hinduhome

prayhome

Ayyappa Songs

Non commercial web site of personal collections, available to every one. Use it if you find them useful. Encouraged to copy and distribute if needed.

பள்ளிக்கட்டு சபரி மலைக்கு ...

பள்ளிக்கட்டு சபரி மலைக்கு
கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை
ஸ்வாமியே அய்யப்போ - ஸ்வாமியே
நெய்யபிஷேகம் சுவாமிக்கே - கற்பூர தீபம் சுவாமிக்கே
ஐயப்பன் மார்களும் கூறிக்கொண்டு ஐயனை நாடி சென்றிடுவார்
சபரி மலைக்கு சென்றிடுவார் (ஸ்வாமியே அய்யப்போ அய்யப்போ சுவாமியே)
கார்த்திகை மாதம் மாலையணிந்து
நேர்த்தியாகவே விரதமிருந்து
பார்த்த சாரதியின் மைந்தனே உன்னைபார்க்க வேண்டியே தவமிருந்து (2)
இருமுடி எடுத்து எருமேலி வந்து
ஒரு மனதாகி பேட்டை துள்ளி
அருமை நண்பராம் வாவரை தொழுது
அய்யனின் அருள் மலை ஏறிடுவார் (ஸ்வாமியே அய்யப்போ அய்யப்போ சுவாமியே)
அழுதை ஏற்றம் ஏரும் போது
அரிகரன் மகனை துதித்து செல்வார்
வழி காட்டிடவே வந்திடுவார்
அய்யன் வன்புலி ஏறி வந்திடுவார்
கரிமலை ஏற்றம் கடினம் கடினம்
கருணை கடலும் துணை வருவார்
கரிமலை இறக்கம் வந்தவுடனே
திருநதி பம்பையை கண்டிடுவார் (ஸ்வாமியே அய்யப்போ அய்யப்போ சுவாமியே)
கங்கை நதி போல் புண்ணிய நதியாம்
பம்பையில் நீராடி சங்கரன் மகனை கும்பிடுவார்
சங்கடமின்றி ஏறிடுவார்
நீலிமலை ஏற்றம் சிவபாலனும் ஏற்றிடுவார்
காலமெல்லாம் நமக்கே அருள் காவலனாய் இருப்பார்
தேக பலம் தா பாத பலம் தா
தூக்கிவிடையா ஏற்றிவிடையா
தேக பலம் தா பாத பலம் தா
தேக பலம் தா என்றல் அவரும் தேகத்தை தந்திடுவார்
பாத பலம் தா என்றல் அவரும் பாதத்தை தந்திடுவார்
நல்லபாதையை காட்டிடுவார் (ஸ்வாமியே அய்யப்போ அய்யப்போ சுவாமியே)
சபரி பீடமே வந்திடுவார் சபரி அன்னையை பணிந்துடுவார்
சரங்குத்தி ஆளில் கன்னிமார்களும் சரத்தினை போட்டு வணங்கிடுவார்
சபரிமலை தனை நெருங்கிடுவார் பதினெட்டு படி மீது ஏறிடுவார்
கதி என்று அவனை சரணடைவார்
மதி முகம் கண்டே மயங்கிடுவார்
ஐயனை துதிக்கையிலே தன்னையே மறந்திடுவார்
பள்ளிக்கட்டு சபரி மலைக்கு
கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை
ஸ்வாமியே அய்யப்போ
சுவாமி சரணம் அய்யப்ப சரணம்
பள்ளிக்கட்டு சபரி மலைக்கு
கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை
சுவாமி அய்யப்போ அய்யப்போ சுவாமி
சரணம் சரணம் அய்யப்பா சுவாமி சரணம் அய்யப்பா

ஸ்வாமியே சரணம் ஐயப்பா||

ஸ்வாமியே சரணம் ஐயப்பா|| சரணம் அய்யப்பா
அன்புவடி வானவனே சரணம் அய்யப்பா
ஆறுமுகன் சோதரனே சரணம் அய்யப்பா
இன்னலெலாம் தீர்ப்பவனே சரணம் அய்யப்பா
ஈசனருள் புத்திரனே சரணம் அய்யப்பா
உலகாள வந்தவனே சரணம் அய்யப்பா
ஊமைக்கருள் செய்தவனே சரணம் அய்யப்பா
எரிமேலி சாஸ்தாவே சரணம் அய்யப்பா
ஏழை பங்காளனே சரணம் அய்யப்பா
ஐங்கரனுக் கிளையவனே சரணம் அய்யப்பா
ஒப்புயர் வற்றவனே சரணம் அய்யப்பா
ஓங்குமலை உறைபவனே சரணம் அய்யப்பா
ஔடதமே அருமருந்தே சரணம் அய்யப்பா
ஆயுதங்கை கொண்டவனே சரணம் அய்யப்பா
சரணம் அய்யப்பா சாமி சரணம் அய்யப்பா
சுவாமியே அய்யப்போ - அய்யப்போ சுவாமியே!
சுவாமி சரணம் அய்யப்ப சரணம்
அய்யப்ப சரணம் சுவாமி சரணம்!
தேவனே தேவியே - தேவியே தேவனே!
பகவானே பகவதியே - பகவதியே பகவானே!
ஈஸ்வரனே ஈஸ்வரியே - ஈஸ்வரியே ஈஸ்வரனே!
சங்கரனே சங்கரியே - சங்கரியே சங்கரனே!
ஏத்தி விடய்யா - தூக்கி விடய்யா
பகவானே - பகவதியே
கல்லும் முள்ளும் - காலுக்கு மெத்தை
பள்ளிக் கட்டு - சபரி மலைக்கு
சாமியே ஐயப்பா – ஐயப்பா சாமியே
தேக பலந்தா - பாத பலந்தா
ஆத்ம பலந்தா - மனோபலந்தா
தூக்கிவிடய்யா - ஏத்திவிடய்யா

ஓம் சுவாமியே சரணம்

(1) ஓம் சுவாமியே சரணம் ஐயப்பா
(2) அரிஹரசுதனே சரணம் ஐயப்பா
(3) அன்னதானப் பிரபுவே சரணம் ஐயப்பா
(4) அமுதமலை ஏற்றமே சரணம் ஐயப்பா
(5) அமுதமலை இறக்கமே சரணம் ஐயப்பா
(6) அன்புள்ளம் கொண்டவனே சரணம் ஐயப்பா
(7) அமுதா நதியே சரணம் ஐயப்பா
(8) அலங்காரப் பிரியனே சரணம் ஐயப்பா
(9) அச்சன் கோவில் அரசே சரணம் ஐயப்பா
(10) அனாத ரட்சகனே சரணம் ஐயப்பா
(11) ஆபத்தபாந்தவரே சரணம் ஐயப்பா
(12) ஆரியங்காவு ஐயாவே சரணம் ஐயப்பா
(13) ஆனந்த ரூபனே சரணம் ஐயப்பா
(14) ஆதிசக்தி மைந்தனே சரணம் ஐயப்பா
(15) ஆறுமுகன் சோதரனே சரணம் ஐயப்பா
(16) இச்சை தவிர்ப்பவனே சரணம் ஐயப்பா
(17) இருமுடிப்பிரியனே சரணம் ஐயப்பா
(18) இணையில்லா தெய்வமே சரணம் ஐயப்பா
(19) இன்சுவை பொருளே சரணம் ஐயப்பா
(20) இடர்களை ஒழிப்பவனே சரணம் ஐயப்பா
(21) இருளகற்றிய ஜோதி சரணம் ஐயப்பா
(22) இன்பம் தருபவனே சரணம் ஐயப்பா
(23) இஷ்டம் வரம் தருபவரே சரணம் ஐயப்பா
(24) ஈடில்லா தெய்வமே சரணம் ஐயப்பா
(25) ஈசனின் மைந்தனே சரணம் ஐயப்பா
(26) ஈன்றெடுத்தே தாயே சரணம் ஐயப்பா
(27) ஈகை நிறைந்தவனே சரணம் ஐயப்பா
(28) உண்மைப் பரம்பொருளே சரணம் ஐயப்பா
(29) உலகாளும் காவலனே சரணம் ஐயப்பா
(30) உத்தமனே சத்தியனே சரணம் ஐயப்பா
(31) உடும்பறைக் கோட்டையே சரணம் ஐயப்பா
(32) ஊமைக்கருள் புரிந்தவனே சரணம் ஐயப்பா
(33) ஊழ்வினை அழிப்பவனே சரணம் ஐயப்பா
(34) எங்கள் குல தெய்வமே சரணம் ஐயப்பா
(35) என் குருநாதரே சரணம் ஐயப்பா
(36) எங்கள் குறை தீர்ப்பவனே சரணம் ஐயப்பா
(37) எருமேலி வாசனே சரணம் ஐயப்பா
(38) எங்களை காத்தருள்வாய் சரணம் ஐயப்பா
(39) ஏழைப் பங்காளன் சரணம் ஐயப்பா
(40) ஏற்றம் மிகுந்தவனே சரணம் ஐயப்பா
(41) ஏகாந்த மூர்த்தியே சரணம் ஐயப்பா
(42) ஏத்தமானூர் அப்பனே சரணம் ஐயப்பா
(43) ஒளிரும் திருவிளக்கே சரணம் ஐயப்பா
(44) ஓங்காரப் பரம்பொருளே சரணம் ஐயப்பா
(45) ஓதும்மறை பொருளே சரணம் ஐயப்பா
(46) ஒளடதம் ஆனவனே சரணம் ஐயப்பா
(47) கன்னி மூலகணபதி பகவானே சரணம் ஐயப்பா
(48) கருத்த சுவாமியே சரணம் ஐயப்பா
(49) கரிமலை ஏற்றமே சரணம் ஐயப்பா
(50) கரிமலை இறக்கமே சரணம் ஐயப்பா
(51) கண்கண்ட தெய்வமே சரணம் ஐயப்பா
(52) கலியுக வரதனே சரணம் ஐயப்பா
(53) கல்லிடும் குன்றே சரணம் ஐயப்பா
(54) கற்பூர ஜோதியே சரணம் ஐயப்பா
(55) கருப்பண்ண சுவாமியே சரணம் ஐயப்பா
(56) கருணையின் வடிவே சரணம் ஐயப்பா
(57) காந்தமலை ஜோதியே சரணம் ஐயப்பா
(58) காருண்ய மூர்த்தியே சரணம் ஐயப்பா
(59) காமாட்சியே தாயே சரணம் ஐயப்பா
(60) காளைகட்டி நிலையமே சரணம் ஐயப்பா
(61) குலத்துபுழை பாலகனே சரணம் ஐயப்பா
(62) குறைகளை நீக்கிடுவாய் சரணம் ஐயப்பா
(63) குற்றங்களை பொறுத்தருள்வாய் சரணம் ஐயப்பா
(64) குழந்தை மனம் படைத்தவனே சரணம் ஐயப்பா
(65) குருவாயூர் அப்பனே சரணம் ஐயப்பா
(66) குன்றின் மீது அமர்ந்திருப்பவனே சரணம் ஐயப்பா
(67) கொண்டு போய் கொண்டு
(68) வரனும் பகவானே சரணம் ஐயப்பா
(69) சபரி பீடமே சரணம் ஐயப்பா
(70) சரங்குத்தி ஆலே சரணம் ஐயப்பா
(71) சபரி கிரீஸனே சரணம் ஐயப்பா
(72) சங்கடங்களை தீர்த்துடுவாய் சரணம் ஐயப்பா
(73) சத்ரு சம்ஹரனே சரணம் ஐயப்பா
(74) சரண கோஷப் பிரியனே சரணம் ஐயப்பா
(75) சாஸ்தாவின் நந்தவனமே சரணம் ஐயப்பா
(76) சாந்த சொரூபனே சரணம் ஐயப்பா
(77) சாந்தி தரும் பேரழகே சரணம் ஐயப்பா
(78) சிறிய கடுத்தசாமியே சரணம் ஐயப்பா
(79) சிதம்பரனார் பாலகனே சரணம் ஐயப்பா
(80) சுடரும் விளக்கே சரணம் ஐயப்பா
(81) தர்ம சாஸ்தாவே சரணம் ஐயப்பா
(82) திருமால் மருகனே சரணம் ஐயப்பா
(83) தித்திக்கும் தெள்ளமுதே சரணம் ஐயப்பா
(84) தேனாபிஷோக பிரியரே சரணம் ஐயப்பா
(85) நாகராஜக்களே சரணம் ஐயப்பா
(86) நித்திய பிரம்மச்சாரியே சரணம் ஐயப்பா
(87) நீலமலை ஏற்றமே சரணம் ஐயப்பா
(88) நீலமலை இறக்கமே சரணம் ஐயப்பா
(89) நீல லஸ்தர தாரியே சரணம் ஐயப்பா
(90) நெய் அபிஷேக பிரியரே சரணம் ஐயப்பா
(91) பம்பா நதியே சரணம் ஐயப்பா
(92) பம்பையின் சிசுவே சரணம் ஐயப்பா
(93) பம்பை விளக்கே சரணம் ஐயப்பா
(94) பந்தள மாமணியே சரணம் ஐயப்பா
(95) மமதையெல்லாம் அழிப்பவனே சரணம் ஐயப்பா
(96) மகர ஜோதியே சரணம் ஐயப்பா
(97) வாவரின் தோழனே சரணம் ஐயப்பா
(98) வன்புலி வாகனனே சரணம் ஐயப்பா
(99) வில்லாளி வீரனே சரணம் ஐயப்பா
(100) வீரமணி கண்டனே சரணம் ஐயப்பா
(101) விபூதிப் பிரியனே சரணம் ஐயப்பா
(102) பொன்னம்பல வாசனே சரணம் ஐயப்பா
(103) பஞ்சமாதா திருவருளே சரணம் ஐயப்பா
(104) மாளிகை புரத்தம்மனே சரணம் ஐயப்பா
(105) தேவிலோக மஞ்சாதவே சரணம் ஐயப்பா
(106) ஐங்கரன் தம்பியே சரணம் ஐயப்பா
(107) ஐஸ்வர்யம் தருபவனே சரணம் ஐயப்பா
(108) 108 சுவாமியே சரணம் ஐயப்பா!

சபரிமலைக்காடு ...by veeramani

சபரிமலைக்காடு 
அது சாஸ்தாவின் வீடு  (சபரிமலைக்காடு )
இருமுடி கட்டி நடைபோடு 
எந்நாளும் அவன் துணை தேடு (சபரிமலைக்காடு )

மலைமேல் இருக்கின்றான் 
மகர‌ தீபத்தில் தெரிகின்றான் - நீ
சரணமென்றே சொல்லு 
அவன் சன்னதி நாடிச் செல்லு (சபரிமலைக்காடு )

ஆசைகளெல்லாம் நிறைவேறும் 
நம் காரியமெல்லாம் கைகூடும் (சபரிமலைக்காடு )

அன்பு காணிக்கை பெறுகின்றான் 
அபிஷேகக‌ காட்சி தருகின்றான் (சபரிமலைக்காடு )

கையெடுத்து நீ கும்பிடப்பா 
காலமெல்லாம் நம்பிடப்பா
புண்ணிய‌ மெல்லாம் தேடிவரும் 
பகழெல்லாமே ஓடிவரும் (சபரிமலைக்காடு )

Note:
சாமியே சரணம் ஐயப்பா  (x4)
வேத சாஸ்தா வேதத்தை தழைக்கச் செய்பவர்
ஞான சாஸ்தா கல்லால மரத்தின் அடியில் அமர்ந்த குரு 
பிரம்ம சாஸ்தா குழந்தை பாக்கியம் அடைய
மகா சாஸ்தா வாழ்வில் எல்லாவித முன்னேற்றங்களையும் அடைய 
சம்மோஹன சாஸ்தா இல்லறத்தில் ஒற்றுமையை மலரச் செய்பவர், 
கல்யாண வரத சாஸ்தா தன் தேவியர்களுடன் காட்சி தருபவர். 
வீர சாஸ்தா  ருத்திர மூர்த்தியாக திகழ்கிறார்

தர்ம சாஸ்தா:- சபரிமலையில், குக்குட ஆசனத்தில் அமர்ந்தபடி சுவாமி ஐயப்பனாக அருள்பாலிப்பவர் 
திருப்பட்டூர் திருத்தலம் ‘அரங்கேற்ற ஐயனார்’

மணிகண்டா போற்றி போற்றி

வன்புலி ஏறிவந்த வைத்திய நாதா போற்றி
வையத்தில் புதிதாய் வந்த "வைணவச் சைவா" போற்றி
அன்பிலே சிவத்தைக் காணும் அரனவன் வித்தே போற்றி
அறிதுயில் காணும் அந்த அரங்கனின் முத்தே போற்றி
ஒன்பது கோள்கள் தாக்கம் ஓய்ந்திட வைப்பாய் போற்றி
ஓயாது தொழுவோர் நெஞ்சில் ஒளியாகி நிற்பாய் போற்றி
மன்பதை உயிர்கட் கெல்லாம் மன்னவா போற்றி போற்றி
மலரடி தொழுதோம் காப்பாய் மணிகண்டா போற்றி போற்றி

கரிமலை நாதா போற்றி கலியுக வரதா போற்றி
காட்டிலே உறைவாய் போற்றி கருணையைப் பொழிவாய் போற்றி
அரியணை துறந்தாய் போற்றி அரக்கியை அழித்தாய் போற்றி
அரிஹர சுதனே போற்றி அய்யப்பா போற்றி போற்றி
சொரிமுத்து அய்யா போற்றி சுந்தர வடிவே போற்றி
சோதியாய்த் தெரிவாய் போற்றி சுகங்களைத் தருவாய் போற்றி
சரிவிலா வாழ்க்கை தருவாய் சந்தனப் பிரியா போற்றி
சகமெலாம் காக்கும் எங்கள் சங்கரன் புதல்வா போற்றி.

மகிஷியை போரில் வென்ற மாமணி கண்டா போற்றி
மாளிகைப் புறத்து அம்மன் மனங்கவர் மன்னா போற்றி
சகிப்போடு மகுடம் தள்ளி சன்யாசம் பூண்டாய் போற்றி
சபரியில் கோயில் கொண்ட சாஸ்தாவே போற்றி போற்றி
தகிக்கின்ற மகரஜோதி தணலிலே எரிவாய் போற்றி
தளும்பிடும் பம்பையாற்றுத் தண்ணீரில் தெரிவாய் போற்றி
அகிலத்தைக் காக்க வந்த அரிஹர மைந்தா போற்றி
அருள்மழை பொழிவாய் எங்கள் அய்யப்பா போற்றி போற்றி.

வீரமணி கண்டா போற்றி வேங்கைவா கனனே போற்றி
வேலவன் தமையா போற்றி வேதனை தீர்ப்பாய் போற்றி
தாரமொன் றில்லாய் போற்றி தவமணிச் செல்வா போற்றி
தாருக வனத்தா போற்றி தாங்கிட வருவாய் போற்றி
பாரங்கள் குறைப்பாய் போற்றி பாவங்கள் பொறுப்பாய் போற்றி
பந்தள அரசே போற்றி பம்பையின் பரிசே போற்றி
ஆரண்ய வாசா போற்றி ஆரியங் காவா போற்றி
ஆனந்த ரூபா போற்றி அய்யப்பா போற்றி போற்றி .

Email Contact

Website maintained by: NARA who is a Consultant by profession and an Engineer by qualification.
Nara has been interested in Hindusim from early days. Now he devotes much of his personal time in understanding asian culture, beliefs and languages. He was an active researcher for language Observatory Program. He visited many holy places in India, Nepal, SriLanka, Cambodia, Bali, Java to understand evolution of Indian religion and spread of Indian culture to south east asia. He has given many talks on Indian astronomy, Philosophy, Science and IT industry.