருமால் ஏந்தியிருக்கிறார். இந்த சங்கின் கதையைக் கேளுங்கள். பஞ்சசன் என்ற அசுரன் சாந்தீபனி என்ற முனிவரின் மகனைக் கொன்று விட்டு, கடலில் போய் மறைந்து கொண்டான். கிருஷ்ணர் அவரிடம் மாணவராகச் சேர்ந்தார். குருதட்சணையாக தன் மகனைக் கொன்ற அசுரனை பழிவாங்க வேண்டும் என சாந்தீபனி முனிவர் உத்தரவிட்டார். கிருஷ்ணரும் பஞ்சசனைக் கொன்று அவனைச் சங்காக மாற்றி தனது கையில் வைத்துக் கொண்டார். அசுரசங்கு என்பதால் தான் குரு÷க்ஷத்திரக்களத்தில் அதை ஊதும்போதெல்லாம் அதன் பேரொலி கேட்டு எதிரிப்படைகள் நடுங்கின.
(27) கூடாரை வெல்லும் சீர் கோவிந்தா உந்தன்னைப்
பாடிப் பறை கொண்டு யாம் பெறும் சம்மானம்
நாடு புகழும் பரிசினால் நன்றாகச்
சூடகமே தோள் வளையே தோடே செவிப் பூவே
பாடகமே என்றனைய பலகலனும் யாம் அணிவோம்
ஆடை உடுப்போம் அதன் பின்னே பாற் சோறு
மூட நெய் பெய்து முழங்கை வழி வாரக்
கூடி இருந்து குளிர்ந்தேலோர் எம்பாவாய்
Hey Lord Govinda, who is known for victory over enemies, After singing you we will get drums and many gifts, And after being praised by all the people, Wear we will the golden flower on our hair, Wear we will golden bracelets, Wear we will golden ear studs, Wear we would then the golden flowers on the ear, Wear we will ornaments on the legs, Wear we will pretty new dresses, Eat we will rice mixed with milk, Covering the rice fully with ghee, And with the ghee dripping from our forehands, We will be together and be happy, And worship our Goddess Pavai.
எதிரிகளை வெற்றிகொள்ளும் சிறப்புமிக்க கோவிந்தனே! உன்னை நாங்கள் பாடி அருள் பெற வந்தோம். அருட்செல்வத்துடன் இவ்வுலக வாழ்விற்கான பொருட்செல்வமும் தருவாயாக! அது இருந்தால் தானே நாடு புகழ்கிறது. கையில் அணியும் சூடகம், தோளில் அணியும் பாஹுவலயம், காதில் அணியும் தோடு, கர்ணப்பூ, காலில் அணியும் பாடகம் ஆகிய அணிகலன்களை எங்களுக்குக் கொடு. புத்தாடைகளை வழங்கு. பின்னர் விரதத்தை நிறைவு செய்யும் வகையில், கூட்டமாக உன்னுடன் அமர்ந்து கையில் நெய் வழிய பால்சோறு உண்போம்.
கூடாரை வெல்லும் என்ற சொற்றொடரில் இருந்து கூடாரவல்லி என்ற வார்த்தை பிறந்தது. இப்போது பெருமாள் கோயில்களிலும், வைணவர்களின் வீடுகளிலும் கூடாரவல்லி விழா கொண்டாடப்படும். இன்று அக்கார அடிசில் எனப்படும் உணவு பிரசித்தம். சாப்பாட்டின் மீது நெய் மிதக்கும். சர்க்கரைப் பொங்கல் போன்ற இந்த உணவின் சுவை அலாதியானது. விரதத்தின் ஆரம்பத்தில் நெய், பால் ஆகியவற்றைத் துறந்த ஆயர்குலப் பெண்கள், இப்போது கண்ணனின் தரிசனம் கிடைத்த மகிழ்ச்சியில் இனிப்பான இந்த உணவை சாப்பிடுகிறார்கள். பால்சோறு என்பது பாற்கடலையும் குறிக்கும். கண்ணா! உன் தரிசனம் கிடைத்து விட்டது. நாங்கள் நீ பள்ளிகொள்ளும் பாற்கடலில் இருப்பது போல் உணர்கிறோம். இதுவே நித்யசுகம். இந்த சுகத்தை எங்களுக்கு நிரந்தரமாகக் கொடு, என வேண்டுகிறார்கள்.
(28) கறவைகள் பின் சென்று கானம் சேர்ந்து உண்போம்
அறிவு ஒன்றும் இல்லாத ஆய்க் குலத்து உந்தன்னைப்-
பிறவி பெறுந்தனைப் புண்ணியம் யாம் உடையோம்
குறை ஒன்றும் இல்லாத கோவிந்தா! உந்தன்னோடு-
உறவேல் நமக்கு இங்கு ஒழிக்க ஒழியாது
அறியாத பிள்ளைகளோம் அன்பினால் உந்தன்னை-
சிறு பேர் அழைத்தனமும் சீறி அருளாதே
இறைவா நீ தாராய் பறையேலோர் எம்பாவாய்
After taking the cattle to the forest, we would all eat together. Belonging to the ignorant family of cow herds, We are blessed that you are one of us.. Oh Govinda who does not have any short comings. None can ever break the ties that we have with you,Oh Lord, We are but ignorant girls, who do not know the world, And in ignorance and love we have called you by name. So please be not be angry on us, And please give us drums, Oh Lord, So that we can worship our Goddess Pavai.
குறையே இல்லாத கோவிந்தனே! நாங்கள் பசுக்களின் பின்னால் சென்று அவற்றை மேய்த்து, தயிர்ச்சாதம் உண்பவர்கள். எங்களுக்கு அறிவென்பதே இல்லை. ஆனால், ஒன்றே ஒன்று மட்டும் எங்களுக்குத் தெரியும். உன்னை தலைவனாக அடைந்ததால் எங்களுக்கு வைகுந்தம் உறுதியென்பதை பிறவிப்பயனாக அடைந்திருக்கிறோம் என்பதே அது. உன்னோடு எங்களுக்குள்ள உறவைப் பிரிக்க யாராலும் முடியாது. விரதம் இருக்கும் முறை பற்றியெல்லாம் அறியாத பிள்ளைகள் நாங்கள்! அதுபோல் கண்ணா! மணிவண்ணா! கருணாகரா! என்றெல்லாம் உன்னிடமுள்ள உரிமையின் காரணமாக ஒருமையில் அழைத்தோம். அதற்காக கோபித்துக் கொள்ளாதே. எங்கள் இறைவனே! எங்கள் நோன்பை ஏற்று அருள் தருவாயாக.
குறையொன்றுமில்லாத கோவிந்தா என்ற வார்த்தையைப் படிக்கும் போது, கண்ணனுக்கு ஏதோ குறை இருந்தது போலவும், இப்போது தீர்ந்து விட் டது போலவும் தோற்ற மளிக்கிறது. அவனுக்கு என்ன குறை? ராமாவதாரத்தில், ராமபட்டாபிஷேகம் நடந்த போது, இந்திர லோகத்தில் எட்டு திசை காவலர்கள் பட்டாபிஷேகம் நடத்தியது போல, அயோத்தியில் வசிஷ்டர், வாமதேவர், ஜாபாலி, காஷ்யபர், காத்யாயனர், ஸுயஜ் ஞர், கவுதமர், விஜயர் என்ற எட்டு முனிவர்கள் என்று வால்மீகி ஏதோ ஆர்வத்தில் எழுதிவிட் டார். ராமனுக்கு இது ஒரு குறை. இந்திரனை ஜெயித்து இந்திரஜித் என்று பட்டம் பெற்றவனை நாம் நம் தம்பியை வைத்துஜெயித்தோம். அப்படிப் பட்ட கீழான இந்திரனுடன் நம்மை வால்மீகி ஒப்பிட்டு விட்டாரே! அது மட்டுமல்ல, அவன் கவுதமரின் மனைவி அகலிகையுடன் தப்பாக நடந்தவனாயிற்றே! அவனோடு நம்மை ஒப்பிடலாமா? என்ற குறை இருந்ததாம். கிருஷ்ணாவதாரத்தில், அந்த இந்திரன் தனக்கு செய்த பூஜையை ஆயர்கள் நிறுத்தியதால் சீற்றமடைந்து மழை பெய்யச் செய்தான். கோவர்த்தனகிரியை தூக்கி மக்களைக் காத்த கண்ணனின் காலில் அந்த இந்திரன் விழுந்தான். ராமாவதாரத்தில் ஏற்பட்ட குறை கிருஷ்ணாவதாரத்தில் நீங்கிவிட்டதால், ஆயர்குலப் பெண்கள் அவரை இப்படி வர்ணித்தார்கள்.
(29) சிற்றம் சிறு காலே வந்து உன்னை சேவித்து உன்
பொற்றாமரை அடியே போற்றும் பொருள் கேளாய்
பெற்றம் மேய்த்து உண்ணும் குலத்தில் பிறந்து நீ
குற்று ஏவல் எங்களைக் கொள்ளாமல் போகாது
இற்றைப் பறை கொள்வான் அன்று காண் கோவிந்தா
எற்றைக்கும் ஏழ் ஏழ் பிறவிக்கும் உன் தன்னோடு
உற்றோமே ஆவோம் உனக்கே நாம் ஆட்செய்வோம்
மற்றை நம் காமங்கள் மாற்றேலோர் எம்பாவாய்
Please hear why, In this very early dawn, We have come to worship, Your golden holy feet. You were born in our family of cow herds, And we are but there to obey your every wish, And not come to get only the drums from you,Oh Govinda. For ever and for several umpteen births, We would be only related to you, And we would be thine slaves, And so please remove all our other desires, And help us to worship Goddess Pavai.
கண்ணா! அதிகாலையில் உன் பொன்போன்ற தாமரை பாதங்களை வணங்க வந்திருக்கிறோம். அதற்கான காரணத்தைக் கேள்! பசுக்களை மேய்த்துப் பிழைக்கும் ஆயர்குலத்தில் பிறந்த நீ, எங்களது இந்த சிறு விரதத்தைக் கண்டுகொள்ளாமல் விட்டுவிடாதே! நீ தரும் சிறு பொருட்களுக்காக (அணிகலன் முதலானவை) இந்த விரதத்தை மேற்கொள்ளவில்லை. என்றும், ஏழுபிறவிகளிலும் நீ எங்கள் குலத்தில் பிறக்க வேண்டும். எங்களை உன் உறவினர்களாக ஏற்க வேண்டும். உனக்கு மட்டுமே சேவை செய்யும் பாக்கியத்தை தரவேண்டும். இது தவிர மற்ற விருப்பங்களைஎல்லாம் நீயே அழித்து விடு.
(30) வங்கக் கடல் கடைந்த மாதவனை கேசவனை
திங்கள் திருமுகத்து சேய் இழையார் சென்று இறைஞ்சி
அங்கப் பறை கொண்ட ஆற்றை அணி புதுவைப்
பைங்கமலத் தண் தெரியல் பட்டர் பிரான் கோதை-
சங்கத் தமிழ் மாலை முப்பதும் தப்பாமே -சொன்ன
இங்கு இப்பரிசுரைப்பார் ஈரிரண்டு மால் வரை தோள்
செங்கண் திருமுகத்துச் செல்வத் திருமாலால்
எங்கும் திருவருள் பெற்று இன்புறுவர் எம்பாவாய்.
He who sings with out error, The thirty odes in sweet Tamil, Of the story of how the rich ladies , With faces like moon, Who worshipped and requested, The Madhava who is also Lord Kesava, Who churned the ocean of milk, For getting a drum to worship Goddess Pavai, As sung by Kodhai who is the dear daughter, Of Vishnu Chitta the bhattar, From the beautiful city of Puduvai, Will be happy and get the grace, Of our Lord Vishnu with merciful pretty eyes. And four mountain like shoulders, for ever.
அலைகள் நிறைந்த பாற்கடலைக் கடைந்த மாதவனும், கேசவனுமான கண்ணனை, சந்திரனைப் போன்ற அழகு முகம் கொண்ட அணிகலன் அணிந்த பெண்கள் சிரமப்பட்டு தரிசித்து, பாவை விரத பலன் பெற்ற விபரத்தை ஸ்ரீவில்லிப்புத்தூரில் பிறந்த, குளிர்ந்த தாமரை போன்ற முகத்தையுடைய பெரியாழ்வாரின் பெண்ணான ஆண்டாள், இனிய தமிழில் முப்பது பாடல் பாடி பாமாலை தொடுத்திருக்கிறாள். இதனை படிப்பவர்கள், உயர்ந்த தோள்களை யுடையவனும், அழகிய கண்களைக் கொண்ட திருமுகத்தை உடையவனும், செல்வத்துக்கு அதிபதியுமான திருமாலின் ஆசியுடன் எங்கு சென்றாலும் செல்வச்செழிப்பு பெற்று இன்பமுடன் வாழ்வர்.
(Conclusion) கோதை பிறந்த ஊர் கோவிந்தன் வாழுமூர்
சோதி மணி மாடம் தோன்றும் ஊர் - நீதியால்
நல்ல பத்தர் வாழும் ஊர் நான்மறைகள் ஓதுமூர்
வில்லிபுத்தூர் வேதக் கோனூர்
பாதகங்கள் தீர்க்கும் பரமன் அடி காட்டும்
வேதம் அனைத்துக்கும் வித்தாகும் - கோதை தமிழ்
ஐயைந்தும் ஐந்தும் அறியாத மானிடரை
வையம் சுமப்பது வம்பு.
திருவாடிப் பூரத்து செகத்துதித்தாள் வாழியே
திருப்பாவை முப்பதும் செப்பினாள் வாழியே
பெரியாழ்வார் பெற்றெடுத்த பெண் பிள்ளை வாழியே
பெரும்புதூர் மாமுனிக்குப் பின்னானாள் வாழியே
ஒரு நூற்று நாற்பத்து மூன்றுரைத்தாள் வாழியே
உயரரங்கற்கே கண்ணியுகந்தருளிதாள் வாழியே
மருவாரும் திருமல்லி வள நாடி வாழியே
வண்புதுவை நகர்க் கோதை மலர்ப் பதங்கள் வாழியே
ஸ்ரீ: ஆண்டாள் அருளிச்செய்த நாச்சியார் திருமொழி 504:
தையொரு திங்களும் தரைவிளக்கித்
தண்மண் டலமிட்டு மாசிமுன்னாள்,
ஐயநுண் மணற்கொண்டு தெருவணிந்து
அழகினுக் கலங்கரித் தனங்கதேவா,
உய்யவு மாங்கொலோ வென்றுசொல்லி
உன்னையு மும்பியை யும்தொழுதேன்,
வெய்யதோர் தழலுமிழ் சக்கரக்கை
வேங்கட வற்கென்னை விதிக்கிற்றியே.
ஸ்ரீ ஆண்டாள் அருளிச் செய்த வாரணமாயிரம் 556 - 566 The beautiful passages of VAranamAyiram (a Thousand elephants) are part of nAchiyAr thirumOzhi. Godai starts describing beautifully to her friend, the divine dream that she just had of her marriage with kaNNan.
(1) Wedding Procession
வாரண மாயிரம் சூழவலம் செய்து |
நாரண நம்பி நடக்கின்றா னென்றெதிர்
பூரண பொற்குடம் வைத்துப் புறமெங்கும் | தோரணம் நாட்டக் கனாக்கண்டேன் தோழீநான்
"Oh my dear friend! I had this wonderful dream; i saw naranan (sri ranganathan), surrounded by thousands of elephants, going around sri villiputtur. My father, periyazhvar, and the citizens of the village are waiting to extend a grand welcome to him with purna kumbhams. The whole village is decorated with toranams (streamers) to mark the festive occasion."
(2)Welcoming bridegroom - மாப்பிள்ளை அழைப்பு
நாளை வதுவை மணமென்று நாளிட்டு| பாளை கமுகு பரிசுடைப் பந்தற்கீழ்
கோளரி மாதவன் கோவிந்த னென்பான் | ஓர் காளை புகுதக்கனாக் கண்டேன் தோழீநான்
Tomorrow is the day that has been fixed for the wedding. I saw at the wedding dais, decorated with betel-nut trees, a handsome youth, known as narasimhan, madhavan or govindan, entering as groom.
(3)Engagement or betrothal - நிச்சயதார்த்தம்
இந்திர னுள்ளிட்ட தேவர் குழாமெல்லாம் | வந்திருந்தென்னை மகட்பேசி மந்திரித்து|
மந்திரக் கோடியுடுத்தி | மணமாலை | அந்தரி சூட்டக் கனாக்கண்டேன் தோழீநான்
Group of indra and the other devas gather to make the proposal to offer me in marriage to lord Renganatha. Then the sambandhis converse with each other and agree on all arrangements. Durga, krshna's sister, helps me who is decorated with exquisitely smelling flower garland, to wear the kuraip pudavai (the sari worn at wedding time)
(4)Viradham - காப்பு
நாற்றிசைத் தீர்த்தங் கொணர்ந்து நனிநல்கி | பார்ப்பனச் சிட்டர்கள் பல்லாரெடுத் தேத்தி |
பூப்புனை கண்ணிப் புனிதனோ டென்றன்னை | காப்புநாண் கட்டக் கனாக்கண்டேன் தோழீநான்
Several brahmins bring holy waters from all the four directions. Elders and scholars/priests take the tirtham that has been purified with vedic chants/ mantrams and sprinkle it on my head and bless me. I saw my hand and lord’s hand being tied together with kankanam
(5) mangala dipam - தீபம்
கதிரொளி தீபம் கலச முடனேந்தி | சதிரிள மங்கையர் தாம்வந் தெதிர்கொள்ள |
மதுரையார் மன்ன னடிநிலை தொட்டு | எங்கும் அதிரப் புகுதக் கனாக்கண்டேன் தோழீநான்
In my dream i saw many beautiful young girls, carrying lamps shining like the bright sun, and golden kalasams. They were welcoming king of mathura who was walking with his sacred sandals (known for their majesty and firmness) that made the earth shake.
(6) Panigrahanam - கைத்தலம்
மத்தளம் கொட்ட வரிசங்கம் நின்றூத | முத்துடைத்தாமம் நிரை தாழ்ந்த பந்தற்கீழ் |
மைத்துனன் நம்பி மதுசூதன் வந்து, என்னைக் | கைத்தலம் பற்றக் கனாக்கண்டேன் தோழீநான்
Musical instruments were being played; conches were being blown; under the canopy that was decorated with low-lying pearl strands, madhusudanan took my right hand into his and did panigrahanam
(7) circumambulate - தீவலம்
வாய்நல்லார் நல்ல மறையோதி மந்திரத்தால், | பாசிலை நாணல் படுத்துப் பரிதிவைத்து,
காய்சின மாகளிறன்னா னென் கைப்பற்றி | தீவலம் செய்யக்க னாக்கண்டேன் தோழீநான்
Priests, chanting good vedic mantras, spread the green grass surrounding the agni and placed the wooden sticks on agni. I saw kannan, who came majestically like an angry elephant, hold my right hand and circumambulate the agni walking slowly.
(8) ammi - அம்மி மிதித்தல்
இம்மைக்கு மேழேழ் பிறவிக்கும் பற்றாவான்,
| நம்மை யுடையவன் நாராயணன் நம்பி,
செம்மை யுடைய திருக்கையால் தாள்பற்றி,
| அம்மி மிதிக்கக் கனாக்கண்டேன் தோழீநான்
My lord, protector in this birth and all the forthcoming births and who is filled with all kalayana gunas held my right foot with his red hued hand and placed it on stone (ammi)
(9) pori - பொரி
வரிசிலை வாள்முகத் தென்னைமார் தாம்வந்திட்டு
| எரிமுகம் பாரித்தென் னைமுன்னே நிறுத்தி,
அரிமுக னச்சுதன் கைம்மேலென் கைவைத்து,
| பொரிமுகந் தட்டக் கனாக்கண்டேன் தோழீநான்
My brothers, who have attractive eye brows that look like bent bows, ignite the agni and make me stand before agni. They place my hands on top of hands of kannan (who has a majestic face like the lion’s) and help do the homam by putting rice puffs (pori) in the agni
(10) Wedding Procession
குங்கும மப்பிக் குளிர்சாந்தம் மட்டித்து,
| மங்கல வீதி வலம்செய்து மணநீர்,
அங்கவனோடு முடஞ்சென்றங் கானைமேல்,
| மஞ்சன மாட்டக்க னாக்கண்டேன் தோழீநான்
I dreamt that a lot of ku’nkumam and sandalwood were applied on our bodies. Kannan and i were placed on top of the majestic elephant and taken in procession along the streets which had been decorated in celebration of our wedding. We were given the holy bath with the sacred waters
(11) Conclusion
ஆயனுக் காகத்தான் கண்ட கனாவினை, | வேயர் புகழ்வில்லி புத்தூர்க்கோன் கோதைசொல்,
தூய தமிழ்மாலை ஈரைந்தும் வல்லவர், | வாயுநன் மக்களைப் பெற்று மகிழ்வரே
Kodai, the tirumagal of veyar pugazh villiputtur kon periyazhvar, has sung this tirumozhi with ten pasurams in poetic tamizh, describing her divine dream about ayar kulak kannan wedding her. Whosoever is able to learn and chant these pasurams, will be blessed with good progeny and prosperous lives with them.”
இருளிரியச் சுடர்மணிகளிமைக்கும் நெற்றி
இனத்துத்தி யணிபணமா யிரங்க ளார்ந்த
அரவரசப் பெருஞ்சோதி யனந்த னென்னும்
அணிவிளங்கு முயர்வெள்ளை யணையை மேவி
திருவரங்கப் பெருநகருள் தெண்ணீர்ப் பொன்னி
திரைக்கையா லடிவருடப் பள்ளி கொள்ளும்
கருமணியைக் கோமளத்தைக் கண்டு கொண்டு என்
கண்ணிணைக ளென்றுகொலோ களிக்கும் நாளே 647
When is the day that my pair of eyes shall rejoice, beholding the dark Sapphire, the delicate One, who sleeps, as clear-watered Ponni rubs [His] feet, with the hands [that are her] waves, in the great town of Srirangam. Having reached the bed of great whiteness shining with ornaments, called Ananta, the king of serpents, the great effulgence, whose forehead twinkles with gems that glow, so that darkness retreats, [and] over whom spread a thousand hoods with groupsof decorative spots?
பூநிலாய வைந்துமாய்ப் புனற்கண்நின்ற நான்குமாய்,
தீநிலாய மூன்றுமாய்ச் சிறந்தகா லிரண்டுமாய்,
மீநிலாய தொன்றுமாகி வேறுவேறு தன்மையாய்,
நீநிலாய வண்ணநின்னை யார்நினைக்க வல்லரே? 752
அமல னாதிபிரா னடியார்க்கென்னை யாட்படுத்த
விமலன், விண்ணவர் கோன்விரையார்பொழில் வேங்கடவன்,
நிமலன் நின்மலன் நீதி வானவன், நீள்மதி ளரங்கத் தம்மான், திருக்
கமல பாதம்வந் தென்கண்ணினுள்ளன வொக்கின்றதே. 927
கண்ணி நுண்சிறுத் தாம்பினால் கட்டுண்ணப்
பண்ணி யபெரு மாயன்,என் னப்பனில்,
நண்ணித் தென்குரு கூர்நம்பி யென்றக்கால்,
அண்ணிக் கும்அமு தூறுமென் நாவுக்கே. 937
In place of my father, the great marvellous one who had himself tied with the knotted, slender cord, I now draw near and speak of the lord of southern Kurkukur, and it flows as amrtam, my tongue's delight
வாடினேன் வாடிவருந்தினேன் மனத்தால்
பெருந்துயரிடும்பையில் பிறந்து,
கூடினேன் கூடியிளையவர்த்தம்மோடு
அவர்த்தரும் கலவியேகருதி,
ஓடினேன் ஓடியுய்வதோர்ப் பொருளால்
உணர்வெனும் பெரும் பதம் திரிந்து,
நாடினேன் நாடி நான் கண்டுகொண்டேன்
நாராயணா வென்னும் நாமம். 948
இறைவனில்லாத வாழ்க்கை நீர் இன்றி வாடும் செடியைப் போன்றது.சிற்றின்பங்களை நாடி, பெருந்துயரங்களில் பிறந்து கூடி அலைந்ததை ஒப்புக்கொள்கிறார். முடிவில் 'நாராயணா' எனும் திருநாமத்தைக் கொண்டு தெளிவு பெற்றார்.
குலந்தரும் செல்வம் தந்திடும் அடியார் படுதுயராயின வெல்லாம்
நிலந்தரம் செய்யும் நீள்விசும் பருளும் அருளொடு பெருநிலம் அளிக்கும்
வலந்தரும் மற்றுந் தந்திடும் பெற்ற தாயினும் ஆயின செய்யும்
நலந்தரும் சொல்லை நான் கண்டு கொண்டேன் நாராயணா என்னும் நாமம் 956
நிதியினைப் பவளத் தூணை நெறிமையால் நினைய வல்லார்,
கதியினைக் கஞ்சன் மாளக் கண்டுமுன் ஆண்ட மாளும்,
மதியினை மாலை வாழ்த்தி வணங்கியென் மனத்து வந்த,
விதியினைக் கண்டு கொண்ட தொண்டனேன் விடுகி லேனே 2032
செல்வமாக இருப்பவனும், பவளத் தூண் போன்ற சிவந்த வடிவினனும் ஆன இறைவனை, பக்தி வழியில் நினைக்க வல்லவர்கள் வீடு பேற்றை அடைவர். கம்சன் மாளக் கண்டு, அண்டம் ஆளும் மதியினை (அறிவை/இறைவனை) வணங்கி, இறை அருளை கண்டுகொண்ட தொண்டனேன் அவனை விடமாட்டேன் என்கிறார்.
இரும்பனன் றுண்ட நீர்போல் எம்பெரு மானுக்கு, என்றன்
அரும்பெற லன்பு புக்கிட்டடிமைபூண் டுய்ந்து போனேன்,
வரும்புயல் வண்ண னாரைமருவியென் மனத்து வைத்து,
கரும்பினின் சாறு போலப் பருகினேற் கினிய லாறே 2036
Like a hot iron drinking up water my love swelled. I directed it to the lord, made myself his devotee, and found my refuge. Bearing the cloud-hued lord in my heart, I drink him like sugarcane juice. Ah, how sweet he is!
மின்னுருவாய் முன்னுருவில் வேதம் நான்காய்
விளக்கொளியாய் முளைத்தெழுந்த திங்கள் தானாய்,
பின்னுருவாய் முன்னுருவில் பிணிமூப் பில்லாப்
பிறப்பிலியாய் இறப்பதற்கே எண்ணாது, எண்ணும்
பொன்னுருவாய் மணியுருவில் பூதம் ஐந்தாய்ப்
புனலுருவாய் அனலுருவில் திகழுஞ் சோதி,
தன்னுருவாய் என்னுருவில் நின்ற எந்தை
தளிர்ப்புரையும் திருவடியென் தலைமே லவ்வே. 2052
The tender feet, of the Lord are on my head. He is the subtle essence of all these forms, the four Vedas, light of the lamp, the rising Moon, the more sublime, the ageless, disease-less, birth less, deathless one, the golden image, the gem-form, the five elements, the fluid, the fiery, the radiant form within me.
வையம் தகளியா வார்கடலே நெய்யாக,
வெய்ய கதிரோன் விளக்காக - செய்ய
சுடராழி யானடிக்கே சூட்டினேஞ்சொன் மாலை,
இடராழி நீங்குகவே என்று. [2082]
The Earth is my lamp, the ocean is the oil or ghee, and the radiant sun is the flame, I offer this garland of songs at the feet of the radiant discus-bearing Lord, that we may cross the misery-ocean.
என்று கடல்கடைந்த தெவ்வுலகம் நீரேற்றது,
ஒன்று மதனை யுணரேன் நான், - அன்று
தடைத்துடைத்துக் கண்படுத்த ஆழி, இதுநீ
படைத்திடந் துண்டுமிழ்ந்த பார். 2083
பொருகோட்டோ ர் ஏனமாய்ப் புக்கிடந்தாய்க்கு, அன்றுன்
ஒருகோட்டின் மேல்கிடந்த தன்றெ, - விரிதோட்ட
சேவடியை நீட்டித் திசைநடுங்க விண்துளங்க,
மாவடிவின் நீயளந்த மண்? 2090
Poigai Alvar also references the Vamana and the Varaha incarnations of Vishnu in this work. O Lord of discus! Taking a huge form you stretched your lotus feet and measured the Earth, even as the world feared and the celestials trembled. When you came as a huge boar and lifted the Earth on your tusk teeth, how did it not fall off, resting as it was on one tooth alone?
அன்பே தளியா ஆர்வமே நெய்யாக,
இன்புருகு சிந்தை யிடுதிரியா - நன்புருகி
ஞானச் சுடர்விளக் கேற்றினேன் நாரணற்கு
ஞானத் தமிழ்புரிந்த நான். [2182]
Love is my lamp, eagerness is the oil or ghee, my devotional mind or heart is the wick. Melting myself, here I light a lamp and offer this garland of Tamil poems.
பரிசு நறுமலரால் பாற்கடலான் பாதம்,
புரிவார் புகழ்பெறுவர் போலாம், - புரிவார்கள்
தொல்லமரர் கேள்வித் துலங்கொளிசேர் தோற்றத்து
நல்லமரர் கோமான் நகர். 2184
நகரிழைத்து நித்திலத்து நாண்மலர் கொண்டு, ஆங்கே
திகழும் அணிவயிரம் சேர்த்து, - நிகரில்லாப்
பைங்கமல மேந்திப் பணிந்தேன் பனிமலராள்,
அங்கம்வலம் கொண்டான் அடி. 2185
The author also references Vishnu and Lakshmi residing in their celestial abode, Vaikuntha, in the above 2 poems. The lord of gods in heaven is light-effulgent. Those who worship his ocean- reclining form, strewing fresh flowers at his feet will be counted as devotees, worthy of entering his fabled celestial city. In that city, under a canopy of pearls, gems and diamonds, and strings of fresh flowers, the lord is seated with the lotus-dame Lakshmi, borne on his right. I worship his feet.
திருக்கண்டேன் பொன்மேனி கண்டேன் திகழும்
அருக்கன் அணிநிறமும் கண்டேன், - செருக்கிளரும்
பொன்னாழி கண்டேன் புரி சங்கம் கைக்கண்டேன்,
என்னாழி வண்ணன்பால் இன்று. [2282]
Inside myself, I have seen the lotus-dame on the frame of my ocean-hued Lord. Lord wields a fiery discus and a dextral conch in his hands. Lord has the radiance of the golden sun (in jyothi form), because of association with Laxmi or divine mother.
அடைந்த தரவணைமேல் ஐவர்க்காய், அன்று
மிடைந்தது பாரத வெம்போர், - உடைந்ததுவும்
ஆய்ச்சிபால் மத்துக்கே அம்மனே, வாளெயிற்றுப்
பேய்ச்சிபா லுண்ட பிரான். 2309
The lord who reclines in the ocean-deep came as a wonder child and killed an ogress. He conducted the great Bharata war and destroyed mighty kings. And yet he cringed in fear when his mother threatened him with a churning rod for stealing butter!
நான்முகனை நாராயணன் படைத்தான், நான்முகனும்
தான்முகமாய்ச் சங்கரனைத் தான்படைத்தான், -
யான் முகமாய் அந்தாதி மேலிட்டறிவித்தேன்
ஆழ்பொருளை சிந்தாமல் கொண்மினீர் தேர்ந்து 2382
Narayana created the four-faced one (Brahma), and the four-faced one created Shankaran (Shiva) in his own image. They say the Ultimate Reality is one and Nobody knows the glories of the Lord Narayana .
தொகுத்த வரத்தனாய்த் தோலாதான் மார்வம்,
வகிர்த்த வளையுகிர்த்தோள் மாலே, - உகத்தில்
ஒருநான்று நீயுயர்த்தி யுள்வாங்கி நீயே,
அருநான்கு மானாய் அறி 2386
O Lord you incarnated as Narasimha who destroyed the boon-intoxicated Hiranya's mighty chest with curved nails and strong arms! I understand that You consume everything, then you create everything, and become the four Yugas as well.
பொய்நின்ற ஞானமும் பொல்லா வொழுக்கும்
அழுக்குடம்பும் இந்நின்ற நீர்மை இனியா முறாமை
உயிரளிப்பான் எந்நின்ற யோனியுமாய் பிறந்தாய்
இமையோர்தலைவா மெய்நின்று கேட்டருளாய்
அடியேன் செய்யும் விண்ணப்பமே 2478:
நிலையற்ற, தவறான அறிவும், தீய நடத்தைகளும், இந்தப் பஞ்சபூத அழுக்குடம்பும், இத்தகைய இழிநிலையை நான் இனி அடையாதபடி, அனைத்து உயிர்களையும் காக்க பல பிறவிகள் எடுத்தவனே, தேவர்களின் தலைவனே! நான் செய்யும் இந்த விண்ணப்பத்தை உண்மையோடு கேட்டு அருள வேண்டும்.
மலர்ந்தே யொழிலிந்தில மாலையும் மாலைபொன் வாசிகையும்
புலந்தோய் தழைப்பந்தர் தண்டுற நாற்றி, பொருகடல்சூழ்
நிலந்தா வியவெம்பெருமான் தனதுவை குந்தமன்னாய்.
கலந்தார் வரவெதிர் கொண்டு,வன்கொன்றைகள் கார்த்தனவே. 2545
Her friend: O girl like the great lord who spanned this world surrounded by the swirling ocean, the lovely konrai flower is begining to bud awaiting your lover’s return. The flowers haven’t yet bloomed into dense garlands of gold that hang from a thick canopy of leaves.
காரேற் றிருள்செகி லேற்றின் சுடருக் குளைந்து, வெல்வான்
போரேற் றெதிர்ந்தது புன்தலை மாலை, புவனியெல்லாம்
நீரேற் றளந்த நெடிய பிரானருளாவிடுமே?
வாரேற்றிள முலையாய், வருந்தேலுன் வளைத்திறமே. 2546
Her friend: The dark bull-like night lost to the fiery red morning now it has returned desiring victory, this evening. O girl whose tender breasts are bound in cloth don’t despair for your bangles. Won’t the great lord who sealed a pact and measured worlds, give you grace?
வளைவாய்த் திருச்சக் கரத்தெங்கள் வானவ னார்முடிமேல்,
தளைவாய் நறுங்கண்ணித் தண்ணந்துழாய்க்குவண் ணம்பயலை,
விளைவான் மிகவந்து நாள்திங்களாண்டூழி நிற்கவெம்மை
உளைவான் புகுந்து,இது வோர்கங்குல் ஆயிரம் ஊழிகளே. 2547
70 She Said: I desired the dense fragrant garland of cool lovely tulasī adorning the crown of our lord of heavens who holds the beautiful curved disc my lustre turns to paleness when it came swiftly stretching into days months years aeons and now it’s here to torture me the night now a thousand aeons.
ஊழிக ளாயுல கேழுமுண் டானென் றிலம்,பழங்கண்டு
ஆழிக ளாம்பழ வண்ணமென்றேற்க்கு,அஃ தேகொண்டன்னை
நாழிவ ளோவெனும் ஞாலமுண்டான்வண்ணம் சொல்லிற்றென்னும்
தோழிகளோ உரையீர் எம்மை அம்மனை சூழ்கின்றவே. 2548
71 She Said: I didn’t say ‘He became the end of days and swallowed the seven worlds.’ I saw a dark fruit observed ‘It’s the colour of the sea.’ My mother then said ‘What impertinence!’ ‘She speaks of the colour of the one who swallowed worlds.’ Speak to her dear friend. My mother scolds me.
சூழ்க்கின்ற கங்குல் சுருங்கா இருளின் கருந்திணிம்பை,
போழ்கின்ற திங்களம் பிள்ளையும் போழ்க, துழாய்மலர்க்கே
தாழ்கின்ற நெஞ்சத் தொருதமியாட்டியேன் மாமைக்கின்று
வாழ்கின்ற வாறிது வோ,வந்து தோன்றிறு வாலியதே. 2549
72 She Said: The lovely young moon that tears the unshrinking dense darkness of this endless swirling night tears me through. It strengthens I am alone my heart fixed on the garland of tulasī. Is this any way to live waiting for my lustre to return?
வால்வெண் ணிலவுல காரச் சுரக்கும்வெண் திங்களென்னும்,
பால்விண் சுரவி சுரமுதிர் மாலை, பரிதிவட்டம்
போலும் சுடரட லாழிப்பிரான்பொழில் ஏழளிக்கும்
சால்பின் தகைமைகொ லாம்,தமியாடி தளர்ந்ததுவே? 2550
73 Her Mother Said: Like a white cow in the sky the white moon spills its bright white moonlight to delight the world, evening ripens. Is it right that the one who protects the seven worlds lord who holds the fiery disc that glows like the sun allows this lonely girl to suffer so?
தளர்ந்தும் முறிந்தும் வருதிரைப்பாயல், திருநெடுங்கண்
வளர்ந்தும் அறிவுற்றும் வையம் விழுங்கியும், மால்வரையைக்
கிளர்ந்தும் அறிதரக் கீண்டெடுத்தான்முடி சூடுதுழாய்
அளைந்துண் சிறுபசுந் தென்றல்,அந்தோவந் துலாகின்றதே. 2551
74 Her Friend Said: His long eyes closed, he slumbers upon his bed that rests on rolling rising ocean waves. When he comes awake he swallows worlds fresh gentle breeze wafts having devoured the fragrance of tulasī adorning the crown of that same one who uprooted the great mountain turned it on its head.
கொண்டல்தான் மால்வரைதான் மாகடல்தான் கூரிருள்தான்
வண்டறாப் பூவதான் மற்றுத்தான்-கண்டநாள்
காருருவம் காண்தோறும் நெஞ்சோடும், கண்ணனார்
பேருருவென் றெம்மைப் பிரிந்து. 2633:
Krishna’s glorious form: The dark complexion of Kannan is compared to clouds, mountains, sea, darkness and flowers. Alvar sings that wherever he looks, he sees the beautiful Krishna, the dark cloud, and that the image of Kannan is filled in his heart. கண்ணனின் கரிய நிறத்தை மேகம், மலை, கடல், இருள் மற்றும் கண்ட இடமெல்லாம் கார்மேக அழகனான கிருஷ்ணனையே காண்பதாகவும், கண்ணனார் உருவம் நெஞ்சில் நிறைந்திருப்பதாகவும் ஆழ்வார் பாடுகிறார்.
12321 ஒருமுறை இருசுடர் மீதினி லியங்கா, மும்மதிள் இலங்கை யிருகால் வளைய, ஒருசிலை
1234321 ஒன்றிய ஈரெயிற் றழல்வாய் வாளியில் அட்டனை, மூவடி நானிலம் வேண்டி, - முப்புரி லொடு மானுரி யிலங்கும் மார்வினில், இருபிறப் பொருமாணாகி,
123454321 ஒருமுறை யீரடி, மூவுல களந்தானை, நாற்றிசை நடுங்க அஞ்சிறைப் பறவை ஏறி, நால்வாய் மும்மதத் திருசெவி ஒருதனி வேழத் தரந்தையை,
12345654321 ஒருநாள் இருநீர் மடுவுள் தீர்த்தனை, முத்தீ நான்மறை ஐவகை வேள்வி, அறுதொழில் அந்தணர் வணங்கும் தன்மையை, ஐம்புலன் அகத்தினுள் செறுத்து, நான்குடன் அடக்கி முக்குணத் திரண்டவை யகற்றி, ஒன்றினில்
1234567654321 ஒன்றி நின்று,ஆங் கிருபிறப் பறுப்போர் அறியும் தன்மையை, முக்கண் நாற்றோள் ஐவாய் அரவோடு ஆறுபொதி சடையோன் அறிவருந் தன்மைப் பெருமையுள் நின்றனை, ஏழுல கெயிற்றினில் கொண்டனை, கூறிய அறுசுவைப் பயனும் ஆயினை, சுடர்விடும் ஐம்படை அங்கையுள் அமர்ந்தனை, சுந்தர நாற்றோள் முந்நீர் வண்ண,நின் ஈரடி ஒன்றிய மனத்தால்
1234567654321 ஒருமதி முகத்து மங்கையர் இருவரும் மலரன, அங்கையில் முப்பொழுதும் வருட அறிதுயில் அமர்ந்தனை, நெறிமுறை நால்வகை வருணமும் ஆயினை, மேதகும் ஐம்பெரும் பூதமும் நீயே, அறுபதம் முரலும் கூந்தல் காரணம் ஏழ்விடை யடங்கச் செற்றனை, அறுவகைச் சமயமும் அறிவரு நிலையினை, ஐம்பால் ஓதியை ஆகத் திருத்தினை, அறமுதல் நான்க வையாய் மூர்த்தி மூன்றாய் இருவகைப் பயனாய் ஒன்றாய் விரிந்து நின்றனை,
குன்றா மதுமலர்ச் சோலை வண்கொடிப் படப்பை,
வருபுனல் பொன்னி மாமணி யலைக்கும்,
செந்நெலொண் கழனித் திகழ்வன முடுத்த,
கற்போர் புரிசைக் கனக மாளிகை,
நிமிர்கொடி விசும்பில் இளம்பிறை துவக்கும்,
செல்வம் மல்குதென் திருக்குடந்தை,
அந்தணர் மந்திர மொழியுடன் வணங்க,
ஆடர வமளியில் அறிதுயில் அமர்ந்த பரம நின் அடியிணை
பணிவன் வருமிடர் அகல மாற்றோ வினையே.
காரார்வரை கொங்கை கண்ணர் கடலுடுக்கை
பெராரமார்பின் பெருமாமழைக்குந்தல்
நீராரவெலி நிலமண்கையென்னும் -- இப் 2674
பாரூர் சொலப்பட்டமூன்னன்றெ -- அம்மூன்றும்
ஆரயில்தானெ அரம்பொருளின்பமென்று 2675
Having the two divine mountains (of thirumalirunjolai and thiruvengadam), which are laden with clouds, as her bosoms, having the expansive ocean as her sari, having sun, with its beautiful rays, as thilakam (pattern on the forehead), a decorative ornament, the huge river (kaviri) which is reddish and muddled
Being one decorated with distinguished chains on her chest, having huge, dark clouds as her tresses, having the avarana jalam (water around the periphery of universe) as her protection, being called as Bhooma devi
By the people living in this world, the purusharthams (end goals) mentioned by them, aren’t they three which are dharmam (righteousness), artham (wealth) and kamam (love)
மன்னிய பல்பொறிசேர் ஆயிரவாய் வாளரவின்,
சென்னி மணிக்குடுமித் தெய்வச் சுடர்நடுவுள்,
மன்னிய நாகத் தணைமேலோர் மாமலைபோல்,
மின்னும் மணிமகர குண்டலங்கள் வில்வீச, 2713
ஆயிரம் தலைகளைக் கொண்ட ஆதிசேஷன் (பாம்பு), பலப்பல பொறியையும், ஒளியையும் உடைய, இரத்தினங்கள் பதிக்கப்பட்ட தலையின் உச்சியில் வீற்றிருக்கும் தெய்வ ஒளி நடுவே, ஒரு பெரிய மலை போல திருவனந்தாழ்வான் மீது பள்ளி கொண்டிருக்கும் திருமால், மின்னும் மணிமகர குண்டலங்கள் ஒளியை வீசக் காட்சி அளிக்கிறார்.
உயர்வற வுயர்நலம் முடையவன் யவனவன்
மயர்வற மதிநலம் அருளினன் யவனவன்
அயர்வறும் அமரர்கள் அதிபதி யவனவன்
துயரறு சுடரடி தொழுதெழென் மனனே.2791
Let us worship the feet of the one, who is the highest good, who is the Lord of the ever-wakeful celestials, who dispels all doubt and grants pure knowledge.
உளன் எனில் உளன் அவன் உருவம் இவ்வுருவுகள்.
உளன் அலன் எனில் அலன் அவன் அருவமிவ்வருவுகள்
உளனென இலனென அவைகுணமுடைமையில்
உளன் இரு தகைமையோடு ஓழிவிலன் பரந்தே - 2799
[for believers in form, there are deities, non believers formless conceptual entity, supporting both phenomena, ever existing/extending everywhere]
திருமால் ஆணுமல்லன், பெண்ணுமல்லன், அலியுமல்லன் |
அவன் தேவனுமல்லன், அசுரனுமல்லன், மனிதனுமல்லன்,
பசுபஷியுமல்லன், பிறப்பிறப்புடையவனுமல்லன், குணத்திற்கும்
கர்மத்திற்குமப்பால், உளதிற்கும் இலதிற்குமப்பால்,
நீக்கமற நிறைகின்றவன் அவன். - 2799
அவாவறச் சூழரியை அயனை அரனை அலற்றி
அவாவற்று வீடுபெற்ற குருகூர்ச் சடகோபன் சொன்ன
அவாவிலந் தாதிகளால் இவையா யிரமும் முடிந்த
அவாவிலந் தாதியிப் பத்தறிந் தார்பிறந் தாருயர்ந்தே 3892
Those who sing/recite/understand these adorable thousand songs, on the Lord who appears as Hari, Brhma and Siva, by kurugur Satakopan, can find their liberation from suffering.
நிதியைப் பொழியும் முகில்என்று நீசர்தம் வாசல்பற்றித் துதிகற் றுலகில் துவள்கின்றி லேன், இனித் தூய்நெறிசேர் எதிகட் கிறைவன் யமுனைத் துறைவன் இணையடியாம் கதிபெற் றுடைய இராமா னுசனென்னைக் காத்தனனே. 3913
அங்கயல் பாய்வயல் தென்னரங்கன் அணி ஆகமன்னும்
பங்கய மாமலர்ப் பாவையைப் போற்றுதும் பத்தியெல்லாம்
தங்கிய தென்னத் தழைத்துநெஞ்சே நந்தலைமிசையே
பொங்கிய கீர்த்தி இராமா னுசனடிப்பூமன்னவே. -4000
எண்ணாயிரம் ஆண்டு யோகம் இருப்பினும் கண்ணார் அமுதனை
கண்டறிவாரில்லை, உள் நாடி ஒளி பெற உள்ளே நோக்கினார்
கண்ணாடி போல கலந்து நின்றானே
அடியார்கள் வாழ! அரங்க நகர் வாழ! ஆழ்வார் தமிழ் நூல் வாழ!
கடல் சுழ்ந்த மண் ணுலகம் வாழ! உலகத்தார் வாழ!!!