⇰ To Index Page

Thayumanavar பராபரக்கண்ணி

Thayumanavar was a respected scholar in both Sanskrit and Tamil and was a minister to the King in Trichinopoly in South India. His name hails from the name of the deity of the Rockfort Temple in Trichinopoly. When he became god-minded he quit his job and began roaming, preaching Shaiva-siddhanta philosophy and Shiva worship. His songs are full of the divine bliss which he enjoyed and transmitted in abundance. The songs on the theme of the Atman craving for the union with the Supreme, are famous for their authenticity, simplicity and easily remembered language. He is also known for his unceasing emphasis on the unity of all paths to God and of all religions, and, in particular, on the unity of Vedanta and the Shaiva siddhanta.

அருளால் எவையும் பார் என்றான் - அத்தை
அறியாதே சுட்டி என் அறிவாலே பார்த்தேன்
இருளான பொருள் கண்டதல்லால் - கண்ட
என்னையும் கண்டிலேன் என்னேடி தோழி -
See everything through Love, says my teacher. But in my ignorance I probed through my intelligence. What I saw was only darkness and in that darkness I did not see even myself!

Infinite Bliss, for meditation: Ever-permanent, without any blemish, without any ignorance, without support, ever-full, undecayingly pure, far as well as near, like the Light beyond the three luminaries (Sun, Moon and Fire), the One Charm that includes all, overflowing with Bliss, undiscernible to mind or speech, standing as the Colossus of Consciousness—on that vastness of the beginning of Infinite Bliss, let us meditate.

Paraparam

Paraparam is conceptual deity, composed of male and female principles (like Yin-Yang or ardhanareeshwara). This Supreme Being is managing, controlling, performing operations, for the benefit of souls.

சீராருந் தெய்வத் திருவருளாம் பூமிமுதல் |
பாராதி யாண்ட பதியே பராபரமே.
O Paraparam, Lord of the well-being! who rules over the entire world from the earth and bestows blessings with great power!!!

எல்லோரும் இன்புற்று இருக்க நினைப்பதுவே
அல்லாமல் வேறொன்று அறியேன் பராபரமே 221
Every one should be happy is my only wish. I know nothing else my Lord.

நெஞ்சகமே கோயில் நினைவே சுகந்தம் அன்பே
மஞ்சனநீர் பூசைகொள்ள வாராய் பராபரமே 151
Heart/Mind is Temple. Thought is incense. Compassion is turmeric water. Inviting the Supreme Being for prayer/pooja

முத்தே பவளமே மொய்த்தபசும் பொற்சுடரே
சித்தேஎன் உள்ளத் தெளிவே பராபரமே. #9
Revered Paraaparam, you are the pearl, the coral and the ever available shining gold, you are the clarified conscience in my heart.

கடலமுதே தேனேஎன் கண்ணே கவலைப்
படமுடியா(து) என்னைமுகம் பார்நீ பராபரமே. #32
Oh Ambrosia born of the ocean! Oh Nectar! Mine eyes! Pray take pity on me And wipe off may distress, Oh Para Param!

உள்ளம் அறிவாய் உழப்பு அறிவாய் நான் ஏழை
தள்ளிவிடின் மெத்தத் தவிப்பேன் பராபரமே. கண்ணி 33:
Aa Paraaparam, you understand my heart, you understand my suffering. I am a destitute. If you discard me, woe unto me.

ஆழித் துரும்பெனவே அங்கும்இங்கும் உன்அடிமை
பாழில் திரிவதென்ன பாவம் பராபரமே. 36
Reverend Paraaparam; it is a pity that I am, you serf, like a bit of straw, beaten about here and there in emptiness.

பரம்உனக்குஎன்று எண்ணும் பழக்கமே மாறா
வரம்எனக்குத் தந்துஅருள்என் வாழ்வே பராபரமே. 63
Gracious Paraparam, you are the core of my life. Grant me the boon not to deviate from, but to depend on you entirely.

வந்தித்து நின்னை மறவாக் கடன் ஆகச்
சிந்திக்க நின்னதுஅருள் செய்யாய் பராபரமே. 64:
O Paraparam, graciously make me adore you and keep me unfailingly fixed in your thought.

வெட்டவெளிப் பேதையன்யான் வேறுகபடு ஒன்றறியேன்
சிஷ்டருடன் சேர்அனந்தம் தெண்டன் பராபரமே. 66:
I am a down right dolt; I know not crookedness. Aa Parâparam, I repeatedly prostrate before you. Pray, put me in the company of the holy.

இரவுபகல் அற்றஇடத்து ஏகாந்த யோகம்
வரவும் திருக்கருணை வையாய் பராபரமே. 67
Adorable Parâparam, make me to be in single union (mentally) with you in a state where night and day do not exist. That is the highest state, free from worries.

மால்காட்டிச் சிந்தை மயங்காமல் நின்றுசுகக்
கால்காட்டி வாங்காதே கண்டாய் பராபரமே. 68
இன்பத்தை நாடுவது உயிர்களின் இயல்பு. சிற்றுயிர் பேருயிர் ஆகிய அனைத்தும் இன்பத்தைத் தேடி அலைந்து திரிகின்றன. அம்முயற்சியில் வெற்றியும் தோல்வியும் மாறி மாறி வந்துகொண்டே இருக்கின்றன.
Spiritual desire came prompted by an inkling of bliss and then left me in the lurch. Bho Parâparam, please play not such a game!

எப்பொருளும் நீஎனவே எண்ணிநான் தோன்றாத
வைப்பைஅழி யாநிலையா வைப்பாய் பராபரமே. 69
ஆத்ம சாதனம் பயிலுகிற நாம் அனைத்தையும் கடவுள் சொரூபமாகக் கண்டு பழகுதல் வேண்டும். அப்படிக் காண்பது கற்பனையாக நமக்கு இருப்பினும் யாவுக்கும் ஆதிமூலம் கடவுள் என்பது தான் உண்மை.
O Parâparam, let me be permanently fixed in the idea that I am nothing since you are everything.

சும்மா இருப்பதுவே சுட்டுஅற்ற பூரணம்என்று
எம்மால் அறிதற்கு எளிதோ பராபரமே. 70
“சும்மா இரு” என்னும் அரிய உபதேசத்தைத் தாயுமானவரின் குரு அவருக்கு உபதேசித்தார். மௌனியான அவர் தாயுமானவரிடம் இரண்டு சந்தர்ப்பங்களில் மட்டும் பேசினார். “நம சிவாய” என்னும் மந்திரத்தை ஓதியது முதல் பேச்சு.
Instructable Parâparam, is it possible for me to grasp that the annihilation of mind is equivalent to the gain in indefinable Infinitude?

முன்னொடுபின் பக்கம் முடிஅடிநாப் பண்அறநின்
தன்னொடுநான் நிற்பதுஎன்றோ சாற்றாய் பராபரமே. 71:
O, Parâparam, please mention when shall I be merged in you, transcending limitations such as front, back, side, middle and so on?

மைவ்வண்ணம் தீர்ந்த மவுனிசொன்னது எவ்வண்ணம்
அவ்வண்ணம் நிஷ்டை அருளாய் பராபரமே. 72
O Parâparam, grace me with the meditation of the type mentioned by the enlightened Mouni.

வித்துஅன்றி யாதும் விளைவதுஉண்டோ நின்அருள்ஆம்
சித்துஅன்றி யாங்கள் உண்டோ செப்பாய் பராபரமே. கண்ணி 73:
Is there germination of plant without seed? Do we have our individuality without your grace in the form of conscience? Parâparam, please tell.

ஆங்காரம் அற்றுஉன் அறிவுஆன அன்பருக்கே
தூங்காத தூக்கம்அது தூக்கும் பராபரமே. கண்ணி 74:
Your devotees transcended egoism and merged in your yoga nidra. Bho Parâparam, it is the elevating wakeful sleep.

சிந்தை அவிழ்ந்துஅவிழ்ந்து சின்மயம்ஆம் நின்அடிக்கே
வந்தவர்க்கே இன்பநிலை வாய்க்கும் பராபரமே. கண்ணி 75:
Hey Parâparam, blissful state is to them only who commingle in your consciousness by utterly dissolving their minds.

சொல்ஆடா ஊமரைப்போல் சொல்இறந்து நீஆகின்
அல்லால் எனக்குமுக்தி ஆமோ பராபரமே. கண்ணி 76:
Aa Paraparam, will I have Mukti unless I become one with you by killing speech and becoming one like the born dumb?

பேச்சுஆகா மோனம் பிறவா முளைத்ததுஎன்றற்கு
ஆச்சுஆச்சு மேற்பயன்உண் டாமோ பராபரமே. கண்ணி 77:
What exactly is the outcome of the silence affected by speechlessness? O Parâparam, has it pacified the mind?

கெட்டிஎன்றுஉன் அன்பர்மலம் கெட்டுஅயர்ந்தோர் பூரணம்ஆம்
தொட்டிலுக்குள் சேய்போல் துயின்றார் பராபரமே. கண்ணி 78:
O Paraparam, your staunch devotees, rid of all mental impurities, recline in Infinitude like babies in the cradle.

காட்ட அருள்இருக்கக் காணாது இருள்மலத்து
நாட்டம் எனக்குவரல் நன்றோ பராபரமே. கண்ணி 79:
Parâparam, is it proper on my part to be inclined towards the ignorance-born worldliness while your grace is ever ready to enlighten me?

எத்தன்மைக் குற்றம் இயற்றிடினும் தாய்பொறுக்கும்
அத்தன்மை நின்அருளும் அன்றோ பராபரமே. #80
Mother forbears all the wrongs of her child; O Paraaparam, is not your gracious way also likewise?

எத்தனையோ தேர்ந்தாலும் என்னாலே இன்பம் உண்டோ
சித்துஉருவே இன்பச் சிவமே பராபரமே. #81
However I may reflect, is there any bliss in me? O Parâparam, you are Siva chaitanyam and ânandam.

மண்ணொடுவிண் காட்டி மறைந்துமறை யாஅருளைக்
கண்ணொடுகண் ஆகஎன்று காண்பேன் பராபரமே. கண்ணி 82:
Paraparam, you reveal earth, aakasa etc. and conceal them. When shall I have the direct realization of your unfailing grace?

Notes

பதினெட்டாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் (1706-1744) தாயுமான சுவாமிகள். திருமறைக் காட்டிலே சைவ வேளாளர் குலத்திலே பிறந்தார். வட மொழி, தென்மொழி இரண்டுங் கற்றவர். கண்ணி என்றழைக்கப்படும் இரண்டடிப் பாடல் வகையை இவர் கையாள்கிறார்.
சைவசித்தாந்தத்தின் உண்மைப் பொருள்கள் பதி பசு பாசம் என்பனவாகும். இறைவன், உயிர்கள், மலங்கள் ஆகிய மூன்றும் எப்பொழுதும் நிலைத்திருப்பவை. இறைவனைச் சென்றடைவதே உயிர்களின் நோக்கம்.
ஆயினும் குறையுள்ள அறிவு கொண்ட உயிர்கள் இறைவனைச் சேரவிடாமல் உயிர்களின் அறிவை, அறிவற்ற சடப்பொருள்களான மலங்கள் மறைத்துக் கொண்டிருக்கின்றன. இதனால் ஏற்படுகின்ற அறியாமையே உயிர்களின் துன்பங்களுக்குக் காரணம் என்பது சைவ சித்தாந்தக் கருத்து.
மும்மலம் என்பது மூன்று கழிவுப்பொருள்கள்.
ஆணவம் – அடக்கி ஆளும் ஆணவ மலத்தை மனித இனம் கழித்து எறியவேண்டும்.
கன்மம் – ஆசை, பொறாமை போன்ற குணங்கள் மனிதனோடு கூடப் பிறந்தவை.
மாயை - தன்னைப்பற்றிய கற்பனையில் மிதப்பது எல்லாருக்கும் இயல்பு. இந்த மாயைக்கும் அளவில்லை. இறைநிலையை எய்த விரும்புவோர் மாயை மலத்தைக் கழிக்க வேண்டும்.
உடல்மலம் தானே கழியும். உள்ளத்தில் இருக்கும் இந்த மும்மலத்தை நாம்தான் கழிக்க வேண்டும். கழித்தால் வாழும்போதே தெய்வநிலை அடையலாம்.
சிவபெருமான் திரிசூலம் இம்மூன்றையும் அழிக்கும் ஆயுதம் என்கின்றனர். சிவபெருமான் முப்புரம் எரித்தான் என்பது இந்த மும்மலங்களை அழித்தான் என்பதைக் காட்டும் மறைநெறி என்கின்றனர்.

காமம் வெகுளி மயக்கம் இவை மூன்றன்
நாமம் கெடக் கெடும் நோய் – திருக்குறள் 360

மூன்று உள முக்குற்றம் முழுதும் நலிவன
மான்று இருள் தூங்கு மயங்கிக் கிடந்தன (திருமந்திரம் 2435)

காமம் வெகுளி மயக்கம் இவை கடிந்து
ஏமம் பிடித்திருந்தேன் (திருமந்திரம் 2436)

மரத்தை மறைத்தது மாமத யானை
மரத்தின் மறைந்தது மாமத யானை
பரத்தை மறைத்தது பார் முதல் பூதம்
பரத்தின் மறைந்தது பார் முதல் பூதமே - திருமந்திரம்

அருளே உலகெலாம் ஆள்விப்பது ஈசன்
அருளே பிறப்பறுப்பதானால் – அருளாலே
மெய்ப்பொருளை நோக்கும் விதியுடையேன்; எஞ்ஞான்றும்
எப்பொருளும் ஆவது எனக்கு - காரைக்கால் அம்மையார்


Nara Contact terms