hinduhome

prayhome

Ramar Songs

Non commercial web site, available to every one. Use it if you find them useful. Encouraged to copy and distribute if needed.

Bhavayami Raghuramam Lyrics

Swathi Thirunal Krithi
பல்லவி (சாவேரி)
பாவயாமி ரகுராமம் | பவ்ய சுகுணாராமம்
அனுபல்லவி
பாவுகவிதரணபரா- | பாங்கலீலாலசிதம்
ஸரிகஸரி, மபதபத, | ரிஸநிதநிதபமகரிஸத.|
ஸரிம, கரிமபத, பமபதஸ, நிதநிதபமபத|
கரிஸத, ரிஸத, ,ஸத, ,கரிநிதமகரிஸத| (பாவயாமி ரகுராமம்)

சரணம் 1 (நாட்டைகுறிஞ்சி)
தினகரான்வயதிலகம் | திவ்யகாதி சுதசவனா||
வனரசிதசுபாஹுமுக | வதமஹல்யா பாவனம்||
அனன்கமீசசாபபங்கம் | ஜனகசுதாப்ரானேசம்||
கனகுபிதப்ருகுராம | கர்வஹரமிதசாகேதம்||
மகஸ, நி.த.நி.ஸ,ரிகம | நிதம, கரிகமபகரிஸ|
நி.த.நி.ஸரிகமநிதநிபதநிஸநிதநிஸரிகமகசநி|
கரிஸத, ரிஸத, ,ஸத, ,கரிநிதமகரிஸத| (பாவயாமி ரகுராமம்)

சரணம் 2 (தன்யாசி)
விஹிதாபிஷேகமதா | விபினகதாமார்யவாசா||
சஹிதசீதா சௌமீத்ரிம் | ஷாந்ததமா ஷீலம்||
குஹநிலையகதம் சித்ர| கூடாகதபரத டத்தா||
மஹிதரத்னமயபாதுகம்| மதனசுந்தராங்கம்||
நி.ஸக,மபகமப, நிஸ | ரிஸரிநிஸபதபக, ரிஸ|
நிஸகமபக, மபநிஸப, நிஸகரிஸநிதபநிஸ
கரிஸத, ரிஸத, ,ஸத, ,கரிநிதமகரிஸத| (பாவயாமி ரகுராமம்)

சரணம் 3 (மோஹனம்)
விததண்ட காரண்யகதா | விராதடாலனம்||
சுகரிதக தஜாடதானுபம்| இடவைஷ்ணவாஸ்த்ரம்||
பதகவரஜ டாயுனூதம்| பஞ்சவடீவிஹிதவாசம்||
அதிகோரசூர்ப்பணகாவசனா| கதகராதிஹாரம்||
க, , பகரிகரிஸத.ஸரி| க, , பதஸதபகரிஸரி
கபககரிஸரிகரிரிஸதஸரிகரிகபகபதபதஸ|
கரிஸத, ரிஸத, ,ஸத, ,கரிநிதமகரிஸத| (பாவயாமி ரகுராமம்)

சரணம் 4 (முகாரி)
கனகமிருகரூபதாரக | லமாரிசஹரமிஹா சு||
ஜனவிமத தசாஸ்யஹ்ருத| ஜனக ஜான்வேஷானம்||
அனகம் பம்பாதீரசங்கட ஆஞ்சனே நமோமணி||
தனுஜசக்யஹரம் வாலி| தனுதலனாமீசம்||
ப, , மகரிஸ,நி.த.ஸரி| ம, , கரிஸரிமபமநித|
ஸ, ஸநிதபப, மகரிஸநி.த.ஸரிமபநிதமபதஸ
கரிஸத, ரிஸத, ,ஸத, ,கரிநிதமகரிஸத| (பாவயாமி ரகுராமம்)

சரணம் 5 (பூர்வி கல்யாணி)
வானரோத்தமசஹிதவா| யுசுனுகரார்பித||
பானுசசதபாஸ்வரபவ்ய| ரத்னாங்குலீயம்||
தேன புனரணீத | ன்யூன சூடாமணி தர்சனம்||
ஸ்ரீநிதிமுததிதீர | ஸ்ருதவிபீஷணா மிலிதம்
க, மகரிஸத.ஸ,ரிகம| ப, ,தபஸநிதபமகரி|
கமபம, பக,, மரி, கஸ, ரிக, மபதபஸ, நி|
கரிஸத, ரிஸத, ,ஸத, ,கரிநிதமகரிஸத| (பாவயாமி ரகுராமம்)

சரணம் 6 (மத்யமாவதி)
கலிதவரசேதுபந்தம்| கலனிசீசுமபிசிடாசன||
டலனாம்ரு தசகண்ட| விதராநமடிதீரம்||
ஜ்வலன பூதஜனகசுதா| சஹிதம்யாத சாகேதம்||
விலசிதபட்டாபிஷேகம்| விஸ்வபாலம்பத்மநாபம்||
ரி, மரிமபநி, பமபநி| ஸ, , நிஸநிபபமமரிஸ|
ராகம்1: ரிபமரிஸநி. ஸரிமப
ராகம்2: தபஸ, நிதபமகமகரி
ராகம்3: ஸ, நி. த.. ஸரிமக ரிஸரி
ராகம்4: க, தபகரிஸரிகபதஸ
ராகம்5: ரிஸத, பதபக, ரிஸ
ராகம்6: நி. ஸமகமநிதநிபதநிஸ
ராகம்0: கரிஸத, ரிஸத, ,ஸத, ,கரிநிதமகரிஸத|

பிரபந்த ராமாயணம்

பால காண்டம்
திருமடந்தை மண்மடந்தை இருபாலும் திகழ
நலம் அந்தம் இல்லதோர் நாட்டில்
அந்தம் இல் பேரின்பத்து அடியாரோடு
ஏழுலகும் தனிக்கோல் செல்ல வீற்று இருக்கும்
அயர்வு அறு அமரர்கள் அதிபதியான
அணியார் பொழில் சூழ் அரங்கநகர் அப்பன்
அலைநீள் கடலுள் அழுந்து நாவாய் போல்
ஆவாக் ஆர்துணை என்று துளங்கு நல்ல
அமரர் துயர்தீர வல்லரக்கர் இலங்கை
பாழ்படுத்ததற்கு எண்ணிப்பார் அதனில்
மண்ணுலகத்தோர் உய்ய மணீநகர அயோத்தியினில்
வெங்கதிரோன் குலத்துக்கு ஓர் விளக்காய்
கௌசலை தன் குலமதலையாய்த்
தயரதன் தன் ஆசை மகனாய்க்
குணம்திகழ கொண்டலாய்க் குலம் <உயரத் தோன்றி
மந்திரம் கொள் மறைமுனிவன் பின் நடந்த
வந்து அடர்த்த தாடகை தன் உரத்தைக் கீறி
வல்லரக்கர் உயிர் உண்டு மறலிக்கும் கைகொடுத்து
கல்லைப் பெண்ணாக்கிக் காரார் திண்சிலை இறுத்து
மைதிலியை மணம் புணர்ந்து மழுவாளி நல்சிலைவாங்கி
அவன் தவத்தை முற்றும் அழிய மிகச் செற்று
அம்பொன் நெடு மணிமாட அயோத்தி எய்தி
அரியணைமேல் மன்னன் ஆவான் நிற்க
அயோத்தியா காண்டம்
கொள்கைவன் கூனி குணம் இலாச்சொல் கொண்ட
கொடிய கைகேசி குலம் கெடுத்த சொல்கேட்டு
மலக்கிய மா மனத்தனனாய் மன்னவலும் மறாது ஒழியக்
""குலக்குமரா! காடுஉறையப்போ என்றுவிடை கொடுப்ப
ஈன்றெடுத்த தாயரையும் இராச்சியமும் அங்கு ஒழிந்து
மைவாய களிறு ஒழிந்து மா ஒழிந்து தேர்ஒழிந்து
கலன் அணியாதோ காமர் எழில் விழல் உடுத்து
மான் அமரும் மென்நோக்கி வைதேகி இன் துணையாய்
இளங்கோவும் வாளும் இகல்வில்லும்
கொண்டு பின் செல்ல
கலையும் சுரியும் பரிமாவும் திரியும்
கானம் கடந்து பக்தியுடைக் குகன் கடத்தக்
கங்கை கடந்து கடுவனங்கள் போய்ப்புக்குக்
காயொடு நீடு கனி உண்டு
வியன் கானம் மரத்தின் நிழல்
கல்லணைமேல் கம் துயின்று
சித்திரக் கூடத்து இருப்பத் தயரதன் தான்
""நின்மகன் மேல் பழி விளைத்திட்டு என்னையும்நீள்வானில் போக்க
என்பெற்றாய் கைகேசி இன்புறவே நானும்
வானகமே மிக விரும்பிப் போகின்றேன் என்று
வான் ஏறத் தேன் அமரும் பொழில் சாரல்
சித்திரக் கூடத்து ஆனைப் புரவியொடும் தேரொடும்
காலாள் அணிகொண்ட கடுஞ்சேனை தன்னொடும் போய்
வசிட்ட சுமந்தரருடன் வந்து அடைந்த பரதற்கு
மரவடியைச் சிரத்தில் வான் பயணம் வைத்து
குவலயத் துங்கக்கரியும் குதிரையும் இராச்சியமும்
பரதர்க்கு அருளிப் பருணிதர்க்கு விடைகொடுத்து
ஆரணிய காண்டம்
திருவுடைய திசைக் கருமம் திருத்தப்போய்
தண்டகாரண்யம் புகுந்து தயங்குமறை முனிவர்க்கு
""அஞ்சேன்மின் என்று அருள் கொடுத்து
வெங்கண் விறல் விராதன் உகவில் குனிந்து
வண்தமிழ் மாமுனி கொடுத்த வரிவில் வாங்கிப்
பஞ்சவடி அதனில் வந்து இருந்த போழ்தத்துப்
புலர்ந்து எழுந்து காமத்தால் சீதைக்கு நேராவன் என்னப்
பொன்நிறம் கொண்ட சுடுசினத்த சூர்ப்பநகி
கொடு மூக்கும் காதும் கூர்வாளும் ஈர்ந்து எடுத்துக்
கரனொடு தூடணன் தன் உயிரதனை வாங்க அவள்
கதறிப் பதறித் தலைமேல் கை வைத்து
மலை இலங்கை ஓடிப் புகக் கொடுமையினால்
கடுவிசை அரக்கன் அலைமலிவேல் கண்ணாளை
அகல்விப்பதற்கு ஓர் உருவாய் மான் அமைத்துச்
செங்கல் பொடிக் கூறைச் சிற்றெயிற்று முற்றல்
மூங்கிலின் மூன்று தண்டனத்தனாய் முரண வஞ்சித்து
இலைக்குரம்பில் தனிஇருப்பில் கனிவாய்த் திருவினைப் பிரித்து
நீள்கடல்சூழ் இலங்கையில் அரக்கர் குடிக்க நஞ்சாகக்
கொண்டுபோய் வம்புலாம் கடிகாவில் சிறையாக்க
அயோத்தியர் கோன் மாயமான் மாயச் செற்று
அலைமலை வேல் கண்ணாளை அகன்று தளர்வு எய்திச்
சடாயுவை வைகுந்தத்து ஏற்றிக்
கங்குலும் பகலும் கண்துயில் இல்லாக்
கானகம் படிஉலாலிக் கணை ஒன்று அதனால்
கவந்தணை மடித்துச் சவரி தந்த கனி உவந்து
கிட்கிந்தா காண்டம்
மருவு கவியரசன் பின் மராமரம் ஏய்எய்து
உருவத்து எழு வாலிமார்பில் ஒருகணை உருவ ஓட்டிக்
கருத்துடைத் தம்பிக்கு இன்பக் கதிர்முடி அரசு அளித்து
வானரக்கோன் உடன் இருந்து வைதேகி தனைத்தேடத்
திசைக் கருமம் திருத்தித் திறல் விளங்கு மாருதிக்கு
சுந்தர காண்டம்
மாயோன் தூது செப்ப மாக் கடலைக் கடந்து
சீராரும் திறல் அனுமன் மும்மதிள் இலங்கை தனில்
வாராரும் முலை மடவாள் வைதேகிதனைக் கண்டு
""நின்னடியேன் விண்ணப்பம் நிகழ்ந்தசெயல் கேட்டு அருளாய்
அயோத்திதன்னில் ஓர் இட வகையில்
எல்லியம் போதினில் எழில் மல்லிகை மாலை கொண்டு அங்கு ஆர்த்ததுவும்
கலக்கிய மாமனத்தினளாய்க் கைகேசி வரம்வேண்ட
மலக்கிய மாமனத்தினாய் மன்னவனும் மறாது ஒழியக்
குலக்குமரா காடுஉறையட் போ என்று விடை கொடுப்ப
இலக்குமணன் தன்னோடு ஆங்குஎய்தி கங்கைதனில்
கூர்அணிந்த வேல்வலவன் குகன் உறவு கொண்டதுவும்
சித்திரக் கூடத்து இருப்பப் பரதநம்பி பணிந்ததுவும்
சிறுகாக்கை முலை தீண்ட மூவுலகும் திரிந்து ஓடி
""வித்தகனே இராமாவோ நின் அபயம் என்ன
அத்திரமே அதன் கண்ணை அறுத்ததவும்
பொன் ஒத்த மான் ஒன்ற புகுந்து இனிது விளையாட
நின் அன்பின் வழிநின்று சிலைபிடித்து எம்பிரான் ஏகப்
பின்னை அங்கு இலக்குமணன் பிரிந்ததும்
அயோத்தியர் கோன் அடையாளம் ஈது அவன்கை
மோதிரமே என்று அடையாளம் முழுதுரைக்க
மலர்க்குழலாள் சீதையும் வில்இறுத்தான்மோதிரம்கண்டு
அநுமான் அடையாளம் ஓக்கும் என்று உச்சி வைக்கத்
திறள் விளங்கு மாருதியும் உயர் மாக் கடிகாவை
இறுத்தக் காதல் மக்களும் சுற்றமும் கொன்று
கடி இலங்கை மலங்க எரித்து
அரக்கர் கோமான் சினம் அழித்து அன்பினால்
அயோத்தியர்கோன் தளிர்புரையும் அடிபணியக்
யுத்த காண்டம்
கான எண்கும் குரங்கும் கடும் படையாக்
கொடியோன் இலங்கையில் புகல் <உற்ற
அலையார் கடற்கரை வீற்றிருந்து அங்குச்
செல்வ விபீடணன் சரண்புக்க இலங்கை அருளி
குரை கடலை அடல் அம்பால் மறுக எய்து
கோல விலங்கு பணியால் அணைகட்டி
மறுகரை ஏறி இலங்கை பொடியாகச்
சிலைமலி செஞ் சரங்கள் செல <<உய்த்துக்
அம்ப நிகும்பனும் கும்பகர்ணன் இந்திரசித்து அழிய
அரக்கர் ஆவி மாள அரக்கர் கூத்தர் போல
அக்குமணி தூரம் ஆட அவ்விலங்கை மன்னன்
முடி ஒருபதும் தோள் இருபதும் போய் உதிர
சிலை வளைத்துச் சரமழை பொழிந்துக்
கரம் துணித்து வெற்றி கைக் கொண்ட செருக்களத்துக்
கடிகமல் நான்முகனும் கண் மூன்று நாயகனும்
எண்மர் பதினொருவர் ஈரறுவர் ஓரிருவர்
மற்றுமுள்ள வானவரும் மலர்மழை பொழிந்து
மணிமுடி பணிதர அடி இணை வணங்கக்
கோலத் திருமா மகளொடு செல்வ வீடணனும்
வானரக் கோனுடன், வந்த புட்பகம் ஏறி
சீர் அணிந்து குகனோடு கூடி
அங்கண் நெடுமதில் புடைசூழ் அயோத்தி எய்தி
நன்னீர் ஆடிப் பொன்னின் நல் ஆடை சாத்தித்
திருச் செய்ய முடியும் ஆரமும் குழை முதலா
மேதகு பல்கலன் அணிந்து
சூட்டு நன் மாலைகள் தூயன ஏந்திப்
பரதனும், தம்பி அப் பணிவுடைச் சத்துருக்கன்
இலக்குவனோடும் இரவு நன் பகலும்
ஆட்செய்ய, வடிவுஇணை இல்லா
சங்கு தங்கு முன்கை மலர்க் குழலாள்
சீதையும் தானும் சிங்காசனத்து இருந்து
ஏழுலகும் தனிக் கோல் செல்ல
இனிது உகந்து வாழ்வித்து அருளினார்.

Bhajans

ஹரே ராம ஹரே ராம ராம ராம ஹரே ஹரே
ஹரே க்ரிஷ்ண ஹரே க்ரிஷ்ண க்ரிஷ்ண க்ரிஷ்ண ஹரே ஹரே

ஸ்ரி ராம ராம ராம ராமேதி ரமே ராமே மனோரமே
ஸஹஸ்ர நாம தத் துல்யம் ராம நாம வரணனெ

ரகுபதிராகவ ராஜாராம் | பதீதபாவன ஸீதாராம் || [2]
ஸுந்தரமாதவ மேகச்யாம் | கங்காதுளஸி ஜானகிராம் ||
ஆத்மாராம் ஸர்வாத்மாராம் | ஸீதாராம் ஸுகாதாராம்||
ரகுபதிராகவ ராஜாராம் | பதீதபாவன ஸீதாராம் ||
ஸீதாராம் ஸீதாராம் | பஜ ப்யரே து ஸீதாராம் ||
ஈஷ்வர அல்லா தெரேணாம் | ஸபகோ ஸந்மதி தே பகவான்
ரகுபதிராகவ ராஜாராம் | பதீதபாவன ஸீதாராம் || [2]

ரமா ரமா ரமா ரம ரமா-நாம தாரகம் | ரமா க்ரிஷ்ண வாஸுதேவ புக்தி-முக்தி தாயகம்
ஜானகி மணோஹரம் ஸர்வ-லோக நாயகம் |ஸண்கரதி திவ்யமன புண்ய-நாம கிர்த்தனம் ||

அச்யுதம் கேசவம் ராம நாராயணம் | க்ருஷ்ண தாமோதரம் வாஸுதேவம் ஹரிம் || [2]
ஸ்ரிதரம் மாதவம் கோபிகா வல் லபம் | ஜானகீ நாயகம் ராமசந்த்ரம் பஜே || [2]
ஜானகீ ஜீவன ஸ்மரணம் - ஜெய் ஜெய் ராம ராம |


Email Contact