hinduhome

prayhome

Non commercial website, for knowledge sharing. Free to copy and use, if you find it useful.

Pradhosham Nataraja

Click for Songs on Shiva

பூஜாரம்பம்

Oom............
  1. ॐ महागणपतये नमः । ஓம் மஹாகணபதயெ நம:
  2. ॐ सुप्रह्मण्याय नम: । ஓம் ஸுப்ரஹ்மண்யாய நம:
  3. ॐ उमामहेश्वराभ्यां नमः । ஓம் உமாமஹெஷ்வராப்யா நம:
  4. ॐ तुर्कायै नम: । ஓம் துர்காயை நம:
  5. ॐ लक्ष्मीनारायणाभ्यां नमः । ஓம் லக்ஷ்மீநாராயணாப்யோ நம:
  6. ॐ महा लक्श्मैयै नम: | ஓம் மஹா லக்ஷ்மையை நம:
  7. ॐ गुरुभ्यो नमः । ஓம் குருப்யொ நம:
  8. ॐ सरस्वत्यै नमः । ஓம் ஸரஸ்வத்யை நம:
  9. ॐ वेदाय नमः । ஓம் வேதாய நம:
  10. ॐ वेदपुरुषाय नमः । ஓம் வேதபுருஷாய நம:
  11. ॐ सर्वेभ्यो ब्राह्मणेभ्यो नमो नमः । ஓம் ஸர்வெப்யொ ப்ராஹ்மணெப்யோ நமோ நம:
  12. ॐ इष्टदेवताभ्यो नमः । ஓம் இஷ்டதேவதாப்யோ நம:
  13. ॐ कुलदेवताभ्यो नमः । ஓம் குலதேவதாப்யொ நம:
  14. ॐ स्थानदेवताभ्यो नमः । ஓம் ஸ்தாநதேவதாப்யொ நம:
  15. ॐ ग्रामदेवताभ्यो नमः । ஓம் க்ராமதேவதாப்யொ நம:
  16. ॐ वास्तुदेवताभ्यो नमः । ஓம் வாஸ்துதேவதாப்யொ நம:
  17. ॐ शचीपुरंदराभ्यां नमः । ஓம் ஷசீபுரத்தராப்யா நம:
  18. ॐ क्शॆत्रपाला|य नम: ஓம் க்ஷெத்ரபாலாய நம:
  19. ॐ वसॉश्पतयॆ नम: | ஓம் வஸொஷ்பதயெ நம:
  20. ॐ मातापितृभ्यां नमः ।ஓம் மாதாபிதரப்யா நம:
  21. ॐ सर्वेभ्यो देवेभ्यो नमो नमः । ஓம் ஸர்வெப்யொ தேவேப்யொ நமோ நம:
  22. ॐ रव्याति नवक्रह ऄश्टतल चतुर्तलॆशु स्तित सर्वतॆवताप्यॉ नम:
    ஓம் ரவ்யாதி நவக்ரஹ அஷ்டதல சதுர்தலெஷு ஸ்தித ஸர்வதெவதாப்யொ நம:

optional: (1) ஆசமனம்: (2) ஷுக்லாம் .. ஷாந்தயே:(3) ப்ராணாயாமம்:

Sankalpam - Purpose, Place and Time

மமோபாத்த ஸமஸ்த துரிதக்ஷய த்வாரா பரமேஸ்வர (can add like ஸ்ரீமந் நாராயண, ஸ்ரீ பகவத்) ப்ரீத்யர்த்தம் (optional: ஹரிரோம் தத் ஸத், ஸ்ரீ கோவிந்த கோவிந்த கோவிந்த, ஆத்ய ஸ்ரி பகவத: மஹா புருஷஸ்ய விஷ்ணோ ராஜ்ஞயா ப்ரவர்த்தமானஸ்ய) சுபே சோபனே முஹூர்த்தே
Puranic time line: ஆத்ய ப்ரஹ்மண: த்விதீய பரார்த்தே ச்வேதவராஹ கல்பே வைவஸ்வத மன்வந்தரே அஷ்டாவிம்சதி தமே கலியுகே ப்ரதமே பாதே,
Location: For auckland: shaka த்வீபே shantha வர்ஷெ venmegha தெஷெ auckland க்ராமெ (For India: ஜம்பூத்வீபே பாரத வர்ஷே பரதகண்டேமேரோ: தக்ஷிணே பார்ச்வே Fill in for others: ... த்வீபே ... வர்ஷெ ... தெஷெ ... க்ராமெ)
Saka era 60 years Luni-solar calendar: ஷாலிவாஹன ஷகாப்தே அஸ்மின் வர்த்தமானே வ்யாவ ஹாரிகே ப்ரபவாதே ஷஷ்டி ஸம்வத்ஸராணாம் மத்யே (year name) நாம ஸம்வத்ஸரே (உத்தராயணெ/தக்ஷிணாயணெ) (season) ருதௌ (month) மாஸெ (star) நக்ஷத்ரயுக்தாயாம் (day) வாஸரயுக்தாயாம் (shukla/krishna) பக்க்ஷெ (tithi) புண்யதிதௌ.
சுபயோக சுபகரண ஏவங்குண விசேஷண விசிஷ்டாயாம் அஸ்யாம்
click for Panchangam (adapted for NZ)
*Some add the persons details like name, nakshatra and rasi performing pooja
Activity/ritual: அஸ்மாகம் ஸஹ குடும்பானாம் ஷேம தைர்ய - வீர்ய - விஜய - ஆயுராரோக்ய - ஐஸ்வர்யாணம் - (deity name) ப்ரஸாத ஸித்யர்த்தம் - யாவத் சக்தி த்யான (ஸ்ரீஸதாசிவ) பூஜாம் கரிஷ்யே
*For elaborate one can add: ஆவாஹனாதி ஷோட சோபசார etc before pooja name

Formality - kalasa பூஜை

கங்கேச யமுனே சைவ கோதாவரி ஸரஸ்வதி |
நர்மதே ஸிந்து காவேரி ஜலேஸ்மின் ஸன்னிதிம் குரு |
எவம் கலஸ பூஜாம் க்ருத்வா மயா கரிஷ்யமாண (ஸ்ரீஸதாசிவ) பூஜாம் கரிஷ்யே

Ganesha

  1. ॐ सुमुकाय नम: | ஓம் ஸுமுகாய நம:
  2. ॐ एक तन्ताय नम: | ஓம் ஏக தந்தாய நம:
  3. ॐ कपिलाय नम: | ஓம் கபிலாய நம:
  4. ॐ कजकर्णकाय नम: | ஓம் கஜகர்ணகாய நம:
  5. ॐ लँपोतारय नम: | ஓம் லம்போதாரய நம:
  6. ॐ विकटाय नम: | ஓம் விகடாய நம:
  7. ॐ विक्नराजाय नम: | ஓம் விக்நராஜாய நம:
  8. ॐ विनायकाय नम: | ஓம் விநாயகாய நம:
  9. ॐ कणातिपाय नम: | ஓம் கணாதிபாய நம:
  10. ॐ तूमकॅतवॅ नम: | ஓம் தூமகேதவே நம:
  11. ॐ कणातियक्शाय नम: | ஓம் கணாதியக்ஷாய நம:
  12. ॐ पालचन्त्राय नम: | ஓம் பாலசந்த்ராய நம:
  13. ॐ कजाऩनाय नम: | ஓம் கஜானநாய நம:
  14. ॐ वक्रतुण्टाय नम: | ஓம் வக்ரதுண்டாய நம:
  15. ॐ सुर्प्पकर्णाय नम: | ஓம் ஸுர்ப்பகர்ணாய நம:
  16. ॐ हॅरँपाय नम: | ஓம் ஹேரம்பாய நம:
  17. ॐ स्कन्त पूर्वजाय नम: | ஓம் ஸ்கந்த பூர்வஜாய நம:
  18. ॐ स्री महा कणपतयॅ नम: | ஓம் ஸ்ரீ மஹா கணபதயே நம:

Major deities and their Gayathri avahanam

ஓம் ஆதித்யாதி நவக்ரஹ தேவதாப்யோ நம: ஓம் நக்ஷத்ராதி தேவதாப்யோ நம:
ஸௌர மண்டல மத்யஸ்த்தம் ஸாம்பம் ஸம்ஸார பேஷஜம் |
நீலக்ரீவம் விரூபாக்ஷம் நமாமி சிவமவ்யயம்

த்யாநம் (Spiritual Awakening)

குருர் ப்ரஹ்மா குருர் விஷ்ணு குருர் தேவோ மஹெஷ்வரஹ | குருர் ஸாக்ஷாத் பரப்ரஹ்ம தஸ்மை ஷ்ரே குரவெ நமஹ ||
ஓம் சித்சபேசாய வித்மஹே சிதாகாசாய தீமஹீ தன்னோ சபேச ப்ரசோதயாத்
ஓம் மகேஸ்வராய வித்மஹே வாக் விசுத்தாயை ச தீமஹீ தன்னோ சிவ: ப்ரசோதயாத்
ஓம் தத்புருஷாய வித்மஹே மகாதேவாய தீமஹீ தன்னோ ருத்ர ப்ரசோதயாத்
ஓம் ஸிவாஸ்த்ராய வித்மஹே காலாநலாய தீமஹி தந்நோ அஸ்த்ர ப்ரசோதயாத்.
ஓம் தன் மஹேஸாய வித்மஹே வாக்விஸுத்தாய தீமஹி தந்ந: ஸிவ: ப்ரசோதயாத்

சிவம் சிவகரம் சாந்தம் சிவாத்மானம் சிவோத்தமம் |
சிவமார்க ப்ரணேதாரம் ப்ரணதோஸ்மி ஸதாசிவம் ||
நமசிவாய பரமேஸ்வராய சசிசேகராய நம ஓம்
பவாய குண சம்பவாய சிவதாண்டவாய நம ஓம்.

அண்டப்பகுதியின் உண்டைப்பிறக்கம் | அளப்பருந்தன்மை! வளப்பெரும் காட்சி!
ஒன்றனுக்கொன்று நின்றெழில் பகரின், | நூற்றொரு கோடியின் மேற்பட விரிந்தன!
இல்நுழை கதிரின் நுண்ணணுப் புரையச் | சிறியனவாகப் பெரியோன் தெரியின்....."

காதலாகிக்கசிந்து கண்ணீர் மல்கி ஓதுவார் தமை நன்னெறிக்கு உய்ப்பது வேதம்
நான்கினும் மெய்ப்பொருளாவது நாதன் நாமம் நமச்சிவாயவே.

அன்பும் சிவமும் இரண்டென்பர் அறிவிலார் |
அன்பேசிவமாவது யாரும் அறிகிலார் ||
அன்பே சிவமாவது யாரும் அறிந்தபின் |
அன்பே சிவமாய் அமர்ந்திருந்தாரே ||

"எங்குந் திருமேனி எங்குஞ் சிவசத்தி
எங்குஞ் சிதம்பரம் எங்குந் திருநட்டம்
எங்குஞ் சிவமா யிருத்தலால் எங்கெங்குந்
தங்குஞ் சிவனருட் டன்விளை யாட்டாதே" (திருமந்திரம் - 2722)

Nandhi Ashtothram & துதி

பிரதோஷ காலத்தில் பேசும் நந்தி
பேரருளை மாந்தருக்கு வழங்கும் நந்தி
தில்லையில் நடனமாடும் திவயநாதன் நந்தியிது
எல்லையில்லா இன்பம்தரும் எம்பெருமான் நந்தியிது
1) ஓம் நந்திகேஸ்வராய நம:
2) ஓம் ப்ரஹ்மரூபிணே நம:
3) ஓம் ஸிவத்யான பராயணாய நம:
4) ஓம் தீக்ஷ்ணஸ்ருங்காய நம:
5) ஓம் வேதபாதாய நம:
6) ஓம் விருபாய நம:
7) ஓம் வ்ருஷபாய நம:
8) ஓம் துங்கஸைலாய நம:
9) ஓம் தேவதேவாய நம:
10) ஓம் ஸிவப்ரியாய நம:
11) ஓம் விராஜமானாய நம:
12) ஓம் நடனாய நம:
13) ஓம் அக்னிரூபாய நம:
14) ஓம் தனப்ரியாய நம:
15) ஓம் ஸிதசாமரதாரிணே நம:
16) ஓம் வேதாங்காய நம:
17) ஓம் கனகப்ரியாய நம:
18) ஓம் கைலாஸவாஸினே நம:
19) ஓம் தேவாய நம:
20) ஓம் ஸ்த்திதபாதாய நம:
21) ஓம் ஸருதிப்ரியாய நம:
22) ஓம் ஸ்வேதாபவிதினே நம:
23) ஓம் நாட்யநந்தகாய நம:
24) ஓம் கிங்கிணீதராய நம:
25) ஓம் மத்தஸ்ருங்கிணே நம:
26) ஓம் ஹாடகேஸாய நம:
27) ஓம் ஹேமபூஷணாய நம:
28) ஓம் விஷ்ணுரூபிண்யாய நம:
29) ஓம் பருத்விரூபினே நம:
30) ஓம் நிதீஸாய நம:
31) ஓம் ஸிவவாஹனாய நம:
32) ஓம் குளப்ரியாய நம:
33) ஓம் சாருஹாஸாய நம:
34) ஓம் ஸ்ருங்கிணே நம:
35) ஓம் நவத்ருணப்ரியாய நம:
36) ஓம் வேதஸாராய நம:
37) ஓம் மந்த்ரஸாராய நம:
38) ஓம் ப்ரத்யக்ஷாய நம:
39) ஓம் கருணாகராய நம:
40) ஓம் ஸீக்ராய நம:
41) ஓம் லலாமகலிகாய நம:
42) ஓம் ஸிவயோகினே நம:
43) ஓம் ஜலாதிபாய நம:
44) ஓம் சாருரூபாய நம:
45) ஓம் வ்ருஷேஸாய நம:
46) ஓம் ஸோமஸுர்யாக்னிஸோசனாய நம:
47) ஓம் ஸுந்தராய நம:
48) ஓம் ஸோமபூஷாய நம:
49) ஓம் ஸுவக்த்ராய நம:
50) ஓம் கலிநாஸனாய நம:
51) ஓம் ஸுப்ரகாஸாய நம:
52) ஓம் மஹாவீர்யாய நம:
53) ஓம் ஹம்ஸாய நம:
54) ஓம் அக்னிமயாய நம:
55) ஓம் ப்ரபவே நம:
56) ஓம் வரதாய நம:
57) ஓம் ருத்ரரூபாய நம:
58) ஓம் மதுராய நம:
59) ஓம் காமிகப்ரியாய நம:
60) ஓம் விஸிஷ்டாய நம:
61) ஓம் திவ்யரூபாய நம:
62) ஓம் உஜ்வலினே நம:
63) ஓம் ஜ்வாலநேத்ராய நம:
64) ஓம் ஸ்ம்வர்தாய நம:
65) ஓம் காலாய நம:
66) ஓம் கேஸவாய நம:
67) ஓம் ஸர்வதைவதாய நம:
68) ஓம் ஸ்வேதவர்ணாய நம:
69) ஓம் ஸினாஸீனாய நம:
70) ஓம் சின்மயாய நம:
71) ஓம் ஸ்ருங்கபட்டாய நம:
72) ஓம் ஸ்வேதசாமரபூஷாய நம:
73) ஓம் நேவராஜாய நம:
74) ஓம் ப்ரபாநந்தினே நம:
75) ஓம் பண்டிதாய நம:
76) ஓம் பரமேஸ்வராய நம:
77) ஓம் நிருபாய நம:
78) ஓம் நிராகாராய நம:
79) ஓம் சின்னதைத்யாய நம:
80) ஓம் நாஸாஸூத்ரினே நம:
81) ஓம் ஆனந்தேஸ்யாய நம:
82) ஓம் திலதண்டுலபக்ஷணாய நம:
83) ஓம் வாரநந்தனே நம:
84) ஓம் ஸரஸாய நம:
85) ஓம் விமலாய நம:
86) ஓம் பட்டஸூத்ராய நம:
87) ஓம் காலகண்ட்டாய நம:
88) ஓம் ஸைலாதினே நம:
89) ஓம் ஸிலாதன ஸுநந்தனாய நம:
90) ஓம் காரணாய நம:
91) ஓம் ஸ்ருதிபக்தாய நம:
92) ஓம் வீரகண்ட்டாதாராய நம:
93) ஓம் தன்யாய நம:
94) ஓம் விஷ்ணுநந்தினே நம:
95) ஓம் ஸிவஜ்வாலாக்ராஹிணே நம:
96) ஓம் பத்ராய நம:
97) ஓம் அனகாய நம:
98) ஓம் வீராய நம:
99) ஓம் த்ருவாய நம:
100) ஓம் தாத்ரே நம:
101) ஓம் ஸாஸ்வதாய நம:
102) ஓம் ப்ரதோஸப்ரியரூபிணே நம:
103) ஓம் வ்ருஷாய நம:
104) ஓம் குண்டலத்ருதே நம:
105) ஓம் பீமாய நம:
106) ஓம் ஸிதவர்ணஸ்ரூபினே நம:
107) ஓம் ஸர்வாத்மனே நம:
108) ஓம் ஸர்வவிக்யாதாய நம:
திருச்சிற்றம்பலம்

அங்க/பாதாதிகேச பூஜை

1 ) ஓம் ஷிவாய நம: பாதௌ பூஜயாமி ..
2 ) ஓம் ஸர்வாய நம: குல்ப்பௌ பூஜயாமி ..
3 ) ஓம் ஈஷ்வராய நம: ஜங்க்கே பூஜயாமி ..
4 ) ஓம் ருத்ராய நம: ஜானுனீ பூஜயாமி ..
5 ) ஓம் பரமாத்மநே நம: ஊரூ பூஜயாமி ..
6 ) ஓம் வ்யாக்ரசர்ம தராய நம: கடிம் பூஜயாமி ..
7 ) ஓம் கௌரீபதயே நம: ஜகநம் பூஜயாமி ..
8 ) ஓம் ஷங்கராய நம: நாபிம் பூஜயாமி ..
9 ) ஓம் ஜகதீஸ்வராய நம: உதரம் பூஜயாமி ..
10) ஓம் மஹேஷ்வராய நம: ஹ்ருதயம் பூஜயாமி ..
11) ஓம் பவாய நம: வக்ஷம் பூஜயாமி ..
12) ஓம் மஹாதேவாய நம: ஸ்தநௌ பூஜயாமி ..
13) ஓம் த்ர்யம்பகாய நம: ஸ்கந்தௌ பூஜயாமி ..
14) ஓம் த்ரிபுராரயே நம: பாஹூந் பூஜயாமி ..
15) ஓம் ஸூலபாணயே நம: ஹஸ்தாந் பூஜயாமி ..
16) ஓம் காலகண்டாய நம: கண்டம் பூஜயாமி ..
17) ஓம் பகவதே நம: சுபுகம் பூஜயாமி ..
18) ஓம் பஞ்ச வக்த்ராய நம: முகம் பூஜயாமி ..
19) ஓம் த்ரிநேத்ராய நம: நேத்ராணி பூஜயாமி ..
20) ஓம் ரத்ந தாடங்க தாரிந்ஞை நம: கர்ணௌ பூஜயாமி ..
21) ஓம் சம்பக நாஸாய நம: லலாடம் பூஜயாமி ..
22) ஓம் ஜடாதராய நம: ஷிர: பூஜயாமி ..
23) ஓம் சந்த்ரசேகராய நம: பூஜயாமி ..
24) ஓம் ஸர்வேஷ்வராய நம: ஸர்வாண் யங்கானி பூஜயாமி ..
திருச்சிற்றம்பலம்

அஷ்டொத்தரஷதநாம பூஜா

ஓம் நமோ பகவதே பூர்வ முகாய நம:
ஓம் நமோ பகவதே தக்ஷிண முகாய நம:
ஓம் நமோ பகவதே பச்சிம முகாய நம:
ஓம் நமோ பகவதே உத்திர முகாய நம:
ஓம் நமோ பகவதே ஊர்த்துவ முகாய நம:
ஓம் நமோ பகவதே ஷஷ்ட முகாய நம:
ஓம் நிதபதயே நம: | ஓம் நிதபதாந்திகாயா நம:
ஓம் ஊர்த்வராய நம: | ஓம் ஊர்த்வலிங்காய நம:
ஓம் ஹிரண் யாய நம: | ஓம் ஹிரண் யலிங்காய நம:
ஓம் ஸுவர்ணய நம: | ஓம் ஸுவர்ணலிங்காய நம:
ஓம் திவ்யாய நம: | ஓம் திவ்யலிங்காய நம:
ஓம் பவாய நம: | ஓம் பவலிங்காய நம:
ஓம் ஸர்வாய நம: | ஓம் ஸர்வலிங்காய நம:
ஓம் சிவாய நம: | ஓம் சிவலிங்காய நம:
ஓம் ஜ்வாலாய நம: | ஓம் ஜ்வாலாலிங்காய நம:
ஓம் ஆத்மாய நம: | ஓம் ஆத்மலிங்காய நம:
ஓம் பரமாய நம: | ஓம் பரமலிங்காய நம:
ஓம் சாம்ப பரமேஷ்வராய நம:
திருச்சிற்றம்பலம்

Lingamurthy Ashtothram

ஷ்ரி லிங்கேப்யோ நமஹா
லிங்கமூர்திம் சிவம் ஸ்துத்வா காயத்ரயா யோகமாப்தவான் |
நிர்வாணம் பரமம் ப்ரஹ்ம வஸிஷ்டோந் யஸ்ச சங்கராத் ||
1) ஓம் ஹாம் லிங்கமூர்த்தயே நமஹா
2) ஓம் ஹாம் சிவலிங்காய நமஹா
3) ஓம் ஹாம் அத்புதலிங்காய நமஹா
4) ஓம் ஹாம் அநுகதலிங்காய நமஹா
5) ஓம் ஹாம் அவ்யக்தலிங்காய நமஹா
6) ஓம் ஹாம் அர்த்தலிங்காய நமஹா
7) ஓம் ஹாம் அச்யுதலிங்காய நமஹா
8) ஓம் ஹாம் அனந்தலிங்காய நமஹா
9) ஓம் ஹாம் அம்ருதலிங்காய நமஹா
10) ஓம் ஹாம் அநேகலிங்காய நமஹா
11) ஓம் ஹாம் அநேகஸ்வரூபலிங்காய நமஹா
12) ஓம் ஹாம் அநாதிலிங்காய நமஹா
13) ஓம் ஹாம் ஆதிலிங்காய நமஹா
14) ஓம் ஹாம் ஆனந்தலிங்காய நமஹா
15) ஓம் ஹாம் ஆத்மானந்தலிங்காய நமஹா
16) ஓம் ஹாம் ஆர்ஜிதபாபவிநாசலிங்காய நமஹா
17) ஓம் ஹாம் ஆஸ்ரிதரக்ஷகலிங்காய நமஹா
18) ஓம் ஹாம் இந்துலிங்காய நமஹா
19) ஓம் ஹாம் இந்த்ரியலிங்காய நமஹா
20) ஓம் ஹாம் இந்த்ராதிப்ரியலிங்காய நமஹா
21) ஓம் ஹாம் ஈஸ்வரலிங்காய நமஹா
22) ஓம் ஹாம் ஊர்ஜிதலிங்காய நமஹா
23) ஓம் ஹாம் ருக்வேதஸ்ருதி லிங்காய நமஹா
24) ஓம் ஹாம் ஏகலிங்காய நமஹா
25) ஓம் ஹாம் ஐஸ்வர்யலிங்காய நமஹா
26) ஓம் ஹாம் ஓங்காரலிங்காய நமஹா
27) ஓம் ஹாம் ஹீரீம்காரலிங்காய நமஹா
28) ஓம் ஹாம் கனகலிங்காய நமஹா
29) ஓம் ஹாம் வேதலிங்காய நமஹா
30) ஓம் ஹாம் பரமலிங்காய நமஹா
31) ஓம் ஹாம் வ்யோமலிங்காய நமஹா
32) ஓம் ஹாம் ஸஹஸ்ரலிங்காய நமஹா
33) ஓம் ஹாம் வன்னிலிங்காய நமஹா
34) ஓம் ஹாம் புராணலிங்காய நமஹா
35) ஓம் ஹாம் ஸ்ருதிலிங்காய நமஹா
36) ஓம் ஹாம் பாதாளலிங்காய நமஹா
37) ஓம் ஹாம் ப்ரம்ஹலிங்காய நமஹா
38) ஓம் ஹாம் ரஹஸ்யலிங்காய நமஹா
39) ஓம் ஹாம் ஸப்தத்வீபோர்த்வ லிங்காய நமஹா
40) ஓம் ஹாம் நாகலிங்காய நமஹா
41) ஓம் ஹாம் தேஜோலிங்காய நமஹா
42) ஓம் ஹாம் ஊர்த்வலிங்காய நமஹா
43) ஓம் ஹாம் அதர்வலிங்காய நமஹா
44) ஓம் ஹாம் ஸாமலிங்காய நமஹா
45) ஓம் ஹாம் யக்ஞாங்கலிங்காய நமஹா
46) ஓம் ஹாம் யக்ஞலிங்காய நமஹா
47) ஓம் ஹாம் தத்வலிங்காய நமஹா
48) ஓம் ஹாம் தேவலிங்காய நமஹா
49) ஓம் ஹாம் விக்ரஹலிங்காய நமஹா
50) ஓம் ஹாம் ராவலிங்காய நமஹா
51) ஓம் ஹாம் பஜோலிங்காய நமஹா
52) ஓம் ஹாம் ஸத்வலிங்காய நமஹா
53) ஓம் ஹாம் ஸ்வர்ணலிங்காய நமஹா
54) ஓம் ஹாம் ஸ்படிகலிங்காய நமஹா
55) ஓம் ஹாம் பவலிங்காய நமஹா
56) ஓம் ஹாம் நிஸ்த்ரைகுன்யலிங்காய நமஹா
57) ஓம் ஹாம் மந்த்ரலிங்காய நமஹா
58) ஓம் ஹாம் புருஷலிங்காய நமஹா
59) ஓம் ஹாம் ஸர்வாத்மலிங்காய நமஹா
60) ஓம் ஹாம் ஸர்வலோகாங்கலிங்காய நமஹா
61) ஓம் ஹாம் புத்திலிங்காய நமஹா
62) ஓம் ஹாம் அஹங்கார லிங்காய நமஹா
63) ஓம் ஹாம் பூதலிங்காய நமஹா
64) ஓம் ஹாம் மஹேஸ்வர லிங்காய நமஹா
65) ஓம் ஹாம் ஸுந்த்ர லிங்காய நமஹா
66) ஓம் ஹாம் அஸுரேஸ்வர லிங்காய நமஹா
67) ஓம் ஹாம் ஸுரேசலிங்காய நமஹா
68) ஓம் ஹாம் மஹேஸலிங்காய நமஹா
69) ஓம் ஹாம் சங்கரலிங்காய நமஹா
70) ஓம் ஹாம் தாநவநாச லிங்காய நமஹா
71) ஓம் ஹாம் ரவிசந்த்ர லிங்காய நமஹா
72) ஓம் ஹாம் ரூபலிங்காய நமஹா
73) ஓம் ஹாம் ப்ரபஞ்ச லிங்காய நமஹா
74) ஓம் ஹாம் வில்க்ஷண லிங்காய நமஹா
75) ஓம் ஹாம் தாபநிவாரண லிங்காய நமஹா
76) ஓம் ஹாம் ஸ்வரூபலிங்காய நமஹா
77) ஓம் ஹாம் ஸர்வலிங்காய நமஹா
78) ஓம் ஹாம் ப்ரியலிங்காய நமஹா
79) ஓம் ஹாம் ராமலிங்காய நமஹா
80) ஓம் ஹாம் மூர்த்திலிங்காய நமஹா
81) ஓம் ஹாம் மஹோன்னதலிங்காய நமஹா
82) ஓம் ஹாம் வேதாந்தலிங்காய நமஹா
83) ஓம் ஹாம் விஸ்வேஸ்வரலிங்காய நமஹா
84) ஓம் ஹாம் யோகிலிங்காய நமஹா
85) ஓம் ஹாம் ஹ்ருதயலிங்காய நமஹா
86) ஓம் ஹாம் சின்மயலிங்காய நமஹா
87) ஓம் ஹாம் சித்கநலிங்காய நமஹா
88) ஓம் ஹாம் மஹாதேவலிங்காய நமஹா
89) ஓம் ஹாம் லங்காபுர லிங்காய நமஹா
90) ஓம் ஹாம் லாலிதலிங்காய நமஹா
91) ஓம் ஹாம் சிதம்பரலிங்காய நமஹா
92) ஓம் ஹாம் நாரதஸேவித லிங்காய நமஹா
93) ஓம் ஹாம் கமலலிங்காய நமஹா
94) ஓம் ஹாம் கைலாஸ லிங்காய நமஹா
95) ஓம் ஹாம் கருணாரஸ லிங்காய நமஹா
96) ஓம் ஹாம் சாந்த லிங்காய நமஹா
97) ஓம் ஹாம் கிரிலிங்காய நமஹா
98) ஓம் ஹாம் வல்லபலிங்காய நமஹா
99) ஓம் ஹாம் சங்கராத்மஜலிங்காய நமஹா
100) ஓம் ஹாம் ஸர்வஜனபூஜிதலிங்காய நமஹா
101) ஓம் ஹாம் ஸர்வபாதகநாசனலிங்காய நமஹா
102) ஓம் ஹாம் கௌரீலிங்காய நமஹா
103) ஓம் ஹாம் வேதஸ்வரூப லிங்காய நமஹா
104) ஓம் ஹாம் ஸகலஜனப்ரிய லிங்காய நமஹா
105) ஓம் ஹாம் ஸகலஜகத்ரக்ஷக லிங்காய நமஹா
106) ஓம் ஹாம் இஷ்டகாம்யார்த்த பலஸித்தி லிங்காய நமஹா
107) ஓம் ஹாம் ஸோபித லிங்காய நமஹா
108) ஓம் ஹாம் மங்கள லிங்காய நமஹா
திருச்சிற்றம்பலம்

Nataraja Ashtothram

க்ருப ஸமுத்ரம், ஸுமுஹம், த்ரிநெத்ரம், ஜடாதரம், பர்வதி வாம ப்ஹகம்,
ஸதா ஷிவம், ருத்ரம் அணந்த ரூபம், சிதம்பரேஸம் ஹ்ருதி பாவயாமி. 1
(Chidambareswara Stotram: Let us meditate on that Lord of Chidambaram, ocean of mercy, pleasant, three eyed,matted locks, with Parvathy on his left, peaceful but also fearfull.)
1) ஓம் ஸ்ரீசிவாய நம:
2) ஓம் ஸ்ரீ சிவாநாதாய நம:
3) ஓம் ஸ்ரீ மதே நம:
4) ஓம் ஸ்ரீபதிபூஜிதாய நம:
5) ஓம் சிவம்கராய நம:
6) ஓம் சிவதராய நம:
7) ஓம் சிஷ்டஹ்ருஷ்டாய நம:
8) ஓம் சிவாகமாய நம:
9) ஓம் அகண்டானந்தசித்ரூபாய நம:
10) ஓம் பரமானந்ததாண்டவாய நம:
11) ஓம் அபஸ்ம்ருதிந்யஸ்தபாதாய நம:
12) ஓம் க்ருத்திவாஸஸே நம:
13) ஓம் க்ருபாகராய நம:
14) ஓம் காளீவாதப்ரியாய நம:
15) ஓம் காலாய நம:
16) ஓம் காலாதீதாய நம:
17) ஓம் கலாதராய நம:
18) ஓம் காலநேத்ரே நம:
19) ஓம் காலஹந்த்ரே நம:
20) ஓம் காலசக்ரப்ரவர்த்தகாய நம:
21) ஓம் காலக்ஞாய நம:
22) ஓம் காமதாய நம:
23) ஓம் காந்தாய நம:
24) ஓம் காமாரயே நம:
25) ஓம் காமபாலகாய நம:
26) ஓம் கல்யாணமூர்த்தயே நம:
27) ஓம் கல்யாணீரமணாய நம:
28) ஓம் கமலேக்ஷணாய நம:
29) ஓம் காலகண்டாய நம:
30) ஓம் காலகாலாய நம:
31) ஓம் காலகூடவிஷாசனாய நம:
32) ஓம் க்ருதக்ஞாய நம:
33) ஓம் க்ருதிஸாரக்ஞாய நம:
34) ஓம் க்ருசானவே நம:
35) ஓம் க்ருஷ்ணபிங்களாய நம:
36) ஓம் கரிசர்மாம்பரதராய நம:
37) ஓம் கபாலினே நம:
38) ஓம் கலுஷாபஹாய நம:
39) ஓம் கபாலமாலாபரணாய நம:
40) ஓம் கங்காளாய நம:
41) ஓம் கலிநாசனாய நம:
42) ஓம் கைலாஸவாஸினே நம:
43) ஓம் காமேசாய நம:
44) ஓம் கவயே நம:
45) ஓம் கபடவர்ஜிதாய நம:
46) ஓம் கமனீயாய நம:
47) ஓம் கலாநாதசேகராய நம:
48) ஓம் கம்புகந்தராய நம:
49) ஓம் கந்தர்ப்பகோடிஸத்ருசாய நம:
50) ஓம் கபர்தினே நம:
51) ஓம் கமலானனாய நம:
52) ஓம் கராப்ஜத்ருதகாலாக்னயே நம:
53) ஓம் கதம்பகுஸுமாருணாய நம:
54) ஓம் கமனீயநிஜானந்த முத்ராஞ்சிதகராம்புஜாய நம:
55) ஓம் ஸ்புரட்டமருநித்வான நிர்ஜிதாம்போதிநிஸ்வனாய நம:
56) ஓம் உத்தண்டதாண்டவாய நம:
57) ஓம் சண்டாய நம:
58) ஓம் ஊர்த்வதாண்டவபண்டிதாய நம:
59) ஓம் ஸவ்யதாண்டவஸம்பன்னாய நம:
60) ஓம் மஹாதாண்டவவைபவாய நம:
61) ஓம் ப்ரம்ஹாண்டகாண்ட - விஸ்போடமஹாப்ரளய தாண்டவாய நம:
62) ஓம் மஹோக்ரதாண்டவாபிக்ஞாய நம:
63) ஓம் பரிப்ரமணதாண்டவாய நம:
64) ஓம் நந்திநாட்யப்ரியாய நம:
65) ஓம் நந்தினே நம:
66) ஓம் நடேசாய நம:
67) ஓம் நடவேஷப்ருதே நம:
68) ஓம் காளிகாநாட்யரஸிகாய நம:
69) ஓம் நிசாநடனநிச்சலாய நம:
70) ஓம் ப்ருங்கிநாட்யப்ரமாணக்ஞாய நம:
71) ஓம் ப்ரமராயிதநாட்யக்ருதே நம:
72) ஓம் வியதாதிஜகத்ஸ்ரஷ்ட்ரே நம:
73) ஓம் விவிதானந்ததாயகாய நம:
74) ஓம் விகாரரஹிதாய நம:
75) ஓம் விஷ்ணவே நம:
76) ஓம் விராடீசாய நம:
77) ஓம் விராண்மயாய நம:
78) ஓம் விராட்ஹ்ருதயபத்மஸ்தாய நம:
79) ஓம் விதயே நம:
80) ஓம் விச்வாதிகாய நம:
81) ஓம் விபவே நம:
82) ஓம் வீரபத்ராய நம:
83) ஓம் விசாலாக்ஷய நம:
84) ஓம் விஷ்ணுபாணுய நம:
85) ஓம் விசாம்பதயே நம:
86) ஓம் வித்யாநிதயே நம:
87) ஓம் விரூபாக்ஷய நம:
88) ஓம் விச்வயோனயே நம:
89) ஓம் வ்ருஷத்வஜாய நம:
90) ஓம் விரூபாய நம:
91) ஓம் விச்வதிக்வ்யாபினே நம:
92) ஓம் வீதசோகாய நம:
93) ஓம் விரோசனாய நம:
94) ஓம் வ்யோமகேசாய நம:
95) ஓம் வ்யோமமூர்த்தயே நம:
96) ஓம் வ்யோமாகாராய நம:
97) ஓம் அவ்யயாக்ருதயே நம:
98) ஓம் வ்யாக்ரபாதப்ரியாய நம:
99) ஓம் வ்யாக்ரசர் மத்ருதே நம:
100) ஓம் வ்யாதிநாசனாய நம:
101) ஓம் வ்யாக்ருதாய நம:
102) ஓம் வ்யாப்ருதாய நம:
103) ஓம் வ்யாபினே நம:
104) ஓம் வ்யாப்யஸாக்ஷிணே நம:
105) ஓம் விசாரதாய நம:
106) ஓம் வ்யோமோஹநாசனாய நம:
107) ஓம் வ்யாஸாய நம:
108) ஓம் வ்யாக்யாமுத்ரால நம:
ஓம் ஸத்கராய வரதாய வாமனாய நம:
திருச்சிற்றம்பலம்

Nataraja Porri நடராஜர் போற்றி

(1) ஓம் நடராஜனே போற்றி
(2) ஓம் நடனகாந்தானே போற்றி
(3) ஓம் அழகனே போற்றி
(4) ஓம் அபயகரனே போற்றி
(5) ஓம் அகத்தாடுபவனே போற்றி
(6) ஓம் அஜபா நடனனே போற்றி
(7) ஓம் அம்பல வாணனே போற்றி
(8) ஓம் அம்சபாத நடனனே போற்றி
(9) ஓம் அபிஷேகப் பிரியனே போற்றி
(10) ஓம் அர்கமலர்ப் பிரியனே போற்றி
(11) ஓம் அருள்மதாண்டவனே போற்றி
(12) ஓம் அகந்தையழிப்பவனே போற்றி
(13) ஓம் ஆடலரசனே போற்றி
(14) ஓம் ஆனந்தாண்டவனே போற்றி
(15) ஓம் ஆட்டுவிப்பவனே போற்றி
(16) ஓம் ஆடியடக்குபவனே போற்றி
(17) ஓம் ஆபத்பாந்தவனே போற்றி
(18) ஓம் ஆதிஷேசனுக்குக்கருளியவனே போற்றி
(19) ஓம் இசையரசனே போற்றி
(20) ஓம் இன்னிசைப்பிரியனே போற்றி
(21) ஓம் ஈரெண் கரனே போற்றி
(22) ஓம் ஈர்க்கும் நடனனே போற்றி
(23) ஓம் உடுக்கையனே போற்றி
(24) ஓம் உன்மத்த நடனனே போற்றி
(25) ஓம் உண்மைப் பொருளே போற்றி
(26) ஓம் உமாதாண்டவனே போற்றி
(27) ஓம் ஊழித்தாண்டவனே போற்றி
(28) ஓம் ஊர்த்துவதாண்டவனே போற்றி
(29) ஓம் கலையரசனே போற்றி
(30) ஓம் கங்காதரனே போற்றி
(31) ஓம் கமல நடனனே போற்றி
(32) ஓம் கனக சபையனே போற்றி
(33) ஓம் கருணாமூர்த்தியே போற்றி
(34) ஓம் கங்காவதரண நடனனே போற்றி
(35) ஓம் கால்மாறியாடியவனே போற்றி
(36) ஓம் காளிகாபங்கதாண்டவனே போற்றி
(37) ஓம் கிங்கிணி பாதனே போற்றி
(38) ஓம் குக்குட நடனனே போற்றி
(39) ஓம் கூத்தனே போற்றி
(40) ஓம் கூழ் ஏற்றவனே போற்றி
(41) ஓம் கௌரி தாண்டவனே போற்றி
(42) ஓம் கௌமாரப்பிரியனே போற்றி
(43) ஓம் சடை முடியனே போற்றி
(44) ஓம் சத்ரு நாசகனே போற்றி
(45) ஓம் சமர்த்தனே போற்றி
(46) ஓம் சதுர தாண்டவனே போற்றி
(47) ஓம் சந்தியா தாண்டவனே போற்றி
(48) ஓம் சம்ஹார தாண்டவனே போற்றி
(49) ஓம் சித் சபையனே போற்றி
(50) ஓம் சிவசக்தி ரூபனே போற்றி
(51) ஓம் சுயம்பு மூர்த்தியே போற்றி
(52) ஓம் சுந்தரதாண்டவனே போற்றி
(53) ஓம் சூலதாரியே போற்றி
(54) ஓம் சூழ் ஒளியனே போற்றி
(55) ஓம் ஞான தாயகனே போற்றி
(56) ஓம் ஞான சுந்தர தாண்டவனே போற்றி
(57) ஓம் த்ரிபுராந்தகனே போற்றி
(58) ஓம் த்ரிபுர தாண்டவனே போற்றி
(59) ஓம் திருக்கூத்தனே போற்றி
(60) ஓம் திருவாதிரைத் தேவனே போற்றி
(61) ஓம் திருவடிவனே போற்றி
(62) ஓம் தில்லைவாணனே போற்றி
(63) ஓம் துர்தூரப்ரியனே போற்றி
(64) ஓம் துயர் துடைப்பவனே போற்றி
(65) ஓம் தேவ சபையனே போற்றி
(66) ஓம் தேவாதி தேவனே போற்றி
(67) ஓம் நாத ரூபனே போற்றி
(68) ஓம் நாகராஜனே போற்றி
(69) ஓம் நாகாபரணனே போற்றி
(70) ஓம் நாதாந்த நடனனே போற்றி
(71) ஓம் நிலவணியனே போற்றி
(72) ஓம் நீறணிந்தவனே போற்றி
(73) ஓம் நிருத்த சபையனே போற்றி
(74) ஓம் நூற்றெட்டு தாண்டவனே போற்றி
(75) ஓம் பக்தர்க்கெளியவனே போற்றி
(76) ஓம் பரமதாண்டவனே போற்றி
(77) ஓம் பஞ்ச சபையனே போற்றி
(78) ஓம் பதஞ்சலிக்கருளியவனே போற்றி
(79) ஓம் பஞ்சாக்ஷர ரூபனே போற்றி
(80) ஓம் பாண்டியனுக்கிரங்கியவனே போற்றி
(81) ஓம் பிழை பொறுப்பவனே போற்றி
(82) ஓம் பிருங்கி நடனனே போற்றி
(83) ஓம் பிரம்படிபட்டவனே போற்றி
(84) ஓம் பிழம்பேந்தியவனே போற்றி
(85) ஓம் புலித்தோலனே போற்றி
(86) ஓம் புஜங்கலலித தாண்டவனே போற்றி
(87) ஓம் பிரச்னரூபனே போற்றி
(88) ஓம் பிரதோஷத் தாண்டவனே போற்றி
(89) ஓம் மண்சுமந்தவனே போற்றி
(90) ஓம் மணியணியனே போற்றி
(91) ஓம் மான்கரனே போற்றி
(92) ஓம் மழுவேந்தியவனே போற்றி
(93) ஓம் முக்கண்ணனே போற்றி
(94) ஓம் முனிதாண்டவனே போற்றி
(95) ஓம் மும்மலமறுப்பவனே போற்றி
(96) ஓம் முயலக சம்காரனே போற்றி
(97) ஓம் முக்தியருள்பவனே போற்றி
(98) ஓம் முகமண்டல தாண்டவனே போற்றி
(99) ஓம் ராஜசபையனே போற்றி
(100) ஓம் ரக்ஷகதாண்டவனே போற்றி
(101) ஓம் ருத்ரதாண்டவனே போற்றி
(102) ஓம் ருத்ராக்ஷதாரியே போற்றி
(103) ஓம் ருண விமோசனனே போற்றி
(104) ஓம் லயிப்பிப்பவனே போற்றி
(105) ஓம் லலிதாநாயகனே போற்றி
(106) ஓம் விரிசடையனே போற்றி
(107) ஓம் விரும்பியவாறு அருளுவோனே போற்றி
(108) ஓம் வலிய ஆட்கொள்வோனே போற்றி
திருச்சிற்றம்பலம்

Pradhosha Slokam

(1) கைலாஸ ஷைலபுவனெ த்ரி ஜக ஜனித்ரீம்,
கௌரீத நிவெஸ்யெ கனகாசித ரத்ந பீடே,
ந்ருத்யம் விதாது மபி வாஞ்சதி ஸூலபாணௌ,
தேவா ப்ரதோஷஸமயெ அநுபஜந்தி ஸர்வெ.
(2) வாக்தேவி த்ருத வல் லகீ ஸதமுகோ வெணும் ததந் பத்மஜ,
ஸ்தலோ நித்ர கரோ ரமா பகவதி, கேய ப்ரயோகான்விதா,
விஷ்னு ஸாந்த்ர ம்ருதங்க வாதன படுர் தெவா ஸமந்தாத்ஸ்திதா,
ஸேவந்தே தமர ப்ரதோஷ ஸமயே தேவம் ம்ருடாநீபதிம்.
(3) கந்தர்வ யக்ஷ பதகோரக ஸித்த ஸாத்ய.
வித்யாதரா அமர அப்ஸரஸொ கணாச்ச,
யெ ஸைன்யே த்ரிலோக நிலயா ஸஹ பூத வர்கா,
ப்ராப்தே ப்ரதோஷ ஸமயே ஹர பார்ச்வ ஸம்ஸ்தா.
(4) அத ப்ரதோஷ சிவ ஏக ஏவ, பூஜ்யோத நான்யெ ஹரிபட்ம
ஜாத்யா, தஸ்மிண் மஹேசே விதினேஜ்ய மானே,
ஸர்வே ப்ரஸீதந்தி ஸூராதி நாதா.
லோகணஹோய ஸர்வான் விவித டமருகைர் கோர ஸம்ஸர மக்ணன்,
(5) தத்வாப்ஹீதம் தயலு ப்ரநாத பவ ஹரம் குஞ்சிதம் வாமபாகம்,
ஊத்த்ருத்யெதம் விமுகேர யணமிதி கர தர்ஷயண் ப்ரத்யயர்தம்,
பிப்ரத்வந்ஹிம் ஸப்ஹாயாம் கலாதி நடணம் ய சிவோ ந ஸ பாயல்.
(6) ஸத்யம் ப்ரவீமி, பரலோக ஹிதம் ப்ரவீமி,
ஸாரம் ப்ரவீமி உபநிஷத்யத்யம் ப்ரவீமி,
ஸம்ஸார முத்பணமஸார மவாப்ய ஜந்தோ,
ஸாரோ யமீஸ்வர பதாம்புருஹஸ்ய ஸேவா.
(7) யே நர்ச்சயந்தி கிரீஸம் ஸமயே ப்ரதோஷெ,
யெ நார்ச்சிதம் ஸிவமபி ப்ரணமந்தி சான்யே,
ஏதத் கதாம் ஸ்ருதி புடைர் நபி பந்தி மூடாஸ்தே
ஜந்ம ஸுபவந்தி நரா தரித்ர.
(8) யே வை ப்ரதோஷ ஸமயெ பரமேஷ்வரஸ்ய,
குர்வந்த்ய நந் ய மந ஸோங்ரி ஸரோஜ பூஜாம்,
நித்யம் ப்ரவ்ருத்த தன தான் ய ர கலத்ர புத்ர மித்ர,
ஸௌபாக்ய ஸம்பததி காஸ்த இஹைவ லோகெ. திருச்சிற்றம்பலம்

ஸ்ரீ பதஞ்சலி க்ருதம்

1. ஸதஞ்சித முதஞ்சித நிகுஞ்சிதபதம் ஜலஜலம்சலித மஞ்ஜுகடகம்
பதஞ்சலி த்ருகஞ்சன மனஞ்சன மசஞ்சல பதம் ஜனன பஞ்சனகரம்|
கதம்பருசி மம்பர வஸம் பரமமம்புத கதம்பக விடம்பககலம்
சிதம்புதிமணிம் புதஹ்ருதம்புஜரவிம் பரசிதம்பர நடம் ஹ்ருதி பஜ||
2. ஹரம் த்ரிபுர பஞ்சன மனந்தக்ருத கங்கண மகண்டதய மந்த்ரஹிதம்
விரிஞ்சிஸர ஸம்ஹதி புரந்தர விசிந்தித பதம் தருணசந்த்ர மகுடம்|
பரம் பதவிகண்டி தயமம் பஸிதமண்டித தனும் மதனவஞ்சனபரம்
சிரந்தன மமும் ப்ரணவஸஞ்சித நிதிம் பரசிதம்பர நடம் ஹ்ருதி பஜ||
3. அவந்த மகிலம் ஜகதபங்க குண துங்க மமதம் த்ருதவிதும் ஸரஸரித்
தரங்க நிகுரும்ப த்ருதிலம்படஜடம் சமன டம்பஸஹரம் பவஹரம்|
சிவம் தசதிகந்தர விஜ்ரும்பிதகரம் கரலஸன் ம்ருகசிசும் பசுபதிம்|
ஹரம் சசி தனஞ்ஜய பதங்கநயனம் பரசிதம்பர நடம் ஹ்ருதி பஜ||
4. அனந்த நவரத்னவிலஸத் கடக கிங்கிணி ஜலம்ஜலரவம்
முகுந்த விதி ஹஸ்தகத மத்தள லயத்வனி திமித்திமித நர்தன பதம்|
சகுந்தரத பர்ஹிரத நந்திமுக ப்ருங்கி ருஷி ஸங்க நிகடம்
ஸநந்த ஸநக ப்ரமுக வந்தித பதம் பரசிதம்பர நடம் ஹ்ருதி பஜ||
5. அனந்தமஹஸம் த்ரிதசவந்த்யசரணம் முனிஹ்ருதந்தர வஸந்த மமலம்
கபந்த வியதிந்துவஹனி கந்தவஹ வஹ்னி மக பந்து ரவிமஞ்ஜு வபுஷம்|
அனந்தவிபவம் த்ரிஜகதந்தரமணிம் த்ரிநயனம் த்ரிபுர கண்டனபரம்
ஸனந்தமுனி வந்திதபதம் ஸகருணம் பரசிதம்பர நடம் ஹ்ருதி பஜ||
6. அசிந்த்ய மளிப்ருந்த ருசிபந்துரகளம் குரிதகுந்த நிகுரும்ப தவளம்
முகுந்த ஸரப்ருந்த பலஹந்த்ரு க்ருத வந்தன லஸந்த மஹிகுண்டல தரம்|
அகம்ப மனுகம்பிதரதிம் ஸஜனமங்கள நிதிம் கஜஹரம் பசுபதிம்
தனஞ்ஜயநுதம் ப்ரணதரஞ்ஜனபரம் பரசிதம்பர நடம் ஹ்ருதி பஜ||
7. பரம்ஸரவரம் புரஹரம் பசுபதிம் ஜனித தந்திமுக ஷண்முக மமும்
ம்ருடம் கனக பிங்கலஜடம் ஸனகபங்கஜ ரவிம் ஸமனஸம் ஹிமருசிம்|
அஸங்கமனஸம் ஜலதிஜன்ம கரலம் கபலயந்த மதுலம் குணநிதிம்
ஸநந்தவரதம் சமித மிந்துவதனம் பரசிதம்பர நடம் ஹ்ருதி பஜ||
8. அஜம் க்ஷதி ரதம் புஜங்கபுங்கவகுணம் கனகச்ருங்கிதனுஷம் கரலஸத்
குரங்கப்ருது டங்க பரசும் ருசிரகுங்கும் ருசிம் டமருகஞ் ச தததம்|
முகுந்த விசிகம் நமதவந்த்யபலதம் நிகமப்ருந்த துரகம் நிருபமம்
ஸசண்டிகமமும் ஜடிதி ஸம்ஹ்ருதபுரம் பரசிதம்பர நடம் ஹ்ருதி பஜ||
9. அனங்க பரிபந்தின மஜம் க்ஷதி துரந்தர மலம் கருணயந்த மகிலம்
ஜ்வலந்த மனலம் ததத மந்தகரிபுரம் ஸததம் இந்த்ரஸர வந்திதபதம்|
உதஞ்ச தரவிந்தகுல பந்துசத பிம்பருசி ஸம்ஹதி ஸகந்தி வபுஷம்
பத்ஞ்ஜலி நுதம் ப்ரணவபஞ்ஜரசுகம் பரசிதம்பர நடம் ஹ்ருதி பஜ||
10. இதி ஸ்தவ மமும் புஜகபுங்கவக்ருதம் ப்ரதிதினம் படதி ய: க்ருதமுக:
ஸத:ப்ரபு பதத்விதய தர்சனபதம் ஸலலிதம் சரணச்ருங்க ரஹிதம்|
ஸர:ப்ரபவ ஸம்பவ ஹரித்பதி ஹரிப்ரமுக திவ்யநுத சங்கர பதம்
ஸ கச்சதி பரம் ந து ஜனுர்ஜலநிதிம் பரம துக்கஜனகம் துரிததம்||
|| இதி ஸ்ரீபதஞ்சலிமஹர்ஷிக்ருத ஸ்ரீசரணச்ருங்கரஹித நடராஜ ஸ்தோத்ரம் ஸம்பூர்ணம். ||

Bilwashtakam - பில்வாஷ்டகம்

த்ரிதலம் த்ருகுனாகாரம் த்ரிநேத்ரம் ச த்ரியயுஷம்
த்ரிஜன்ம பாப சம்ஹாரம் ஏக பில்வம் சிவார்ப்பணம்
த்ரிஷாகை பில்வபத்ரைச்ச ஹ்யாசிட்ரை கோமலை ஸுபை
சிவ பூசம் கரிஷ்யாமி, ஏக பில்வம் சிவார்ப்பணம்
அகண்ட பில்வ பத்ரேன பூஜிதே நந்திகேச்வரே,
ஷுத்யந்தி சர்வ பாபேப்யோ, ஏக பில்வம் சிவார்ப்பணம்
சாலிகிராம ஷிலாமேகாம் விப்ராணாம் ஜத ச அற்பயேத்
சோம யக்ந மஹா புண்யம், ஏக பில்வம் சிவார்ப்பணம்
தண்டி கோடி சாஸ்ராணி வாஜபேய சதனை ச,
கோடி கன்ய மஹா தானம், ஏக பில்வம் சிவார்ப்பணம்
லக்ஷ்மியாஹா ச்தனுத உத்பன்னம் மகாதேவச்ய ச ப்ரியம்,
பில்வ வ்ருக்ஷம் பிரயச்சாமி, ஏக பில்வம் சிவார்ப்பணம்
தர்ஷனம் பில்வ வ்ருக்ஷச்ய, ச்பர்சனம் பாப நாசனம்,
அகோர பாப சம்ஹாரம், ஏக பில்வம் சிவார்ப்பணம்
காசி க்ஷேத்திர நிவாசம் ச கால பைரவ தர்ஷனம்,
பிரயாக மாதவம் திருஷ்த்வா, ஏக பில்வம் சிவார்ப்பணம்
மூலதோ பிரஹ்ம ரூபயா, மத்யதோ விஷ்ணு ரூபினே
அகரத சிவ ரூபயா, ஏக பில்வம் சிவார்ப்பணம்
பில்வாஷ்டகம் இதம் புண்யம், படேத் சிவ சன்னிதௌ,
சர்வ பாப நிர்முக்த சிவ லோக மாப்னுயத்

Devi Ashtothram

ஓம் ஸர்வஸ மோஹின்யி வித்மஹே விஸ்வ ஜன்யை தீமஹி | தந்நோ ஷக்தி: ப்ரசோதயாத் ||
ஓம் தசவனாய வித்மஹே ஜ்வாமாலாயை ச தீமஹி தன்னோ பராசக்தி ப்ரசோதயாத்
ஓம் பாலாரூபிணி வித்மஹே பரமேஸ்வரி தீமஹி தன்னோ கந்யா ப்ரசோதயாத்
ஓம் க்லீம் த்ரிபுரதேவீ வித்மஹே காமேச்வர்யை தீமஹி தன்னோ க்லிண்ணே ப்ரசோதயாத்
ஓம் சௌஹ் த்ரிபுரதேவி ச வித்மஹே சக்தீஸ்வரீ ச தீமஹி தன்னோ அம்ருத ப்ரசோதயாத்
ஓம் காளிகாயை ச வித்மஹே ஸ்மசான வாசின்யை தீமஹி தன்னோ கோரா ப்ரசோதயாத்
ஓம் சாமுண்டேஸ்வரி வித்மஹே சக்ரதாரிணி தீமஹி தன்னோ சாமுண்டிஹ் ப்ரசோதயாத்
ஓம் சௌபாக்யதாயை வித்மஹே காம மாலாய தீமஹி தன்னோ கௌரீஹ் ப்ரசோதயாத்
ஓம் த்ரிபதகாமினி வித்மஹே ருத்ரபத்ன்யை ச தீமஹி தன்னோ கங்கா ப்ரசோதயாத்
ஓம் ஸ்ரீசித்ர்யை ச வித்மஹே மஹாநித்யை ச தீமஹி தன்னோ நித்ய ப்ர சோதயாத்
ஓம் நாராண்யை வித்மஹே துர்காயை ச தீமஹி தன்னோ கேணீ ப்ரசோதயாத்
ஓம் திருபுரசுந்தரீ வித்மஹே காமேஸ்வரீ ச தீமஹி தன்னோ பாலா ப்ரசோதயாத்

1) ஓம் மஹாமதோன் மணிஸந்தியை நம:
2) ஓம் ஸிவஸக்த்யை நம:
3) ஓம் ஸிவஸங்கரியை நம:
4) ஓம் இச்சாஸக்தியை நம:
5) ஓம் க்ரியாசக்தியை நம:
6) ஓம் ஞானசக்திசொரூபிண்யை நம:
7) ஓம் ஸாந்த்யாதீத கலானந்தாயை நம:
8) ஓம் சிவமாயாயை நம:
9) ஓம் ஸிவப்ரியாயை நம:
10) ஓம் ஸர்வஞ்ஞாயை நம:
11) ஓம் ஸுந்தர்யை நம:
12) ஓம் ஸெம்யாயை நம:
13) ஓம் ஸச்சிதானந்த விக்ரகாயை நம:
14) ஓம் பராபராயை நம:
15) ஓம் பலாயை நம:
16) ஓம் த்ரிபுராஸய நம:
17) ஓம் குண்டல்யை நம:
18) ஓம் ஜயாயை நம:
19) ஓம் ஸிவாண்யை நம:
20) ஓம் பவான்யை நம:
21) ஓம் ருத்ராண்யை நம:
22) ஓம் ஸர்வாண்யை நம:
23) ஓம் புவனேஸ்வர்யை நம:
24) ஓம் ஸல்யாண்யை நம:
25) ஓம் ஸூலின்யை நம:
26) ஓம் காந்தாயை நம:
27) ஓம் மகாத்ரிபுரஸுந்தர்யை நம:
28) ஓம் மாலின்யை நம:
29) ஓம் மானின்யை நம:
30) ஓம் ஸர்வாயை நம:
31) ஓம் மதனோல்லாஸ மோகின்யை நம:
32) ஓம் மஹேசுவர்யை நம:
33) ஓம் மாதங்க்யை நம:
34) ஓம் ஸிவகாம்யை நம:
35) ஓம் சிதாத்மிகாயை நம:
36) ஓம் காமாக்ஷ்யை நம:
37) ஓம் கமலாக்ஷ்யை நம:
38) ஓம் மீனாக்ஷ்யை நம:
39) ஓம் ஸரவஸாக்ஷிண்யை நம:
40) ஓம் உமாதேவ்யை நம:
41) ஓம் மகாகாள்யை நம:
42) ஓம் ஸமாயை நம:
43) ஓம் ஸ்ர்வஜனப்ரியாயை நம:
44) ஓம் ஸித்வராயை நம:
45) ஓம் ஸித்கனானந்தாபை நம:
46) ஓம் சின்மயாயை நம:
47) ஓம் சிற்சொரூபிண்ணியை நம:
48) ஓம் மகாஸரஸ்வத்யை நம:
49) ஓம் துர்க்காயை நம:
50) ஓம் பாலதுர்க்காயை நம:
51) ஓம் அதி துர்க்காயை நம:
52) ஓம் லகுன்யை நம:
53) ஓம் ஸுத்தவித்யாயை நம:
54) ஓம் சாரதானந்த விக்ரகாயை நம:
55) ஓம் ஸுப்ரபாயை நம:
56) ஓம் சுப்ரபாஜ்வலாயை நம:
57) ஓம் இந்திராக்ஷ்யை நம:
58) ஓம் ஸர்வமோகின்யை நம:
59) ஓம் மஹேந்த்ரஜாலமத்யஸ் தாயை நம:
60) ஓம் மாயாயை நம:
61) ஓம் மதுவிநோதின்யை நம:
62) ஓம் மந்ரேஸ்வரியை நம:
63) ஓம் மகாலக்ஷ்மியை நம:
64) ஓம் மகாகாலபலப்ரதாயை நம:
65) ஓம் சதுர்வேத விசேஷ்ஞ்ஞாயை நம:
66) ஓம் சாவித்ரியை நம:
67) ஓம் ஸர்வதேவதாயை நம:
68) ஓம் மஹேந்திராண்யை நம:
69) ஓம் கணாத்யக்ஷயை நம:
70) ஓம் மகாபைரவ மோகின்யை நம:
71) ஓம் மகாமாயாயை நம:
72) ஓம் மகாதேவ்யை நம:
73) ஓம் மகாபகாயை நம:
74) ஓம் மஹிஷாஸுரஸங்காரியை நம:
75) ஓம் சண் - முண்ட குலாந்தக்யை நம:
76) ஓம் சகரேஸ்வரியை நம:
77) ஓம் சதுர்வேத்யை நம:
78) ஓம் சக்ராதிஸுர நாயிகாயை நம:
79) ஓம் ஷட்ஸாஸ்த்ர நிபுணாயை நம:
80) ஓம் நித்தமியாயை நம:
81) ஓம் ஷட்தர்ஸன வித்வாக்ஷணாயை நம:
82) ஓம் காளராத்ரியை நம:
83) ஓம் கலாதீதாயை நம:
84) ஓம் கவிராஜ மனோகராயை நம:
85) ஓம் சாரதாதிலகாராயை நம:
86) ஓம் ருத்ராயை நம:
87) ஓம் பக்தஜன ப்ரியாயை நம:
88) ஓம் உக்ரமாயை நம:
89) ஓம் மகாமார்யை நம:
90) ஓம் க்ஷயப்ரமார்யை நம:
91) ஓம் ரணப்ரியாயை நம:
92) ஓம் அன்னபூர்ணேஸ்வர்யை நம:
93) ஓம் மாத்ரே நம:
94) ஓம் ஸுயர்ணாகார தடிப்பிரபாயை நம:
95) ஓம் சுரதியஞ்ஜன வர்ண யாகியை நம:
96) ஓம் கத்யபதியாதிகாரணாயை நம:
97) ஓம் பதவாக்யார்த்தநிலயாயை நம:
98) ஓம் விந்துநாதாதிகாரணாயை நம:
99) ஓம் மோக்ஷமஹீஷியை நம:
100) ஓம் நித்யாயை நம:
101) ஓம் புத்திமுத்தி பலப்ரதாயை நம:
102) ஓம் விஞ்ஞான தாயின்னியை நம:
103) ஓம் ப்ரஞ்ஞாயை நம:
104) ஓம் அகங்காரர காலஸத்தியை நம:
105) ஓம் பராஸக்த்யை நம:
106) ஓம் பராதபராயை நம:
107) ஓம் ஸ்ரீஸிவாகமஸுந்தர்யை நம:
108) ஓம் ஸ்ரீஸிவாகமஸுந்தர்யை நம:

Sivapuranam - சிவ புராணம்

நமச்சிவாய வாஅழ்க நாதன் தாள் வாழ்க
இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க
கோகழி ஆண்ட குருமணிதன் தாள் வாழ்க
ஆகமம் ஆகிநின்று அண்ணிப்பான் தாள் வாழ்க
ஏகன் அநேகன் இறைவன் அடிவாழ்க 5
வேகம் கெடுத்தாண்ட வேந்தன் அடிவெல்க
பிறப்பறுக்கும் பிஞ்ஞகன்தன் பெய்கழல்கள் வெல்க
புறந்தார்க்குச் சேயோன் தன் பூங்கழல்கள் வெல்க
கரங்குவிவார் உள்மகிழும் கோன்கழல்கள் வெல்க
சிரம்குவிவார் ஓங்குவிக்கும் சீரோன் கழல் வெல்க 10
ஈசன் அடிபோற்றி எந்தை அடிபோற்றி
தேசன் அடிபோற்றி சிவன் சேவடி போற்றி
நேயத்தே நின்ற நிமலன் அடி போற்றி
மாயப் பிறப்பு அறுக்கும் மன்னன் அடி போற்றி
சீரார் பெருந்துறை நம் தேவன் அடி போற்றி 15
ஆராத இன்பம் அருளும் மலை போற்றி
சிவன் அவன் என்சிந்தையுள் நின்ற அதனால்
அவன் அருளாலே அவன் தாள் வணங்கிச்
சிந்தை மகிழச் சிவ புராணம் தன்னை
முந்தை வினைமுழுதும் ஓய உரைப்பன் யான். 20
கண் நுதலான் தன்கருணைக் கண்காட்ட வந்து எய்தி
எண்ணுதற்கு எட்டா எழில் ஆர்கழல் இறைஞ்சி
விண் நிறைந்தும் மண் நிறைந்தும் மிக்காய், விளங்கு ஒளியாய்,
எண் இறந்த எல்லை இலாதானே நின் பெரும்சீர்
பொல்லா வினையேன் புகழுமாறு ஒன்று அறியேன் 25
புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப்
பல் விருகமாகிப் பறவையாய்ப் பாம்பாகிக்
கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய்
வல் அசுரர் ஆகி முனிவராய்த் தேவராய்ச்
செல்லாஅ நின்ற இத் தாவர சங்கமத்துள் 30
எல்லாப் பிறப்பும் பிறந்து இளைத்தேன், எம்பெருமான்
மெய்யே உன் பொன் அடிகள் கண்டு இன்று வீடு உற்றேன்
உய்ய என் உள்ளத்துள் ஓங்காரமாய் நின்ற
மெய்யா விமலா விடைப்பாகா வேதங்கள்
ஐயா எனவோங்கி ஆழ்ந்து அகன்ற நுண்ணியனே 35
வெய்யாய், தணியாய், இயமானனாம் விமலா
பொய் ஆயின எல்லாம் போய் அகல வந்தருளி
மெய் ஞானம் ஆகி மிளிர் கின்ற மெய்ச் சுடரே
எஞ்ஞானம் இல்லாதேன் இன்பப் பெருமானே
அஞ்ஞானம் தன்னை அகல்விக்கும் நல் அறிவே 40
ஆக்கம் அளவு இறுதி இல்லாய், அனைத்து உலகும்
ஆக்குவாய் காப்பாய் அழிப்பாய் அருள் தருவாய்
போக்குவாய் என்னைப் புகுவிப்பாய் நின் தொழும்பின்
நாற்றத்தின் நேரியாய், சேயாய், நணியானே
மாற்றம் மனம் கழிய நின்ற மறையோனே 45
கறந்த பால் கன்னலொடு நெய்கலந்தாற் போலச்
சிறந்தடியார் சிந்தனையுள் தேன்ஊறி நின்று
பிறந்த பிறப்பு அறுக்கும் எங்கள் பெருமான்
நிறங்கள் ஓர் ஐந்து உடையாய், விண்ணோர்கள் ஏத்த
மறைந்திருந்தாய், எம்பெருமான் வல்வினையேன் தன்னை 50
மறைந்திட மூடிய மாய இருளை
அறம்பாவம் என்னும் அரும் கயிற்றால் கட்டி
புறம்தோல் போர்த்து எங்கும் புழு அழுக்கு மூடி,
மலம் சோரும் ஒன்பது வாயில் குடிலை
மலங்கப் புலன் ஐந்தும் வஞ்சனையைச் செய்ய, 55
விலங்கு மனத்தால், விமலா உனக்கு
கலந்த அன்பாகிக் கசிந்து உள் உருகும்
நலம் தான் இலாத சிறியேற்கு நல்கி
நிலம் தன்மேல் வந்து அருளி நீள்கழல்கள் காட்டி,
நாயிற் கடையாய்க் கிடந்த அடியேற்குத் 60
தாயிற் சிறந்த தயா ஆன தத்துவனே
மாசற்ற சோதி மலர்ந்த மலர்ச்சுடரே
தேசனே தேன் ஆர்அமுதே சிவபுரானே
பாசமாம் பற்று அறுத்துப் பாரிக்கும் ஆரியனே
நேச அருள்புரிந்து நெஞ்சில் வஞ்சம் கெடப் 65
பேராது நின்ற பெருங்கருணைப் போராறே
ஆரா அமுதே அளவிலாப் பெம்மானே
ஓராதார் உள்ளத்து ஒளிக்கும் ஒளியானே
நீராய் உருக்கி என் ஆருயிராய் நின்றானே
இன்பமும் துன்பமும் இல்லானே உள்ளானே 70
அன்பருக்கு அன்பனே யாவையுமாய் இல்லையுமாய்
சோதியனே துன்னிருளே தோன்றாப் பெருமையனே
ஆதியனே அந்தம் நடுவாகி அல்லானே
ஈர்த்து என்னை ஆட்கொண்ட எந்தை பெருமானே
கூர்த்த மெய் ஞானத்தால் கொண்டு உணர்வார் தம்கருத்தில் 75
நோக்கரிய நோக்கே நுணுக்கரிய நுண் உணர்வே
போக்கும் வரவும் புணர்வும் இலாப் புண்ணியனே
காக்கும் என் காவலனே காண்பரிய பேர் ஒளியே
ஆற்றின்ப வெள்ளமே அத்தா மிக்காய் நின்ற
தோற்றச் சுடர் ஒளியாய்ச் சொல்லாத நுண் உணர்வாய் 80
மாற்றமாம் வையகத்தின் வெவ்வேறே வந்து அறிவாம்
தேற்றனே தேற்றத் தெளிவே என் சிந்தனை உள்
ஊற்றான உண்ணார் அமுதே உடையானே
வேற்று விகார விடக்கு உடம்பின் உள்கிடப்ப
ஆற்றேன் எம் ஐயா அரனே ஓ என்று என்று 85
போற்றிப் புகழ்ந்திருந்து பொய்கெட்டு மெய் ஆனார்
மீட்டு இங்கு வந்து வினைப்பிறவி சாராமே
கள்ளப் புலக்குரம்பைக் கட்டு அழிக்க வல்லானே
நள் இருளில் நட்டம் பயின்று ஆடும் நாதனே
தில்லை உள் கூத்தனே தென்பாண்டி நாட்டானே 90
அல்லல் பிறவி அறுப்பானே ஓ என்று
சொல்லற்கு அரியானைச் சொல்லித் திருவடிக்கீழ்
சொல்லிய பாட்டின் பொருள் உணர்ந்து சொல்லுவார்
செல்வர் சிவபுரத்தின் உள்ளார் சிவன் அடிக்கீழ்ப்
பல்லோரும் ஏத்தப் பணிந்து. 95
திருச்சிற்றம்பலம்

From 12 Saiva Thirumarai

1) தோடுடைய செவியன் விடையேறியோர் தூவெண்மதிசூடிக்
காடுடையசுட லைப்பொடிபூசி யென்னுள்ளங் கவர் கள்வன்
ஏடுடையமலரான் முனைநாட்பணிந் தேத்த அருள்செய்த
பீடுடைய பிரமாபுரமேவிய பெம்மானிவனன்றே.
2) மட்டிட்ட புன்னையங் கானல் மடமயிலைக்
கட்டிட்டங் கொண்டான் கபாலீச்சரம் அமர்ந்தான்
ஒட்டிட்ட பண்பின் உருத்திர பல்கணத்தார்க்
கட்டிட்டல் காணாதே போதியோ பூம்பாவாய்.
3) மண்ணின் நல்ல வண்ணம் வாழலாம் வைகலும்
எண்ணின் நல்ல கதிக்கி யாதுமோர் குறைவிலைக்
கண்ணின் நல்லஃதுறுங் கழுமல வளநகர்ப்
பெண்ணின் நல்லாளொடும் பெருந்தகை யிருந்ததே.
4) சிந்திப் பரியன சிந்திப் பவர்க்குச் சிறந்துசெந்தேன்
முந்திப் பொழிவன முத்தி கொடுப்பன மொய்த்திருண்டு
பந்தித்து நின்ற பழவினை தீர்ப்பன பாம்புசுற்றி
அந்திப் பிறையணிந் தாடும் ஐயாறன் அடித்தலமே.
5) பண்ணின் நேர்மொழியாள் பலியிட்டவிப் | பெண்ணை மால்கொடு பெய்வளை கொள்வது
சுண்ண மாடிய தோணி புரத்துறை | அண்ணலாருக்குச் சால அழகிதே.5.45.5
பண்ணினேர் மொழியாளுமை பங்கரோ | மண்ணினார் வலஞ்செய்ம் மறைக் காடரோ
கண்ணினாலமைக் காணக் கதவினைத் | திண்ண மாகத் திறந்தருள் செய்ம்மினே.5.10.1
6) வாயானை மனத்தானை மனத்துள் நின்ற
கருத்தானைக் கருத்தறிந்து முடிப்பான் றன்னைத்
தூயானைத் தூவெள்ளை ஏற்றான் றன்னைச்
சுடர்த்திங்கட் சடையானைத் தொடர்ந்து நின்றென்
தாயானைத் தவமாய தன்மை யானைத்
தலையாய தேவாதி தேவர்க் கென்றுஞ்
சேயானைத் தென்கூடற் றிருவா லவாய்ச்
சிவனடியே சிந்திக்கப் பெற்றேன் நானே. 6.19.8
7) பித்தாபிறை சூடீபெருமானே அரு ளாளா
எத்தான் மறவாதே நினைக்கின்றேன் மனத் துன்னை
வைத்தாய் பெண்ணைத் தென்பால்வெண்ணெய் நல்லூரருட் டுறையுள்
அத்தா உனக்காளாயினி அல்லேன் எனலாமே.7.1.01
8) நரியைக் குதிரைப் பரியாக்கி ஞாலமெல்லாம் நிகழ்வித்துப்
பெரிய தென்னன் மதுரையெல்லாம் பிச்ச தேற்றும் பெருந்துறையாய்
அரிய பொருளே அவிநாசி அப்பா பாண்டி வெள்ளமே
தெரிய அரிய பரஞ்சோதி செய்வதொன்றும் அறியேனே. 649
9) ஒளிவளர் விளக்கே உவப்பிலா ஒன்றே ! உணர்வுசூழ் கடந்ததோர் உணர்வே !
தெளிவளர் பளிங்கின் திரள்மணிக் குன்றே ! சித்தத்துள் தித்திக்கும் தேனே !
அளிவளர் உள்ளத்(து) ஆனந்தக் கனியே ! அம்பலம் ஆடரங் காக
வெளிவளர் தெய்வக் கூத்துகந் தாயைத் தொண்டனேன் விளம்புமா விளம்பே.
10) ஆரார் வந்தார்? அமரர் குழாத்தில் அணியுடை ஆதிரைநாள்
நாராயணனொடு நான்முகன் அங்கி இரவியும் இந்திரனும்
தேரார் வீதியில் தேவர் குழாங்கள் திசையனைத்தும் நிறைந்து
பாரார் தொல்புகழ் பாடியும் ஆடியும் பல்லாண்டு கூறுதுமே. 12
11) சிவனொடு ஒக்கும்தெய்வம் தேடினும் இல்லை
அவனொடு ஒப்பார் இங்கு யாவரும் இல்லை
புவனம் கடந்தன்று பொன்னொளி மின்னும்
தவனச் சடைமுடித் தாமரையானே. 5
12) மதிமலி புரிசை மாடக் கூடற் | பதிமிசை நிலவு பால்நிற வரிச்சிற
கன்னம் பயில்பொழில் ஆல வாயில் | மன்னிய சிவன்யான் மொழிதரு மாற்றம்
பருவக் கொண்மூப் படியெனப் பாவலர்க் | குரிமையின் உரிமையின் உதவி ஒளிதிகழ்
குருமா மதிபுரை குலவிய குடைக்கீழ்ச் | செருமா உகைக்குஞ் சேரலன் காண்க
பண்பா லியாழ்பயில் பாண பத்திரன் | தன்போல் என்பால் அன்பன் தன்பால்
காண்பது கருதிப் போந்தனன் | மாண்பொருள் கொடுத்து வரவிடுப் பதுவே.
- திரு ஆலவாய் உடையார்
13) கற்பனை கடந்த சோதி கருணையே உருவம் ஆகி
அற்புதக் கோலம் நீடி அரு மறைச் சிறத்தின் மேலாம்
சிற்பர வியோமம் ஆகும் திருச் சிற்றம்பலத்துள் நின்று
பொற்புடன் நடம் செய்கின்ற பூங் கழல் போற்றி போற்றி
14) இனியோ நாம்உய்ந்தோம் இறைவன் அருள்சேர்ந்தோம்
இனியோ ரிடரில்லோம் நெஞ்சே - இனியோர்
வினைக்கடலை யாக்குவிக்கும் மீளாப் பிறவிக்
கனைக்கடலை நீந்தினோம் காண். - காரைக்கால் அம்மையார்
15) வேயுறு தோளிபங்கன் விடமுண்ட கண்டன் மிகநல்ல வீணை தடவி
மாசறு திங்கள்கங்கை முடிமே லணிந்தென் உளமே புகுந்த அதனால்
ஞாயிறு திங்கள்செவ்வாய் புதன்வியாழம் வெள்ளி சனிபாம்பி ரண்டு முடனே
ஆசறு நல்லநல்ல அவைநல்ல நல்ல அடியா ரவர்க்கு மிகவே.

(16) பால்நினைத் தூட்டும் தாயினுஞ்சாலப் பரிந்துநீ பாவியே னுடைய
ஊனினை உருக்கி உள்ளொளி பெருக்கி உலப்பிலா ஆனந்த மாய
தேனினைச் சொரிந்து புறம்புறந்திரிந்த செல்வமே சிவபெருமானே
யானுனைத் தொடர்ந்து சிக்கெனப் பிடித்தேன் எங்கெழுந் தருளுவ தினியே.

17) குனித்த புருவமும் கொவ்வைச் செவ்வாயில் குமிண் சிரிப்பும்
பனித்த சடையும் பவளம்போல் மேனியில் பால்வெண்ணீறும்
இனித்தமுடைய எடுத்த பொற்பாதமும் காணப்பெறல்
மனித்தப் பிறவியும் வேண்டுவதே இந்த மாநிலத்தே.

18) காதலாகிக்கசிந்து கண்ணீர் மல்கி ஓதுவார் தமை நன்னெறிக்கு உய்ப்பது வேதம்
நான்கினும் மெய்ப்பொருளாவது நாதன் நாமம் நமச்சிவாயவே.
19) என்னை நன்றாக இறைவன் படைத்தனன் | தன்னை நன்றாகத் தமிழ் செய்யுமாறே - திருமூலர்
20) கல்லார்க்கும் கற்றவர்க்கும் களிப்பருளும் களிப்பே
காணார்க்கும் கண்டவர்க்கும் கண்ணளிக்கும் கண்ணே
வல்லார்க்கும மாட்டார்க்கும் வரம்அளிக்கும் வரமே
மதியார்க்கும் மதிப்பவர்க்கும் மதிகொடுக்கும் மதியே
நல்லார்க்கும் பொல்லார்க்கும் நடுநின்ற நடுவே
நரர்களுக்கும் சுரர்களுக்கும் நலங்கொடுக்கும் நலமே
எல்லார்க்கும் பொதுவில்நடம் இடுகின்ற சிவமே
என்அரசே யான்புகலும் இசையும்அணிந் தருளே.
[திரு அருட்பா 4128 - Begs Lord Sivan who dances equally well before one and all to accept his offerings of music; requests Him to bless the literate and illiterate with happiness; bless those who can see and who don't see with real vision; bless the mighty and the meek; bless those who care as well those who don't with wisdom; bless both the good and the bad equally]

நமசிவாய மாலை

ஓம் நமசிவாயஓம் ஓம் நமசிவாய
ஓம் நமசிவாயஓம் ஓம் நமசிவாய
ஆதியான அஞ்சிலும் அனாதியான நாலிலும்
சோதியான மூன்றிலும் சொரூபமற்ற ரெண்டிலும்
நீதியான தொன்றிலும் நிறைந்து நின்ற வஸ்துவை
ஆதியான தொன்றுமே யற்றதஞ் செழுத்துமே
சக்தி நீ தயவு நீ தயங்கு சங்கினோசை நீ
சித்தி நீ சிவனும் நீ சிவாய மாமெழுத்து நீ
முத்தி நீ முதலும் நீ மூவரான தேவர் நீ
அத்திபுர மும்முளே யறிந்துணர்ந்து கொள்ளுமே
ஆறு நாடு தேடினும் ஆனை சேனைதேடினும்
கோடிவாசி தேடினும் குறுக்கே வந்து நிற்குமோ
ஓடி இட்ட பிச்சையும் உகந்து செய்த தர்மமும்
சாடிவிட்ட குதிரைபோல் தர்மம் வந்து நிற்குமே
கண்ணிலே இருப்பவனே கருங்கடல் கடந்துமால்
விண்ணில் இருப்பவனே மேவியங்கு நிற்பனே
தன்னுளே இருப்பவனே தராதலம் படைத்தவன்
என்னுளே இருப்பவனே எங்குமாகி நிற்பனே
அண்டமேழு முழலவே யனிந்தயோனி யுழலவே
பண்டு மாலயனுடன் பரந்து நின்றுழலவே
எண்டிசை கடந்து நின்றிருண்ட சக்தியுழலவே
அண்டரண்ட மொன்றதாய் ஆதி நடமாடுமே
அகார காரணத்திலே யனேகனேக ரூபமாய்
உகார காரணத்திலே யுருத்தரித்து நின்றனன்
மகார காரணத்திலே மயங்குநின்ற வையகம்
சிகார காரணத்திலே தெளிந்ததே சிவாயமே
பூவும் நீரும் என்மனம் பொருதுகோயில் என்னுளம்
ஆவியோடு லிங்கமா யகண்ட மெங்குமாகிலும்
மேவுகின்ற ஐவரும் விளங்கு தீப தீபமாய்
ஆடுகின்ற கூத்தனுக்கோர் அந்தி சந்தியில்லையே
ஒன்று மொன்று மொன்றுமே யுலகனைத்து மொன்றுமே
அன்று மின்று மொன்றுமே அனாதியான தொன்றுமே
கன்றல் நின்ற செம்பொனைக் களிம்பறுத்து நாட்டினால்
அன்று தெய்வ மும்முள அறிந்ததே சிவாயமே
ஐயன் வந்து மெய்யகம் புகுந்தவாற தெங்கனே
செய்ய திங்களங்குரும்பை நீர்புகுந்த வண்ணமே
ஐயன்வந்து மெய்யகம் புகுந்து கோவில்கொண்டபின்
வையகத்தில் மாந்தரோடு வாய் திறப்பதில்லையே
ஆதியுண்டு அந்தமில்லை யன்று நாலு வேதமில்லை
ஜோதியுண்டு சொல்லுமில்லை சொல்லிறந்ததேதுமில்லை
ஆதியான மூவரில் அமர்ந்திருந்த வாயுவும்
ஆதியன்று தன்னையும் யாரறிவாரண்ணலே
மூன்று மூன்று மூன்றுமே மூவர் தேவர் தேடிடும்
மூன்று மஞ்செழுத்துமாய் முழங்கு மவ்வெழுத்துளே
ஈன்ற தாயும் அப்பரும் இயங்குகின்ற நாதமும்
தோன்று மண்டலத்திலே சொல்ல வெங்குதில்லையே
கானமற்ற காட்டகத்தில் வெந்தெழுந்த நீறுபோல்
ஞானமற்ற நெஞ்சகத்தில் வல்லதேது மில்லையே
ஊனமுற்ற ஜோதியோடு உணர்வு சேர்த்தடக்கினால்
தேனதத்தினூரல் போல் தெளிந்ததே சிவாயமே
தங்கமொன்று ரூபம்வேறு தன்மையான வாறுபோல்
செங்கண்மாலு மீசனும் சிறந்திருந்த தெம்முளே
விங்களங்கள் பேசுவாய் விளங்குகின்ற மாந்தரே
எங்குமாகி நின்ற நாமம் நாமறிந்த நாமமே
தாய் தந்தை குருவும் நீ சகல தேவகணங்கள் நீ
சிந்தை நீ தெளிவும் நீ சித்தி முக்தி தானும் நீ
விந்தும் நீ வினையும் நீ மேலதாய வேதம் நீ
எந்தை நீ இறைவன் நீ என்னையாண்ட ஈசன் நீ
சித்தமற்று சிந்தையற்று சீவனற்று நின்றிடம்
சக்தியற்று சம்புவற்று ஜாதி பேதமற்றுநன்
முக்தியற்று மூலமற்று மூல மந்திரங்களும்
வித்தை யித்தை யீன்றவிதத்தில் விளைந்ததே சிவாயமே
நல்லதல்ல கெட்டதல்ல நடுவில் நின்றதொன்றுதான்
நல்லதென்ற போது நல்லதாகி நின்றபின்
நல்லதல்ல கெட்டதென்றால் கெட்டதாகுமாதலால்
நல்லதொன்று நாடிநின்று நாமஞ் சொல்லவேண்டுமே
பார்த்து நின்ற தம்பலம் பரமனாடுந் தம்பலம்
கூத்து நின்ற தம்பலம் கோரமான தம்பலம்
வார்த்தையான தம்பலம் வன்னியான தம்பலம்
சீற்றமான தம்பலம் தெளிந்ததே சிவாயமே
விண்ணினின்று மின்னெழுந்து மின்னோடுங்குவாறு போல்
எண்ணுள் நின்று எண்ணுமீசன் என்னகத்திருக்கையால்
கண்ணினின்று கண்ணில் தோன்றும் கண்ணறி விலாமையால்
எண்ணுள்நின்ற என்னையும் நானறிந்ததில்லையே
உருக்கலந்த பின்னலோ வுன்னை நானறிந்ததும்
இருக்கிலென் மறக்கிலென் இணைந்திருந்தபோதெல்லாம்
உருக்கலந்து நின்றபோது நீயும் நானும் ஒன்றலோ
திருக்கலந்த போதலோ தெளிந்ததே சிவாயமே
சிவாய வென்ற வக்ஷரம் சிவனிருக்கு மக்ஷரம்
உபாய மென்று நம்புதற்கு உண்மையான வக்ஷரம்
கபாடமற்ற வாசலைக்கடந்து போன வாயுவை
உபாய மிட்டழைத்துமே சிவாய வஞ்செழுத்துமே
சிவாய மஞ்செழுத்திலே தெளிந்து தேவராகலாம்
சிவாய மஞ்செழுத்திலே தெளிந்து வானமாவலாம்
சிவாய மஞ்செழுத்திலே தெளிந்து கொண்டவான் பொருள்
சிவாய மஞ்செழுத்திலே தெளிந்து கொள்ளுமுண்மையே

திரு அங்க மாலை

தலையே நீ வணங்காய் - தலை மாலை தலைக்கணிந்து
தலையாலே பலி தேருந் தலைவனைத் தலையே நீ வணங்காய்.
கண்காள் காண்மின்களோ - கடல் நஞ்சுண்ட கண்டன் தன்னை
எண்டோள் வீசி நின்றாடும் பிரான்தன்னைக் கண்காள் காண்மின்களோ.
செவிகாள் கேண்மின்களோ - சிவன் எம்மிறை செம்பவள
எரிபோல் மேனிப் பிரான் திறமெப்போதுஞ் செவிகாள் கேண்மின்களோ
மூக்கே நீமுரலாய் - முது காடுறை முக்கணனை
வாக்கே நோக்கிய மங்கை மணாளனை மூக்கே நீ முரலாய்.
வாயே வாழ்த்து கண்டாய் - மத யானையுரி போர்த்துப்
பேய் வாழ் காட்டகத்தாடும் பிரான்தன்னை வாயே வாழ்த்துகண்டாய்
நெஞ்சே நீ நினையாய் - நிமிர் புன்சடை நின்மலனை
மஞ்சாடும் மலைமங்கை மணாளனை நெஞ்சே நீ நினைவாய்
கைகாள் கூப்பித்தொழீர் - கடி மாமலர் தூவி நின்று
பைவாய்ப் பாம்பரை ஆர்த்த பரமனைக் கைகாள் கூப்பித் தொழீர்.
ஆக்கையால் பயனென் - அரன் கோயில் வலம்வந்து
பூக்கை யால் அட்டிப் போற்றியெண்ணாத இவ் ஆக்கையாற் பயனென்
கால் களாற் பயனென் - கறைக் கண்டனுறை கோயில்
கோலக் கோபுரக் கோகரணஞ் சூழாக் கால்களாற் பயனென்
உற்றார் ஆருளரோ - உயிர் கொண்டு போகும்பொழுது
குற்றாலத்துறை கூத்தனல்லால் நமக்குற்றா ராருளரோ.
இறு மாந்திருப்பன் கொலோ - ஈசன் பல் கணத்து எண்ணப்பட்டுச்
சிறுமானேந்தி தன் சேவடிக் கீழ்ச் சென்றங்கு இறுமாந்திருப்பன் கொலோ.
தேடிக் கண்டுகொண்டேன் - திரு மாலொடு நான்முகனும்
தேடித் தேடொணாத் தேவனை என்னுளே தேடிக் கண்டுகொண்டேன்.
திருச்சிற்றம்பலம்

நமச்சிவாயத் திருப்பதிகம்

சொற்றுணை வேதியன் சோதிவானவன்
பொற்றுணைத் திருந்தடி பொருந்தக் கைதொழக்
கற்றுணைப் பூட்டியோர் கடலிற் பாய்ச்சினும்
நற்றுணை யாவது நமச்சி வாயவே
பூவினுக் கருங்கலம் பொங்கு தாமரை
ஆவினுக் கருங்கலம் அரனஞ் சாடுதல்
கோவினுக் கருங்கலம் கோட்ட மில்லது
நாவினுக் கருங்கலம் நமச்சிவாயவே
விண்ணுற அடுக்கிய விறகின் வெவ்வழல்
உண்ணிய புகிலவை யொன்று மில்லையாம்
பண்ணிய உலகினில் பயின்ற பாவத்தை
நண்ணிநின் றறுப்பது நமச்சி வாயவே
இடுக்கண்பட் டிருக்கினும் இரந்து யாரையும்
விடுக்கிற் பிரானென்று வினவுவோ மல்லோம்
அடுக்கற்கீழ்க் கிடக்கினு மருளின் நாம்உற்ற
நடுக்கத்தைக் கெடுப்பது நமச்சி வாயவே
வெந்தநீ றருங்கலம் விரதி கட்கெலாம்
அந்தணர்க் கருங்கலம் அருமறை ஆறங்கம்
திங்களுக் கருங்கலம் திகழு நீண்முடி
நங்களுக் கருங்கலம் நமச்சி வாயவே
சலமிலன் சங்கரன் சார்ந்த வர்க்கலால்
நலமிலன் நாடொறும் நல்கு வான்நலன்
குலமில ராகிலும் குலத்துக் கேற்பதோர்
நலமிகக் கொடுப்பது நமச்சி வாயவே
வீடினார் உலகினில் விழுமிய தொண்டர்கள்
கூடினார் அந்நெறி கூடிச் சென்றாலும்
ஓடினேன் ஓடிச் சென் றுருவங் காண்டலும்
நாடினேன் நாடிற்று நமச்சி வாயவே
இல்லக விளக்கது இருள் கெடுப்பது
சொல்லக விளக்கது சோதி உள்ளது
பல்லக விளக்கது பலரும் காண்பது
நல்லக விளக்கது நமச்சி வாயவே
முன்னெறி யாகிய முதல்வன் முக்கணன்
தன்னெறி யேசர ணாதல் திண்ணமே
அந்நெறியே சென்றங் கடைந்தவர்க் கெல்லாம்
நன்னெறியாவது நமச்சி வாயவே
மாப்பிணை தழுவிய மாதொர் பாகத்தன்
பூப்பிணை திருந்தடி பொருந்தக் கைதொழ
நாப்பிணை தழுவிய நமச்சிவாயபத்து
ஏத்தவல் லார்தமக் கிடுக்க ணில்லையே.
திருச்சிற்றம்பலம்

உத்தராங்க பூஜை


மங்களம் (Mantra Pushpam)

உலகெலாம் உணர்ந்து ஓதற் கரியவன் நிலவு லாவிய நீர்மலி வேணியன்
அலகிற் சோதியன் அம்பலத் தாடுவான் மலர் சிலம்படி வாழ்த்தி வணங்குவோம்

சிவசிவ என்கிலர் தீவினை யாளர்
சிவசிவ என்றிடத் தீவினை மாளும்
சிவசிவ என்றிடத் தேவரு மாவர்
சிவசிவ என்னச் சிவகதி தானே. [திருமூலர்]

ஓம் பூர்ணமத: பூர்ணமிதம் பூர்ணாத் பூர்ண முதச்யதே
பூர்ணஸ்ய பூர்ண மாதாய பூர்ணமேவா வஸிஷ்யதே

ஓம் த்ரியம்பகம் யஜாமஹே ஸுகந்திம் புஷ்டிவர்த்தனம்
உர்வாருக மிவ பந்தனத் ம்ருத்யோ முஷிய மாம்ருதாத்

ஓம்ஸாந்தி : ஸாந்தி : ஸாந்தி :


Notes:
Pradhosha Vrata, or Pradhosham, occurs twice in a month – on the 13th day (Trayodashi) – during the waxing moon fortnight and the other during the waning moon fortnight. The Pradosha period can be loosely indicated as 1.5 hours before sunset and 1 hour after sunset. We are the dance of Spirit and Nature. In truth everything in life is about that dance. Everything in life is always dancing with the polarities, with the interchangeable energies. During waning phase, Moon rises and sets 1.5 hours before sunrise and sunset. During waxing phase, Moon rises and sets 1.5 hours before sunset and sunrise. So, during this 1.5 hours, both exist side by side or opposite. This is like both trying to pull each other or dance. May be basic for ardhanari or Harihara (Yin Yang), which is meeting of opposites.

Since Monday is dedicated to Shiva, the Pradosha falling on Monday is referred as Soma- Pradosha and is considered highly auspicious. Pradosha falling on Saturday during the waning phase of moon is also auspicious. God Siva is the Cosmic Dancer who animates the universe from within. He is honored as Pure Love, Light, Energy and Consciousness. He is contemplated as the timeless, formless and spaceless Absolute Reality. Shivalinga worship is ancient, original, prehistoric and not merely an abstract symbol. Many Saints and Heroes in Puranas worshipped Lingam made out of Clay, metal, copper, iron, silver, gold, mud, stone, precious gems, wood, butter, ice, earth or transitory materials such as made out of flowing river., and invoked Lord Shiva into it. This sends the message that God can be invoked and worshipped in any convenient form; the form is irrelevant, but the divine power that it represents is important.

Quantum theory thus reveals the basic oneness of the universe. It shows that we cannot decompose the world into independently existing smallest units. As we penetrate into matterr, nature does not show us any isolated basic building blocks but rather a complicated set of relations between the quantum particles.These relations always include the observer in an essential way. All things and beings are part of the creation, nothing can exist with out Divine Consciousness. The rhythms of these movements are determined, among other things, by the atomic, nuclear and molecular structures. Therefore both science and spirituality converge toward the idea that the Universe is dynamic, being in a continuous movement of oscillation.

Nature is not in a static, but in a dynamic equilibrium. Taoist text: "The silence in silence is not the true Silence. Only when there is calmness in movement, the spiritual rhythm [vibration] which penetrates the Sky and the Earth is born." "He, who sees "inaction in action", and "action in inaction" is wise among men and a yogi". Gita c4v18

Billions of Milky Way like Galaxy (பல கோடி அண்டங்கள் ) make galactic cluster பஹ’ரண்டம், பேரண்டம். Billions of these (பல கோடி பேரண்டங்கள் ) makes பிரம்மாண்டம். இந்தப் பிரபஞ்சத்தில் எத்தனையோ கோடி பிரம்மாண்டங்கள் உள்ளன. "அனேக கோடி பிரம்மாண்ட ஜனனி" as per லலிதா சகஸ்ரநாமம்.
திருவாசகத்தின் திருவண்டப்பகுதியில்: பிரம்மாண்டங்கள் அடங்கமாட்டாமல் நூற்றொரு கோடிக்கும் அதிகமாக விரிந்து செல்கின்றன; அவ்வளவு பெரியவை; எண்ணிக்கையற்றவை! ஆனால் இறைவனுடன் ஒப்பிடுகையில், ஒரு சிறு துவாரத்தின் வழியாக வீட்டுக்குள் நுழையும் சூரியனின் கதிரில் பறந்து மிதந்து தெரியும் நெருங்கிய அணுக்களின் கூட்டத்தைப்போல மிக மிகச் சிறியன!

There are numerous legends associated with the Pradhosha Vratam. It is believed that Lord Shiva drank the Halahala poison that was churned up from the Ocean of Milk (Samudra Manthan) during Pradosham. Another myth indicates that Lord Shiva and Parvati, the divine couple, are in a propitious mood during the evening twilight on the Trayodashi day and hence are easily pleased and grants whatever that a sincere devotee asks. Offering Bael or Bilva leaves during the period to Lord Shiva is considered auspicious. Some devotees observe fast or worship Shiva during the period or visit temples.

The cosmic dance of Lord Nataraj (Lord Shiva) represents five actions — creation, protection, destruction, embodiment and release. The cosmic dance is visualised in the form of a golden red flame that dances in every particle of the universe. Ardra festival falls on Thiruvadirai star and celebrated on a full Moon day. Ardra darshan celebrated as the day when Siva showed his ananda–tandava (dance of bliss) to Patanjali and others at Chidambaram in fulfillment of a promise made to Adisesha at Daruka forest.


Email Contact...Website maintained by: NARA