hinduhome prayhome

krishna pooja

Non commercial website, for knowledge sharing. Free to copy and use, if you find it useful.

Click for (1) Sahasranama.. (2) Songs on krishna.. (3) Write up on Krishna

Preliminaries பூஜாரம்பம்

Oom............
ஆசமனம்: ஷுக்லாம் பரதரம் தேவம் ஷஷிவர்ணம் சதுர்புஜம் | ப்ரஸன்ன வதநம் த்யாயேத் ஸர்வ விக்னொப ஷாந்தயே ||
  1. ॐ महागणपतये नमः । ஓம் மஹாகணபதயெ நம:
  2. ॐ सुप्रह्मण्याय नम: । ஓம் ஸுப்ரஹ்மண்யாய நம:
  3. ॐ उमामहेश्वराभ्यां नमः । ஓம் உமாமஹெஷ்வராப்யா நம:
  4. ॐ तुर्कायै नम: । ஓம் துர்காயை நம:
  5. ॐ लक्ष्मीनारायणाभ्यां नमः । ஓம் லக்ஷ்மீநாராயணாப்யோ நம:
  6. ॐ महा लक्श्मैयै नम: | ஓம் மஹா லக்ஷ்மையை நம:
  7. ॐ गुरुभ्यो नमः । ஓம் குருப்யொ நம:
  8. ॐ सरस्वत्यै नमः । ஓம் ஸரஸ்வத்யை நம:
  9. ॐ वेदाय नमः । ஓம் வேதாய நம:
  10. ॐ वेदपुरुषाय नमः । ஓம் வேதபுருஷாய நம:
  11. ॐ सर्वेभ्यो ब्राह्मणेभ्यो नमो नमः । ஓம் ஸர்வெப்யொ ப்ராஹ்மணெப்யோ நமோ நம:
  12. ॐ इष्टदेवताभ्यो नमः । ஓம் இஷ்டதேவதாப்யோ நம:
  13. ॐ कुलदेवताभ्यो नमः । ஓம் குலதேவதாப்யொ நம:
  14. ॐ स्थानदेवताभ्यो नमः । ஓம் ஸ்தாநதேவதாப்யொ நம:
  15. ॐ ग्रामदेवताभ्यो नमः । ஓம் க்ராமதேவதாப்யொ நம:
  16. ॐ वास्तुदेवताभ्यो नमः । ஓம் வாஸ்துதேவதாப்யொ நம:
  17. ॐ शचीपुरंदराभ्यां नमः । ஓம் ஷசீபுரத்தராப்யா நம:
  18. ॐ क्शॆत्रपाला|य नम: ஓம் க்ஷெத்ரபாலாய நம:
  19. ॐ वसॉश्पतयॆ नम: | ஓம் வஸொஷ்பதயெ நம:
  20. ॐ मातापितृभ्यां नमः ।ஓம் மாதாபிதரப்யா நம:
  21. ॐ सर्वेभ्यो देवेभ्यो नमो नमः । ஓம் ஸர்வெப்யொ தேவேப்யொ நமோ நம:
  22. ॐ रव्याति नवक्रह ऄश्टतल चतुर्तलॆशु स्तित सर्वतॆवताप्यॉ नम:
    ஓம் ரவ்யாதி நவக்ரஹ அஷ்டதல சதுர்தலெஷு ஸ்தித ஸர்வதெவதாப்யொ நம:

Ganesha

  1. ॐ सुमुकाय नम: | ஓம் ஸுமுகாய நம:
  2. ॐ एक तन्ताय नम: | ஓம் ஏக தந்தாய நம:
  3. ॐ कपिलाय नम: | ஓம் கபிலாய நம:
  4. ॐ कजकर्णकाय नम: | ஓம் கஜகர்ணகாய நம:
  5. ॐ लँपोतारय नम: | ஓம் லம்போதாரய நம:
  6. ॐ विकटाय नम: | ஓம் விகடாய நம:
  7. ॐ विक्नराजाय नम: | ஓம் விக்நராஜாய நம:
  8. ॐ विनायकाय नम: | ஓம் விநாயகாய நம:
  9. ॐ कणातिपाय नम: | ஓம் கணாதிபாய நம:
  10. ॐ तूमकॅतवॅ नम: | ஓம் தூமகேதவே நம:
  11. ॐ कणातियक्शाय नम: | ஓம் கணாதியக்ஷாய நம:
  12. ॐ पालचन्त्राय नम: | ஓம் பாலசந்த்ராய நம:
  13. ॐ कजाऩनाय नम: | ஓம் கஜானநாய நம:
  14. ॐ वक्रतुण्टाय नम: | ஓம் வக்ரதுண்டாய நம:
  15. ॐ सुर्प्पकर्णाय नम: | ஓம் ஸுர்ப்பகர்ணாய நம:
  16. ॐ हॅरँपाय नम: | ஓம் ஹேரம்பாய நம:
  17. ॐ स्कन्त पूर्वजाय नम: | ஓம் ஸ்கந்த பூர்வஜாய நம:
  18. ॐ स्री महा कणपतयॅ नम: | ஓம் ஸ்ரீ மஹா கணபதயே நம:

optional: (1) ஆசமனம்: (2) ஷுக்லாம் .. ஷாந்தயே:(3) ப்ராணாயாமம்:

Sankalpam - Purpose, Place and Time

மமோபாத்த ஸமஸ்த துரிதக்ஷய த்வாரா பரமேஸ்வர (can add like ஸ்ரீமந் நாராயண, ஸ்ரீ பகவத்) ப்ரீத்யர்த்தம் (optional: ஹரிரோம் தத் ஸத், ஸ்ரீ கோவிந்த கோவிந்த கோவிந்த, ஆத்ய ஸ்ரி பகவத: மஹா புருஷஸ்ய விஷ்ணோ ராஜ்ஞயா ப்ரவர்த்தமானஸ்ய) சுபே சோபனே முஹூர்த்தே
Puranic time line: ஆத்ய ப்ரஹ்மண: த்விதீய பரார்த்தே ச்வேதவராஹ கல்பே வைவஸ்வத மன்வந்தரே அஷ்டாவிம்சதி தமே கலியுகே ப்ரதமே பாதே,
Location: For auckland: shaka த்வீபே shantha வர்ஷெ venmegha தெஷெ auckland க்ராமெ (For India: ஜம்பூத்வீபே பாரத வர்ஷே பரதகண்டேமேரோ: தக்ஷிணே பார்ச்வே Fill in for others: ... த்வீபே ... வர்ஷெ ... தெஷெ ... க்ராமெ)
Saka era 60 years Luni-solar calendar: ஷாலிவாஹன ஷகாப்தே அஸ்மின் வர்த்தமானே வ்யாவ ஹாரிகே ப்ரபவாதே ஷஷ்டி ஸம்வத்ஸராணாம் மத்யே (year name) நாம ஸம்வத்ஸரே (உத்தராயணெ/தக்ஷிணாயணெ) (season) ருதௌ (month) மாஸெ (star) நக்ஷத்ரயுக்தாயாம் (day) வாஸரயுக்தாயாம் (shukla/krishna) பக்க்ஷெ (tithi) புண்யதிதௌ.
சுபயோக சுபகரண ஏவங்குண விசேஷண விசிஷ்டாயாம் அஸ்யாம்
click for Panchangam (adapted for NZ)
*Some add the persons details like name, nakshatra and rasi performing pooja
Activity/ritual: அஸ்மாகம் ஸஹ குடும்பானாம் ஷேம தைர்ய - வீர்ய - விஜய - ஆயுராரோக்ய - ஐஸ்வர்யாணம் - {deity name} ப்ரஸாத ஸித்யர்த்தம் - யாவத் சக்தி த்யான {deity name} பூஜாம் கரிஷ்யே
*For elaborate one can add: ஆவாஹனாதி ஷோட சோபசார etc before pooja name

Optional: Positions and location of all 9 planets on that time.

Formality - kalasa பூஜை

கங்கேச யமுனே சைவ கோதாவரி ஸரஸ்வதி |
நர்மதே ஸிந்து காவேரி ஜலேஸ்மின் ஸன்னிதிம் குரு |
எவம் கலஸ பூஜாம் க்ருத்வா மயா கரிஷ்யமாண ஸஸ்ரீவேங்கடேச பூஜாம் கரிஷ்யே.

த்யாநம்

चिन्तयामि हरिमेव सन्ततं मन्दमन्द हसिताननाम्बुजम् |
नन्दगोप-तनयं परात्परं नारदादि-मुनिबृन्द वन्दितम् || (मुकुन्दमाला - 8)
சிந்தயாமி ஹரிமேவ ஸந்ததம் மந்த மந்த ஹசிதாநநாம்புஜம் |
நந்தகோப தநயம் பராத்பரம் நாரதாதி முனி ப்ருந்த வந்திதம் ||(முகுந்தமாலா - 8)
Let me always think about or meditate on attractive happy blissful smiling lotus face of the Lord, who greater than every one, worshipped by saints/learned, and son of Nandagopa.

Anga Pooja அங்க/பாதாதிகேச பூஜை;

ஓம் ஷ்ரீ கிருஷ்ணாய நம: பாதௌ பூஜயாமி
ஓம் ரஜீவலொசநாய நம: குல்ப்பௌ பூஜயாமி
ஓம் நரகாந்தகாய நம: ஜானுனீ பூஜயாமி
ஓம் வாசஸ்பதயெ நம: ஜங்க்கே பூஜயாமி
ஓம் விஷ்வரூபாய நம: ஊரூந் பூஜயாமி
ஓம் கொபீஜந ப்ரியாய நம: கடிமம் பூஜயாமி
ஓம் பலபத்ராநுஜாய நம: குஹ்யம் பூஜயாமி
ஓம் விஷ்வமூர்தயெ நம: ஜகநம் பூஜயாமி
ஓம் ஷ்ரீகண்டாய நம: ஹரதயம் பூஜயாமி
ஓம் யஜ்நிநெ நம: பார்ஷ்வௌ பூஜயாமி
ஓம் த்ரிவிக்ரமாய நம: பரஷ்டதெஹம் பூஜயாமி
ஓம் பத்மநாபாய நம: ஸ்கந்த்யௌ பூஜயாமி
ஓம் ஸர்வாஸ்த்ரதாரிணெ நம: பாஹூந் பூஜயாமி
ஓம் ஷ்ரீ பாலகிருஷ்ணாய நம: ஸர்வாந்ஞங்கானி பூஜயாமி

Krishna Ashtothra: Short one

  1. ஓம் கமலாநாதாய நம:
  2. ஓம் வாஸுதேவாய நம:
  3. ஓம் யஷொதாவத்ஸலாய நம:
  4. ஓம் ஹரயெ நம:
  5. ஓம் தேவகீ நந்தனாய நம:
  6. ஓம் சகடாஸுர பஞ்ஜனாய நம:
  7. ஓம் கோவிந்தாய நம:
  8. ஓம் யோகினாம் பதயெ நம:
  9. ஓம் யாதவேந்த்ராய நம:
  10. ஓம் மதுரா நாதாய நம:
  11. ஓம் த்வாரகா நாயகாய நம:
  12. ஓம் ப்ருந்தாவனாந்த ஸஞ்சாரிணே நம:
  13. ஓம் நரநாராயணாய நம:
  14. ஓம் ஜகத்குரவெ நம:
  15. ஓம் ஜகந்நாதாய நம:
  16. ஓம் கீதாம்ருத மஹோததயே நம:
  17. ஓம் வேதவேத்யாய நம:
  18. ஓம் ஷ்ரீ கிருஷ்ணாய நம:
  1. ஓம் அம்புஜாஷா போற்றி
  2. ஓம் அச்சுதா போற்றி
  3. ஓம் உச்சிதா போற்றி
  4. ஓம் பாண்டவர் தூதா போற்றி
  5. ஓம் லீலா விநோதா போற்றி
  6. ஓம் கமல பாதா போற்றி
  7. ஓம் முகுந்தா போற்றி
  8. ஓம் கமலக்கண்ணா போற்றி
  9. ஓம் கார்வண்ணாக் கேசவா போற்றி
  10. ஓம் காளிங்க நர்த்தனா போற்றி
  11. ஓம் நந்த நந்தனா போற்றி
  12. ஓம் மதுசூதனா போற்றி
  13. ஓம் ராதா மனோகரா போற்றி
  14. ஓம் வேணுகோபாலா போற்றி
  15. ஓம் யாதவ மாதவா போற்றி
  16. ஓம் வசுதேவ தனயா போற்றி
  17. ஓம் வெண்ணெயுண்ட நேயா போற்றி
  18. ஓம் கிருஷ்ணா ஹரி போற்றி

Amarakosh: Krishna: conch, discus, mace, sword,jewel
ஶங்கோ லக்ஷ்மீபதே꞉ பாஞ்சஜந்யஶ்சக்ரம்ʼ ஸுதர்ஶந꞉
கௌமோதகீ கதா கட்கோ நந்தக꞉ கௌஸ்துபோ மணி꞉
சாப꞉ ஶார்ங்கம்ʼ முராரேஸ்து ஶ்ரீவத்ஸோ லாஞ்சநம்ʼ ஸ்ம்ருʼதம்
அஶ்வாஶ்ச ஶைப்யஸுக்ரீவமேகபுஷ்பபலாஹகா꞉
ஸாரதிர்தாருகோ மந்த்ரீ ஹ்யுத்தவஶ்சாநுஜோ கத꞉
கருத்மாந்கருடஸ்தார்க்ஷ்யோ வைநதேய꞉ ககேஶ்வர꞉
நாகாந்தகோ விஷ்ணுரத꞉ ஸுபர்ண꞉ பந்நகாஶந꞉
Amarakosh: Vasudeva 2
வஸுதேவோ(அ)ஸ்ய ஜநக꞉ ஸ ஏவாநகதுந்துபி꞉

Krishna Ashtothra 108 nama

(1) ஓம் ஷ்ரீ கிருஷ்ணாய நம:
(2) ஓம் கமலாநாதாய நம:
(3) ஓம் வாஸுதேவாய நம:
(4) ஓம் ஸநாதநாய நம:
(5) ஓம் வஸுதேவாத்மாஜாய நம:
(6) ஓம் புண்யாய நம:
(7) ஓம் லீலாமாநுஷ விக்ரஹாய நம:
(8) ஓம் ஷ்ரீவத்ஸ கௌஸ்துபதராய நம:
(9) ஓம் யஷொதாவத்ஸலாய நம:
(10) ஓம் ஹரயெ நம:
(11) ஓம் சதுர்புஜாத்த சக்ராஸி கதாஷங்காத்யுதாய நம:
(12) ஓம் தேவகீ நந்தனாய நம:
(13) ஓம் ஷ்ரீஷாய நம:
(14) ஓம் ஸ்ரீநந்தகோபப்ரியாத் மஜாய நம:
(15) ஓம் யமுஞ வேகஸம் ஹாரிணே நம:
(16) ஓம் பலபத்ர ப்ரியாநுஜாய நம:
(17) ஓம் பூதநா ஜீவித ஹராய நம:
(18) ஓம் சகடாஸுர பஞ்ஜனாய நம:
(19) ஓம் நந்தவ்ரஜ ஜநாநந்திநெ நம:
(20) ஓம் ஸச்சிதாநந்த விக்ரஹாய நம:
(21) ஓம் நவனீத விலிப்தாங்காய நம:
(22) ஓம் நவநீத நடாய நம:
(23) ஓம் அநகாய நம:
(24) ஓம் நவநீத நவா ஹாராய நம:
(25) ஓம் முசுகுந்த ப்ரஸாதகாய நம:
(26) ஓம் ஷொடஷஸ்த்ரீ ஸஹரெஷாய நம:
(27) ஓம் த்ரிபங்கீ மதுராகரதயெ நம:
(28) ஓம் ஸுகவாக ம்ருதாப் தீந்தவே நம:
(29) ஓம் கோவிந்தாய நம:
(30) ஓம் யோகினாம் பதயெ நம:
(31) ஓம் வத்ஸ வாடசராய நம:
(32) ஓம் அநந்தாய நம:
(33) ஓம் தேனுகாஸுர மர்தனாய நம:
(34) ஓம் திருணீக்ருத த்ருணா வர்தாய நம:
(35) ஓம் யமனார்ஜுன பஞ்ஜனாய நம:
(36) ஓம் உத்தால தாலபேத்ரே நம:
(37) ஓம் தமால ஸ்யாமலாக்ருதியே நம:
(38) ஓம் கோப கோபீஸ்வராய நம:
(39) ஓம் யொகிநெ நம:
(40) ஓம் கோடி ஸூர்யஸமப்ரபாய நம:
(41) ஓம் இளபதயே நம:
(42) ஓம் பரஸ்மை ஜ்யோதிஷே நம:
(43) ஓம் யாதவேந்த்ராய நம:
(44) ஓம் யதுத் வஹாய நம:
(45) ஓம் வனமாலினே நம:
(46) ஓம் பீத வாஸஸெ நம:
(47) ஓம் பாரிஜாதா பஹாரகாய நம:
(48) ஓம் கோவர்த்தனாச லோத்தர்த்ரே நம:
(49) ஓம் கோபாலாய நம:
(50) ஓம் ஸர்வபாலகாய நம:
(51) ஓம் அஜாய நம:
(52) ஓம் நிரஞ்ஜனாய நம:
(53) ஓம் காம ஜநகாய நம:
(54) ஓம் கஞ்ஜ லோசனாய நம:
(55) ஓம் மதுக்நெ நம:
(56) ஓம் மதுரா நாதாய நம:
(57) ஓம் த்வாரகா நாயகாய நம:
(58) ஓம் பலிநெ நம:
(59) ஓம் ப்ருந்தாவனாந்தஸஞ் சாரிணே நம:
(60) ஓம் துலஸீதாமபூஷணாய நம:
(61) ஓம் ஸ்யமந்தகமணேர் ஹர்த்ரே நம:
(62) ஓம் நரநாராயணாத் மகாய நம:
(63) ஓம் குப்ஜா க்ருஷ்ணாம் பரதராய நம:
(64) ஓம் மாயிநெ நம:
(65) ஓம் பரமபூருஷாய நம:
(66) ஓம் முஷ்டி காஸுர சாணூர மல்லயுத்த விஷாரதாய நம:
(67) ஓம் ஸம்ஸார வைரிணே நம:
(68) ஓம் கம்ஸாரயே நம:
(69) ஓம் முராரயெ நம:
(70) ஓம் நர காந்தகாய நம:
(71) ஓம் அநாதி ப்ரஹ்மசாரிணெ நம:
(72) ஓம் க்ருஷ்ணா வ்யஸன கர்ஸகாய நம:
(73) ஓம் ஷிஷுபாலஷிரஷ்செத்ரெ நம:
(74) ஓம் துர்யோதன குலாந்தகாய நம:
(75) ஓம் விதுராக்ரூர வரதாய நம:
(76) ஓம் விஷ்வரூப ப்ரதர்ஷகாய நம:
(77) ஓம் ஸத்யவாஸே நம:
(78) ஓம் ஸத்ய ஸங்கல்பாய நம:
(79) ஓம் ஸத்யபாமா ரதாய நம:
(80) ஓம் ஜயிநெ நம:
(81) ஓம் ஸுபத்ரா பூர்வஜாய நம:
(82) ஓம் விஷ்ணவெ நம:
(83) ஓம் பீஷ்மமுக்திப்ரதாயகாய நம:
(84) ஓம் ஜகத்குரவெ நம:
(85) ஓம் ஜகந்நாதாய நம:
(86) ஓம் வெணுநாதவிஷாரதாய நம:
(87) ஓம் வரஷபாஸுரபித்வंஸிநெ நம:
(88) ஓம் பாணாஸுரகராந்தகாய நம:
(89) ஓம் யுதிஷ்டிர ப்ரதிஷ்டாத்ரெ நம:
(90) ஓம் பர் ஹிபர் ஹாவதம்ஸகாயே நம:
(91) ஓம் பார்த்த ஸாரதயெ நம:
(92) ஓம் அவ்யக்தாய நம:
(93) ஓம் கீதாம்ருத மஹோததயே நம:
(94) ஓம் காளீய பண மாணிக்ய நம:
(95) ஓம் ரஞ்ஜித ஸ்ரீ பதாம்புஜாய நம:
(96) ஓம் தாமோதராய நம:
(97) ஓம் யஜ்ஞபோக்த்ரே நம:
(98) ஓம் தான வேந்த்ர வினாஸகாய நம:
(99) ஓம் நாராயணாய நம:
(100) ஓம் பரப்ரஹ்மணே நம:
(101) ஓம் பந்நகா ஷநவாஹநாய நம:
(102) ஓம் ஜலக்ரீட ஸமாஸக்த கோபீ வஸ்த்ராபஹாரகாய நம:
(103) ஓம் புண்ய ஸ்லோகாய நம:
(104) ஓம் தீர்தபாதாய நம:
(105) ஓம் வேதவேத்யாய நம:
(106) ஓம் தயாநிதயெ நம:
(107) ஓம் ஸர்வபூதாத்மகாய நம:
(108) ஓம் பராத்பராய நம:
ஓம் ஷ்ரீ பாலகிருஷ்ணாய அஷ்டொத்தர பூஜா ஸமர்பயாமி

Manthras for homam

ஓம் க்லீம் தேவகீஸுத கோவிந்த வாஸுதேவ ஜகத்பதே தேஹிமே தனயம் க்ருஷ்ண த்வாமஹம் சரணம் தத: தேவதேவ ஜகன்னாத கோத்ர வ்ருத்திகா ப்ரபோ தேஹிமே தனயம் சீக்ரம் ஆயுஷ்மந்தம் யசஸ்வினம்
  1. க்லீம் க்ருஷ்ணவே கோவிந்தாய கோபிஜன வல்லபாய ஸ்வாஹா
  2. க்ல்யௌம் க்லீம் நமோ பகவதே நந்த புத்ராய பாலவபுஷே கோபீஜன வல்லபாய ஸ்வாஹா
  3. ஓம் நமோ க்ருஷ்ணாய தேவகீ புத்ராய ஹும் பட் ஸ்வாஹா
  4. ஓம் க்லீம் கோபீஜன வல்லபாய ஸ்வாஹா
  5. ஓம் க்லீம் க்ருஷ்ணாய ஸ்வாஹா
  6. ஓம் க்லீம் க்லீம் ஹ்ருஷீகேசாய ஸ்வாஹா
  7. ஓம் க்லீம் ரீம் ஹ்ரீம் க்லீம் க்ருஷ்ணாய கோவிந்தாய ஸ்வாஹா
  8. ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் க்ருஷ்ணாய கோவிந்தாய ஸ்வாஹா
  9. ஓம் க்லீம் கோவல்லபாய ஸ்வாஹா
  10. ஓம் நமோ பகவதே ருக்மிணீ வல்லபாய ஸ்வாஹா
  11. ஓம் நமோ விஸ்வரூபாய க்ருஷ்ணாய ஸ்வாஹா
  12. ஓம் விஸ்ய சித்யந்த ஹேதவே விஹ்வேஸ்வராய விஸஅவாய கோவிந்தாய நமோ நமஹ
  13. ஓம் நமோ விக்ஞான ரூபாய பரமானந்த ரூபிணே | கிருஷ்ணாய கோபிநாதாய கோவிந்தாய நமோ நமஹ

ஸ்லோகம் - Slookam

ஸ்ரீ க்ருஷ்ணாஷ்டகம்

வஸுதேவ ஸுதம் தேவம் கம்ஸ சாணூர மர்த்தனம் I
தேவகீ பரமானந்தம் க்ருஷ்ணம் வந்தே ஜகத் குரும் II
அதஸீ புஷ்ப ஸங்காச'ம் ஹார சோ'பிதம் I
ரத்ன கங்கண கேயூரம் க்ருஷ்ணம் வந்தே ஜகத் குரும் II
குடிலாலக ஸம்யுக்தம் பூர்ண சந்த்ர நிபானனம் I
விலஸத் குண்டலதரம் க்ருஷ்ணம் வந்தே ஜகத் குரும் II
மந்தாரகந்த ஸம்யுக்தம் சாருஹாஸம் சதுர்புஜம் I
பர்ஹிபிஞ்சாவசூடாங்கம் க்ருஷ்ணம் வந்தே ஜகத் குரும் II
உத்புல்ல பத்ம பத்ராக்ஷம் நீலஜீமுத ஸந்நிபம் I
யாதவானாம் சி'ரோரத்னம் க்ருஷ்ணம் வந்தே ஜகத் குரும் II
ருக்மிணீ கேளிஸம்யுக்தம் பீதாம்பர ஸுசோ'பிதம் I
அவாப்த துளஸீ கந்தம் க்ருஷ்ணம் வந்தே ஜகத் குரும் II
கோபிகானாம் குசத்வந்த்வ குங்குமாங்கித வக்ஷஸம் I
ஸ்ரீ நிகேதம் மஹேச்'வாஸம் க்ருஷ்ணம் வந்தே ஜகத் குரும் Ii
ஸ்ரீ வத்ஸாங்கம் மஹோரஸ்கம் வனமாலா விராஜிதம் I
ச'ங்க சக்ர தரம் தேவம் க்ருஷ்ணம் வந்தே ஜகத்குரும் II
க்ருஷ்ணாஷ்டக மிதம் புண்யம் ப்ராத ருத்தாய ய: படேத் I
கோடி ஜன்ம க்ருதம் பாபம் ஸ்மரணாத் தஸ்ய நச்யதி II

ஸ்ரீ மதுராஷ்டகம் Madhurashtakam

அதரம் மதுரம் வதனம் மதுரம் நயனம் மதுரம் ஹதீதம் மதுரம்
ஹ்ருதயம் மதுரம் கமனம் மதுரம் மதுராதிபதே ரகிலம் மதுரம்
lips, face, eyes, laugh, heart, gait or walking, all (connected with you) are sweet! Oh! king of all sweetness in this world!
வசனம் மதுரம் சரிதம் மதுரம் வஸனம் மதுரம் லலிதம் (or வலிதம்) மதுரம்
சலிதம் மதுரம் ப்ரமிதம் மதுரம் மதுராதிபதே ரகிலம் மதுரம்
words, story, dress, place of your stay, if வலிதம் belly fat
movements, confusion or self rotation, {all ...sweetness in this world!}
வேணுர் மதுரோ ரேணுர் மதுர : பாணிர் மதுர : பாதெள மதுரெள
ந்ருத்யம் மதுரம் ஸக்யம் மதுரம் மதுராதிபதே ரகிலம் மதுரம்
flute, foot-dust, hands, feet, dance, friendship, {all ...sweetness in this world!}
கீதம் மதுரம் பீதம் மதுரம் புக்தம் மதுரம் ஸுப்தம் மதுரம்
ரூபம் மதுரம் திலகம் மதுரம் மதுராதிபதே ரகிலம் மதுரம்
song, what you drink, what you eat, sleep, looks, thilaka, {all ...sweetness in this world!}
கரணம் மதுரம் தரணம் மதுரம் ஹரணம் மதுரம் ஸம்ரணம் மதுரம்
வமிதம் மதுரம் சமிதம் மதுரம் மதுராதிபதே ரகிலம் மதுரம்
deeds, jump over or path of salvation, understanding or theft, thoughts
play of love, oblations, tranquility, {all ...sweetness in this world!}
குஞ்ஜா மதுரா மாலா மதுரா யமுனா மதுரா வீசீ மதுரா
ஸலீலம் மதுரம் கமலம் மதுரம் மதுராதிபதே ரகிலம் மதுரம்
necklace of berries, garland, river Yamuna, ripples in the river, water , lotus in the water, {all ...sweetness in this world!}
கோபீ மதுரா லீலா மதுரா யுக்தம் மதுரம் புக்தம் மதுரம்
த்ருஷ்டம் மதுரம் சிஷ்டம் மதுரம் மதுராதிபதே ரகிலம் மதுரம்
Gopis , playful sport, your association or salvation, experience or thoughts
what you see, what is left out, {all ...sweetness in this world!}
கோபா மதுரா காவோ மதுரா : யஷ்டிர் மதுரா ஸ்ருஷ்டிர் மதுரா
தலிதம் மதுரம் பலிதம் மதுரம் மதுராதிபதே ரகிலம் மதுரம்
Gopas , cows, staff or stick, creation, what you trample , jokes or pleasing/useful activities, {all ...sweetness in this world!}
மதுராஷ்டகம் ஸம்பூர்ணம்

ஸ்ரீ ஆண்டாள் அருளிச் செய்த திருப்பாவை [474-503]

அன்ன வயற்புதுவை ஆண்டாள் அரங்கற்குப் | பன்னு திருப்பாவைப் பல்பதியம்
இன்னிசையால் பாடிக்கொடுத்தாள் நற்பாமாலை | பூமாலை சூடிக் கொடுத்தாளைச் சொல்லு
சூடிக் கொடுத்தாள் சுடர்க் கொடியே | தொல்பாவைபாடி அருளவல்ல பல்வளையாய்
நாடி நீ வேங்கடவற்கு என்னை விதி ஒன்ற இம்மாற்றம் நாங்கடவா வண்ணமே நல்கு.

(1) Raagam: pilahari - Thalam: chathusra ata
மார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாளால்
நீராடப் போதுவீர் போதுமினோ நேரிழையீர்
சீர் மல்கும் ஆய்ப்பாடிச் செல்வச் சிறுமீர்காள்
கூர்வேல் கொடுந்தொழிலன் நந்தகோபன் குமரன்
ஏரார்ந்த கண்ணி யசோதை இளம் சிங்கம்
கார் மேனி செங்கண் கதிர் மதியம் போல் முகத்தான்
நாராயணனே நமக்கே பறை தருவான்
பாரோர் புகழப் படிந்தேலோர் எம்பாவாய்

(2) Raagam: panthuvaraali - Thalam: athi
வையத்து வாழ்வீர்காள்! நாமும் நம்பாவைக்குச்
செய்யும் கிரிசைகள் கேளீரோ பாற்கடலுள் -
பையத் துயின்ற பரமனடி பாடி
நெய்யுண்ணோம் பாலுண்ணோம் நாட் காலே நீராடி
மையிட்டு எழுதோம் மலரிட்டு நாம் முடியோம்
செய்யாதன செய்யோம் தீக்குறளைச் சென்றோதோம்
ஐயமும் பிச்சையும் ஆந்தனையும் கை காட்டி
உய்யுமாற் எண்ணி உகந்தேலோர் எம்பாவாய்.

(3) Raagam: keethaa ra kaula - Thalam: athi
ஓங்கி உலகளந்த உத்தமன் பேர் பாடி
நாங்கள் நம் பாவைக்குச் சாற்றி நீராடினால்
தீங்கின்றி நாடெல்லாம் திங்கள் மும் மாரி பெய்து
ஓங்கு பெறும் செந் நெல் ஊடு கயலுகளப்
பூங்குவளைப் போதில் பொறி வண்டு கண் படுப்பத்
தேங்காதே புக்கிருந்து சீர்த்த முலை பற்றி-
வாங்க, குடம் நிறைக்கும் வள்ளல் பெரும் பசுக்கள்
நீங்காத செல்வம் நிறைந்தேலோர் எம்பாவாய்

(4) Raagam: kaampooji - Thalam: misrachaappu
ஆழி மழைக் கண்ணா! ஒன்று நீ கை கரவேல்
ஆழி உள் புக்கு முகந்து கொடு ஆர்த்து ஏறி
ஊழி முதல்வன் உருவம் போல் மெய் கறுத்துப்
பாழிய் அம் தோளுடைப் பற்பனாபன் கையில்
ஆழி போல் மின்னி வலம்புரி போல் நின்று அதிர்ந்து
தாழாதே சார்ங்க முதைத்த சர மழை போல்
வாழ உலகினில் பெய்திடாய் நாங்களும்-
மார்கழி நீராட மகிழ்ந்தேலோர் எம்பாவாய்

(5) Raagam: Thoodi - Thalam: adhi
மாயனை மன்னு வட மதுரை மைந்தனைத்
தூய பெரு நீர் யமுனைத் துறைவனை
ஆயர் குலத்தினில் தோன்றும் அணி விளக்கைத்
தாயைக் குடல் விளக்கம் செய்த தாமோதரனைத்
தூயோமாய் வந்து நாம் தூமலர் தூவித் தொழுது
வாயினால் பாடி மனத்தினால் சிந்திக்கப்
போய பிழையும் புகுதருவான் நின்றனவும்
தீயினில் தூசாகும் செப்பேலோர் எம்பாவாய்.

(6) Raagam: Paulli - Thalam: kannde rakam
புள்ளும் சிலம்பின காண் புள்ளரையன் கோயில்
வெள்ளை விளி சங்கின் பேரரவம் கேட்டிலையோ
பிள்ளாய்! எழுந்திராய் பேய் முலை நஞ்சுண்டு
கள்ளச் சகடம் கலக்கழியக் காலோச்சி
வெள்ளத்தரவில் துயிலமர்ந்த வித்தினை
உள்ளத்துக் கொண்டு முனிவர்களும் யோகிகளும்
மெள்ள எழுந்து அரி என்ற பேரரவம்
உள்ளம் புகுந்து குளிர்ந்தேலோர் எம்பாவாய்

(7) Raagam: Valaji - Thalam: adhi
கீசு கீசு என்று எங்கும் ஆனைச் சாத்தான் கலந்து
பேசின பேச்சரவம் கேட்டிலையோ பேய்ப் பெண்ணே
காசும் பிறப்பும் கலகலப்பக் கை பேர்த்து
வாச நறும் குழல் ஆய்ச்சியர் மத்தினால்
ஓசை படுத்த தயிரரவம் கேட்டிலையோ
நாயகப் பெண் பிள்ளாய் நாராயணன் மூர்த்தி
கேசவனைப் பாடவும் நீ கேட்டே கிடத்தியோ
தேசமுடையாய் திறவேலோர் எம்பாவாய்

(8) Raagam: Thanyasi - Thalam: roopakam
கீழ் வானம் வெள்ளென்று எருமை சிறு வீடு
மேய்வான் பரந்தன காண் மிக்குள்ள பிள்ளைகளும்
போவான் போகின்றாரைப் போகாமல் காத்து உன்னைக்
கூவுவான் வந்து நின்றோம் கோதுகலம் உடைய
பாவாய்! எழுந்திராய் பாடிப் பறை கொண்டு
மாவாய் பிளந்தானை மல்லரை மாட்டிய
தேவாதி தேவனைச் சென்று நாம் சேவித்தால்
ஆவாவென்று ஆராய்ந்து அருளேலோர் எம்பாயாய்

(9) Raagam: Moohanam - Thalam: adhi
தூமணி மாடத்து சுற்றும் விளக்கெரியத்
தூபம் கமழத் துயிலணைமேல் கண் வளரும்
மாமான் மகளே மணிக் கதவம் தாழ் திறவாய்
மாமீர் அவளை எழுப்பீரோ? உன் மகள் தான்
ஊமையோ? அன்றி செவிடோ? அனந்தலோ?
ஏமப் பெருந் துயில் மந்திரப் பட்டாளோ?
மாமாயன் மாதவன் வைகுந்தன் என்றென்று
நாமன் பலவும் நவின்றேலோர் என்பாவாய்

(10) Raagam: Achaaveeri - Thalam: adhi
நோற்றுச் சுவர்க்கம் புகுகின்ற அம்மனாய்!
மாற்றமும் தாராரோ? வாசல் திறவாதார்
நாற்றத் துழாய் முடி நாராயணன் நம்மால்
போற்றப் பறை தரும் புண்ணியனால் பண்டு ஒரு நாள்
கூற்றத்தின் வாய் வீழ்ந்த கும்பகரணனும்
தோற்றும் உனக்கே பெருந்துயில் தான் தந்தானோ?
ஆற்ற அனந்தல் உடையாய்; அருங்கலமே!
தேற்றமாய் வந்து திறவேலோர் எம்பாவாய்.

(11) Raagam: chahaana - Thalam: misra chaappu
கற்றுக் கறவைக் கணங்கள் பல கறந்து
செற்றார் திறலழியச் சென்று செருச் செய்யும்
குற்றம் ஒன்றில்லாத கோவலர்த்தம் பொற்கொடியே!
புற்று அரவு அல்குல் புனமயிலே போதராய்
சுற்றத்து தோழிமார் எல்லாரும் வந்து நின்
முற்றம் புகுந்து முகில் வண்ணன் பேர் பாட
சிற்றாதே பேசாதே செல்வ பெண்டாட்டி! நீ
எற்றுக்கு உறங்கும் பொருளேலோர் எம்பாவாய்

(12) Raagam: parasu - Thalam: athi
கனைத்து இளம் கற்றெருமை கன்றுக்கு இரங்கி
நினைத்து முலை வழியே நின்று பால் சோர
நனைத்து இல்லம் சேறாக்கும் நற் செல்வன் தங்காய்
பனித் தலை வீழ நின் வாசற் கடை பற்றிச்
சினத்தினால் தென் இலங்கைக் கோமானைச் செற்ற
மனத்துக்கு இனியானைப் பாடவும் நீ வாய் திறவாய்
இனித்தான் எழுந்திராய் ஈதென்ன பேர் உறக்கம்
அனைத்து இல்லத்தாரும் அறிந்தேலோர் எம்பாவாய்

(13) Raagam: Ataanaa - Thalam: misrachaappu
புள்ளின் வாய் கீண்டானைப் பொல்லா அரக்கனைக்
கிள்ளிக் களைந்தானைக் கீர்த்தி மை பாடிப் போய்ப்
பிள்ளைகள் எல்லாரும் பாவைக் களம்புக்கார்
வெள்ளி எழுந்து வியாழம் உறங்கிற்று
புள்ளும் சிலம்பின காண் போதரிக் கண்ணினாய்!
குள்ளக் குளிரக் குடைந்து நீராடாதே
பள்ளிக் கிடத்தியோ. பாவாய். நீ நன் நாளால்
கள்ளம் தவிர்ந்து கலந்தேலோர் எம்பாவாய்.

(14) Raagam: saarangka - Thalam: kanda chaappu
உங்கள் புழக்கடைத் தோட்டத்து வாவியுள்
செங்கழுனீர் வாய் நெகிழ்ந்து ஆம்பல் வாய் கூம்பின காண்
செங்கற் பொடிக் கூரை வெண்பல் தவத்தவர்
தங்கள் திருக்கோயில் சங்கிடுவான் போதன்றார்
எங்களை முன்னம் எழுப்புவான் வாய்பேசும்
நங்காய் எழுந்திராய் நாணாதாய் நாவுடையாய்
சங்கோடு சக்கரம் ஏந்தும் தடக்கையன்
பங்கயக் கண்ணானைப் பாடேலோர் எம்பாவாய்.

(15) Raagam: sauraashtiram - Thalam: thisra ata
எல்லே. இளம் கிளியே இன்னம் உறங்குதியோ?
சில் என்று அழையேன் மின் நங்கையீர் போதருகின்றேன்
வல்லை உன் கட்டுரைகள் பண்டே உன் வாய் அறிதும்
வல்லீர்கள் நீங்களே நானே தான் ஆயிடுக
ஒல்லை நீ போதாய் உனக்கென்ன வேறுடையை
எல்லாரும் போந்தாரோ போந்தார் போந்து எண்ணிக்கொள்
வல் ஆனை கொன்றானை மாற்றாரை மாற்றழிக்க
வல்லானை மாயனைப் பாடேலோர் எம்பாவாய்

(16) Raagam: yaman kalyaani - Thalam: athi
நாயகனாய் நின்ற நந்தகோபன் உடைய
கோயில் காப்பானே. கொடி தோன்றும் தோரண
வாயில் காப்பானே. மணிக் கதவம் தாள் திறவாய்
ஆயர் சிறுமியரோமுக்கு அறை பறை
மாயன் மணி வண்ணன் நென்னலே வாய் நேர்ந்தான்
தூயோமாய் வந்தோம் துயில் எழப் பாடுவான்
வாயால் முன்னம் முன்னம் மாற்றாதே அம்மா. நீ
நேய நிலைக் கதவம் நீக்கேலோர் எம்பாவாய்

(17) Raagam: kaappi - Thalam: roopakam
அம்பரமே தண்ணீரே சோறே அறம் செய்யும்
எம்பெருமான் நந்தகோபாலா எழுந்திராய்
கொம்பனார்க்கு எல்லாம் கொழுந்தே குல விளக்கே!
எம்பெருமாட்டி யசோதாய் அறிவுறாய்
அம்பரம் ஊட அறுத்து ஓங்கி உளகு அளந்த
உம்பர் கோமானே உறங்காது எழுந்திராய்
செம் பொற் கழலடிச் செல்வா! பலதேவா!
உம்பியும் நீயும் உறங்கேலோர் எம்பாவாய்.

(18) Raagam: Chaaveeri - Thalam: adhi
உந்து மத களிற்றன் ஓடாத தோள் வலியன்
நந்தகோபன் மருமகளே நப்பின்னாய்!
கந்தம் கமழும் குழலி கடை திறவாய்
வந்து எங்கும் கோழி அழைத்தன காண் மாதவிப்
பந்தல் மேல் பல் கால் குயிலினங்கள் கூவின காண்
பந்து ஆர் விரலி உன் மைத்துனன் பேர் பாடச்
செந்தாமரைக் கையால் சீரார் வளை ஒலிப்ப
வந்து திறவாய் மகிழ்ந்தேலோர் எம்பாவாய்.

(19) Raagam: Srii - Thalam: adhi
குத்து விளக்கெரிய கோட்டுக் கால் கட்டில் மேல்
மெத்தென்ற பஞ்ச சயனத்தின் மேல் ஏறிக்
கொத்தலர் பூங்குழல் நப்பினை கொங்கை மேல்
வைத்துக் கிடந்த மலர் மார்பா வாய் திறவாய்
மைத் தடம் கண்ணினாய் நீ உன் மணாளனை
எத்தனை போதும் துயிலெழ ஒட்டாய் காண்
எத்தனையேலும் பிரிவு ஆற்றகில்லாயால்
தத்துவம் அன்று தகவேலோர் எம்பாவாய்

(20) Raagam: Thees - Thalam: adhi
முப்பத்து மூவர் அமரர்க்கு முன் சென்று
கப்பம் தவிர்க்கும் கலியே! துயில் எழாய்
செப்பம் உடையாய் திறல் உடையாய்! செற்றார்க்கு
வெப்பம் கொடுக்கும் விமலா! துயில் எழாய்
செப்பென்ன மென் முலைச் செவ்வாய்ச் சிறு மருங்குல்
நப்பின்னை நங்காய்! திருவே! துயில் எழாய்
உக்கமும் தட்டொளியும் தந்து உன் மணாளனை
இப்போதே எம்மை நீராட்டேலோர் எம்பாவாய்

(21) Raagam: lathaangki - Thalam: adhi
ஏற்ற கலங்கள் எதிர் பொங்கி மீதளிப்ப
மாற்றாதே பால் சொரியும் வள்ளல் பெரும் பசுக்கள்
ஆற்றப் படைத்தான் மகனே! அறிவுறாய்
ஊற்றம் உடையாய் பெரியாய் உலகினில்
தோற்றமாய் நின்ற சுடரே துயில் எழாய்
மாற்றார் உனக்கு வலி தொலைந்து உன் வாசற் கண்
ஆற்றாது வந்து உன் அடி பணியுமா போலே
போற்றியாம் வந்தோம் புகழ்ந்தேலோர் எம்பாவாய்

(22) Raagam: pairavi - Thalam: misra chaappu
அம் கண் மா ஞாலத்து அரசர் அபிமான
பங்கமாய் வந்து நின் பள்ளிக் கட்டிற் கீழே
சங்கம் இருப்பார் போல் வந்து தலைப்பெய்தோம்
கிங்கிணி வாய்ச் செய்த தாமரைப் பூப் போலே
செங்கண் சிறுச் சிறிதே எம்மேல் விழியாவோ
திங்களும் ஆதித்தனும் எழுந்தாற் போல்
அம் கண் இரண்டும் கொண்டு எங்கள் மேல் நோக்குதியேல்
எங்கள் மேல் சாபம் இழிந்தேலோர் எம்பாவாய்

(23) Raagam: hamsathvanni - Thalam: athi
மாரி மலை முழைஞ்சில் மன்னிக் கிடந்து உறங்கும்
சீரிய சிங்கம் அறிவுற்றுத் தீ விழித்து
வேரி மயிர் பொங்க எப்பாடும் பேர்ந்து உதறி
மூரி நிமிர்ந்து முழங்கிப் புறப்பட்டுப்
போதருமா போலே நீ பூவைப்பூ வண்ணா! உன்
கோயில் நின்று இங்ஙனே போந்தருளிக் கோப்புடைய
சீரிய சிங்காசனத்து இருந்து யாம் வந்த
காரியம் ஆராய்ந்து அருளேலோர் எம்பாவாய்

(24) Raagam: thurkkaa - Thalam: athi
அன்று இவ் உலகம் அளந்தாய் அடி போற்றி
சென்றங்குத் தென் இலங்கை செற்றாய் திறல் போற்றி
பொன்றச் சகடம் உதைத்தாய் புகழ் போற்றி
கன்று குணில் ஆவெறிந்தாய் கழல் போற்றி
குன்று குடையாய் எடுத்தாய் குணம் போற்றி
வென்று பகை கெடுக்கும் நின் கையில் வேல் போற்றி
என்றென்றும் உன் சேவகமே ஏத்திப் பறை கொள்வான்
இன்று யாம் வந்தோம் இரங்கேலோர் எம்பாவாய்

(25) Raagam: sankaraaparanaam - Thalam: kanda thriputa
ஒருத்தி மகனாய்ப் பிறந்து ஓர் இரவில்
ஒருத்தி மகனாய் ஒளித்து வளரத்
தரிக்கிலான் ஆகித் தான் தீங்கு நினைந்த
கருத்தைப் பிழைப்பித்துக் கஞ்சன் வயிற்றில்
நெருப்பென்ன நின்ற நெடுமாலே., உன்னை
அருத்தித்து வந்தோம் பறை தருதியாகில்
திருத்தக்க செல்வமும் சேவகமும் யாம் பாடி
வருத்தமும் தீர்ந்து மகிழ்ந்தேலோர் எம்பாவாய்

(26) Raagam: aarapi - Thalam: athi
மாலே. மணிவண்ணா. மார்கழி நீராடுவான்
மேலையார் செய்வனகள் வேண்டுவன கேட்டியேல்
ஞாலத்தை எல்லாம் நடுங்க முரல்வன
பால் அன்ன வண்ணத்து உன் பாஞ்ச சன்னியமே
போல்வன சங்கங்கள் போய்ப் பாடுடையனவே
சாலப் பெரும் பறையே பல்லாண்டு இசைப்பாரே
கோல விளக்கே கொடியே விதானமே
ஆலின் இலையாய் அருளேலோர் எம்பாவாய்

(27) Raagam: anantha pairavi - Thalam: athi
கூடாரை வெல்லும் சீர் கோவிந்தா உந்தன்னைப்
பாடிப் பறை கொண்டு யாம் பெறும் சம்மானம்
நாடு புகழும் பரிசினால் நன்றாகச்
சூடகமே தோள் வளையே தோடே செவிப் பூவே
பாடகமே என்றனைய பலகலனும் யாம் அணிவோம்
ஆடை உடுப்போம் அதன் பின்னே பாற் சோறு
மூட நெய் பெய்து முழங்கை வழி வாரக்
கூடி இருந்து குளிர்ந்தேலோர் எம்பாவாய்

(28) Raagam: hamsaananththi - Thalam: adhi
கறவைகள் பின் சென்று கானம் சேர்ந்து உண்போம்
அறிவு ஒன்றும் இல்லாத ஆய்க் குலத்து உந்தன்னைப்-
பிறவி பெறுந்தனைப் புண்ணியம் யாம் உடையோம்
குறை ஒன்றும் இல்லாத கோவிந்தா! உந்தன்னோடு-
உறவேல் நமக்கு இங்கு ஒழிக்க ஒழியாது
அறியாத பிள்ளைகளோம் அன்பினால் உந்தன்னை-
சிறு பேர் அழைத்தனமும் சீறி அருளாதே
இறைவா நீ தாராய் பறையேலோர் எம்பாவாய்

(29) Raagam: uthya ravi chanthirikaa - Thalam: adhi
சிற்றம் சிறு காலே வந்து உன்னை சேவித்து உன்
பொற்றாமரை அடியே போற்றும் பொருள் கேளாய்
பெற்றம் மேய்த்து உண்ணும் குலத்தில் பிறந்து நீ
குற்று ஏவல் எங்களைக் கொள்ளாமல் போகாது
இற்றைப் பறை கொள்வான் அன்று காண் கோவிந்தா
எற்றைக்கும் ஏழ் ஏழ் பிறவிக்கும் உன் தன்னோடு
உற்றோமே ஆவோம் உனக்கே நாம் ஆட்செய்வோம்
மற்றை நம் காமங்கள் மாற்றேலோர் எம்பாவாய்

(30) Raagam: churutti - Thalam: kanta rakam
வங்கக் கடல் கடைந்த மாதவனை கேசவனை
திங்கள் திருமுகத்து சேய் இழையார் சென்று இறைஞ்சி
அங்கப் பறை கொண்ட ஆற்றை அணி புதுவைப்
பைங்கமலத் தண் தெரியல் பட்டர் பிரான் கோதை-
சங்கத் தமிழ் மாலை முப்பதும் தப்பாமே (-சொன்ன
இங்கு இப்பரிசுரைப்பார் ஈரிரண்டு மால் வரை தோள்
செங்கண் திருமுகத்துச் செல்வத் திருமாலால்
எங்கும் திருவருள் பெற்று இன்புறுவர் எம்பாவாய்.

Aandaall Vaazhi - Raagam: mathyamaavathi - Thalam: kantalaku
கோதை பிறந்த ஊர் கோவிந்தன் வாழுமூர்
சோதி மணி மாடம் தோன்றும் ஊர் - நீதியால்
நல்ல பத்தர் வாழும் ஊர் நான்மறைகள் ஓதுமூர்
வில்லிபுத்தூர் வேதக் கோனூர்
பாதகங்கள் தீர்க்கும் பரமன் அடி காட்டும்
வேதம் அனைத்துக்கும் வித்தாகும் - கோதை தமிழ்
ஐயைந்தும் ஐந்தும் அறியாத மானிடரை
வையம் சுமப்பது வம்பு.
திருவாடிப் பூரத்து செகத்துதித்தாள் வாழியே
திருப்பாவை முப்பதும் செப்பினாள் வாழியே
பெரியாழ்வார் பெற்றெடுத்த பெண் பிள்ளை வாழியே
பெரும்புதூர் மாமுனிக்குப் பின்னானாள் வாழியே
ஒரு நூற்று நாற்பத்து மூன்றுரைத்தாள் வாழியே
உயரரங்கற்கே கண்ணியுகந்தருளிதாள் வாழியே
மருவாரும் திருமல்லி வள நாடி வாழியே
வண்புதுவை நகர்க் கோதை மலர்ப் பதங்கள் வாழியே

ஸ்ரீ ஆண்டாள் அருளிச் செய்த வாரணமாயிரம் 556 - 566

(1) Wedding Procession
வாரண மாயிரம் சூழவலம் செய்து | நாரண நம்பி நடக்கின்றா னென்றெதிர்
பூரண பொற்குடம் வைத்துப் புறமெங்கும் | தோரணம் நாட்டக் கனாக்கண்டேன் தோழீநான்
"Oh my dear friend! I had this wonderful dream; i saw naranan (sri ranganathan), surrounded by thousands of elephants, going around sri villiputtur. My father, periyazhvar, and the citizens of the village are waiting to extend a grand welcome to him with purna kumbhams. The whole village is decorated with toranams (streamers) to mark the festive occasion."

(2)Welcoming bridegroom - மாப்பிள்ளை அழைப்பு
நாளை வதுவை மணமென்று நாளிட்டு| பாளை கமுகு பரிசுடைப் பந்தற்கீழ்
கோளரி மாதவன் கோவிந்த னென்பான் | ஓர் காளை புகுதக்கனாக் கண்டேன் தோழீநான்
Tomorrow is the day that has been fixed for the wedding. I saw at the wedding dais, decorated with betel-nut trees, a handsome youth, known as narasimhan, madhavan or govindan, entering as groom.

(3)Engagement or betrothal - நிச்சயதார்த்தம்

இந்திர னுள்ளிட்ட தேவர் குழாமெல்லாம் | வந்திருந் தென்னை மகட்பேசி மந்திரித்து|
மந்திரக் கோடியுடுத்தி | மணமாலை | அந்தரி சூட்டக் கனாக்கண்டேன் தோழீநான்
Group of indra and the other devas gather to make the proposal to offer me in marriage to lord ra’nganatha. Then the sambandhis converse with each other and agree on all arrangements. Durga, krshna's sister, helps me who is decorated with exquisitely smelling flower garland, to wear the kuraip pudavai (the sari worn at wedding time)

(4)Viradham - காப்பு
நாற்றிசைத் தீர்த்தங் கொணர்ந்து நனிநல்கி | பார்ப்பனச் சிட்டர்கள் பல்லாரெடுத் தேத்தி |
பூப்புனை கண்ணிப் புனிதனோ டென்றன்னை | காப்புநாண் கட்டக் கனாக்கண்டேன் தோழீநான்
Several brahmins bring holy waters from all the four directions. Brahma, periyazhvar and the sapta- rshis and vedic scholars take the tirtham that has been purified with vedic chants/ mantrams and sprinkle it on my head and bless me. I saw my hand and lord’s ( sarva’nga sundaran, decorated with colorful garland) hand being tied together with kankanam

(5) mangala dipam - தீபம்
கதிரொளி தீபம் கலச முடனேந்தி | சதிரிள மங்கையர் தாம்வந் தெதிர்கொள்ள |
மதுரையார் மன்ன னடிநிலை தொட்டு | எங்கும் அதிரப் புகுதக் கனாக்கண்டேன் தோழீநான்
In my dream i saw many beautiful young girls, carrying ma’ngala dipams (shining like the bright sun) and golden kalasams. They were welcoming king of mathura (kannan) who was walking with his sacred sandals (known for their majesty and firmness) that made the earth shake.

(6) Panigrahanam - கைத்தலம்
மத்தளம் கொட்ட வரிசங்கம் நின்றூத | முத்துடைத்தாமம் நிரை தாழ்ந்த பந்தற்கீழ் |
மைத்துனன் நம்பி மதுசூதன் வந்து, என்னைக் | கைத்தலம் பற்றக் கனாக்கண்டேன் தோழீநான்
Ma’ngala vadyams were being played; conches were being blown; under the canopy that was decorated with low-lying pearl strands, madhusudanan took my right hand into his and did panigrahanam

(7) circumambulate - தீவலம்
வாய்நல்லார் நல்ல மறையோதி மந்திரத்தால், | பாசிலை நாணல் படுத்துப் பரிதிவைத்து,
காய்சின மாகளி றன்னானென் கைப்பற்றி | தீவலம் செய்யக்க னாக்கண்டேன் தோழீநான்
Priests, chanting good vedic mantras, spread the green grass surrounding the agni and placed the samit (wooden sticks) on agni. I saw kannan, who came majestically like an angry elephant, hold my right hand and circumambulate the agni walking slowly.

(8) ammi - அம்மி மிதித்தல்
இம்மைக்கு மேழேழ் பிறவிக்கும் பற்றாவான், | நம்மை யுடையவன் நாராயணன் நம்பி,
செம்மை யுடைய திருக்கையால் தாள்பற்றி, | அம்மி மிதிக்கக் கனாக்கண்டேன் தோழீநான்
My lord, protector in this birth and all the forthcoming births and who is filled with all kalayana gunas held my right foot with his red hued hand and placed it on stone (ammi)

(9) pori - பொரி
வரிசிலை வாள்முகத் தென்னைமார் தாம்வந்திட்டு | எரிமுகம் பாரித்தென் னைமுன்னே நிறுத்தி,
அரிமுக னச்சுதன் கைம்மேலென் கைவைத்து, | பொரிமுகந் தட்டக் கனாக்கண்டேன் தோழீநான்
My brothers, who have attractive eye brows that look like bent bows, ignite the agni and make me stand before agni. They place my hands on top of hands of kannan (who has a majestic face like the lion’s) and help do the homam by putting rice puffs (pori) in the agni

(10) Wedding Procession
குங்கும மப்பிக் குளிர்சாந்தம் மட்டித்து, | மங்கல வீதி வலம்செய்து மணநீர்,
அங்கவனோடு முடஞ்சென்றங் கானைமேல், | மஞ்சன மாட்டக்க னாக்கண்டேன் தோழீநான்
I dreamt that a lot of ku’nkumam and sandalwood were applied on our bodies. Kannan and i were placed on top of the majestic elephant and taken in procession along the streets which had been decorated in celebration of our wedding. We were given the holy bath with the sacred waters

(11) Conclusion
ஆயனுக் காகத்தான் கண்ட கனாவினை, | வேயர் புகழ்வில்லி புத்தூர்க்கோன் கோதைசொல்,
தூய தமிழ்மாலை ஈரைந்தும் வல்லவர், | வாயுநன் மக்களைப் பெற்று மகிழ்வரே
Kodai, the tirumagal of veyar pugazh villiputtur kon periyazhvar, has sung this tirumozhi with ten pasurams in poetic tamizh, describing her divine dream about ayar kulak kannan wedding her. Whosoever is able to learn and chant these pasurams, will be blessed with good progeny and prosperous lives with them.”

Guruvaayoorappan Pancharatnam

Pancharatnam stotra dedicated to Sri Guruvayurappan (by Shri Senkalipuram Anantharama Dikshitar), the presiding deity of Guruvayur Temple in Kerala.
கல்யாண ரூபாய கலௌ ஜநாநாம்
கல்யாண தாத்ரே கருணா ஸுதாப்தே
கம்ப்வாதீ த்வ்வாயுத ஸத்கராய
வாதாலயா தீச நமோ நமஸ்தே
நாராயண (x16)
நாராயணே த்யாதி ஜபத் பிருச் சை:
பக்தைஸ் சதா பூர்ண மஹாலயாய
ஸ்வதீர்த்த காங்கோபம வாரி மக்ந
நிவர்திதா சேஷரூஜெ நமஸ்தே

ப்ராஹ்ம்மே முகூர்த்தே பரித: ஸ்வபக்தை:
சந்த்ருஷ்ட சர்வோத்தம விஸ்வரூப
ஸ்வதைல சம்சேவக ரோகஹர்தரே
வாதாலயாதீச நமோ நமஸ்தே
நாராயண (x16)
பாலான் ஸ்வாகீயான் தவ சன்னிதானே
திவ்யான்ன தானாத் பரிபாலயத்பி:
சதா படத்பிச்ச புராண ரத்னம்
ஸம் ஸேவிதாயாஸ்து நமோஹரேதே
நாராயண (x16)
நித்யான்னதாத்ரே சா ஹிஸுரேப்ய:
நித்யம் திவிஸ்சிதைர் நிபூஜிதாய
மாத்ராச பித்ரா சததோத்தவேந
சம்பூஜி தாயாஸ்து நமோ நமஸ்தே
நாராயண (x16)
ஆனந்தராமாக்ய மகிப்ரணீதம்
ஸ்தோத்ரம் படேத்யஸ்து நரஸ்தரிகாலம்
வாதாலயே சஸ்ய க்ருபாபலேன
லபேத ஸர்வாணிச மங்களாநி
நாராயண (x16)
குருவாதபுரீச பஞ்ச காக்யம்
ஸ்துதி ரத்னம் படதாம் ஸுமங்கலம் ஸ்யாத்
ஹ்ருதிசாபி விசேத் ஹரிஸ் வயம்து
ரதிநாதாயுத துல்ய தேஹ காந்தி.
நாராயண (x16)

Vaathapuranatha Ashtakam by Ganapathy Sastrigal

For Vatha-pura Natha (Lord of Guru-vayuru), who cures our illness (related to vatha).
குந்தஸூம ப்ருந்தஸம மந்தஹஸிதாஸ்யம்
நந்தகுல நந்தபர துந்தலன கந்தம் |
பூத நிஜ கீத லவ தூத துரிதம் தம்
வாதபுர நாதமிம மாதனு ஹ்ருதப்ஜே ||

நீலதர ஜாலதர பாலஹரி ரம்யம்
லோலதர ஸீலயுத பாலஜன லீலம் |
ஜாலநதி ஸீலமபி பாலயிது காமம்
வாதபுர நாதமிம மாதனு ஹ்ருதப்ஜே ||

கம்ஸரண ஹிம்ஸ மிஹ ஸம்ஸரண ஜாத
க்லாந்திபர ஸாந்திகர காந்திஜர வீதம் |
வாதமுக தாது ஜனி பாத பயகாதம்
வாதபுர நாதமிம மாதனு ஹ்ருதப்ஜே ||

ஜாதுதுரி பாதுக மிஹாதுர ஜனம் த்ராக்
ஸோக பரமூகமபி தோக மிவ பாந்தம் |
ப்ருங்கருசி ஸங்கரக்ரு தங்கலதிகம் தம்
வாதபுர நாதமிம மாதனு ஹ்ருதப்ஜே ||

பாபபவ தாபபர கோபஸ மநார்த்தா
ஸ்வாஸ கர பாஸ ம்ருதுஹாஸருசி ராஸ்யம் |
ரோகசய போகபய வேகஹர மேகம்
வாதபுர நாதமிம மாதனு ஹ்ருதப்ஜே ||

கோஷமுல தோஷஹர வேஷமுப யாந்தம்
பூஷஸத தூஷகவி பூஷண கணாட்யம் |
புக்திமபி முக்திமதி பக்திஷூத தானம்
வாதபுர நாதமிம மாதனு ஹ்ருதப்ஜே ||

பாபகதூ ரபமதி தாப ஹர ஸோப
ஸ்வாபகன மாபத துமபாதி ஸமேதம் |
தூனதர தீன ஸூக தானக்ருத தீக்ஷம்
வாதபுர நாதமிம மாதனு ஹ்ருதப்ஜே ||

பாதபத தாதரண மோத பரிபூர்ணம்
ஜீவமுக தேவஜன ஸேவன பலாங்க்ரிம்
ரூக்ஷபவ மோக்ஷக்ருத தீக்ஷநிஜ வீக்ஷம்
வாதபுர நாதமிம மாதனு ஹ்ருதப்ஜே ||

ப்ருத்யகண பத்யுதித நுச்யுசித மோதம்
ஸ்டஷ்டமித மஷ்டக மதுஷ்ட கரணார்ஹம் |
ஆததத மாதரத மாதிலய ஸூன்யம்
வாதபுர நாதமிம மாதனு ஹ்ருதப்ஜே ||
|| ஸ்ரீ க்ருஷ்ணார்ப்பணமஸ்து ||

உத்தராங்க பூஜை

பரித்ராணாய ஸாதூநாம், விநாஷாய ச துஷ்க்ருதாம் | தர்ம ஸம்ஸ்தாபநார்தாய, ஸம்பவாமி யுகே யுகே ||

காயேந வாசா மநஸேந்த்ரியைர் வா புத்யாத்மநா வா ப்ரக்ருதே: ஸ்வபாவாத் |
கரோமி யத்யத் ஸகலம் ப்ரஸ்மை நாராயணாயேதி ஸமர்ப்பயாமி ||


Email Contact...Website maintained by: NARA
Terms and Usage