hinduhome

prayhome

Vinayagar Songs

Non commercial web site, available to every one. Use it if you find them useful. Encouraged to copy and distribute if needed.

Vinayagane[To TOP]

விநாயகனே வினை தீர்ப்பவனே
வேழ முகத்தோனே ஞால முதல்வனே
விநாயகனே வினை தீர்ப்பவனே

குணாநிதியே குருவே சரணம்
குணாநிதியே குருவே சரணம்
குறைகள் களைய இதுவே தருணம்

விநாயகனே வினை தீர்ப்பவனே
வேழ முகத்தோனே ஞால முதல்வனே
விநாயகனே வினை தீர்ப்பவனே

உமாபதியே உலகம் என்றாய்
ஒரு சுற்றினிலே வலமும் வந்தாய்
கணநாதனே மாங்கனியை உண்டாய்
கதிர்வேலனின் கருத்தில் நின்றாய்

விநாயகனே வினை தீர்ப்பவனே
வேழ முகத்தோனே ஞால முதல்வனே

கணபதி songs

கலியுகத் தெய்வமே கந்தனுக்கு மூத்தோனே
மூஷிக வாகனனே மூலப் பொருளோனே
ஸ்கந்தகுரு கவசத்தை கலிதோஷம் நீங்கிடவே
திருவடியின் திருவருளால் செப்புகிறேன் காத்தருள்வாய்
சித்தி வினாயக ஜயமருள் போற்றுகிறேன் ...... 5
சிற்பர கணபதே நற்கதியும் தந்தருள்வாய்
கணபதி தாளிணையைக் கருத்தினில் வைத்திட்டேன்
அச்சம் தீர்த்து என்னை ரக்ஷித்திடுவீரே.

கைத்தல நிறைகனி யப்பமொ டவல்பொரி
கப்பிய கரிமுகன் அடிபேணிக்
கற்றிடு மடியவர் புத்தியி லுறைபவ
கற்பக மெனவினை கடிதேகும்
மத்தமும் மதியமும் வைத்திடு மரன்மகன்
மற்பொரு திரள்புய மதயானை
மத்தள வயிறனை உத்தமி புதல்வனை
மட்டவிழ் மலர்கொடு பணிவேனே
முத்தமி ழடைவினை முற்படு கிரிதனில்
முற்பட எழுதிய முதல்வோனே
முப்புர மெரிசெய்த அச்சிவ னுறைரதம்
அச்சது பொடிசெய்த அதிதீரா
அத்துய ரதுகொடு சுப்பிர மணிபடும்
அப்புன மதனிடை யிபமாகி
அக்குற மகளுட னச்சிறு முருகனை
அக்கண மணமருள் பெருமாளே.

வாதாபி கணபதிம் பஜேஹம்

பல்லவி:
வாதாபி கணபதிம் பஜேஹம
வாரணாஸ்யம் வர ப்ரதம்
அநுபல்லவி:
பூதாதி ஸம்ஸேவித சரணம்
பூத பௌதிக ப்ரபஞ்ச பரனம்
வீத ராகிணம் வினத யோகிணம்
விஷ்வ காரணம் விக்ந வாரணம்
சரணம்:
புரா கும்ப ஸம்பவ முநிவர ப்ரபூஜிதம் த்ரிகோண மத்யகதம்
முராரி ப்ரமுகாத்யு பாஸிதம் மூலாதார க்ஷேத்ர ஸ்திதம்
பராதி சத்வாரி வாகாத்மகம் ப்ரணவ ஸ்வரூப வக்ரதுண்டம்
நிரந்தரம் நிடில சந்த்ர கண்டம் நிஜவாமகர வித்ருத இக்ஷுதண்டம்
கராம்புஜ பாஷ பீஜாபூரம் கலுஷ விதூரம் பூதாகாரம்
ஹராதி குருகுஹ தோஷித பிம்பம் ஹம்ஸத்வனி பூஷித ஹேரம்பம்

அத்தபொம்ம

பொம்ம பொம்மதா தைய தையனக்கு |
தின்னாக்கு னக்குதின் பஜன்கரே
உதமித்த நாக்குதிமி தித்தாம் தித்தாம் தோம் |
தை தை கணபதி நாம் ஸதாம் [*2]
திம்மிக்கிடுகிட திம்மிகிடுகிட திக்குத்தாள திம்மிக்கிட்
தாகிடுத தாகிடுத தள தவோடுதாம் [*2]
உதமித்த நாக்குதிமி தித்தாம் தித்தாம் தோம் |
தை தை கணபதி நாம் ஸதாம் [*2]
பொம்ம ... நாம் ஸதாம்
அமரு வாஸுவை கரம் பாஜிதி அகேநாம் சதுர் கனராஜா
தாள மந்திர பஹுத் தாம்சத் ஸூர மண்டலகீ ஸுரராஜா
பொம்ம ... நாம் ஸதாம்
வேணு வாஸரே அம்ருத குண்டலிகீ | தாரிக்கிரிகிட தாரிக்கிரிகிட தவால்கஜா [*2]
நாரத தும்புரு வைணவ ஜாகே | நாரத கண்மே உவசர்கா [*2]
திம்மிக்கிடுகிட ... நாம் ஸதாம்
அவரு வாஸுவே கரம்பாஜிதி த்ரிமி த்ரிமி த்ரிமி த்ரிமி மிருதங்கா [*2]
நவாபு ஸாரங்கி சித்தாரி கினரி அவரு வாசுகை முகர்சிங்கா [*2]
திம்மிக்கிடுகிட ... நாம் ஸதாம்
பொம்ம ... நாம் ஸதாம்

கணேச சரணம்

கணேச சரணம் சரணம் கணேச
வாகிஷ சரணம் சரணம் வாகிஷ
சரேஷ சரணம் சரணம் சரேஷ

பாஹி பாஹி கஜானனா

பாஹி பாஹி கஜானனா | பார்வதீ நந்தன கஜானனா ||
மூக்ஷிக வாஹன கஜானனா | மோதக ஹஸ்தா கஜானனா ||
சாமர கர்ணா கஜானனா | விளம்பித ஸூத்ர கஜானனா ||
வாமன ரூபா கஜானனா | மஹேச்வர புத்ர கஜானனா ||
விக்ன வினாயக கஜானனா | பாதநமஸ்தே கஜானனா ||
பாஹி பாஹி கஜானனா | பார்வதீ நந்தன கஜானனா ||

கஜமுக கஜமுக கண நதா

கஜமுக கஜமுக கண நதா | ஸுரமுநி வந்தித கண நதா [*௪]
ஜய ஜய ஜய ஜய கண நதா | ஜ்யெஷ்ட புத்ரா கண நதா [*௨]
கஜமுக கஜமுக கண நதா | ஸுரமுநி வந்தித கண நதா [*௨]
ப்ரஹ்மஸ்வருப கண நதா | ப்ரணவ ஸ்வரூப கண நதா [*௨]
சித்த ஸ்வரூபா கண நதா | ஸித்தி விநாயக கண நதா [*௨]
கஜமுக கஜமுக கண நதா | ஸுரமுநி வந்தித கண நதா [*௨]
விக்ந விநாயக கண நதா | விமலா அமலா கண நதா [*௨]
வேத ஸ்வரூப கண நதா | வேதந்த ஸாரா கண நதா [*௨]
கஜமுக கஜமுக கண நதா | ஸுரமுநி வந்தித கண நதா [*௨]

Email Contact